Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாசற்ற வருங்காலத்தின் உருவாக்கமும் புத்தாக்கத்தின் தேவையும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாசற்ற வருங்காலத்தின் உருவாக்கமும் புத்தாக்கத்தின் தேவையும்!

Barack Obama

- பேராசிரியா் கு.மிகுந்தன் 

மது பிரதேசம் வளங்களதிகம் கொண்டதும் தேவைகளதிகம் கொண்டதுமான இடமாகும். எமக்குரிய வளங்களை முழுமையாக நாம் இனங்காணும் போது எமக்கானதேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாயிருக்கும். எமது பிரதேசத்து அபிவிருத்திக்குள்ளே தற்போது பல விடயங்கள் உட்புகத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக இங்கே தற்போது பலரும் அளவளாவிக் கொள்கின்ற விடயங்களுள் சுற்றுச்சூழல் சுகாதாரம், சூழல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, காலநிலைமாற்றம். சேதனவி வசாயம், உணவில் கலப்படம், இனந்தெரியாத நோய்கள், குறிப்பாக புற்றுநோயின் தாக்கம், இவற்றுடன் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் என்பன உள்ளடக்கப்படுகின்றது.

Prof.G.Mikunthanஇவற்றைப் பார்க்கும் போது இனிவரும் சந்ததி இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு பெரிதாக முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதனை உணரலாம். வருகின்ற பெரிய ஆபத்தை முன்கூட்டியே அவதானிப்பதன் மூலமும் அதற்கான தயார்ப்படுத்தல்களை இப்போதிருந்தே திட்டமிடுவதன் மூலமும் எமது வருங்காலசந்ததியை சுகதேகிகளாக நாம் உருவாக்கிக் கொள்ளவும் இன்னும் அவர்களுக்கான எதிர்காலத்தை சிறப்பாக ஏற்படுத்திக் கொடுக்கவும் முடியும். இது சமகாலத்தின் எதிர்பார்ப்பு மட்டுமல்லஅவசியமும் கூட.

உணவில் நஞ்சு என்பது பரந்துபட்ட பிரச்சனையாக உருவாகிக் கொள்கின்ற போதிலும் நாம் பயன்படுத்தும் விவசாய உள்ளீடுகளால் உணவில் நஞ்சு சேருகின்றது என்பதற்கப்பால் அறுவடைக்குப் பின்னர் அவற்றை சந்தைப்படுத்தும் போது நடைபெறும் நிகழ்வுகளை அறியும் போது எமது ஆற்றாமையும் குறிப்பிட்ட சிலரது புத்திசாதுரியமான செயற்பாடுகளும் இனங்காணப்படுகின்றன. சுகதேகியாக வாழ்தல் என்பது இறைவனால் எமக்கு அருளப்பட்ட முதற்செல்வம் என்பார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது இதைத்தானே குறித்து நிற்கின்றது.

எமது உடலில் நோய் வருவதற்கான காரணங்களை நாம் இனங்கண்டால் அதில் குறிப்பாக நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர், சுவாசிக்கும் காற்று மற்றும் வாழும் இடம் என்பன மாசுற்றிருப்பதையும் அதனால் எமக்கு ஏற்படும் தீங்குகளையும் குறிப்பிட்டுக் கொள்ளலாம். உணவுற்பத்தியில் பீடைகள் நோய்களுக்கு எதிராக அவற்றைக் கட்டுப்படுத்த அவசியமாக பயன்படுத்தப்படும் அசேதன இரசாயனங்களுக்கு மேலாக அறுவடையின் பின்னராக மரக்கறி மற்றும் பழங்களுக்கு பயன்படுத்தப்படும் நஞ்சான இரசாயனங்களின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. சாதாரணமாக தாவரப் பொருட்களுக்கு விசிறப்படும் இரசாயனங்கள் ஆகக்கூடியதாக 7-10 நாட்களுக்குள் பிரிந்தழியக் கூடியதாக இருக்கின்றன. இதனாலேயே உலக சுகாதாரதாபனம் அறுவடைக்குப் பின்னரான இக்காலத்தை அதாவது இரசாயனம் விசிறியதற்கு பின்னர் சந்தைப்படுத்துவதற்கு 14 நாட்கள் என்னும் அளவினை பரிந்துரை செய்திருக்கின்றார்கள். ஆனால் அவை சந்தைப்படுத்தப்படும் போது விசிறப்பட்டால் இவ்விரசாயனங்களின் தாக்கம் அதிகமாக நாம் உணவாக உட்கொள்ளும் போது எமதுடலில் உட்சேர்ந்து அதிகரிக்கும். அதனால் வரும் சுகநலக்கேடு அதிகமானது. இதைப் பற்றி நாம் சற்றேனும் சிந்தித்து அதற்கான மாற்றுவழிகளை கண்டறிய வேண்டும்.

நாம் அருந்தும் நீர் மாசுற்றிருப்பதில் மலக்கழிவு கலப்பதென்பது ஒன்று. அதனைக் குடிக்க முடியாது அதில் வேறு கழிவுகள் குறிப்பாக குறிப்பிட்ட இடங்களில் எண்ணைக்கழிவுகள் கலந்திருப்பது இன்னொன்று. இரண்டும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனைகள். பிரச்சனைக்கான அடிப்படையை விளங்கிக் கொண்டு அல்லது அறிந்து அதனை நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டுமே தவிர அதைப் பற்றி இனியும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமேது. நாம் வாழ்வதற்கு அத்தியாவசியமானது நீர் அதுவே குடிப்பதற்கு நஞ்சானால் அதற்கு மேலும் நாம் என்ன செய்ய முடியும்.

இவற்றைத் தவிர நாம் பயன்படுத்தும் பல குடிநீர்ப்பதார்த்தங்களை நீண்டகாலம் கெட்டுவிடாமலிருக்க குறிப்பிட்ட இரசாயனப் பதார்த்தங்களை சேர்க்கின்றனர். அதற்கு அனுமதியும் கிடைத்ததாக கூறிக்கொண்டு விற்பனை செய்கின்றனர். ஆனால் இவையனைத்தும் இரசாயனப் பதார்த்தங்கள் என்பதனையும் குறிப்பிட்ட நுண்ணங்கிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவே இவை சேர்க்கப்படுகின்றன என்றால் அவற்றின் தாக்கம் எமது உடலில் எவ்வாறிருக்கும் என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்க முடியும். எமது உடலிலுள்ள நன்மைதரும் நுண்ணங்கிகளும் இவ்வாறான இரசாயனப் பதார்த்தங்களால் பாதிக்கப்படுவதோடு அதன் மூலம் எதிர்விளைவையும் ஏற்படுத்தி விடுகின்றன.

தற்போது கொழும்பு கலாச்சாரம் யாழ்ப்பாணத்திற்கும் வந்திருப்பதனை அவதானிக்கலாம். மதிய உணவில் சோற்றுடன் கொக்காகோலா அருந்துதல் இன்னொரு வகையில் கூறப்போனால் இளையவருக்கான ‘ஸ்ரைலாக’ மாறியிருக்கின்றது. வழக்கமாகவே பெப்சி மற்றும் கொக்காகோலா மென்பானங்கள் தாகத்தை தீர்க்கப் பயன்படுவதாக நினைத்தாலும் அவையனைத்திலும் இரசாயனப் பொருட்களே கலக்கப்பட்டிருக்கின்றன. அண்மையில் முகப்புத்தகத்தில் பலவிடயங்கள் வெளிவருகின்றதில் கழிவறையிலுள்ள மாபிள் பேசனிலுள்ள கறைகளை அகற்றுவதற்கு கொக்காகோலாவினைப் பயன்படுத்துவதாக காட்டப்பட்டிருக்கின்றது. கறைகளை அகற்றுவதில் சிறப்பாக தொழிற்படும் கொக்காகோலா எமது குடலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என நாம் சற்றேனும் சிந்திக்கவில்லை.

அனைத்து நிகழ்வுகளுக்கும் கொக்காகோலா கொடுப்பது வழக்கமாகி விட்டது. போருக்குப் முன் எதுவுமே அற்றிருந்த தேசம் போர் முடிந்தகையோடு போத்தல் போத்தல்களாக பலவகை நிறங்கொண்டு பலவகை போத்தல்களில் கொண்டுவந்து குவிக்கப்பட்டு இச்சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றது. எமக்கான பானம் எமக்கான சுகாதாரமான குடிவகைகளை நாம் ஊக்குவிக்கும் காலம் எப்போது? சுகாதார வசதி வாய்ப்புக்கள் அதிகமாக இல்லாதஅந்த நாட்களில் கூட எமது முன்னோர்கள் நீண்டகாலம் வாழ்ந்திருந்ததைப் பார்க்கும் போது அந்த பாக்கியம் எமக்கும் எமது சந்ததிக்கும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கின்றதனை காணலாம். இந்த பிரச்சனைக்கு நாம் தான் தீர்வும் காண வேண்டும் ஏனெனில் இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சனை. அதற்கு தீர்வும் எம்மிடமிருந்தே வரவேண்டும்.

சுவாசிக்கும் காற்றுக்கும் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்னும் அளவுக்கு எமது சூழல் மாசுறத் தொடங்கியிருக்கின்றது. புகைபிடித்தல் பாரிய பிரச்சனையாக வெளிக்கொணரப்படுகின்றது. புகைபிடிப்பவர் எவராயினும் தண்டிக்கப்பட வேண்டும். 2020ம் ஆண்டில் புகைபிடித்தல் முழுவதுமாக தடை செய்யப்படலாம் என ஊகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறாயின் அதற்கான தீர்வுகள் எப்படி எடுக்கப்பட போகின்றன என்பதில் பலரும் கரிசனை கொண்டிருக்கின்றார்கள். புகைபிடிக்கும் அதிகாரியொருவர் புகைபிடித்தலை தடைசெய்வது நியாயப்படுத்தக் கூடியதா என்பதே இங்கே வெளிக்கொணரப்படும் பாரிய வினாவாகும்.

உயர்மட்டத்தில் பெரிய பதவிகளை அலங்கரிக்கும் உயரதிகாரிகள் புகைபிடித்தலை தமக்குள்ளே கட்டுப்படுத்திவிட்டு பின்னர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தலாம். அதைவிடுத்து ஊருக்கு உபதேசமாக இருந்துவிடக் கூடாது. புகைபிடித்தலோடு தற்போது போதைப்பொருள் பாவனையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. இது நல்லதொரு ஆரோக்கியமான செய்தியல்ல. குறிப்பாக பல்கலைக்கழகத்தைச் சுற்றியிருக்கின்ற மதுபானக்கடைகளை மட்டுப்படுத்தல் அல்லாது இல்லாது செய்தல் வேண்டும். கிடைப்பதற்கு இலகுவாக கடைகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு எந்தப்பக்கத்திலிருந்து எப்படி கட்டுப்படுத்துவது?.

மாறாக இப்படியும் நடக்கின்றது. உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியியலாளர்கள் என்போர்கள் புகைப்பிடித்தலையும் மது அருந்துதலையும் தமது நிகழ்வுகளில் அனுமதித்துவிட்டு மாணவர்கள் புகைபிடிக்கக்கூடாதென்றும் மது அருந்தக்கூடாதென்றும் சட்டமியற்றுவதும் தண்டனை கொடுப்பதும் நியாயமாகப்படவில்லை. ஆசிரியர் என்பவர் முன்மாதிரியாக நடந்தால் மட்டுமே மாணவர்களை தம் வயப்படுத்த முடியும். மேலைத்தேயத்து வழக்கத்தை எமது கலாச்சாரப் பின்னணியைக் கவனிக்காது அப்படியே நாம் நடைமுறைப்படுத்த முனையக்கூடாது. எமது எதிர்காலச் சந்ததியைப் பற்றி நாம் பலவாறாக கவலை கொள்வதற்கான காரணங்கள் பல உண்டு.

இளையவர்களை புத்தாக்கத்தினுள் உள்வாங்குங்கள். எமது இளைய சந்ததி திறமைகள் பலகொண்ட புத்துணர்ச்சியுடையவர்களாவர். புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்குள் அவர்களை உள்வாங்குவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாக இருக்கின்றது. அவர்களைத் தட்டிக்கொடுத்து அவர்களிடமிருந்து புத்தாக்கங்களின் உருவாக்கத்தைநாம் ஊக்குவிக்கலாம். அண்மைக்காலமாக பல புதிய தொழில்நுட்பங்கள் எமது இளையவர்கள் கண்டுபிடித்திருக்கின்றார்கள். அவர்களை அதற்குள் உள்வாங்குவதற்கான தேவையை நாம் முன்னினறு செய்தல் வேண்டும். தற்போதுள்ள க.பொ.த தொழில்நுட்பபிரிவு இந்தவகை புத்தாக்கத்திற்குள் இலகுவாக உள்வாங்கப்பட கூடியவர்களாவர். அவர்களது திறமைகளை முழுமையாக நாம் பயன்படுத்தினால் அவர்களாலும் பல புத்தாக்கங்களை, புதிய கருவிகளை, இயந்திரங்களைக் கண்டுபிடிக்க முடியும். எமது அன்றாட தேவைக்கான தேவைகளை இலகுவாக்க புதிய எளிய சூழலுக்கிணைவான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க ஊக்குவிக்க வேண்டும். எமது சந்ததி வளமானதாக, திறமையுள்ளவர்களாக பரிணமிப்பதற்கு எமக்கிருக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி அதற்கான தீர்வாக புத்தாக்கத்தை உள்வாங்கலாம்.

இதனை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறான மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படுதல் முக்கியமானதாகும். வருங்காலம் இன்னும் போட்டி நிறைந்ததாக இருக்கின்றபோது இவற்றிற்கு என்றும் வரவேற்பிருக்கும். இவைதவிர கடந்த ஆண்டு தொழில்நுட்ப பிரிவினுள் உள்வாங்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் தனியான கற்கைநெறிகள் இனங்காணப்பட்டுள்ளன. இன்னும் தொழில்நுட்பபீடங்களும் உருவாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தொழில்நுட்பபீடம் கிளிநொச்சியில் அறிவியல் நகரில் ஆரம்பிக்கப்படுகின்றது. இங்கு கற்கப்போகும் மாணவர்களிடமிருந்தும் பொறியியல் பீடம் மற்றும் விவசாயபீடம் ஆகிய மாணவர்களிடமிருந்தும் புத்தாக்கங்கள் பலவற்றை எதிர்பார்க்கலாம். இரு பீடங்களிலும் புதிய கண்டுபிடிப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. எமது பிரதேசத்து பிரச்சனையை மையப்படுத்தி இவற்றை நாம் ஊக்குவிப்பது என்றுமே எமது தேவையைப் பூர்த்தி செய்வதில் துணைநிற்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

 

http://www.nanilam.com/?p=8812

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.