Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அழுத்தங்கள் குறைந்து விட்டன! - ஜனாதிபதி நிம்மதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் தற்போது குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்றநிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் தற்போது குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்றநிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

   

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தினால் தொடர்ந்தும் மனித உரிமைகள் தொடர்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதேபோன்று பொதுநலவாய மாநாடு ஸ்ரீலங்காவில் நடத்தப்பட்ட போது அம்மாநாட்டில் கலந்துகொள்ள பல வெளிநாட்டு தலைவர்கள் தயக்கம் காட்டினர். பொதுநலவாய நாடுகளின் சில தலைவர்கள் தமது வருகையை தவிர்த்துக் கொண்டனர். இந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. ஜனநாயகம் இல்லாத நிலை தோன்றியுள்ளது. ஊழல் மிக்க ஆட்சி நிலவுகின்றது. சுதந்திரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது போன்ற காரணங்களை முன்வைத்த சில அரச தலைவர்கள் நமது நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதை தவிர்த்துக்கொண்டனர்.

சில முக்கிய சர்வதேச தலைவர்கள் நமது நாட்டுக்கு வருகைதந்த போதிலும், நம்நாட்டு பொதுமக்கள் பலரை சந்தித்து விடயங்களைக் கேட்டறிந்து கொண்ட அவர்கள் நமது நாட்டில் பாரிய பிரச்சினைகள் இருப்பதாகவும் அவற்றை துரிதமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரினார்கள். இந்நிலையிலேயே அவசர அவசரமாக நடாத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் 42 நாட்களில் ஆட்சியிலிருந்த அரசாங்கத்தை மாற்றி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நாம் ஆட்சிக்கு வந்தோம்.

அவ்வாறு ஆட்சிக்கு வந்த நாம் கடந்த அரசாங்கத்தினால் விடைகூறமுடியாதிருந்த வினாக்களுக்கு விடையளித்ததுடன், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நல்ல முறையில் நிறைவேற்றி வருகின்றோம். எமது அரசியல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்தவற்றை நிறைவேற்றுவதே எமது கடமையாகும். சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டுமாயின் எமது நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு உரிய முறையில் விசாரணைகள் நடாத்தப்பட்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

யுத்தகாலம் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாக எமது படையினருக்கான பல பயிற்சி வாய்ப்புகளை இழக்க நேரிட்டது. பல தசாப்தங்களாக அமெரிக்காவால் படையினருக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சியினை இழக்க நேரிட்டது. இந்தியா உட்பட இன்னும் பல நாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற பல பயிற்சிகளை இழக்க நேர்ந்தது. எமது புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் பின் அவ்வாறு இழக்க நேர்ந்த வாய்ப்புகளை மீண்டும் எமது படையினருக்கு பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. உலக தரத்திலான பயிற்சிகளை அனுபவங்களை அறிவினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இப்போது படையினருக்கு கிடைக்கப் பெற்றுவருகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=154287&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

சர்வதேச அழுத்தங்கள் குறைந்து விட்டன! - ஜனாதிபதி நிம்மதி

எல்லா புகழும் தமிழ் கூத்தியான்களுக்கே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.