Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர்கள் படுகொலை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து விக்னேஸ்வரன் அதிருப்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக சாட்சியங்களை வழங்கிய போதும், குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமை வேதனையளிக்கிறது என வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் ஊடக அமைச்சர் கஜந்த கருணாதிலகவுக்கு தெரிவித்துள்ளார்.

வடக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக சாட்சியங்களை வழங்கிய போதும், குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமை வேதனையளிக்கிறது என வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் ஊடக அமைச்சர் கஜந்த கருணாதிலகவுக்கு தெரிவித்துள்ளார்.

   

தெற்கு ஊடக சகோதரத்துவத்தையும் வடக்கு ஊடக சகோதரத்துவத்தையும் ஒன்றாக இணைக்கும் நல்லிணக்க பயணம் எனும் தொனிப்பொருளில் ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண மற்றும் தெற்கு ஊடகவியலாளர்கள் ஆகியோர் நேற்று மாலை முதலமைச்சரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இக் கலந்துரையாடலையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தை தாம் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்ததாக தெரிவித்தார். இந் நிலையில் இக் கலந்துரையாடல் தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இத்தகைய பயணத்தினூடாக வடக்கையும் தெற்கையும் இணைத்து நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் வளர்க்க வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய அமைச்சருடைய கருத்தை நான் வரவேற்றிருந்தேன். எனினும் இக் கலந்துரையாடலின் போது நான் எங்களது எதிர்பார்ப்புக்களையும் எண்ணங்களையும் அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தேன். குறிப்பாக கடந்த காலங்களில் 44 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் நான்கு பேர் மாத்திரமே தெற்கை சேரந்த ஊடகவியலாளர்கள். ஆனால் எனைய நாற்பது பேரும் தமிழ் ஊடகவியலாளர்கள்.

இவ்வாறான நிலையில் சிங்கள ஊடகவியலாளர்களது படுகொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் தமிழ் ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்களை மக்கள் அடையாளம் காட்டக்கூடியதாக இருந்தும் அவர்கள் மீது எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாததுடன் அவர்கள் தற்போதும் கூட உள்நாட்டிலே இருக்கிறார்கள் என மக்கள் பேசிக் கொள்கின்ற சூழ்நிலையில் குற்றவாளிகள் மீது விசாரணை நடாத்தப்படாமல் இருப்பது மனவேதனை அளிக்கின்றதென தெரிவித்திருந்தேன்.

மேலும் இவ்வாறான சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதானது எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையெனினும், எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் ரீதியான ஒர் தீர்மானம் எட்டப்படாதது இவ்வாறான செயற்பாடுகளூடாக நன்மை எதனையும் தராது. அவ்வாறு சிறிது நன்மைகளை தந்தாலும் அது எதிர்காலத்தில் நீண்டதொரு நன்மையை தராது எனவும் குறிப்பிட்டிருந்தேன். அத்துடன் மக்கள் எப்போதும் அரசியல் ரீதியான தீர்வையே எதிர்பார்த்திருக்கிறார்கள். எனவே அதன் பின்னர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வது நீண்ட கால நன்மையை பெற்றுத் தரும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கான ஆணைக்குழுவை அமைத்து அதனூடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் நாட்டிலே அரசியல் ரீதியான தீர்வினை பெற்றுக் கொடுப்பதையும் அத்துடன் இனங்களிற்கு இடையிலான நல்லிணக்கத்தை வளர்ப்பதற்குமான நடவடிக்கைகளுமாக இரண்டையும் சமமாக கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் மொழி தெரியாத காரணத்தால் ஊடகவியலாளர்களுக்கு பிரச்சினையாகவுள்ளமையும் குறிப்பிட்டிருந்தேன். அதாவது வடக்கில் இருக்கும் ஊடகவியலாளர்கள் பெரும்பான்மையானோருக்கு சிங்கள மொழி தெரியாமலும் அதேபோன்று தெற்கில் இருக்கும் ஊடகவியலாளர்களுக்கு தமிழ் மொழி தெரியாமலும் இருப்பதானது பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் வடக்கு தொடர்பாக தெற்கு பத்திரிகையில் வெளியாகின்ற செய்திகள் கட்டுரைகளில் பக்கச் சார்பு இருப்பதாகவும் அதேபோன்று தெற்கு தொடர்பாக வடக்கில் வெளியாகின்ற பத்திரிகைகளில் பக்கச்சார்பு இருப்பதாகவும் குறை கூறப்படுகின்றமையையும் அமைச்சருக்கு தெரியப்படுத்தியிருந்தேன்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இவ் விடயத்தையே இராணுவ தளபதியினுடனான கலந்துரையாடலின் போது அவரும் தெரிவித்ததாக குறிப்பிட்டதுடன் எதிர்காலத்திலே இவ்வாறான தவறுகளை தவிர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் இவ்வாறான நடவடிக்கைகளானது வரவேற்கத்தக்க முன்னேற்றகரமான செயற்பாடாகவே நான் பார்ப்பதுடன், வருங்காலத்திலே ஊடகங்களினூடாக நாட்டில் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமென நம்புவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

cm-kayantha-meet-280316-seithy%20(1).jpg

 

 

cm-kayantha-meet-280316-seithy%20(2).jpg

 

 

cm-kayantha-meet-280316-seithy%20(3).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=154299&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக கடந்த காலங்களில் 44 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் நான்கு பேர் மாத்திரமே தெற்கை சேரந்த ஊடகவியலாளர்கள். ஆனால் எனைய நாற்பது பேரும் தமிழ் ஊடகவியலாளர்கள். 

அந்த‌ நாற்பது பேரும் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டனர் ..என்று தீர்ப்பு வழ‌ங்கப்படும்...இது கூட தெரியாத முதலமைச்சரா....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.