Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த அரசாங்கத்தின் வேலைகளில் மைத்திரிக்கும் பங்குண்டு!

Featured Replies

கடந்த அரசாங்கத்தின் வேலைகளில் மைத்திரிக்கும் பங்குண்டு!
 
கடந்த அரசாங்கத்தின் வேலைகளில் மைத்திரிக்கும் பங்குண்டு!
அன்றைய அரசாங்கம் செய்த வேலைகள் குறித்து தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகிறது எனவும் தான் அந்த வேலைகளை தனித்து செய்யவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அன்றைய அமைச்சரவையுடன் இணைந்து அவற்றை செய்ததால், தற்போதைய ஜனாதிபதியும் அதற்கு பொறுப்பாளி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
தற்போதைய ஜனாதிபதிக்கு அந்த பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. இதனால், எதிர்க்கட்சியை திட்டிக்கொண்டிருக்காது மக்களுக்கு வேலை செய்யுங்கள். 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த போது, விவசாயத்திற்கான நீர்ப்பாசனகால்வாய்களுக்கு பணத்தை செலவிடப் போவதில்லை எனக் கூறியிருந்தது. வயல்களை நிரப்பி. தொழிற்சாலைகளை நிர்மாணிக்க வேண்டும் என்பதே இதற்கு காரணம். எனினும் மக்கள் அந்த கொள்கையை நிராகரித்தனர்.
 
ஆனால்இ தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரையும் இணைத்துக் கொண்டு அந்த கொள்கையை செயற்படுத்த போகின்றனர் என்பதே எமக்குள்ள கவலையாகும்.
நாங்கள் பசளை நிவாரணங்களை வழங்கியதால், அரிசி உற்பத்தியில் நாடு தன்னிறவு அடைந்தது. பசளை நிவாரணங்களை வழங்காதிருந்தால், அந்த நிலைமை உருவாகி இருக்காது.
 
பசளைகளில் நச்சு பொருட்கள் இருப்பதாக கூறி தற்போது பசளை நிவாரணத்தை நிறுத்தியுள்ளனர். பசளைக்கு பதில் பணம் தருவதாக கூறுவது வெறும் கதை. நெல் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாதுள்ளது. பிள்ளைகள் வீட்டில் பட்டினியில் அழும் போது, 25 ஆயிரம் ரூபாவை கொடுத்து, பசளையை கொள்வனவு செய்வார்களா, பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுப்பார்களா?.
 
விவசாயி மது அருந்துபவராக இருந்தால், அந்த பணத்தை அதற்கு பயன்படுத்துவார். வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகள் இல்லை. தனியார் மருந்தகத்தில் வாங்கி கொள்ளுமாறு எழுதி கொடுக்கின்றனர். இதுதான் உண்மை. எனினும் எம்மீதே குறைக்கூறுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
முன்னைய அரசாங்கம் செய்தவற்றுக்கு இந்த அரசாங்கம், எதிர்க்கட்சியைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றது. இவை எல்லாவற்றையும் நான் தனியாகச் செய்யவில்லை. அவற்றை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவும் அங்கம் வகித்த அமைச்சரவையும் சேர்ந்தே செய்தது' என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கம் செய்தவற்றுக்கு இந்த அரசாங்கம், எதிர்க்கட்சியைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றது. இவை எல்லாவற்றையும் நான் தனியாகச் செய்யவில்லை. அவற்றை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்த அமைச்சரவையும் சேர்ந்தே செய்தது' என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

   

எம்பிலிப்பிட்டியலில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தப் பொறுப்புகளிலிருந்து தப்பிச்செல்ல முடியாது. மக்களை ஏமாற்றுவதற்காக, எதிர்க்கட்சியின் மீது குற்றஞ்சாட்டவும் கூடாது' என்றும் அவர் தெரிவித்தார். 'எதிர்க்கட்சியை எந்தநேரமும் ஏசிக்கொண்டிருப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. மக்களுக்கு வேலைகளை செய்யவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல, அன்றிருந்த முழு அமைச்சரவையும் பொறுப்பு கூறவேண்டும். சிறிசேனவும் பொறுப்பு கூறவேண்டும்' என்றும் அவர் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=154350&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.