Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வழிப்போக்கர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவசியமில்லை : வடக்கு முதல்வர்

Featured Replies

வழிப்போக்கர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவசியமில்லை : வடக்கு முதல்வர்
 
வழிப்போக்கர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவசியமில்லை : வடக்கு முதல்வர்
வடமாகாண தமிழ் மக்களின் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஹிக்கடுவ பகுதியில் இடம்பெற்ற 32 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை.
 
இதனால், வடமாகாண முதலமைச்சர் பிரிவினைவாத மற்றும் இனவாத நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாகவும், முதலமைச்சரின் செயற்பாடு தேசிய நல்லிணக்கத்திற்கு தடங்கலாக இருப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 
 
அத்துடன், வட மாகாணசபை கடந்த 2015 ஆம் ஆண்டில் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20 வீதமான நிதியை மட்டுமே செலவிட்டுள்ளதெனவும் அவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து, முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் எழுதியுள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
வடமாகாண தமிழ் மக்களால் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வழிப்போக்கர்களின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் தமக்கில்லை என்றும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து செயலாற்றுவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், மாகாண சபையின் ஆட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் இதேவேளை சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து ஹிக்கடுவ பகுதிக்கு வர முடியாமை தொடர்பாக முன்னதாகவே அறிவித்தல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் தன்னுடைய கடமைகளை சரியாக செய்யும் எனவும் இப்படியான பொறுப்பற்ற அறிக்கைகளை விடும் ஜாதிக ஹெல உறுமய போன்றவர்களின் செயற்பாடுகளே உண்மையில் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். 

 

http://onlineuthayan.com/news/12262

அது சரிதான் சி.வி என்ன Tourist info வா நடத்துறார் வழிப்போக்கரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.