Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IPL 9 செய்திகள் கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூனை கண் மூடி பால் குடித்த கதை தோனிக்கு தெரியாது போல

  • Replies 209
  • Views 12.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்.. கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி

விசாகப்பட்டினம்: புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் புனே அணியும், ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 வி்க்கெட் இழப்பிற்கு 137 ரன் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய புனே அணி 20 ஓவரில் 8 வி்க்கெட் இழப்பிற்கு 133 ரன் மட்டும்மே எடுத்தது. இதனையடுத்து ஐதராபாத் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1519594

  • தொடங்கியவர்

பெங்களூரு- மும்பை இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.

பெங்களூரு அணிக்கு இது 10-வது ஆட்டமாகும். அந்த அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற வேண்டுமானால் தொடர் வெற்றிகளை குவிக்க வேண்டிய நெருக்கடியுடன் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டத்தில் பெங் களூரு தோல்வியை எதிர்கொண் டால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு கடினமாகிவிடும். இந்த தொடரில் 561 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி கடந்த ஆட்டத்தில் சோபிக்க தவறினார். 2 சதங்கள், 4 அரை சதங்கள் விளாசி உள்ள அவர் சொந்த மைதானத்தில் இன்று மிரட்டக்கூடும்.

டி வில்லியர்ஸூடன் ராகுலும் பேட்டிங்கில் வலுசேர்ப்பவராக உள்ளார். ஆல்ரவுண்டராக வாட்சன் சிறந்த பங்களிப்பை வழங்குகிறார். பந்து வீச்சில் அவருடன் யுவேந்திரா ஷாகல் மட்டுமே நல்ல முறையில் செயல்பட்டு வருகிறார். ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கின்றனர். இவர்கள் முன்னேற்றம் கண்டால் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் இருக்காது.

மும்பை அணி தனது கடைசி ஆட்டத்தில் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் படுதோல்வியை சந்தித்திருந்தது. அந்த அணிக்கும் இது 10-வது ஆட்டமாகும். 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள மும்பை அணி தோல்வியில் இருந்து மீண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும்.

பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ள அணிகள் அதிக புள்ளிகளை வைத்துள்ளதால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற மும்பை அணி சற்று மெனக்கெட வேண்டியதுள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியை சந்தித்தால் மீதமுள்ள 3 ஆட்டத்திலும் கட்டாயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்படும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article8583592.ece

  • தொடங்கியவர்

நெருக்கமான போட்டிகளில் தோற்பதை ஜீரணிக்க முடியவில்லை: தோனி வருத்தம்

 

 
ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. | படம்: சந்தீப் சக்சேனா.
ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. | படம்: சந்தீப் சக்சேனா.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 138 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் தோல்வி தழுவிய புனே அணியின் கேப்டன் தோனி தோல்வி குறித்து கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை 137 ரன்களுக்கு மட்டுப்படுத்தியும் புனே அணியால் வெற்றி பெற முடியவில்லை.

இந்தத் தோல்வியினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடும் பிரச்சினையாகியுள்ளது. ஏறக்குறைய வாய்ப்பு கை நழுவிவிட்ட நிலைதான்.

தோல்வி பற்றி தோனி கூறும்போது, “நெருக்கமான போட்டிகளில் தோல்வி அடைவதை ஜீரணிக்க முடியவில்லை. சில விஷயங்கள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை.

வெற்றி பெற்ற 3 போட்டிகளிலும் சவுகரியமாகவே வென்றோம், ஆனால் தோற்ற போட்டிகள் கடைசி ஓவர் வரை வந்து தோல்வியடைவதாக உள்ளது. புதிய பந்தில் நன்றாக வீசினோம், சன் ரைசர்ஸ் அணியை 137 ரன்களுக்கு மட்டுப்படுத்த சிறப்பாகச் செயல்பட்டோம். எங்கள் பந்து வீச்சை அவர்கள் பந்து வீச்சுடன் ஒப்பிட்டால், அவர்கள் சூழ்நிலைகளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றே கூற வேண்டும்.

தொடக்கத்திலேயே உத்வேகத்தை இழந்து விட்டோம், விக்கெட்டுகள் விழுந்து கொண்டேயிருந்தன. ஆடம் ஸாம்பா அபாரம். அவரை முதலிலிருந்தே 11 வீரர்கள் அணிக்குள் கொண்டு வர விரும்பினோம். ஆனால் அப்போது அணிச்சேர்க்கை கடினமாக இருந்தது.

முதல் 3 போட்டிகளில் எங்களது சிறந்த 11 வீரர்களுடன் ஆடினோம். ஸாம்ப்பா ஒரு சிறந்த கண்டுபிடிப்பு. அவர் அணிக்கு நிலைத்தன்மையை அளிக்கிறார். இந்த ஒரு போட்டியில்தான் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தோம்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article8584689.ece?homepage=true

  • தொடங்கியவர்

வெற்றி இலக்கு 138-ஐ துரத்த முடியாமல் புனே தோல்வி

 
படம்: ஏ.எஃப்.பி
படம்: ஏ.எஃப்.பி

விசாகப்பட்டிணத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 138 ரன்கள் வெற்றி இலக்கை எடுக்க முடியாமல் தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 133/8 என்று முடிந்தது.

புனே அணியின் ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத் அணியை 137 ரன்களுக்கு மட்டுப்படுத்தினார். ஆனால் இந்த தொடரின் சிறந்த வேகப்பந்து கூட்டணியைக் கொண்ட சன் ரைசர்ஸ் அணி தோனியின் அரைகுறை முயற்சியையும் முறியடித்து வெற்றி கண்டது.

பிட்சில் ஸ்விங், ஸ்பின் இரண்டுமே எடுபட்டது. அஸ்வினுக்கு 4 ஓவர்களை கொடுத்து முடித்தார் தோனி அவர் 16 ரன்களை விட்டுக் கொடுத்து ஷிகர் தவண் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இலக்கைத் துரத்தும்போது ரஹானே (0), கவாஜா (11) விரைவில் வெளியேற, தோனி தான் இறங்காமல் பெய்லி மற்றும் அஸ்வினை முன்னால் பேட் செய்ய அனுப்பினார்.

இருவரும் இணைந்து 8 ஓவர்களில் 48 ரன்கள் சேர்த்தனர். பெய்லி 40 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஹென்ரிக்ஸ் பந்தில் நெஹ்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த அஸ்வின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பாரிந்தர் ஸரண் பந்தில் நமன் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சவுரவ் திவாரியால் நல்ல பிட்சில் ஆட முடியவில்லை. 9 ரன்களில் நெஹ்ராவிடம் வெளியேறினார். 15 ஓவர்களில் 86/5.

40 பந்துகளில் 60 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் தோனி இறங்கினார். சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் அளவுக்கு புனே பேட்டிங் இல்லை. தோனியின் ரிப்ளெக்ஸ் காணாமல் போய் விட்டது. சாதாரணமாக பின்னால் சென்று கட் செய்தால் 4 ரன்கள் வரும் பந்தை அவர் தப்பும் தவறுமாக முன்னால் வந்து ஆடி சிங்கிள் எடுக்கவே முயற்சி செய்தார். தான் நினைத்தால் பவுண்டரி, சிக்சர் அடிக்க முடியும் என்ற தோனியின் பழைய ரிப்ளெக்ஸ் அவரது நினைவெனும் கிடங்குக்குள் சென்று விட்டது. களத்தில் பவுலர்கள் அவரை படுத்தி எடுக்கின்றனார்.

தோனியும் திசர பெரேராவும் ஒன்று, இரண்டு என்றே எடுக்க முடிந்தது, முஸ்தபிசுர் ரஹ்மானின் கட்டர்களை அடிக்க முடியவில்லை சரி, அவரது புல்டாஸ்களையும் தட்டி விட்டு உயிரை வெறுத்து 2 ரன்களுக்கு ஓடுவது ஏன் என்பது மட்டும் புரியவில்லை. இடையில் ஸ்ரண் 16-வது ஓவரில் ஒரு லெந்த் பந்தை வீச லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார். 17-வது ஓவரை முஸ்தபிசுர் வீச 5 ரன்களே வந்தது.

இந்நிலையில் முதல் 3 ஓவர்களில் 5 ரன்களையே விட்டுக் கொடுத்த புவனேஷ் குமார் 18-வது ஓவரை வீச வந்தார். திசர பெரேரா ஒரு சிக்ஸ் தோனி ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது. பவுண்டரி அடித்த பந்து ஒரு அரைக்குழி பந்து. அதையும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தள்ளி புல்டாஸாக வீசியிருந்தால் தோனியினால் அதனை ரீச் செய்திருக்க முடியாது. 19-வது ஓவரில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரில் இரண்டு 2 ரன்களை தோனி ஓடி எடுக்க அந்த ஓவரில் 8 ரன்கள் வந்தது.

ஒருவழியாக கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சாதக நிலை ஏற்பட்டது, பெரேரா, தோனி கிரீசில் இருக்கின்றனர். பழைய தோனியாக இருந்தால் இது 3 பந்துகளில் முடிந்திருக்கும். இப்போதுதான் அவருக்கு உத்தியும் இல்லை, மனவிருப்புறுதியும் இல்லை, கடமைக்காக ஆடுபவர் போல் ஆகிவிட்டார்.

இந்த மனநிலையில் நெஹ்ராவை அடித்து வெற்றி பெறுவது என்பது கடினம், கடைசி ஓவரை நெஹ்ரா வீசினார். முதல் 3 பந்துகளில் பவுண்டரி எடுக்க முடியவில்லை. 3-வது பந்தில் பெரேரா சுழற்றி கேட்ச் கொடுத்தார். 3 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் நெஹ்ராவின் யார்க்கர் நல்ல வாகான புல்டாஸாக மாற தோனி அதனை லாங் ஆனில் முறைப்படி சிக்ஸுக்கு அனுப்பி வைத்தார்.

தேர்ட் மேன் முன்னால் கொண்டு வரப்பட ஸ்கொயர் லெக் பின்னால் சென்றது. 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை. நெஹ்ரா ஒரு நல்ல பவுன்சரை வீச தோனியின் புல் ஷாட் டாப் எட்ஜ் ஆக முன்னால் கொண்டு வரப்பட்ட ஷார்ட் தேர்ட்மேன் வீரர் ஸ்ரண் பந்தை எடுத்து அடிக்க இல்லாத 2 வது ரன்னுக்காக வேறு வழியில்லாமல் வந்த தோனி யுவராஜ் சிங்கினால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதாவது ஷார்ட் தேர்ட் மேனை முன்னால் கொண்டு வந்து ஒரு திடீர் பவுன்சரை வீசி தோனியை வீழ்த்த சரியான திட்டமிடல் நடந்தேறியது.

20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த தோனி அவுட் ஆனார். அவர் இறங்கும் போது 40 பந்துகளில் 60 ரன்கள் தேவை அவர் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏதோ ஒரு 5 ரன்கள் குறைவாகி விடுகிறது இப்போதெல்லாம் தோனியின் இன்னிங்ஸில். 20 பந்துகளில் 35 என்றால் வென்றிருக்கலாம். அவர் முதலில் பவுண்டரி பந்துகளில் ஒன்று, இரண்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், ஆட்டத்தை கடைசி ஓவர் வரை இழுக்கக் கூடாது. கடைசியில் நமன் ஓஜாவின் அபாரமான கேட்சுடன் புனே இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

நெஹ்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சன் ரைசர்ஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் நன்றாக, சிக்கனமாக வீசினர். ஆனால் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆடம் ஸாம்பா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டது புனே அணிக்கு ஒரே ஆறுதல்

முன்னதாக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி ஆர்.பி.சிங்கின் அபாரமான பந்துக்கு வார்னர் விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவண் 33 ரன்களை அதிகபட்சமாக எடுத்து அஸ்வினிடம் அவுட் ஆனார். கேன் வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் அபாரமாக ஆடி 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.

ஆடம் ஸாம்பா முதலில் யுவராஜ் சிங்கை காலி செய்தார், பிறகு 18-வது ஓவரில் அடுத்தடுத்து வில்லியம்சன், மோய்சஸ் ஹென்றிக்ஸ் ஆகியோரை வீழ்த்தி கடைசி ஓவரில் ஹூடா, ஓஜா, குமார் ஆகியோரை வீழ்த்தி 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஐபிஎல் கிரிக்கெட்டில் 2-வத் சிறந்த பந்து வீச்சாகும் இது. கடைசியில் டிண்டா ஓரு ஓவரில் 15 ரன்களைக் கொடுத்ததுதான் இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் வெற்றிக்குக் காரணம் என்றே கூற வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-138%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article8584548.ece

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரி்க்கெட்: மும்பை அணி வெற்றி
 
 

பெங்களூரூ: பெங்களூரூக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரூ அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் எடுத்தது. பெங்களூரூ அணியின் ராகுல்(68) அரைசதம் அடித்தார். தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 18.4 ஓவரில் 4 வி்க்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தி்ல் வெற்றி பெற்றது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1520340

  • தொடங்கியவர்

டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ஐதராபாத் அணி

 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடை பெறும் ஆட்டத்தில் ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின் றன.

ஐதராபாத் அணி 10 ஆட்டத்தில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்து கொள்ளும்.

எந்த ஆண்டும் இல்லாமல் இம்முறை ஐதராபாத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவான அணியாக உள்ளது. வார்னர் தனது அதிரடியால் தனிந பராக ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்று வெற்றி தேடிக்கொடுப்ப வராக உள்ளார். அவர் விரைவில் ஆட்டமிழக்கும் பட்சத்தில் ஷிகர் தவண், வில்லியம்சன், ஹென்ரிக், தீபக் ஹூடா, நமன் ஓஜா ஆகியோர் கைகொடுக்கின்றனர்.

பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஆஷிஸ் நெஹ்ரா, முஸ் டாபிஸூர் ரஹ்மான், பரிந்தர் ஷரண் ஆகியோரை அடங்கிய வேகக்கூட்டணி எந்த வகையிலான பேட்டிங் வரிசையையும் மிரட்டும் வகையில் திகழ்கிறது. இவர்கள் சொந்த மண்ணில் இன்று டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள்.

டெல்லி அணி 9 ஆட்டத்தில், 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. குயிண்டன் டி காக், ஜாகீர்கான், சஞ்சு சாம்சன், கருண் நாயர், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அதிக இளம் வீரர் களை கொண்ட டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் நெருக்கடி தரக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article8588692.ece

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்.கிரிக்கெட்: டில்லி அணி அசத்தல் வெற்றி
 

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் டில்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது. ஐதராபாத்தில் நடந்த போட்டியில் டில்லி, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் டுமினி 'பவுலிங்' தேர்வு செய்தார்.

ஐதராபாத் அணிக்கு வார்னர் 46, தவான் 34 ரன்கள் எடுத்தனர். யுவராஜ் (8), ஹென்ரிக்ஸ் (0) ஏமாற்றினர். மோரிஸ் பந்தில் வில்லியம்சன் (27) சிக்கினார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது. பரிந்தர் (1), நெஹ்ரா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதை விரட்டிய டில்லி அணிக்கு குயின்டன் 44 ரன்கள் விளாசினார். அகர்வால் 10, கருண் நாயர் 20 ரன்கள் எடுத்தனர். பின் இணைந்த சாம்சன், ரிஷபா ஜோடி வெற்றியை உறுதி செய்தது. டில்லி அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சாம்சன் (34), ரிஷபா (39) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1520997

  • தொடங்கியவர்

பஞ்சாப் - மும்பை இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான மும்பை அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி களுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் கடைசியாக பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ளும்.

பஞ்சாப் அணி 10 ஆட்டத்தில் 3 வெற்றிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் அடுத்து எதிர்கொள்ள உள்ள 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியுமா என்பது சந்தேகமே. அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றாலும் பஞ்சாப் அணி 14 புள்ளிகளையே பெறும்.

இந்த நிலை ஏற்பட்டால் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே பஞ்சாப் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டுமா என்பது தெரிய வரும். மாறாக இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.

கடந்த ஆட்டத்தில் களமிறங்காத மேக்ஸ்வெல் இன்று களமிறங்கக் கூடும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article8593641.ece

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: பஞ்சாப் அணி வெற்றி
  • தொடங்கியவர்
பஞ்சாப் அணி வெற்றி

விசாகப்பட்டினம்: மும்பை அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியாவில் பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

 

மும்பை அணிக்கு உன்முக்த், ராயுடு 'டக்-அவுட்டாகினர்'. ரோகித் 15 ரன்கள் எடுத்தார். ஸ்டாய்னிஸ் 'வேகத்தில்' ரானா (25), பட்லர் (9), போலார்டு (27) சிக்கினர். மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

முரளி விஜய் அசத்தல்:எளிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு ஆம்லா 'டக்-அவுட்டானார்'. பின் இணைந்த கேப்டன் முரளி விஜய், சகா ஜோடி சிறப்பாக செயல்பட்டது. இருவரும் அரை சதம் கடந்தனர். சகா 56 ரன்களில் ஆட்டமிழந்தார். மெக்லினகன் 'வேகத்தில்' மேக்ஸ்வெல் (0) ஆட்டமிழந்தார். முடிவில், பஞ்சாப் அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முரளி விஜய் (54), குர்கீரத் சிங் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1521766

  • தொடங்கியவர்

ஸ்டாய்னிஸ் பந்துவீச்சு, விஜய், சஹா அரைசதங்களினால் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்

 

 
அரைசதங்களை எடுத்த விஜய், சஹா, மற்றும் மும்பை பவுலர் பும்ரா. | கெட்டி இமேஜஸ்.
அரைசதங்களை எடுத்த விஜய், சஹா, மற்றும் மும்பை பவுலர் பும்ரா. | கெட்டி இமேஜஸ்.

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற 43-வது ஐபிஎல் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை முரளி விஜய் கேப்டனான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சந்தீப் சர்மா, மோஹித் சர்மா, ஸ்டாய்னிஸ் ஆகியோரது பந்து வீச்சுக்கு எதிராக 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்களை மட்டும் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் அணி விஜய், சஹா ஆகியோரது அரைசதங்களினால் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்டாய்னிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

பிட்சின் தரம் மோசமாக இருந்து. பந்துகள் மெதுவாகவும் தாழ்வாகவும் வர மும்பை பேட்ஸ்மென்களினால் தாக்குதல் ஆட்டம் ஆட முடியவில்லை. ஆனால் கிங்ஸ் லெவன் பந்துவீச்சும் துல்லியமாக அமைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியினால் ரன்களை ஒன்று இரண்டு என்று சேர்க்க முடியவில்லை சக்தி வாய்ந்த ஷாட்களே ரன்களை பெற்று தரும் பிட்சில் அந்த அணி 8 சிச்கர்களை அடித்து 5 பவுண்டரிகளை மட்டுமே அடித்தது.

இரண்டாம் பாதியில் பிட்ச் கொஞ்சம் சற்றே பந்துகள் வேகமாக வரத் தொடங்கியபோது மும்பை இந்தியன்ஸ் அணியின் மெக்லினாகன் முரளி விஜய்க்கு ஏகப்பட்ட தளர்வான பந்துகளை வீசினார், அதே போல் டிம் சவுத்தி நிறைய ஓவர் பிட்ச்களை வீச அதனை விருத்திமான் சஹா அருமையான ஸ்கோரிங் வாய்ப்புகளாக மாற்றினார்.

மும்பை இந்தியன்ஸ் பவர் பிளே முடிவில் 21/2 என்று இருந்தது. இந்த சீசனில் முதல் 6 ஓவர்களில் எடுக்கப்பட்ட ஆகக்குறைந்த ரன்களாகும் இது.

மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் அசத்தினார். அவர் பந்துகள் நன்றாகத் திரும்பி எழுந்தன. ஆனால் அவருக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. குருணால் பாண்டியாவை விஜய்யும், சஹாவும் வெகுசுலபமாக ஆடினர்.

விஜய் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, சஹா 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து மெக்லினாகனிடம் பவுல்டு ஆனார். ஹஷிம் ஆம்லா, கிளென் மேக்ஸ்வெல் இருவரும் ஸ்கோரரை தொந்தரவு செய்யாமல் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

முன்னதாக மும்பை அணியில் கெய்ரன் பொலார்ட் மட்டுமே அதிகபட்சமாக 3 சிக்சர்களுடன் 27 ரன்களை எடுத்தார். ரோஹித் சர்மா 15, உன்முக்த் சந்த், ராயுடு ஆகியோர் டக் அவுட் ஆக, ரானா 25 ரன்களை எடுத்தார். 14-வது ஓவருக்கும் 17-வது ஓவருக்கும் இடையே 42 ரன்கள் சேர்க்கப்பட்டதால் மும்பை 124 ரன்களையாவது எட்டியது. கிங்ஸ் லெவன் அணி இந்த வெற்றியுடன் 11-ல் 4-ஐ வென்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள தோனியின் புனே அணியை விட 2 புள்ளிகள் அதிகம் பெற்று அதற்கு முந்தைய இடத்தில் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/article8599353.ece?homepage=true

  • தொடங்கியவர்

இவங்கெல்லாம் ஏன் ஐ.பி.எல் ஆடுறது இல்லை?

 

 

ஐ.பி.எல் - பெரிய வீரர்களுக்கென பெயர்போன தொடர். அதேசமயம் இளம் திறமைகளை அடையாளம் காணும் ஒரு பள்ளிக்கூடம். கில்கிறிஸ்ட், காலிஸ், வார்னே, போலக் என எத்தனையோ மிகப்பெரிய ஜாம்பவாங்களெல்லாம் ஆடிச்சென்ற ஐ.பி.எல் தொடரின் நடப்பு நாயகர்கள் யாரென்றால் கோஹ்லி, வார்னர், டிவில்லியர்ஸ், ரஸ்ஸல் போன்றோர் தான். ஆனால் இந்த இரண்டு குரூப்புகளுக்கும் நடுவில் ஒரு சிலர் உள்ளனர். ஐ.பி.எல் தொடரில் மிகப்பெரிய அங்கம் வகித்துவிட்டு தற்போது ஆடும் லெவனில் விளையாட வாய்ப்பில்லாமல் ஏமாற்றமடைந்து வருகின்றனர். “என்னது இவங்கல்லாம் ஆடலையா” என்று அனைத்து ரசிகர்களும் வாய் பிளக்குமளவிற்கு ஆச்சரியம் பொதிந்துள்ளது இந்த 9வது ஐ.பி.எல் தொடர்.
  

வீரர்களின் முந்தைய சாதனைகளுக்காகவும், அவர்களது பெயர்களுக்காகவுமே அணியில் தேர்வு செய்த காலமெல்லாம் போய்விட்டது. ஃபார்ம், அணியின் பேலன்ஸ் அகியவற்றிற்கே அனைத்து அணிகளும் முன்னுரிமை கொடுக்கின்றன. ஆனால் புனே, மும்பை போன்ற அணிகள் ஒருசில வகையில் அதற்கு விதிவிலக்காக இருக்கின்றன. ஒருசில வீரர்கள் சிறப்பாய் செயல்படாத போதும், அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு அவ்வணியிலிருக்கும் பிற திறமைசாலிகளுக்குக் கிடைப்பதில்லை. அப்படி இந்த ஐ.பி.எல் தொடரில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் பெவிலியனில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் வீரர்கள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் அலசுவோம்.
 

கிறிஸ் கெயில் (பெங்களூர்)
 

IPL6.jpg

பவுலர்களின் எமன் கெயிலுக்கே இந்த நிலமையா என்று நாம் ஆச்சரியப்படத்தான் வேண்டியுள்ளது. ஆனால் இதற்குக் கெயிலே காரணம். டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக சரவெடியாய் சதமடித்த கெயில், அதன்பிறகு நமுத்துப் போன புஸ்வானம் ஆனார். அரையிறுதி, இறுதி என எந்தப் போட்டியிலும் கெயில் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. சரி ஐ.பி.எல் லிலாவது ஜொலிப்பாரா என்று எதிர்பார்த்தால், விளையாடிய 3 போட்டிகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஏமாற்றமே அளித்தார். வாட்சன், கோஹ்லி, டிவில்லியர்ஸ், ராகுல், மன்தீப், சர்ஃப்ராஸ் என மிகச்சிறந்த பேட்டிங் வரிசை கொண்டிருந்ததால் கெயிலை கழட்டிவிட இம்முறை யோசிக்கவில்லை அணி நிர்வாகம். பந்துவீச்சு மிகமோசமாக இருப்பதால் ஒரு வெளிநாட்டு பந்துவீச்சாளரை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இவையெல்லாவற்றையும் தாண்டி கெயிலை இன்னும் வெளியிலேயே அமர்த்தியிருப்பது ஆர்.சி.பி க்கான ஃபீல்டிங் தேவை தான். பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாட்டை சரிகட்ட சிறந்த ஃபீல்டர்கள் தேவை என்பதால் அற்புதமாக ஆடிவந்த சர்ஃப்ராசையே வெளியில் அமர்த்தியிருக்கிறார் கோஹ்லி. கெயிலின் ஃபீல்டிங் பற்றி நாம் அறியாதது ஒன்றுமல்ல. அதேசமயம் இவரோடு ஓப்பனிங் இறங்கும் பட்சத்தில் கோஹ்லியால் அதிகமாக இரண்டு ரன்கள் கூட ஓடமுடிவதில்லை. தற்போது ஓப்பனிங் இறங்கி வரும் ராகுல் அதிரடி, ஸ்டிரைக் ரொடேஷன், கீப்பிங் அணி அனைத்து ஆப்ஷன்களையும் பூர்த்தி செய்வதால் கெயிலின் சேவை ஆர்.சி.பி க்கு தற்போது தேவை இல்லை. கிறிஸ் கெயில் பெங்களூரு அணியில் உள்ளே, வெளியேவாகவே இருக்கிறார். முன்பெல்லாம் கெயில் இல்லாமல் டி20 ஆட்டமா என்ற நிலை இருந்தது. தற்போது யார் இருந்தாலும் பந்தை சிக்ஸருக்கு விரட்ட தெரிந்தால் போதும் என்ற அளவுக்கு டி20 மாறியதால் கெயிலுக்கு மவுசு குறைந்துள்ளது.
 

டிரென்ட் போல்ட் (ஹைதராபாத்)
   

IPL9.jpg

கடந்த சீசனில் சன்ரைசர்சின் ஆடும் லெவனில் ஸ்டெயினையே ஓரம் கட்டியவர். ஆனால் இம்முறை இன்னும் ஒரு போட்டியில் கூட அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கிறார். அதற்கு மிக முக்கியக் காரணம் வங்கதேசத்தின் முஸ்தாஃபிகுர் ரஹ்மான். ஏற்கனவே நெஹ்ரா, புவனேஷ்வர், பரிந்தர் ஸ்ரன் என அற்புதமான பவுலிங் யூனிட்டைக் கொண்டிருக்கும் அணியில் எக்காரணம் கொண்டும் இரண்டு வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய இயலாது. இந்திய பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கைக் குறைவாக உள்ளதால் 3 வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் கட்டாயம் தேவைப்படுகிறார்கள். அவ்வகையில், யார்க்கர்களாலும், ஸ்பீடு வேரியேஷன்களாலும் அனைத்து முன்னனி பேட்ஸ்மேன்களையும் அச்சுறித்து வரும் முஸ்தா முஸ்தாஃபிசுரிடம் சற்று பின் தங்குகிறார் போல்ட். திறமை இருந்தும் அதற்காம வாய்ப்பு கிடைக்காதது கொஞ்சம் பரிதாபம் தான்.

டேல் ஸ்டெயின்(குஜராத்)
   

IPL7.jpg

மெக்குல்லம், பிராவோ, ஸ்மித், ஃபின்ச், ஃபால்க்னர் என ஏற்கனவே ஐந்து டி20 ஸ்பெஷலிஸ்டுகள். அனைவரும் ஃபார்மில் வேறு உள்ளனர். இப்படியிருக்கையில் தனது பழைய ஃபார்மை இழந்து தவிக்கும் ஸ்டெயினுக்கு அணியில் எங்கு இடம் தருவது? அவர் விளையாடிய ஒரே போட்டியிலும் அவரால் விக்கெட் ஏதும் வீழ்த்த முடியவில்லை. மோசமாக பந்துவீசவில்லை என்றாலும் அணியிலுள்ள நிலமை அப்படி. குஜராத் அணியைப் பொறுத்தவரை டாப் ஆர்டர் அபாரம். பிரவீன், குல்கர்னி, சிவில் கௌசிக், தாம்பே, பிராவோ, ஃபால்க்னர் என அசைக்க முடியாத பந்துவீச்சு. அவர்களின் ஒரே பிரச்னை மிடில் ஆர்டர் பேட்டிங் தான். அதனால் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் கூட ரெய்னா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யாராவது ஒருவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கக் கூடும். எனவே ஸ்டெயினுக்கு இனி வாய்ப்புக் கிடைப்பது அரிதிலும் அரிதே.
 

வினய் குமார் (மும்பை)
   

IPL5.jpg

கடந்த ஆண்டு ஐ.பி.எல் வென்ற மும்பை அணியின் மிகமுக்கிய ஆயுதமாய் இருந்தவர் வினய் குமார். ஆனால் இம்முறை நிலமை தலைகீழ். சவுதீ பவர்-ப்ளேயில் பட்டையைக் கிளப்ப, பூம்ரா டெத் ஓவர்களில் யார்க்கர்கள் சொருக, இருவரோடும் இணைந்து விக்கெட் வேட்டை நடத்துகிறார் மற்றொரு நியூசி வீரர் மிட்செல் மெக்லெனகன். ஹர்பஜனும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இவர்களுக்கு ஆல்ரவுண்டர்களான பாண்டியா சகோதரர்கள் நல்ல ஒத்துழைப்புக் கொடுப்பதால் வினய்க்கு தேவையில்லாமல் போய்விட்டது. உள்ளூர் தொடர்களில் பெரிதாய் ஒன்றும் சோபிக்காததும் அவருக்குப் பாதகமாய்ப் போய்விட்டது. இப்போதுள்ள பவுலர்கள் யாரேனும் ஃபார்ம் இழந்தாலோ, அல்லது அடிபட்டு அமர்ந்தாலோ ஒழிய வினய்க்கு ஒன்பதாவது ஐ.பி.எல் தொடரில் வாய்ப்புகள் இல்லை.
 

மார்டின் குப்தில் (மும்பை)
   

சிம்மன்சிற்குப் பதிலாக குப்தில் மும்பை அணிக்குக் கையெழுத்திட்டபோது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். ஆனால் அவையனைத்தையும் தனது முதல் போட்டியிலேயே தவிடுபொடியாக்கினார் குப்தில். “இவருக்கு துணைக்கண்ட ஆடுகளங்களில் ஆடிப் பழக்கமில்லை” என்று தான் அனைத்து அணிகளும் ஏலத்தில் இவரைப் புறக்கணித்தன. அதை நிரூபிக்கும் வகையிலேயே இருந்தது 2 ரன்னில் அவுட்டான அவரது ஆட்டம். ஒரு ஆட்டத்தில் எதையும் முடிவு செய்யக்கூடாது என்றாலும், பேலன்சிங் என்றொரு பிரச்சனை எழுகிறது. பார்த்திவ் பட்டேலின் ஆட்டம் சிறப்பாகவே உள்ளது. அவரை வெளியில் அமர்த்தி அவருக்கு நிகரான ஒரு இந்தியரைத் தேட முடியாது. குப்தில் ஓப்பனிங் இறங்கிய போட்டியில் ரோஹித்தால் மிடில் ஆர்டரில் சரியாக விளையாட முடியவில்லை. எனவே பார்த்திவும் ரோஹித்தும் தான் மும்பைக்கு சரியான தொடக்க ஜோடி. அதேசமயம் சீராக ஆடாத பட்லருக்குப் பதிலாக குப்திலை சேர்க்கலாம். ஆனால் அவர் மிடில் ஆர்டருக்கு எப்படிப் பொருந்துவார் என்பது சந்தேகம் தான். அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், சோதனைகள் செய்துபார்க்க மும்பை அணி விரும்பாது.
   

இந்த வீரர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்காத நிலமை. ஆனால் பின்வருபவர்களுக்கோ வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
 

கோரி ஆண்டர்சன்(மும்பை)
   

IPL1.jpg

தொடக்கத்தில் அணியில் ஓரிரு மாற்றங்கள் செய்த ரோஹித், அதன்பின் பல போட்டிகளாக அதே அணியைத்தான் பயன்படுத்தி வருகிறார். அதுவும் பெரிய அளவில் சோபிக்காத பொல்லார்டு, பட்லர் ஆகியோருக்கும் இன்னும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பி வரும் பொல்லார்டுக்கு, கோரி நிச்சயம் சிறந்த மாற்றாக இருப்பார். பொல்லார்டோ மிஞ்சிப் போனால் இரண்டு ஓவர்கள் பந்து வீசுகிறார். அதுவும் சுமாராக. ஆனால் கோரி 4 ஓவர்களும் பந்து வீசத் தகுந்தவர். அவரை அணியில் சேர்க்கும் பட்சத்தில் மிடில் ஆர்டரும் வலுப்பெரும். ஆனால் ரோஹித்தோ மாற்றங்களைக் கொண்டு வர பெரிதும் தயங்குகிறார். பிளே ஆஃப் சுற்றுகள் நெருங்கிவிட்ட நிலையில் கோரியை அணியில் சேர்ப்பது மும்பைக்கு மிகவும் அவசியம்.

இர்ஃபான் பதான், பாபா அபாரஜித், ஈஸ்வர் பாண்டே (புனே)
 

IPL81.jpg   

 

இவர்களெல்லாம் அணியில் சேர்க்கப்படாததற்கு ஒரே காரணம் தோனி. அவரின் அணுகுமுறையே திறமையான இந்த வீரர்களை வெளியில் அமர்த்தியிருக்கிறது. எப்பொழுதும் வின்னிங் காம்பினேஷனையே விரும்பும் தோனி, இம்முறை புனே அணி கடுமையாக சொதப்பியும் கூட அணியில் பெரிய மாற்றங்கள் செய்யாமலேயே இருக்கிறார்.
   

ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா, முருகன் அஷ்வின் ஆகியோர் பயங்கரமாக சொதப்பியும் கூட மீண்டும் மீண்டும் அவர்களுக்கே வாய்ப்பளித்து வருகிறார் தோனி. தோனியின் தலைமை இர்ஃபான் விஷயத்தில் ரசிகர்களை மிகவும் கவலையுறச் செய்துவிட்டது. கடந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக 17 போட்டிகளிலும் வெளியிலேயே அமர்ந்திருந்தார் இர்ஃபான். சில மாதங்கள் முன்பு நடந்த சையது முஸ்தாக் அலி டி20 தொடரில்10 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி டாப் விக்கெட் டேக்கராகத் திகழ்ந்தார். பவுலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்திய இர்ஃபான், 200 ரன்களும் குவித்தார்(சராசரி-40). அப்படி அற்புதமான ஃபார்மில் இருந்த நிலையில் புனே அணியால் வாங்கப்பட்ட இர்ஃபானை மீண்டும் ஏமாற்றி வருகிறார் தோனி. விளையாடியுள்ள 10 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போட்டியிலும் ஒரு ஓவரே அவருக்கு பந்துவீசக் கொடுத்தார் தோனி. அந்த ஒரு ஓவரில் வெறும் 7 ரன்களே கொடுத்திருந்த போதும் அடுத்த போட்டியில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் இர்ஃபான்.
   

சென்னை அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஈஷ்வர் பாண்டேவிற்கும் இதே நிலமை தான். கடந்த ஐ.பி.எல் தொடரில் 10 போட்டிகளில் 11 விக்கெட் வீழ்த்திய இவரது எகானமி வெறும் 7.19 தான். ஆனால் இவருக்கும் இந்தத் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
   

அனைத்தை விடவும் கொடுமை பாபா அபாரஜித்தின் நிலமை. நல்ல ஆல்ரவுண்டர். அற்புதமான ஸ்பின்னர். தமிழக ரஞ்சி அணியின் நம்பிக்கை நாயகன். யார் யாரோ அடையாளம் தெரியாதவர்களெல்லாம் ஐ.பி.எல்லில் விளையாட இவருக்கு இன்னும் அறிமுக போட்டியில் ஆடும் வாய்ப்பே கிடைக்கவில்லை. சி.எஸ்.கே வில் சில சீசன்கள், புனேவில் இந்த சீசன் என தோனியில் நிழலில் இவரும் மறைந்து கொண்டிருக்கிறார்.
   

உன்முக்த் சந்த், பவன் நெகி, அபு நெகிம் என உள்ளூர் வீரர்கள் மட்டுமல்ல, தற்போது ஜான்சன், மேக்ஸ்வெல், நரேன் போன்ற ஜாம்பவான்கள் கூட அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டு மீண்டும் ஆடும் லெவனில் வாய்ப்புக்காகத் தவிக்கிறார்கள். கெயில், ஜான்சன் போன்றோரின் புறக்கணிப்புகள் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்றாலும், இர்ஃபான், அபாரஜித் ஆகியோரின் புறக்கணிப்புகள் சற்றுக் கொடுமையே. கேப்டன்கள் தங்களுக்கென இருக்கும் ஃபார்முலாவிலிருந்து மீண்டு சில மாற்றங்கள் புகுத்துதல் வேண்டும். ‘திறமைக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதைத் தவிர பெரிய வலி ஏதுமில்லை’.

http://www.vikatan.com/news/sports/63999-why-they-didnt-play-ipl.art

  • தொடங்கியவர்

சின்னசாமி மைதானத்தில் இன்று பெங்களூரு- குஜராத் மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்-குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணிக்கு இது 11-வது ஆட்டமாகும். அந்த அணி 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளேப் ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்திலும் தனது கடைசி இரு ஆட்டங்களிலும் வென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் பெங்களூரு அணி உள்ளது.

மாறாக இன்றைய ஆட்டத்தில் தோல்வியை எதிர்கொண்டால் தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேறும் நிலை உருவாகும். இந்த தொடரில் 568 ரன்கள் குவித்துள்ள கேப்டன் விராட் கோலி கடந்த இரு ஆட்டத்திலும் பேட்டிங்கில் கைகொடுக்கத் தவறினார்.

டி வில்லியர்ஸ் ஓரளவு கை கொடுத்தாலும் அது வெற்றிக்கு உதவவில்லை. ரன் குவிக்க சிரமப்பட்டு வரும் கெய்ல் இன்றைய ஆட்டத்தில் நீக்கப்பட வாய்ப்புள்ளது. கோலியுடன் மீண்டும் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். பந்து வீச்சு வலுவிழந்து காணப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் கூடுதலாக 20 முதல் 30 ரன்கள் சேர்க்க பெங்களூரு அணி திட்டமிடக்கூடும்.

குஜராத் அணி 11 ஆட்டத்தில் 7 வெற்றிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றை உறுதி செய்துகொள்ளும். ரெய்னா தனது குழந்தை பிறப்பையொட்டி நெதர்லாந்து சென்றுள்ளதால் குஜராத் அணிக்கு இன்றைய ஆட்டத்தில் பிரண்டன் மெக்கலம் தலைமை வகிக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் ரெய்னா ஆட்டத்தை தவறவிடுவது இதுவே முதன்முறை.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article8599279.ece

  • தொடங்கியவர்

அஸ்வின் பவுலிங்கை கோலி நன்றாக விளையாடுவார்: 17-வது ஓவரில் பந்துவீச அழைத்ததற்கு பிளெமிங் காரணம்

 

 
அஸ்வின், கோலி, தோனி. | கோப்புப் படம்.
அஸ்வின், கோலி, தோனி. | கோப்புப் படம்.

தோனி தலைமையில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் மோசமாக ஆடிவருவதற்கு பல்வேறு காரணிகள் பங்களிப்பு செய்வதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

தோனி, தன்னை பேட்டிங்கில் முன்னால் களமிறக்கிக் கொள்வதில்லை, பதிலாக அஸ்வினை பவுலிங்கில் முடக்கி பேட்டிங்கில் முன்னால் இறக்குவதுமாக அவரது செயல்பாடுகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது, குறிப்பாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோலியின் அதிரடி இன்னிங்ஸ் மூலம் புனேயின் மிகப்பெரிய இலக்கைத் துரத்தி வெற்றி பெற்ற போட்டியில் அஸ்வினை 17-வது ஓவரில் தோனி அறிமுகம் செய்ததோடு ஒரே ஓவர்தான் கொடுத்தார். இதனையடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் புனே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “ரசிகர்கள் ஒரு அணியின் மீது ஆர்வங்களைக் குவிக்கின்றனர் இதனால் அந்த அணியின் ஆட்டம் பற்றி சற்று கூடுதலாகவே கருத்துகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். ஆனால் இன்னொரு அணியை ஒருங்கிணைப்பது அவ்வளவு சுலபமல்ல. வீரர்கள் ஒவ்வொருவரும் விரைவில் ஒருவரையொருவர் பிணைத்துக் கொள்ள வேண்டும், அணிச்சேர்க்கை சரிவர அமைய வேண்டும்” என்றார்.

அஸ்வின் விவகாரம் பற்றி கேட்ட போது, “அதாவது தொடக்கத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் ஸ்பின்னர்களைக் கொண்டு வர சரியாக இருக்கும். சில பிட்ச்களில் நாங்கள் இதனைச் செய்யவில்லை. மேலும், சில வீரர்களின் ஆட்டம் பற்றி தெரிந்துள்ள தோனி ஸ்பின்னர்களை சில வீரர்களுக்கு எதிராக கொண்டு வருவதில் தயக்கம் காட்டுகிறார். கோலி அஸ்வினை நன்றாக ஆடக்கூடியவர் (அன்றைய போட்டியில் 17-வது ஓவரில் அஸ்வின் அழைக்கப்பட்டார்)” என்றார்.

மேலும் கூறும்போது, “அஸ்வின் எங்கள் அணியில் இன்னமும் மதிப்பு மிக்க ஒரு வீரராகவே கருதப்படுகிறார். சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் போது கடந்த போட்டியில் அருமையாக வீசி 16 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார். அவரது திறமைகள் பற்றி நாங்கள் அறிவோம் சூழ்நிலைகள் கொஞ்சம் ஆதிக்கம் செலுத்துகிறது அவ்வளவே, இதற்கு மேல் இதில் எதுவும் இல்லை.

அடுத்த ஐபிஎல் போட்டித் தொடரை எதிர்நோக்குகிறோம், நாங்கள் அட்டவணையில் கடைசியில் இருக்க வேண்டிய அணி அல்ல, முதலிடத்தில் இருக்க வேண்டிய அணி” என்றார் ஸ்டீபன் பிளெமிங்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-17%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article8600624.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

முதல் ஐபிஎல் போட்டியைத் தவறவிட்டார் சுரேஷ் ரெய்னா!

 

  • raina1.jpg

பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து முதல்முறையாக ஐபிஎல் போட்டியைத் தவறவிட்டுள்ளார் ரெய்னா.

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா செளத்ரியை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். இந்நிலையில் மனைவியின் பிரசவத்தின்போது அருகில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் சுரேஷ் ரெய்னா. இதனால் நீண்டநாளாக உள்ள ஒரு சாதனை முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 9 வருடங்களாக ஐபிஎல்-லில் தொடர்ந்து ஆடிவரும் ஒரே வீரர் என்கிற சாதனை ரெய்னா வசம் இருந்தது. 2008 முதல் ஐபிஎல்-லில் ஆடிவரும் ரெய்னா இந்தப் போட்டிக்கு முன்புவரை ஒரு ஐபிஎல் போட்டியைக் கூட தவறவிட்டதில்லை.

தற்போது மனைவியின் பிரசவத்துக்காக அவர் நெதர்லாந்து சென்றுள்ளதால் இன்றைய பெங்களூருக்கு எதிரான போட்டியில் பங்கேற்கமுடியாத சூழல் உண்டானது. இதனால் ஐபிஎல்-லில் தொடர்ந்து ஆடுகிற வீரர் என்கிற பெருமையையும் ரெய்னா இழந்துள்ளார். பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ரெய்னா, 143 ஐபிஎல் போட்டிகளில் ஆடி அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வீரர் என்கிற சாதனையைப் பெற்றுள்ளார். சிஎஸ்கேவுக்காக 132 போட்டிகளிலும் குஜராத்துக்காக இதுவரை 11 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

ரெய்னாவுக்கு அடுத்த இடத்தில் தோனியும் ரோஹித் சர்மாவும் உள்ளார்கள். இருவரும் தலா 140 போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். வெளிநாட்டு வீரர்களில் அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர்களில் டிவில்லியர்ஸுக்கு முதலிடம். அவர் விளையாடிய ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை - 115.

http://www.dinamani.com/sports/2016/05/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1/article3432718.ece

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: கோல்கட்டா அணி வெற்றி
 
 
ஐ.பி.எல்., கிரிக்கெட்: புனே மீண்டும் தோல்வி
 
Tamil_News_large_152252020160515002241_3
 

கோல்கட்டா: கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், புனே அணி 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இந்தியாவில் 9வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் நேற்று, 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்து விட்ட புனே அணி, கோல்கட்டாவை சந்தித்தது. 'டாஸ்' வென்ற புனே அணி கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். புனே அணியின் ரகானே (2), கவாஜா (21), திவாரி (13), பெய்லி (33) சீரான இடைவெளியில் திரும்பினர். இர்பான் பதான் (7), பெரேரா (13) கைவிட்டனர். புனே அணி 17.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 103 ரன் எடுத்திருந்த போது, மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. தோனி (8) அவுட்டாகாமல் இருந்தார்.

மழை நின்ற பிறகு, கோல்கட்டா அணிக்கு 9 ஓவரில் 66 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. அஷ்வினின் முதல் ஓவரில் உத்தப்பா (4), காம்பிர் (0) அவுட்டாகினர். பின் வந்த யூசுப் பதான், அஷ்வினின் 2வது ஓவரில் 22 ரன் எடுக்க கோல்கட்டா வெற்றி எளிதானது. கோல்கட்டா அணி 5 ஒவரில் 2 விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்து, 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யூசுப் பதான் (37), மணிஷ் பாண்டே அவுட்டாகாமல் (15) இருந்தனர். இத்தொடரில் 12 போட்டியில், புனே அணி பெற்ற 9வது தோல்வி (3 வெற்றி) இது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1522520
 
  • தொடங்கியவர்

விராட் கோலி, டி வில்லியர்ஸ் சதம் விளாசல்: பெங்களூரு அணி அபார வெற்றி

 
 
பந்தை பவுண்டரிக்கு விளாசும் டி வில்லியர்ஸ்.
பந்தை பவுண்டரிக்கு விளாசும் டி வில்லியர்ஸ்.

ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. கெய்ல் 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஆனால் விராட் கோலி-டி வில்லியர்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. டி வில்லியர்ஸ் 43 பந்திலும், விராட் கோலி 53 பந்திலும் சதம் அடித்தனர். கோலி இந்த தொடரில் விளாசிய 3-வது சதமாக இது அமைந்தது.

டி வைன் பிராவோ வீசிய 18-வது ஓவரி லும், கவுசிக் வீசிய 19-வது ஓவரிலும் தலா 30 ரன்கள் விளாசப்பட்டன. விராட் கோலி 55 பந்தில், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரி யுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் 52 பந்தில், 12 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

249 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணி 18.4 ஓவரில் 104 ரன்க ளுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 37 ரன் எடுத்தார். ஸ்மித் 7, பிரண்டன் மெக்கலம் 11 ரன்களில் ஆட்ட மிழந்தனர். பெங்களூரு தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி 5-வது வெற்றி யை பதிவு செய்தது. இந்த வெற்றியால் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் நீடிக்கிறது. அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் உள்ளன. குஜராத் அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. 14 புள்ளிகளு டன் உள்ள அந்த அணி கடைசி இரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

பெங்களூரு அணி சேர்த்த 248 ரன்கள் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி குவிக்கும் இரண்டாவது அதிக பட்ச ரன் களாகும். இதற்கு முன்னர் 2013-ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இதே பெங்க ளூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன் கள் குவித்து அதிகபட்ச ஸ்கோர் சேர்த்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் 2-வது விக்கெட்டுக்கு கோலி-டி வில்லியர்ஸ் ஜோடி 229 ரன்கள் குவித்தது. இதுவும் சாதனையே. இந்த ஜோடி கடந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிராக இதே விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்திருந்தன. இந்த சாதனையை அவர்களே முறியடித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8603605.ece?homepage=true

  • தொடங்கியவர்

பஞ்சாப்புடன் இன்று மோதல்: பிளேஆப் சுற்றில் கால்பதிக்கும் முனைப்பில் ஐதராபாத் அணி

 

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு மொஹாலியில் நடை பெறும் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

11 ஆட்டத்தில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ள ஐதரா பாத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இறுதி செய்துகொள்ள முடியும். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக விளையாடிய ஐதராபாத் இன்று விழிப்புடன் செயல்படக்கூடும்.

அதேவேளையில் பஞ்சாப் அணிக்கும் இன்றைய ஆட்டம் முக்கியத்தும் வாய்ந்தது தான். 11 ஆட்டத்தில் 4 வெற்றிகளை பெற் றுள்ள அந்த அணி இன்றைய ஆட்டத்திலும் எஞ்சியுள்ள இரு ஆட்டத்திலும் ஜெயித்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற் கான வாய்ப்பு உள்ளது.

முரளி விஜய் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு பஞ்சாப் அணி போராடும் குணத்துடன் விளையாடி வருகிறது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.

மும்பை-டெல்லி மோதல்

இரவு 8 மணிக்கு விசாகப்பட் டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோது கின்றன. நடப்பு சாம்பியனான மும்பை இந்த தொடரில் கடுமையாக திணறி வருகிறது. ரோஹித் சர்மாவை மட்டுமே பேட்டிங்கில் நம்பியிருப்பது பலவீனமாக உள்ளது.

அம்பாட்டி ராயுடு, பொல்லார்டு, பார்த்திவ் படேல், ஜாஸ் பட்லர் உள்ளிட்ட வீரர்கள் சீரான ஆட் டத்தை வெளிப்படுத்த தவறுகின் றனர். மும்பை அணிக்கு இன்றைய ஆட்டத்தையும் சேர்த்து மொத்தம் இரு ஆட்டங்கள் மட்டுமே உள் ளது. 12 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற வேண்டுமானால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

டெல்லி அணி 10 ஆட்டத்தில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்தடுத்து வெற் றிகளை குவிக்கும் பட்சத்தில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை டெல்லி அணி எளிதாக்கிக்கொள்ள முடியும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article8603603.ece

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்: டோணிக்கும் ரெய்னாவுக்கும் சோதனையான சனிக்கிழமை
 
15-05-2016 11:46 AM
Comments - 0       Views - 2

article_1463318277-TamilBhdjhfBucket.jpgஇந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் இறுதிக் கட்டத்துக்குப் போட்டிகள் வந்துள்ள நிலையில், முக்கியமான முடிவுகள் பல எட்டப்பட்டு வருகின்றன. இதில், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இரண்டு போட்டிகளுமே, ஐ.பி.எல் வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளாக மாறிப்போயின.

சனிக்கிழமை இடம்பெற்ற முதலாவது போட்டியில், றோயல் சலஞ்சர்ஸ் பெங்க;ர் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதியிருந்தன. இப்போட்டியில், குஜராத் அணியின் தலைவர் சுரேஷ் ரெய்னா பங்கேற்றிருக்கவில்லை. அவரது மனைவிக்குக் குழந்தைப் பேறுக்காக, நெதர்லாந்துக்குச் சென்றிருந்ததாலேயே, இப்போட்டியில் அவர் பங்கேற்றிருக்கவில்லை.

ஐ.பி.எல் ஆரம்பித்தது முதல், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவந்த ரெய்னா, அவ்வணிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்தே, இம்முறை குஜராத் அணிக்காக விளையாடியிருந்தார். இதுவரை காலமும், ஐ.பி.எல் தொடரின் எந்தவொரு போட்டியையும் தவறவிட்டிருக்காத அவர், 9ஆவது ஆண்டிலேயே முதலாவது போட்டியைத் தவறவிட்டிருந்தார்.

அவர் தவறவிட்ட போட்டி என்பதைத் தவிர, விராத் கோலியும் ஏபி.டி வில்லியர்ஸூம் இணைந்து, தாண்டவமாடிய போட்டியாகவும் இது அமைந்திருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி சார்பாக டி வில்லியர்ஸ் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்களைக் குவிக்க, விராத் கோலியோ, 55 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். ஒட்டுமொத்த இருபதுக்கு-20 வரலாற்றில், ஒரே போட்டியில் இரண்டு வீரர்கள், சதங்களைப் பெற்றமை, இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர், 2011ஆம் ஆண்டில் குளொசெஸ்டெர்ஷெயார் அணிக்காக கெவின் ஓ பிரையன், ஹேமிஷ் மார்ஷல் இருவரும் சதம் பெற்றிருந்தனர். தவிர, டி வில்லியர்ஸ், கோலி இருவரும் இணைந்து, 229 ஓட்டங்களைப் பகிர்ந்து, இருபதுக்கு-20 போட்டிகளின் மிகப்பெரிய இணைப்பாட்டம் என்ற அவர்களின் சாதனையை (பிரிக்கப்படாத 215 ஓட்டங்கள்), சனிக்கிழமையன்று முறியடித்திருந்தனர்.

அத்தோடு, இப்போட்டியை பெங்களூர் அணி 144 ஓட்டங்களால் வென்றிருந்த நிலையில், ஐ.பி.எல் வரலாற்றில், மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தால் பெறப்பட்ட வெற்றி என்ற சாதனையும் படைக்கப்பட்டது. முதலாவது ஐ.பி.எல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பிரென்டன் மக்கலத்தின் அதிரடிச் சதத்தின் உதவியுடன், பெங்களூர் அணிக்கெதிராக பெற்ற 140 ஓட்டங்களே, இதுவரையிலான சாதனையாக இருந்தது.

ரெய்னா தலைமையிலான குஜராத் அணிக்கெதிரான சாதனைகள் இவ்வாறிருக்க, ரெய்னாவின் தலைவராக சென்னையில் இருந்த மகேந்திரசிங் டோணியின் அணியும், மோசமான வரலாற்றைப் படைத்துக் கொண்டது.
டோணி தலைமையிலும் ஸ்டீபன் பிளமிங்கின் பயிற்றுவிப்பிலும் சென்னை அணி சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற போதிலும், அவர்களின் வழிகாட்டலில் களமிறங்கிய றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி, கொல்கத்தா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்து, இவ்வாண்டுக்கான போட்டிகளில், இறுதிக்கட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெறாமல் வெளியேற்றப்படும் முதலாவது அணியாக மாறியது. இதன்படி, டோணி தலைமையிலான அல்லது பிளமிங்கின் பயிற்றுவிப்பிலான அணியொன்று, ஐ.பி.எல் இறுதிக்கட்டப் போட்டிகளில் பங்குபற்றாத முதற்சந்தர்ப்பமாக, இம்முறை இடம்பெறவுள்ள இறுதிக்கட்டப் போட்டிகள் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/172296#sthash.LBRSw8jB.dpuf
  • தொடங்கியவர்
பஞ்சாப் அணி தோல்வி
 

மொகாலி: ஐதராபாத் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.இந்தியாவில் ஒன்பதாவது பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது. மொகாலியில் இன்று நடந்த போட்டியில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் முரளி விஜய் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.ஆம்லா அரை சதம்:பஞ்சாப் அணிக்கு முரளி விஜய் (6) ஏமாற்றினார். சகா, குர்கீரத் சிங் தலா 27 ரன்கள் எடுத்தனர். ஹென்ரிக்ஸ் வீசிய 16வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசிய ஆம்லா (96) சத வாய்ப்பை இழந்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. மில்லர் (20), மேக்ஸ்வெல் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதை விரட்டிய ஐதராபாத் அணிக்கு ஷிகர் தவான் (25) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் வார்னர் (52) அரை சதம் கடந்தார். சந்தீப் சர்மா 'வேகத்தில்' ஹுடா (34) சிக்கினார். பொறுப்புடன் செயல்பட்ட யுவராஜ் வெற்றியை உறுதி செய்தார். ஐதராபாத் அணி 19.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யுவராஜ் (42), பென் கட்டிங் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1522856

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: டில்லி அணிக்கு 207 ரன் இலக்கு
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: மும்பை அணி வெற்றி
 
 
 
 
Tamil_News_large_152308120160516001231_3
 

விசாகப்பட்டினம் : ஐ.பி.எல்., லீக் போட்டியில் குர்ணால் பாண்ட்யா 'ஆல்-ரவுண்டராக' ஜொலிக்க, மும்பை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை, டில்லி அணிகள் மோதின. மும்பை அணியில் தம்பி ஹர்திக் பாண்ட்யா நீக்கப்பட்டு, அண்ணன் குர்ணால் பாண்ட்யா சேர்க்கப்பட்டார். 'டாஸ்' வென்ற டில்லி, 'பவுலிங்' தேர்வு செய்தது. மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் (31), கப்டில் (48) சிறப்பான துவக்கம் தந்தனர். அபாரமாக ஆடிய குர்ணால் பாண்ட்யா 37 பந்தில் 86 ரன்கள் விளாசினார். போலார்டு (3) ஏமாற்ற, மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. பட்லர் (18), ராயுடு (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கடின இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு மயாங்க் அகர்வால், கருண் நாயர் தலா 8 ரன்களில் திரும்பினர். குயின்டன் டி காக் (40) ஆறுதல் அளித்தார். ரிஷாபா (23), டுமினி (9) ஏமாற்றினர். டில்லி அணி 19.1 ஓவரில் 126 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' வீழ்ந்தது. மும்பை சார்பில் குர்ணால் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1523081

  • தொடங்கியவர்

டி20 கிரிக்கெட்டில் டக்வொர்த் முறை: ஸ்டீபன் பிளெமிங் சாடல்

 

 
ஸ்டீபன் பிளெமிங். | படம்: ஷான் ராய்.
ஸ்டீபன் பிளெமிங். | படம்: ஷான் ராய்.

டி20 கிரிக்கெட்டில் டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்படுவது முட்டாள்தனமானது என்று ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சாடியுள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புனே 17.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுக்க, மழை காரணமாக கொல்கத்தா அணிக்கு 9 ஓவர்களில் 66 ரன்கள் இலக்கு டக்வொர்த் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது. இதில் உத்தப்பா, கம்பீர் ஆகியோரை அஸ்வின் முதல் ஓவரிலேயே வீழ்த்தினாலும் யூசுப் பதான் 18 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 37 ரன்களை விளாச கொல்கத்தா அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் எடுத்து வென்றது.

இது குறித்து புனே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “டக்வொர்த் முறை மிக மோசமானது. டக்வொர்த் முறை நடைமுறைப்படுத்தியவுடன் ஆட்டம் முடிந்து விடுகிறது. நான் இதனைப் பற்றி ஆண்டுக்கணக்கில் விமர்சித்து வந்துள்ளேன், மற்றவர்களும் விமர்சனம் வைத்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையை பேசியாக வேண்டும். இந்த முறையை மாற்ற விருப்பம் இல்லாமல் உள்ளது. டக்வொர்த் லூயிஸ் முறை டி20 போட்டிகளுக்கானதல்ல. இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும், இது முட்டாள்தனமானது” என்றார்.

புனே கேப்டன் தோனி 22 பந்துகளைச் சந்தித்து 8 ரன்களை மட்டுமே எடுத்தது பற்றி பிளெமிங்கிடம் கேட்ட போது, “இது பேட் செய்வதற்குக் கடினமான பிட்ச். அடித்து ஆட வேண்டும் என்பதுதான் திட்டம், ஆனால் பந்துகள் திரும்பியதால் விக்கெட்டுகளை இழந்தோம். இந்த மாதிரி பிட்சில் விக்கெட்டுகளை இழப்போம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

எங்கள் இன்னிங்ஸ் 20 ஓவர்கள் சென்றிருந்தால் மேலும் 25 ரன்களை எடுத்திருப்போம், அல்லது இன்னும் அதிகமாக அடித்து ஸ்கோரை 135-140 என்று கொண்டு சென்றிருப்போம். 135 ரன்கள் போதுமானது என்று நினைத்தோம், தோனி கிரீஸில் இருந்தார். இதனால் கடைசி 2 ஓவர்களை குறிவைத்தோம் ஆனால் மழையால் அது நடைபெறாமல் போனது.

எங்கள் ஸ்பின்னர்களை வைத்து துரத்தலை கடினமாக்கியிருப்போம், ஆனால் டி/எல் முறை வந்தவுடன் எங்களுக்கு ஆட்டம் முடிந்து போனது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article8606830.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.