Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IPL 9 செய்திகள் கருத்துக்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 184 ரன் இலக்கு
 

கோல்கட்டா: ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கோல்கட்டா அணியும், பெங்களூரூ அணியும் மோதுகின்றன. முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரூ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கோல்கட்டா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. கோல்கட்டா அணியின் காம்பீரும் பாண்டேவும் அரைசதம் அடித்தனர்.
இதனையடுத்து, பெங்களூரு அணிக்கு 184 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1523426

  • Replies 209
  • Views 12.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: பெங்களூரு அணி வெற்றி
 
 
Tamil_News_large_152364120160516232554_3
 

கோல்கட்டா: ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கோல்கட்டா அணியும், பெங்களூரூ அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரூ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கோல்கட்டா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. கோல்கட்டா அணியின் காம்பிரும் பாண்டேவும் அரைசதம் அடித்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரூ அணி 18.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1523641

  • தொடங்கியவர்

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு

 


 

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு.

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெங்களூர் அணியில் வருண் ஆரோனுக்குப் பதிலாக இக்பால் அப்துல்லா சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணியில் உத்தப்பா 2 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார்.

இதையடுத்து கேப்டன் கம்பீருடன் இணைந்தார் மணீஷ் பாண்டே. அவர் வந்த வேகத்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்க, மறுமுனையில் கம்பீர் வெளுத்துக் கட்டினார். அரவிந்த், அப்துல்லா, வாட்சன், சாஹல் என எல்லோருடைய பந்துகளையும் சிதறடித்த கம்பீர், 32 பந்துகளில் அரை சதம் கண்டார்.

கம்பீர்-பாண்டே ஜோடியின் அதிரடியால் 10 ஓவர்களில் 87 ரன்களைக் குவித்தது கொல்கத்தா. அந்த அணி 10.3 ஓவர்களில் 90 ரன்களை எட்டியபோது கம்பீர் ரன் அவுட்டானார். அவர் 34 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு யூசுப் பதான் களமிறங்க, அதிரடியாக ஆடிய பாண்டே 34 பந்துகளில் அரை சதம் கண்ட கையோடு ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு யூசுப் பதான் 6, சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் நடையைக் கட்ட, ஆன்ட்ரே ரஸலுடன் இணைந்தார் ஷகிப் அல்ஹசன். இந்த ஜோடி அதிரடியாக ஆட, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது கொல்கத்தா. ரஸல் 19 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 39, அல்ஹசன் 11 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா 59 ரன்கள் குவித்தது.

பெங்களூர் தரப்பில் அரவிந்த் 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.

பெங்களூர் அணி சார்பில் கோலியும், கெயிலும் ஆட்டத்தைத் தொடங்கினார். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த கெயில் இன்று தனது அதிரடியை வெளிப்படுத்தினார். அவர் 31 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில் சுனீல் நரைன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவர் 5 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் விளாசினார்.

இதையடுத்து உள்ள வந்த டிவில்லியர்ஸ் தனது வழக்கமான அதிரடியைக் காட்டினார். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் கோலி இந்த ஆட்டத்திலும் அரை சதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து டிவில்லியர்ஸும் அரை சதம் எடுத்தார்.

பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி 75 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 59 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

http://www.dinamani.com/sports/2016/05/16/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95/article3436249.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல்: விராட் கோலி புதிய சாதனை

 


 
  • kohli55.jpg

இந்த சீசனில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி 3 சதம், 5 அரை சதங்களுடன் 752 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

முன்னதாக பெங்களூரின் கிறிஸ் கெயில் (2012), சென்னை சூப்பர் கிங்ஸின் மைக் ஹசி (2013) ஆகியோர் தலா 733 ரன்கள் குவித்ததே ஒரு சீசனில் எடுக்கப்பட்ட அதிகப்பட்ச ரன் சாதனையாக இருந்தது. அதை இப்போது கோலி முறியடித்துள்ளார்.

கெய்ல் ஒரு சதமும் 7 அரை சதங்களும் 2012-ல் அடித்தார். அதற்கு அடுத்த வருடம், ஹஸ்ஸி, 6 அரை சதங்கள் அடித்தார். ஆனால் கோலி இதுவரையிலேயே 3 சதங்களும் 5 அரை சதங்களும் அடித்துள்ளார். இன்னமும் அவர் சில போட்டிகள் ஆடவேண்டியுள்ளது. அதனால் மேலும் பல சாதனைகளை கோலி படைக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

http://www.dinamani.com/sports/2016/05/17/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4/article3437382.ece

  • தொடங்கியவர்

விராட் கோலி, டி வில்லியர்ஸ்: பேட்மேன், சூப்பர்மேன் போன்றவர்கள்: கிறிஸ் கெய்ல் புகழாரம்

 

12 போட்டிகளில் இருவரும் 1349 ரன்கள். நிறுத்த முடியவில்லை. | படம்: கே.முரளிகுமார்.
12 போட்டிகளில் இருவரும் 1349 ரன்கள். நிறுத்த முடியவில்லை. | படம்: கே.முரளிகுமார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 18.4 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து 6-வது வெற்றியை பதிவு செய்தது.

விராட் கோலி 51 பந்துகளில் 75 ரன்களும், டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் கோலி 752 ரன்களும், டிவில்லியர்ஸ் 597 ரன்களும் குவித்துள்ளனர். இருவரும் இணைந்து மொத்தம் 1,349 ரன்கள் குவித்துள்ளனர்.

அதிலும் கோலி ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கிறிஸ் கெயில் (2012), மைக் ஹசி (2013) ஆகியோர் தலா 733 ரன்கள் குவித்ததே ஒரு சீசனில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது. அதை இப்போது கோலி முறியடித்துள்ளார்.

இந்நிலையில், விராட் கோலியும், டி வில்லியர்சும் பேட்மேன் - சூப்பர்மேன் போன்றவர்கள் என்று கிறிஸ் கெயில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, " இவர்கள் இருவரும் பேட்மேன், சூப்பர்மேன் போன்று விளையாடுகிறார்கள். அவர்கள் வாழ்வின் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார்கள், முக்கியமாக கோலி.

இருவரும் தொடர்ந்து நன்றாக விளையாடி ரன்கள் குவிக்கவேண்டும். பெங்களூரு அணிக்கு பல நன்மைகளைச் செய்துவருகிறார்கள். நெருக்கடியான சூழ்நிலையில் கோலியும், டி வில்லியர்சும் சிறப்பாக விளையாடுகின்றனர்.

பாராட்டுகள் நிச்சயம் இவர்களுக்கே செல்ல வேண்டும். கோலி தலைமைத்துவத்தை சிறப்பாக மேற்கொள்கிறார். இதுவரை ஆடிய 12 போட்டிகளிலும் இருவரும் அருமையாக ஆடியுள்ளார்கள். தொடர்ந்து சிறப்பாக ஆடி வெற்றி பெற வைப்பார்கள் என எண்ணுகிறேன்" என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8611972.ece

19 hours ago, நவீனன் said:

பெங்களூர் அணி சார்பில் கோலியும், கெயிலும் ஆட்டத்தைத் தொடங்கினார். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த கெயில் இன்று தனது அதிரடியை வெளிப்படுத்தினார். அவர் 31 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில் சுனீல் நரைன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவர் 5 பவுண்டரிகளையும்6 சிக்ஸர்களையும் விளாசினார்.

ஆமா 
5 பவுண்டரி 20 ரன்கள்
6 சிக்சர்கள் 36 ரன்கள்

மொத்தம் 56

சரி 
5 சிக்சர்கள் 30 ரன்கள்
6 பவுண்டரி 24 ரன்கள்

மொத்தம் 54

எப்படி பாத்தாலும் 49 வரவே மாட்டேங்குதே!  :grin:

  Royal Challengers Bangalore innings (target: 184 runs from 20 overs) R M B 4s 6s SR
View dismissal CH Gayle lbw b Narine 49 28 31 5 4 158.06
  • தொடங்கியவர்

'பேட்மேன்' ஏபிடி - 'சூப்பர்மேன்' கோலி தெறிக்கும் டி20 சாதனைகள்!

RCB1.jpg


ன்று கிரிக்கெட் உலகின் தலைசிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் என்றால், அது நம் விராத் கோலியும், தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்சும்தான். இருவரும் இரு வேறு வகையான பேட்ஸ்மேன்கள்.

கோலி ஒரு கிளாசிக்கல் பிளேயர். டிவில்லியர்சோ அனைத்தும் கலந்த கலவை. அவர் ஒரு ஃப்யூசன் மியூசிக் போன்றவர். கிளாசிக்கல் ஷாட்கள் மட்டுமல்லாது, பிற பேட்ஸ்மேன்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஷாட்களை அடிக்க வல்லவர். இருவரும் வேறு வேறு அணிகளில் இருந்தாலே ரன்கள் மழையாய்ப் பொழியும். ஒரே அணியில் இருந்தால்? சொல்லவா வேண்டும். இருவரும் இணைந்து இந்த ஐ.பி.எல் தொடரில் செய்யும் அட்டகாசங்களால், பல சாதனைகள் முறியடிக்கப்பட்டும், பல சாதனைகள் புதிதாய் உருவான வண்ணமும் இருக்கின்றன.
   

2011ம் ஆண்டு,  நான்காவது ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார் பெஞ்சமின் டிவில்லியர்ஸ். ஏற்கனவே கோலியைத் தக்கவைத்திருந்த அவ்வணி தில்ஷன், கெயில் போன்றோரையும் பின்னாட்களில் வாங்கியது. தில்ஷன், ஹென்ரிக்ஸ், ரூசோ, யுவராஜ், தினேஷ் கார்த்திக் என பல பெங்களூர் பேட்ஸ்மேன்கள் சோபிக்காவிடிலும், பல சமயங்களில் கெயில் ஏமாற்றினாலும் தூணாய் நின்று அணியை ஒவ்வொரு போட்டியிலும் காப்பாற்றி வருகிறது கோலி – டிவில்லியர்சின் சூப்பர்மேன் கூட்டணி. அதிலும் குறிப்பாக இந்த 9 வது சீசனில் அவர்களது ஆட்டம் வேற லெவலில் இருக்கிறது. தொடக்கத்தில் திணறிய அணியை, இருவரும் இணைந்து கரைசேர்த்தது மட்டுமல்லாமல், அனைவருக்கும் பெரும் நம்பிக்கை அளித்துள்ளனர் இந்த ரன் மெஷின்கள். இவர்கள் வெற்றிகளை மட்டும் குவிக்கவில்லை. பல்வேறு சாதனைகளையும் படைத்த வண்ணம் உள்ளனர்.

அந்த அபார கூட்டணி நிகழ்த்திய சிறப்புகள் பற்றிய பார்வை இதோ...
 

7 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்
   

RCB3.jpg

கோலி – டிவில்லியர்ஸ் கூட்டணியின் மிகப்பெரிய பலமே அவர்களுக்கிடையே உள்ள புரிதல்தான். ஒருவர் அடித்து ஆடிக் கொண்டிருக்கும்போது எப்படிப்பட்ட எளிதான பந்தாக இருந்தாலும், மற்றொருவர் சிங்கிள் எடுத்துக் கொடுப்பார்.  இப்படியான புரிதலே இக்கூட்டணியின் பெரும்பலம். இவர்கள் ஆட்டத்தைத் தொடங்கும் விதம் சூழ்நிலையைப் பொறுத்து மாறலாம். ஆனால் முடிக்கும்போது அங்கு ஒவ்வொரு பந்து வீச்சாளரின் கண்களும் கலங்கியே நிற்கும். நேற்று நடந்த நைட்ரைடர்சுக்கு எதிரான போட்டியில் 115 ரன்கள் குவித்த இந்தக் கூட்டணி, 7 முறை செஞ்சுரியைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக கெயில் - கோலி கூட்டணியும் 7 முறை சதமடித்துள்ளது. கடந்த சீசன்களில் கெயிலோடு இணைந்து அதிரடி காட்டிக்கொண்டிருந்த கோலி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏ.பி யோடு அசைக்க முடியாத அணியை உருவாக்கிவிட்டார். இந்த சீசனில் மட்டும் இந்த பார்ட்னர்ஷிப் 5 முறை நூறு ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
 

ஒரே விக்கெட்டிற்கு 229 ரன்
   

ஒரு இன்னிங்சில் ஒரு பார்ட்னஷிப் அடித்த அதிகபட்ச ரன்கள் 229. அதை அடித்தவர்கள் யார் தெரியுமா? சந்தேகமே வேண்டாம், இந்த பேட்மேனும் சூப்பர்மேனும்தான். கடந்த வாரம் இவர்களிடம் சிக்கிய குஜராத் லயன்ஸ் அணியை பந்தாடி, 229 ரன்கள் குவித்த இவர்கள்தான் இரண்டாம் இடத்திலும். கடந்த ஆண்டு மும்பைக்கு எதிராக வாங்கடே மைதானத்தில், அவுட்டே ஆகாமல் இவர்கள் அடித்த 215 ரன்கள்தான் முந்தைய சாதனையாக இருந்தது. இதுவரை ஐ.பி.எல் வரலாற்றில் 4 கூட்டணிகள் இரட்டைச் சதம் அடித்துள்ளன. மற்ற இரு கூட்டணிகள் கில்கிறிஸ்ட்-ஷான் மார்ஷ் மற்றும் கெயில்-கோஹ்லி. இதுவரை 3 இரட்டைச் சத பார்ட்னர்ஷிப்பில் பங்காற்றிய மகத்தான சாதனைக்கு கோலியே சொந்தக்காரர்.

ஒரே இன்னிங்சில் இரண்டு சதங்கள்
   

ஐ.பி.எல் போட்டிகளில் சதமடிப்பதே பெரிய விஷயம். ஒரே போட்டியில் இரண்டு அணிகளைச் சேர்ந்த வீரரொருவர் சதமடித்த நிகழ்வே அரிதாகவே நடந்துள்ளது. ஆனால் ஒரே இன்னிங்சில் ஒரே அணியைச் சேர்ந்த இருவர், ஒரு டி20 போட்டியில் சதமடிப்பதெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று. அதையும் நிகழ்த்திக் காட்டினர் இவர்கள். முதலில் டிவில்லியர்ஸ் அசுர வேகத்தில் சதமடிக்க, பொறுமையாய் ஆடிவந்த கோலி,  கடைசி கட்டத்தில் சுனாமியாய்ப் பொங்க,  இருவரும் சதமடித்து, ஐ.பி.எல் வரலாற்றில் மேலுமொரு சாதனையைப் படைத்தனர். இதுவரை நடந்துள்ள 5707 டி20 போட்டிகளில்,  இதற்கு முன்பு ஒருமுறை மட்டுமே அப்படி நடந்துள்ளது. மிடில்செக்ஸ் அணிக்காக குளோசெஸ்டரின் கெவின் ஓ பிரையன் மற்றும் ஹாமிஷ் மார்ஷல் ஆகியோர் இச்சாதனையைப் படைத்துள்ளனர்.
 

கடைசி கட்டத் தாண்டவம்
   

RCB2.jpg

ஒரு அணி பவர் பிளேயில் கூட மெதுவாக ஆடும். ஆனால் கடைசி ஐந்தாறு ஓவர்களில் கண்டிப்பாக அனல் பறக்கும். எப்படியும் எந்த அணியும் குறைந்தபட்சம் 50 முதல் 60 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடுவார்கள். ஆனால் இவர்கள் இருவரும் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்லவா? இவர்களது டார்கெட் மற்றவர்களை விட எப்பொழுதும் டபுளாகவே இருக்கும். ஆம், குஜராத் அணிக்கெதிராக கடைசி ஐந்து ஓவர்களில், இவர்கள் எடுத்த ரன் 112. அதிலும் 14 சிக்சர்களைப் பறக்கவிட்டு பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இதுவரை எந்த அணியும் கடைசி 5 ஓவர்களில் 100 ரன்களைக் கூடக் கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடிச்சா 30 தான்

அந்த அணிக்கு குஜராத் அணி என்ன பாவம் பண்ணாங்கனு தெரியல. பந்து ஒவ்வொரு மூலைக்கும் பறந்துக்கிட்டே இருந்துச்சு. 'அஞ்சு ஓவருக்கு 112 ரன்களா...?' ன்னு  வாயப்பொளக்காதீங்க. இன்னும் 18 வது மற்றும் 19 வது ஓவர் பத்தி சொல்லல. அந்த இரண்டு ஓவரிலும் தலா 30 ரன்கள் எடுத்தனர் அந்த இரு மாஸ்ட்ரோக்களும். முதலில் மாட்டியது ஐ.பி.எல் லின் மிகச்சிறந்த டெத் பவுலர் டுவைன் பிராவோ. நோ பால் போட்டது அவருடைய தப்பென்றாலும், ஏ.பி யும் கோலியும் ஆடிய விதத்திற்கு அத்தருணத்தில் யார் பந்து போட்டிருந்தாலும் அதுதான் நடந்திருக்கும். அடுத்ததாக மாட்டியது இளம் வீரர் சிவில் கவுசிக். உலகத்தரம் வாய்ந்த வீரருக்கே அந்த நிலை என்றால், இவரை என்ன சொல்வது? அந்த ஓவர் தொடக்கத்தில் வெறும் 68 ரன்களில்தான் இருந்தார் கோலி. 4 சிக்சர் 1 பவுண்டரி என கவுசிக்கின் பந்துகளை சிதறடித்து,  எளிதில் சதத்தை நெருங்கினார் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்.
 

இது கோலியின் சீசன்
   

தனது வாழ்நாளில் எப்போதுமே கோலியால் இவ்வருடத்தை மறக்க முடியாது. டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற கையோடு களமிறங்கிய விராத், ஒவ்வொரு அணியையும் பதம் பார்த்து வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 752 ரன்கள் குவித்து, ஒரு சீசனில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை ஹஸ்ஸி மற்றும் கெயிலின் வசமிருந்து கைப்பற்றினார். அதில் 3 சதங்களும் 5 அரை சதங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல், ஒரு சீசனில் அதிக சதங்கள் (3) எடுத்தவர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார். இன்னும் 2 லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில், கோலி இருக்கும் பார்முக்கு மிகப்பெரிய ஸ்கோரை எட்டிவிடுவார். ஒருவேளை பெங்களூர் அணி, இறுதிப் போட்டி வரை சென்றால், 1000 ரன்கள் கூட கோலி அடித்தாலும் அடித்து விடுவார்.
   

RCB41.jpg

இதுமட்டுமல்ல, கோலி – டிவில்லியர்ஸ் இணை கூட்டாக இணைந்து 2000 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளது. இவர்கள் இருவரும் களத்தில் நின்றாலே,  எதிரணியினர் அரண்டு விடுகின்றனர். கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனும்,  தான் ஆதரிக்கும் அணியையும் மறந்துவிட்டு எதிரணியாய் இருந்தாலும் இவர்களை ரசிக்கத் தொடங்கிவிட்டான். எந்த மைதானமாய் இருந்தாலும் வெளிநாட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் ஒவ்வொரு ரசிகனும் “ஏ.பி.டி…ஏ.பி.டி..” என்று உரக்கக் கத்துகிறான்.

ரன்கள் குவிப்பது, சதங்கள் அடிப்பது, வெற்றிகள் குவிப்பது, சாதனைகள் புரிவது என அனைத்தையும் தாண்டி, கிரிக்கெட் ரசிகனின் ரசனையை மாற்றியதுவே இந்தக் கூட்டணியின் மிகப்பெரிய வெற்றி. கூட்டணியாய் மட்டுமல்ல, தனித்தனியாகவும் இந்த இரு வீரர்களும் இந்தியன், தென்னாப்பிரிக்கன் என்ற தேச வேறுபாட்டையெல்லாம் தாண்டி ஆகச்சிறந்த பேட்ஸ்மேன்களாய் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர் என்பதே உண்மை!

http://www.vikatan.com/news/sports/64296-batman-abd-superman-kohli-chases-t20-records.art

 

  • தொடங்கியவர்

Screenshot%2022_zpskubiwjfb.png

Screenshot%2023_zps87k4zumc.png

 சற்று முன்னர்  IPL போட்டி பார்க்க வந்த VIP..:grin:

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: புனே அணி வெற்றி

 

விசாகப்பட்டினம் : டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் புனே அணி 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

விசாகப்பட்டினத்தில் நடந்த 9வது ஐ.பி.எல்., லீக் போட்டியில், டில்லி, புனே அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற புனே கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். டில்லி அணிக்கு டிண்டா தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' குயின்டன் (2), ஸ்ரேயாஷ் (8) சிக்கினர். கருண் நாயர் 41 ரன்கள் எடுத்தார். ஜாம்பா 'சுழலில்' சாம்சன் (10), ரிஷாபா (4) ஆட்டமிழந்தனர். டில்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்தது. கிறிஸ் மோரிஸ் (38), கூல்டர் நைல் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

எட்டி விடும் இலக்கை துரத்திய புனே அணிக்கு கவாஜா (19) ஏமாற்றினார். அணி 8.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. மீண்டும் சுமார் ஒரு மணி நேரத்திற்குப்பின் போட்டி துவங்கியது. ஷமி பந்தில் ரகானே ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த 10 நிமிடத்தில் மீண்டும் மழை வர, ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது புனே அணி 11 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. மழை தொடரவே, புனே அணி 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ரகானே (42), பெய்லி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1524312

  • தொடங்கியவர்

ஹெல்மெட்டைப் பறக்க விட்ட பவுன்சர்: புனே வீரர் ஜார்ஜ் பெய்லி அதிர்ச்சி

 
பவுன்சரில் பெய்லியின் ஹெல்மெட் பறந்து ஸ்டம்ப் அருகே விழுந்த காட்சி. | படம்: கே.ஆர்.தீபக்.
பவுன்சரில் பெய்லியின் ஹெல்மெட் பறந்து ஸ்டம்ப் அருகே விழுந்த காட்சி. | படம்: கே.ஆர்.தீபக்.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவுன்சர் ஹெல்மெட்டை தாக்கியது லாரி மோதியதை போன்று இருந்ததாக புனே வீரர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்தார்.

விசாகப்பட்டினத்தில் நேற்று டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சக ஆஸ்திரேலியா வீரர் நாதன் கோல்ட்டர் நைல் வீசிய பந்தை பெய்லி அடிக்க முயன்றார். பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டை கடுமையாக தாக்கியது. உடனே ஹெல்மெட் ஸ்டெம்பு அருகே கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பெய்லிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து பெய்லி கூறும்போது, " நான் டிவி ரீபிளேயில் பார்த்த போது தான் பந்து எந்த அளவுக்கு தாக்கியது என்பது தெளிவாக தெரிந்தது. பந்து ஹெல்மட்டை தாக்கியதும் நான் நிலை குலைந்தேன். முகத்தில் லாரி மோதியது போன்று உணர்ந்தேன். உடனடியாக அதில் இருந்து மீண்டு, சகஜ நிலைக்கு திரும்பினேன். தொடர்ந்து வேறு ஹெல்மட்டை அணிந்து விளையாடினேன்" என்றார்.

ஆனால் இந்த ஹெல்மெட் ஸ்டம்பைத் தாக்காதது சிலருக்கு ஏமாற்றமாகவும் இருந்தது என்று நகைச்சுவையுடன் கூறிய பெய்லி, “ஹெல்மெட் பறந்து ஸ்டம்பின் மேல் விழவில்லை என்பது ஒரு சில வீரர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது” என்றார்.

இந்தப் போட்டியில் புனே வெற்றி பெற்றதையடுத்து டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article8616243.ece

  • தொடங்கியவர்
ஐ,பி.எல்., கிரிக்கெட்: பஞ்சாப் அணி - 78/5
 
 
 

பெங்களூரூ: ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களுரூ அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.மழையால் ஆட்டம் தாமதமாக துவங்கியது. இதனால் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரூ அணி 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது.

பெங்களூரூ அணி கேப்டன் விராத் கோஹ்லி அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 113 ரன் எடுத்தார். தொடக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் 73 ரன் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 7 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 78 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1524686

  • தொடங்கியவர்
கோஹ்லி 'மின்னல்' சதம்; பெங்களூரு அணி வெற்றி

 

பெங்களூரு : ஐ.பி.எல்., லீக் போட்டியில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த விராத் கோஹ்லி சதம் விளாச பெங்களூரு அணி 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

பெங்களூருவில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. மழை பெய்ததால், போட்டி 1.45 மணி நேரம் தாமதமாக துவங்கியது. தலா 15 ஓவராக குறைக்கப்பட்ட போட்டியில், 'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் முரளி விஜய் 'பவுலிங்' தேர்வு செய்தார்.

 

கோஹ்லி அதிரடி: பெங்களூரு அணிக்கு கெய்ல், கேப்டன் கோஹ்லி ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். கெய்ல் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டிவிலியர்ஸ் 'டக்-அவுட்டானார்'. இடது உள்ளங்கையில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாது, அசத்தலாக ஆடிய கோஹ்லி 'மின்னல்' வேகத்தில் (113 ரன், 50 பந்து ) சதம் கடந்தார். இது, இந்த 'சீசனில்' இவர் அடித்த 4வது சதம். பெங்களூரு அணி 15 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் (16), வாட்சன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கடின இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு கேப்டன் முரளி விஜய் (16), ஆம்லா (9) ஏமாற்றினர். சகா (24) மட்டும் ஆறுதலாக செயல்பட்டார். அணி 14 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை வர, ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர, பஞ்சாப் அணி 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி தோல்வியடைந்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1524934

  • தொடங்கியவர்

காயத்துடன் 4-வது அதிரடி சதம்; விராட் கோலி சாதனை: 2-வது இடத்துக்கு முன்னேறியது பெங்களூரு

 

 
விராட் கோலி அதிரடி இன்னிங்ஸ். | படம்: ஏ.எஃப்.பி.
விராட் கோலி அதிரடி இன்னிங்ஸ். | படம்: ஏ.எஃப்.பி.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது இடத்துக்கு முன்னேறியது.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 14 ஓவர்களில் 203 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களையே எடுத்து படுதோல்வி கண்டது.

கிறிஸ் கெயில், விராட் கோலி இணைந்து 11 ஓவர்களில் தொடக்க விக்கெட்டுக்காக 147 ரன்கள் விளாசித் தள்ளினர், கிறிஸ் கெய்ல் 4 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 32 பந்துகளில் 73 ரன்கள் விளாசித்தள்ளினார். விராட் கோலி 28 பந்துகளில் 50 ரன்கள் என்று வந்து பிறகு 47 பந்துகளில் சதம் கண்டு 50 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். விராட் கோலி தனது 4-வது ஐபிஎல் சதத்தின் மூலம் 4,002 ரன்களுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் குவித்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். சுரேஷ் ரெய்னாவின் 3,985 ரன்கள் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.

மைதானம் நெடுக கோலியும், கெய்லும் பந்தை சிதறடிக்க எதிரணி கேப்டன் முரளி விஜய்யால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சமாக ரன் கொடுத்த சந்தீப் சர்மாவின் ஓவருக்கு ரன் சராசரி 9.66 என்பது குறிப்பிடத்தக்கது. அக்சர் படேல், கே.சி.கரியப்பா, மோஹித் சர்மா, கைல் அபாட் ஆகியோர் செமத்தியாக சாத்துமுறை வாங்கினர்.

விரட்டலின் போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் எஸ்.அரவிந்த், முரளி விஜய், ஹஷிம் ஆம்லா ஆகியோரை வெளியேற்றினார். பிறகு நடுக்கள வீரர்களை யஜுவேந்திர சாஹல் வீழ்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 12-வது ஓவரில்தான் கிங்ஸ் லெவன் தட்டுத்தடுமாறி 100 ரன்களை எடுத்தனர். 14-வது ஓவருக்குப் பிறகு மழை வந்தது. ஒருதலைபட்சமான ஆட்டத்தில் விராட் கோலி மீண்டும் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

15 ஓவர்கள் ஆட்டத்தில் சதம் எடுத்தது பெரிய விஷயம், இதனை நான் எதிர்பார்க்கவில்லை என்று கோலி கூறினார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81/article8619995.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல்: நெஹ்ரா விலகல்! எதிர்காலம் என்னவாகும்

 


 

ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ராவின் காலில் தசை நார் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக ஹைதராபாத் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின்போது நெஹ்ராவின் காலில் தசை நார் முறிவு ஏற்பட்டது. அவர் இப்போது எலும்பியல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சீசனின் எஞ்சிய ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் அணி 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. எனினும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் உள்ள அந்த அணி இன்று நடைபெறுகிற ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தப் போராடும்.

கிரேடு 1 தசை நார் முறிவு காயம் குணமடைய 3 வாரங்கள் போதுமானதாக இருக்கும். ஆனால் நெஹ்ராவுக்கு பெரிய அளவில் தசை நார் கிழிந்துள்ளது. அது குணமடைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என தெரிகிறது. இதனால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் அவர் இந்திய அணியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/sports/2016/05/20/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/article3442788.ece

  • தொடங்கியவர்

ஸ்மித்-4வி/8; ரெய்னா 53*  பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது குஜராத்

 


  • 48.jpg

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.
 இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்ற குஜராத், புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியதோடு, பிளே ஆஃப் வாய்ப்பையும் நெருங்கியுள்ளது.
 குஜராத் அணியின் டுவைன் ஸ்மித் 4 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து கொல்கத்தாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான மணீஷ் பாண்டே, உத்தப்பா உள்ளிட்ட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
 இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணியில் கேப்டன் கம்பீர் 8 ரன்களில் ரன் அவுட்டானார். இதன்மூலம் டி20 போட்டியில் அதிக முறை (21) ரன் அவுட்டானவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் கம்பீர்.
 பின்னர் வந்த பாண்டே 1 ரன் எடுத்த நிலையில் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பியூஷ் சாவ்லா களம்புகுந்தார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் வேகம் காட்டிய உத்தப்பா 19 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார்.
 இதன்பிறகு 10-ஆவது ஓவரை வீசிய ஸ்மித், பியூஷ் சாவ்லாவை (11) போல்டாக்கினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷகிப் அல்ஹசன் 3 ரன்களில் வெளியேற, யூசுப் பதானுடன் இணைந்தார் சூர்யகுமார் யாதவ். இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்க்க, கொல்கத்தா 100 ரன்களை கடந்தது. சூர்யகுமார் 14 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
 ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் தனிநபராகப் போராடிய யூசுப் பதான் 36 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா.
 குஜராத் வெற்றி: பின்னர் ஆடிய குஜராத் அணியில் டுவைன் ஸ்மித் ரன் ஏதுமின்றியும், மெக்கல்லம் 6 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
 ஆனால் கேப்டன் ரெய்னா அசத்தலாக ஆட, குஜராத்தின் வெற்றி எளிதானது. ஆரோன் ஃபிஞ்ச் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா களம்புகுந்தார்.
 இதனிடையே ரெய்னா 33 பந்துகளில் அரை சதத்தை எட்ட, 13.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது குஜராத். ரெய்னா 36 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 53, ஜடேஜா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சுருக்கமான ஸ்கோர்
 கொல்கத்தா}124/8
 பதான் 36 (36)
 உத்தப்பா 25 (19)
 டுவைன் ஸ்மித் 4வி/8
 குஜராத்}125/4
 ரெய்னா 53* (36)
 ஃபிஞ்ச் 26 (23)
 சுநீல் நரேன் 1வி/30
 ஐபிஎல் போட்டியில் ஆப்பிள் சிஇஓ
 ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) டிம் குக், குஜராத்-கொல்கத்தா இடையிலான ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்தார்.
 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவின் அழைப்பை ஏற்று இந்த ஆட்டத்தைக் காண கான்பூர் மைதானத்துக்கு வந்தார்.

http://www.dinamani.com/sports/2016/05/20/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-4%E0%AE%B5%E0%AE%BF8-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-53-%C2%A0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-/article3442403.ece

 

  • தொடங்கியவர்

புனே வீரர்கள் பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் 'லுங்கி' டான்ஸ் ஆடிய அஸ்வின்

சிறப்புச் செய்தியாளர்

Comment (1)   ·   print   ·   T+  
 
 
 
 
 
வைசாகில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின். | படம்: கே.ஆர்.தீபக்.
வைசாகில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின். | படம்: கே.ஆர்.தீபக்.

எல்.ஒய்.எஃப். ஸ்மார்ட்போன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் அஸ்வின் ஹிந்திப்படம் ஒன்றின் ‘லுங்கி’ டான்ஸை ஆடி குழுமியிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புனே கேப்டன் தோனி கலந்து கொள்ளவில்லை. சமூக ஊடகம் ஒன்றில் நடத்தப்பட்ட போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை புனே வீரர்கள் சந்திக்க வேண்டும் என்பதே ஏற்பாடு.

இந்த நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ‘லுங்கி’ டான்ஸ் ஆடினார். இதனை இர்பான் பதான், ஜார்ஜ் பெய்லி, உஸ்மான் கவாஜா, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர் கரகோஷத்துடன் பாராட்டி மகிழந்தனர்.

சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 60 நேயர்கள் பங்கேற்றனர். இவர்களின் முதல் கேள்வியே ‘எங்கே தோனி?’ என்பதே.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் உடனடியாக இதற்கு பதில் அளித்த போது, “அவர் வேறு ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் இருந்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் களைகட்டியிருக்கும்.” என்றார்.

கேள்விகளைத் தொகுப்பாளரேக் கேட்க பங்கேற்பாளர்கள் பதில் அளிக்க வேண்டும்.

அதாவது வீரர்களின் பிறந்த தேதி, கிரிக்கெட் தவிர வீரர்கள் விரும்பி ஆடும் மற்ற விளையாட்டுகள், சமீபத்தில் வீரர்கள் சந்தித்த முக்கிய நிகழ்வுகள் என்ன, பெற்றோர் பெயர், பவுலிங் பாணி, ஸ்டீபன் பிளெமிங்கின் உயரம் என்று கேள்விகள் பலவாறு அமைந்தன. ஆனால் இந்தக் கேள்விகளுக்கு பங்கேற்றவர்கள் பதில் அளிக்க வீரர்களுக்கே ஆச்சரியமான அனுபவமாக அமைந்தது.

இதில் கிடைத்த சுவையான தகவல்களில் சில:

ஸ்டீபன் பிளெமிங்கிற்கு ரக்பி, பெய்லிக்கு டென்னிஸ் ஆகிய ஆட்டங்களை ஆடப்பிடிக்கும். பிளெமிங்கின் உயரம் 6 அடி 3 அங்குலம். ஜார்ஜ் பெய்லி முன்னால் டெஸ்ட் வீரர் ஜார்ஜ் ஹெர்பர்ட் பெய்லியின் பேரன். அஸ்வினுக்கு 14 வயதில் காயம் ஏற்பட்டது, அவர் பி.டெக் படித்தவர் தற்போது எம்.பி.ஏ. பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இர்பான் பதானுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது.

தன் பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த அஸ்வின் வெற்றி பெற்ற நபருக்கு தனது அணி தொப்பியை பரிசாக வழங்க ஜார்ஜ் பெய்லி தன் பற்றிய கேள்விக்கு பதில் அளித்து வென்றவருக்கு மாலையிட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/article8625834.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றியை ருசித்தது டெல்லி

 

ராய்ப்பூர்: ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டேவில்ஸ் வெற்றி பெற்றது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர் அதிரடியாக ரன் சேர்த்தார். அவர் 56 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் குவித்தார்.

IPL: delhi win by 6 wickets

அதேநேரத்தில் ரன் குவிக்க முடியாமல் திணறிய யுவராஜ் சிங் 11 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பிரத்வெயிட் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது.டெல்லி தரப்பில் பிரத்வெயிட் 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.

 

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க ஆட்டகாரரான டி காக் 2 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் பந்த் மற்றும் கருண் நாயர் இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பந்த் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் டெல்லி அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்குமார் வீசிய அந்த ஓவரின் கடைசி இரு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி டெல்லியின் வெற்றி கனவை நினைவாக்கினார் கருண் நாயர்.

இதனால் டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் குவித்த கருண் நாயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் டெல்லி அணி ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-delhi-win-6-wickets-254226.html

  • தொடங்கியவர்

டோனியின் அதிரடியால் கடைசி இடத்தை தவிர்த்த

புணே

 


 

விசாகப்பட்டினம்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 53-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது. யாருக்கு கடைசி இடம் என்பதற்காக நடைபெற்ற போட்டியில் டோனியின் அதிரடியால், அந்த அணி வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் முரளி விஜய் 41 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் குவித்தார். குருகீரத் சிங் 30 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார்.

புணே தரப்பில் அஸ்வின் 4 ஓவர்களில் 34 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தோனி அதிரடி: பின்னர் ஆடிய புணே அணியில் ரஹானே 19, பெய்லி 9, திவாரி 17, உஸ்மான் காவாஜா 30 ரன்களில் வெளியேறினர். பின்னர் வந்த கேப்டன் தோனி அதிரடியாக ஆட, புணே வெற்றியை நோக்கி பயணித்தது. இதனிடையே இர்ஃபான் பதான் 2, திசாரா பெரேரா 23 ரன்களில் ஆட்டமிழக்க, அஸ்வின் களம்புகுந்தார்.

கடைசி ஓவரில் புணேவின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டன. அக்ஷர் படேல் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை வீணடித்த தோனி, அடுத்த பந்தில் சிக்ஸரை விளாசினார். 3-ஆவது பந்தில் தோனி வேகமாக அடிக்க, பவுண்டரி எல்லையில் ஆம்லா தடுத்து நிறுத்தினார். ஆனால் அதில் தோனி ரன் ஓடவில்லை.

இதனால் கடைசி 3 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 4-ஆவது பந்தில் பவுண்டரியை விரட்டிய தோனி, அதற்கடுத்த இரு பந்துகளில் இரு சிக்ஸர்களை விளாச, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது புணே.

பஞ்சாப் தரப்பில் குருகீரத் சிங் 2 ஓவர்களில் 15 ரன்களை கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தோனி 32 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் குவித்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைத் தவிர்த்த புணே 10 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில் தோல்வி கண்ட பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தது.

http://www.dinamani.com/sports/2016/05/21/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87/article3444722.ece

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: குஜராத் அணி வெற்றி

கான்பூர்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியும், மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1526841

  • தொடங்கியவர்

பிளே ஆஃப் சுற்றில் குஜராத்

 


 
  • 56.jpg

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 54-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ûஸ தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.
 இதன்மூலம் 18 புள்ளிகளைப் பெற்ற குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் ஒன்று அந்த அணிக்கு உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்ற மும்பை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டங்களில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் படுதோல்வியை சந்தித்தாலொழிய மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை.
 கான்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் அம்பட்டி ராயுடுவுக்குப் பதிலாக ஹார்திக் பாண்டியா சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது.
 இதையடுத்து பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் அணியில் அதன் கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியில் இறங்கினார். பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டிய ரோஹித், குல்கர்னி வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார்.
 தொடர்ந்து வேகம் காட்டிய ரோஹித், குல்கர்னி வீசிய 4-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார்.
 அவர் 17 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து நிதீஷ் ராணா களமிறங்க, மறுமுனையில் தடுமாறிய கப்டில் 9 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார்.
 பின்னர் வந்த அதிரடி மன்னன் கிருனால் பாண்டியா 4 ரன்களில் நடையைக் கட்ட, மும்பை அணி 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து ராணாவுடன் இணைந்தார் ஜோஸ் பட்லர். ஆரம்பத்தில் நிதானம் காட்டிய ராணா, ஜடேஜா வீசிய 11-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசி அதிரடியில் இறங்கினார்.
 தொடர்ந்து அபாரமாக ஆடிய அவர், ஸ்மித் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியையும், ஜகாத்தி ஓவரில் ஒரு சிக்ஸரையும் விளாசினார்.
 அந்த அணி 13.5 ஓவர்களில் 120 ரன்களை எட்டியபோது ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தார்.
 அவர் 31 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது.
 இதன்பிறகு போலார்ட் களமிறங்க, ஜகாத்தி ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டி 28 பந்துகளில் அரை சதம் கண்டார் ராணா. தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் 36 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து பிராவோ பந்துவீச்சில் குல்கர்னியிடம் கேட்ச் ஆனார்.
 இதன்பிறகு ஹார்திக் பாண்டியா களமிறங்க, போலார்ட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹர்பஜன் சிங் 3 ரன்களில் வெளியேற, பாண்டியா 8 ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.
 மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் பிரவீண் குமார், குல்கர்னி, டுவைன் ஸ்மித், டுவைன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 ரெய்னா 58: பின்னர் ஆடிய குஜராத் அணியில் ஆரோன் ஃபிஞ்ச் டக் அவுட்டாக, பிரென்டன் மெக்கல்லத்துடன் இணைந்தார் ரெய்னா. அசத்தலாக ஆடிய இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.
 மெக்கல்லம் 27 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்தார். 30 பந்துகளில் அரை சதம் கண்ட ரெய்னா, 36 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 3 ரன்களில் ஆட்டமிழக்க, 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது குஜராத். டுவைன் ஸ்மித் 23 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37, ஜடேஜா 15 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 மும்பை தரப்பில் வினய் குமார் 3 ஓவர்களில் 17 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ரெய்னா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சுருக்கமான ஸ்கோர்
 மும்பை-172/8
 நிதீஷ் ராணா 70 (36)
 ஜோஸ் பட்லர் 33 (31)
 பிராவோ 2வி/23
 குஜராத் 173/4
 ரெய்னா 58 (36)
 மெக்கல்லம் 48 (27)
 வினய் குமார் 2வி/17
 

57.jpg

http://www.dinamani.com/sports/2016/05/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/article3445523.ece

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: பெங்களூரு அணி வெற்றி
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: பெங்களூரு அணி வெற்றி

ராய்பூர் : ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், டில்லி அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1527325

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்?

 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் லயன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டியிருக்கின்றன.

புள்ளி பட்டியலில் முதல் இரு இடத்தை பிடித்த குஜராத்தும், பெங்களூரு அணியும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணி வெளியேறாது. அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

அடுத்து புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடத்தை பெற்ற ஐதராபாத்தும், கொல்கத்தாவும் டெல்லியில் நாளை மறுதினம் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் 27-ந் திகதி சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

http://tamil.adaderana.lk/news.php?nid=80028

  • தொடங்கியவர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி

 
 
ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் எடுத்த யூசுப் பதான்.
ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் எடுத்த யூசுப் பதான்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் சன்ரை சர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் கொல்கத்தா அணி களம் இறங்கியது.

டாஸில் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர், கொல் கத்தா அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். இதைத் தொடர்ந்து ஆடவந்த கொலகத்தா அணி, உத்தப்பா (25 ரன்கள்), காம் பீர் (16 ரன்கள்), மன்ரோ (10 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இதனால் அந்த அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் என்று தடுமாறியது. இந்நிலையில் மணிஷ் பாண்டேவும், யூசுப் பதானும் சேர்ந்து கொல்கத்தா அணிக்கு புத்துயிர் கொடுத்தனர்.

இந்த ஐபிஎல் தொடரில் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் யூசுப் பதான், நேற்றும் ஐதராபாத் அணியின் பந்துவீச் சாளர்களை வெளுத்து வாங்கினார். 34 பந்துகளில் 52 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக மணிஷ் பாண்டே 48 ரன்களைக் குவிக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது.

வெற்றிபெற 172 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த ஐதராபாத் அணி, தொடக் கத்திலிருந்தே அடுத்தடுத்து விக் கெட்களை இழந்தது. வார்னர் (18 ரன்கள்), ஓஜா (15 ரன்கள்), யுவராஜ் சிங் (19 ரன்கள்), வில்லி யம்சன் (7 ரன்கள்) என்று அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கள் குறைந்த ரன்களில் அவுட் ஆனார்கள். ஷிகர் தவண் மட்டும் ஓரளவு நிலையாக ஆடி 51 ரன்களைச் சேர்த்தார். ஆனால் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு இது போதுமானதாக இல்லை. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இப்போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன் அதிகபட்சமாக 3 விக்கெட்களை எடுத்தார்.

இந்த போட்டியில் வென்றதைத் தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் சுற்றுப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/article8635883.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஐ.பி.எல் 9 - கோலி, கம்பீர், ரெய்னா, வார்னர் கோப்பை யாருக்கு?

ipl2.jpg
   

ஐ.பி.எல் தொடரின் ஒன்பதாவது சீசன் தற்போது லீக் சுற்றுகளைத் தாண்டி பிளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ளது. மொத்தமுள்ள எட்டு அணிகளில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த குஜராத், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடைசெய்யப்பட்டதால் குஜராத் லயன்ஸ், புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் என இரு புது அணிகள் களமிறங்கின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கேப்டன் கூல் தோனியின் புனே அணி ஏழாம் இடம் பெற்று வெளியேறியது. அதேபோல் நடப்பு சாம்பியன் மும்பையும் பஞ்சாப்பும் ஏற்கெனவே வெளியேறிவிட்டன. ரெய்னா வழிநடத்தும் குஜராத் அணி 18 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதுவரை நடந்துள்ள 9 சீசன்களிலும் இரண்டாம் சுற்றில் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையை ரெய்னா பெறுகிறார். யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. ஐ.பி.எல் 9வது சீஸனில் கலக்கிய பலர் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் சீட்டை ரிசர்வ் செய்துள்ளனர்.

இந்நிலையில் மற்ற இரண்டு அணிகளைத் தீர்மானிக்கும் இரண்டு போட்டிகள் நேற்று நடந்தன. சன்ரைசர்ஸை வென்றால் மட்டுமே அடுத்த சுற்று என்ற நிலையில் கொல்கத்தா அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மோதிய கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலை ஏற்பட்டது. முதலில் பேட் செய்த டெல்லி அணி பெங்களூரின் அபார பந்துவீச்சால் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை 6 விக்கெட் வித்தியாசத்தில் சேஸ் செய்து பெங்களூர் அணி ப்ளே ஆப்பிற்கு முன்னேறியது. நாளை நடக்கும் முதல் குவாலிஃபையர் போட்டியில் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். அடுத்து நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் 4 அணிகளைப் பற்றி அலசுவோமா… 

குஜராத் லயன்ஸ்
   

iplgUJ.jpg

ரெய்னா, பிராவோ, மெக்குல்லம், ஸ்மித், ஜடேஜா என சூப்பர் கிங்ஸின் வட இந்திய கிளையாக கூறப்பட்ட‌ குஜராத் அணி சென்னையைப் போலவே முதல் அணியாக பிளே ஆப்பிற்குள் நுழைந்தது. தொடக்கத்தில் சுமாராக விளையாடி வந்த கேப்டன் ரெய்னா, தனக்குக் குழந்தை பிறந்த பிறகு நடந்த இரண்டு போட்டிகளிலும் அரை சதமடித்து அசத்தியுள்ளார். டுவைன் ஸ்மித் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். குல்கர்னியும் பிரவீன் குமாரும் எதிரணியை நிலைகுலைய வைக்கின்றனர். விசித்திர ஸ்பின்னர் சிவில் கௌசிக்கும் அவ்வப்போது விக்கெட்டுகள் வீழ்த்தி வருகிறார். ஆனால் அவ்வணியின் மிகப்பெரிய பிரச்னை அவர்களின் மிடில் ஆர்டர் தான். தினேஷ் கார்த்திக், ஃபின்ச் ஆகியோர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறுகின்றனர். ஜடேஜாவோ பேட்டிங்க் பவுலிங் இரண்டிலும் சொதப்புகிறார். பிராவோவும் பெரிய அளவில் சோபிக்கத் தவறுகிறார். அவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வந்தால் ரெய்னா ஏழாவது முறையாக ஐ.பி.எல் ஃபைனலில் விளையாடலாம். ரெய்னா மட்டும் தான் 9 சீஸனிலும் ப்ளே ஆஃப் சுற்றில் ஆடிய வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார்.
 
 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
   

ipl1.jpg

ஒருகட்டத்தில் கடைசி இடத்தைத் தவிர்க்கப் போராடிய அணி, தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. கோலி என்ற தனி ஒருவனின் தாண்டவத்தால் அமர்க்களப்படுத்தி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ். இதுவரை யாரும் நினைத்துப்பார்க்காத 900 ரன் மைல்கல்லை எட்டியுள்ளார் கோலி. 4 சதங்களும், 6 அரைசதங்களும் அடித்துள்ள விராட் 1000 ரன்களைக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. டிவில்லியர்ஸ், ராகுல், வாட்சன் கோஹ்லிக்கு நல்ல ஒத்துழைப்பைக் கொடுக்க கெயிலும் கடைசி இரு போட்டிகளில் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். மிகப்பெரிய பிரச்னையாகக் கருதப்பட்ட அவ்வணியின் பவுலிங்கும் இப்போது மிரட்டலாக உள்ளது. ஜோர்டான், அரவிந்த், சஹால் என அனைவரும் ஃபார்மில் உள்ளனர். சரியான லைனில் பந்து வீசுகின்றனர். சஹால் 19 விக்கெட்டுகளுடன் பர்ப்பிள் தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார். அவ்வணியின் ஒரேயொரு பிரச்சனை அவர்களது ஐந்தாவது பவுலர். ஹர்ஷல், ஆரோன், ரசூல், இக்பால் அப்துல்லா, ரிச்சர்ட்சன், சம்ஷி என பலர் பந்துவீசியும் ஒருவர் கூட ஆறுதல் தரவில்லை. அந்த ஐந்தாவது பவுலர் மட்டும் கிளிக் ஆகிவிட்டால் போதும் கோலியின் கையில் கோப்பை ஏறுவதை யாராலும் தடுக்க முடியாது. கோவக்காரரான கோலி அணி தான் இந்த வருடத்தின் சமத்து டீம் ''ஃபேர் ப்ளே'' அவார்டை வாங்கியுள்ளது.
 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
   

iplSUN.jpg

வ்வணி இப்படி விளையாடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வார்னர், புவனேஷ், முஸ்தாஃபிசூர் என்ற மும்மூர்த்திகளின் செயல்பாடு அபாரம். இளம் பந்துவீச்சாளர் முஸ்தாஃபிசூரின் யார்க்கர்கள் ரசல் போன்ற உலகத்தர வீரர்களையே நிலைகுலைய வைத்தது. புவனேஷ் விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளார். மறுபுறம் வார்னர் தனி ஆளாக பெரிய ஸ்கோர்களை அடிக்க உதவுகின்றார். அவர்கள் தவிர்த்து ஸ்ரன், ஹென்ரிக்ஸ் ஆகியோரும் பந்துவீச்சிற்கு பலம் சேர்க்கின்றனர். யுவராஜ் இன்னும் முழு ஃபார்முக்குத் திரும்பவில்லை. நல்லதொரு ஸ்பின்னர் இல்லாதது அவர்களுக்கு மிகப்பெரிய பலவீனம். நெஹ்ரா தொடரிலிருந்து வெளியேறியதும் பின்னடைவு தான். ஆனால் அவர்களின் மிகப்பெரிய தலைவலி அவர்களது மிடில் ஆர்டர் தான். வார்னர் (658) மற்றும் தவான் (463) தவிர்த்து ஒருவர் கூட 150 ரன்களைக் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் கூட சொதப்புகிறார். மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே கொல்கத்தாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியும்.
 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
   

iplKOL.jpg

மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்போடு களம் காண்கிறது கம்பீர் அண்ட் கோ. ஒற்றை ஆளை நம்பாது டீமாக ஜெயிப்பதுதான் என்றுமே கொல்கத்தாவின் அசுர பலம். ஒரு போட்டியில் கம்பீர் அடிப்பார். இன்னொரு போட்டியில் பதான் அடிப்பார். ஒரு போட்டியில் நரீனின் சுழலால் வெல்வார்கள், எல்லோரும் சொதப்பினால் ஷகிப் கை கொடுப்பார். யார் நன்றாக விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் ரஸ்ஸல் என்றொரு மனிதன் அடங்காத குதிரையாக அடித்து நொறுக்குவார். ஆனால் அவர் தற்போது காயத்தால் அவதிப்படுவது அவர்களுக்குப் பெரும் பின்னடைவு தான். கடந்த போட்டியில் விளையாடிய குல்தீப் யாதவும் அற்புதமாக பந்து வீசினார். ஹோல்டர், லின், முன்ரோ போன்ற வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படாதது சற்று பின்னடைவு. மேலும் உத்தப்பாவிடமும், மனீஷ் பாண்டேவிடமும் கன்சிஸ்டென்சி இல்லை. கடந்த சில போட்டிகளில் யூசுப் பதான் தனியாளாக போட்டிகளை வென்று தருகிறார். அவருக்கு மற்றவர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் மூன்றாவது கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெறலாம். 

 

கடந்த சீசன்களைப் போல இந்த சீசனில் போட்டிகள் அந்த அளவிற்குப் பரபரப்பாக இல்லை. அதுமட்டுமல்லாமல் காயங்கள், ஸ்டேடியம் மாற்றம் என எத்தனையோ பிரச்சனைகள் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளன. எஞ்சியுள்ள 4 போட்டிகளாவது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்ப்போம். கம்பீர், கோலி, ரெய்னா மூன்று இந்திய கேப்டன்கள், வார்னர் மட்டும் தான் வெளிநாட்டு  கேப்டன். இவர்களில் யாருக்கு கோப்பை என்று பார்ப்போம்.

http://www.vikatan.com/news/sports/64477-ipl-2016-review-of-play-off-teams.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.