Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2006 புலம் பெயர் தமிழ் சினிமா ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2006 புலம் பெயர் தமிழ் சினிமா ஒரு பார்வை.

உருண்டோடிய 2006 ம் ஆண்டு புலம் பெயர்ந்த மக்களிடையே உருவான சினிமா முயற்சிகளுக்கு ஒரு முக்கியமான படிக்கட்டை அமைத்துக் கொடுத்த ஆண்டாகும். இலங்கை மண்ணில் நிலவிய பொருளாதார, தொழில்நுட்ப, வர்த்தக வழிமுறைகளின் பற்றாக்குறை காரணமாக தள்ளாடிய ஈழத் தமிழ் சினிமா சிறிது பெருமூச்சு விட்டு தலை நிமிர்ந்த காலம் 2006 ம் ஆண்டாகும். அலைகள் மூவீஸ் புயல் திரைப்படத்தின் பாடல்கள் தமிழகத்தில் பதிவாகியிருப்பது, அதற்கு புலம் பெயர்ந்த தமிழ் கலைஞர்களே இசையமைத்து கவிபடைத்திருப்பது, மண் படம் தற்போது தமிழகத்தில் காண்பிக்கப்படுவது, சித்துவின் துரோகி தமிழகத்தில் படமாக்கப்பட்டிருப்பவை போன்றன தமிழகத்திலும் காலடி பதிக்கும் காலத்திற்கு எடுத்துக்காட்டாகும். எதிர் வரும் 2007 மேலும் பல படிகள் வளர்ச்சியடைய உதவும் என்று கருதலாம். இந்த வாரத்துக்கான அலைகளின் சினிமா செய்திகள் 2006 ம் ஆண்டின் புலம் பெயர் தமிழ் சினிமாவின் மறு மதிப்பீட்டு செய்திகளை உள்ளடக்கி வெளிவருகிறது.

நூறாவது நாளைக் கொண்டாடியது பூக்கள் திரைப்படமும் புதிய நம்பிக்கைகளும்.

pookkal-2006.jpg

புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடையே தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற திரைப்படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது டென்மார்க்கில் தயாரான பூக்கள்.

தமிழீழத்தில் காண்பித்தால் இந்தப்படம் வெற்றியின் சிகரங்களை எல்லாம் உடைத்திருக்கும் என்பதை உடுப்பிட்டி திரையரங்கில் அரங்கு நிறைந்து வழிய இப்படம் ஓடிய காட்சிகளே சிறந்த சாட்சியமாகும்.

தமிழர் தாயகத்தில் கேபிள் மூலம் பரவலாகக் காண்பிக்கப்பட்ட இப்படம் பெரு வெற்றிபெற திருட்டு இணையங்கள் பெருந்தொண்டாற்றி பல மில்லியன் மக்கள் பார்க்கும் வண்ணம் கொண்டு சென்றது பெரும் அதிசயமாக இருந்தது.

திருட்டு டி.வி.டியாக தமிழகப் படங்களுக்கு போட்டியாக விற்பனை செய்யப்பட்டாலும் உண்மையான டிவிடி பிரதிகளும் விற்பனையில் சாதனை படைத்திருப்பது 2006 ம் ஆண்டின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளது.

தமிழிச்சி படத்திற்கு டி.வி.டி வெளியீடு செய்யப்பட்ட ஆண்டு.

tamilachi.jpg

கனடா மண்ணில் பல திரைப்படங்களை தந்த ஆண்டாக 2006 அமைந்தாலும் அங்கு டி.வி.டி வெளியிட்டு விற்பனையிலும் சாதனை படைத்தது தமிழிச்சி திரைப்படம்.

பூக்கள் திரைப்படம் வெளி வருவதற்கு சுமார் ஒரு மாத காலம் முன்னதாக வெளிவந்த இப்படம் கனடா, டென்மார்க், கொலன்ட், அவுஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகளில் காண்பிக்கப்பட்டது.

திரைப்படத் தயாரிப்பில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கைகளை இயக்குநர் சித்து தனது திறனால் வெளிப்படுத்தியிருந்தார்.

தயாரிப்பு, நடிக, நடிகைகளின் ஒத்துழைப்பு குறைவு, திரையரங்க வசதியில் உள்ள தடைகள் காரணமாக பல சங்கடங்களை சந்தித்தாலும் தமிழிச்சி வரவேற்புப் பெற்றது.

தமிழகத்திலும் இலங்கையிலும் வெளியான ஆர் புதியவனின் மண்.

mann.jpg

புலம் பெயர்ந்த மக்களில் இருந்து முதலில் செலுலோயிட் முறையில் பெருந்தொகை பணத்தை முதலிட்டு படம் எடுத்தவர் இங்கிலாந்தில் வாழும் புதியவன் ஆர். ஆகும்.

கனவுகள் நிஜமானால் என்ற டி.வி.டி படத்தை எடுத்து அடுத்த முயற்சியாக சிறிதும் யோசிக்காமல் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து மண் படத்தை எடுத்தவர் இவர்.

கடுமையான விமர்சனங்கள், பழைய காழ்ப்புணர்ச்சியால் கட்டப்பட்ட விமர்சனங்கள் வழங்கிய விசையால் வீறு கொண்டு தமிழகத்திலும், இலங்கையிலும் மண்ணை திரையிட்டார்.

இப்போது சினி சிட்டியிலும், தமிழகத்திலும் இவருடைய படம் ஓடிக் கொண்டிருக்கிறது இது புலம் பெயர் சினிமாவின் சாதனை என்பது உண்மைதான்.

தமிழகத்தில் பாடல்கள் பதிவான புயல் திரைப்படம்.

puyal2006.jpg

புலம் பெயர் தமிழ் இசையமைப்பாளர் கே.எஸ்.வஸந்தின் இசையமைப்பில் தமிழகத்தில் புயல் திரைப்படத்தின் பாடல்கள் பதிவாகியுள்ளன.

சிறீநிவாஸ், மாலதி, கார்த்திக், மாணிக்கவிநாயகம், அனந்து, எஸ்.பி.பி ராமு சயிந்தவி, ரோசினி உட்பட இப்போது தமிழகத்தில் முன்னணியில் உள்ள இளம் பாடகிகள் பலரை தனது இசையில் பாட வைத்திருக்கிறார்.

தமிழர் தாயகத்தின் இயற்கை மணங்கமழும் வரிகளுக்கு அமைக்கப்பட்டிருக்கும் இசையும், குரலும் ஜீவன் ததும்பும் பாடல்களாகிவிட்டன என்று தமிழகப் பாடகர்களே புகழ்ந்துள்ளனர்.

கி.செ.துரையின் கவிதை வரிகள் போல அற்புதமான வரிகள் கிடைத்தால் எவ்வளவு இன்பம் என்று பாராட்டி அந்த வரிகளுக்காகவே தனது ஊதியத்தை அரைப்பங்காக குறைத்து மகிழ்ந்தார் மாணிக்கவிநாயகம்.

திவ்வியராஜனின் சகா பல நாடுகளிலும் ஓடியது.

tivyarajan-cni.jpg

சகா என்றொரு புலம் பெயர் தமிழ் திரைப்படம் கனடாவில் தயாராகி உலகின் பல நாடுகளிலும் காண்பிக்கப்பட்டது.

இப்படம் நெல்லியடி மகாத்மா திரையரங்கிலும் காண்பிக்கப்பட்டதாக அதன் தயாரிப்பாளர் திவ்வியராஜன் தெரிவித்தார்.

போதியளவு தயாரிப்பு நிலை இல்லை என்று பலர் கூறினாலும் தயாரிப்பாளர் அதை பல நாடுகளுக்கும் துணிந்து எடுத்து சென்றது பாராட்டுக்குரியது.

இப்படம் விரைவில் டி.வி.டியாக வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

சித்துவின் துரோகி கனடாவில் வெளியானது.

thuroki-cni.jpg

கனடா இயக்குநர் சித்துவும், ரவி அச்சுதனும் இணைந்து தமிழகத்தில் உள்ள சிறிய நடிகர்களை வைத்து கனேடிய நடிகர் சகிதம் எடுத்த படம் துரோகி.

இந்தியாவில் படம் பிடிக்கப்பட்டு டப்பிங் உட்பட மற்றய விடயங்கள் கனடாவில் மேற்கொள்ளப்பட்டன.

இப்படம் கனடாவில் மட்டும் வெளியானது மற்றய நாடுகளுக்கு இதுவரை வரவில்லை என்றாலும் தமிழிச்சியளவு சிறப்பாக அமையவில்லை என்கிறார் அதன் இயக்குநர் சித்து.

கனடாவின் திரையரங்க உரிமையாளர் மதியம் 1.30 மணிக்கு மட்டும் காட்சியை வழங்குவதால் வரும் சோதனையில் இப்படமும் பாதிக்கப்பட்டது.

கணபதி ரவீந்திரனின் கனேடியன் திரைப்படம் வெளியானது.

raviatcutan-cni.jpg

கனடாவில் பல்வேறு கலைப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் கணபதி ரவீந்திரன் கனேடியன் என்ற திரைப்படத்தை 2006 ல் வெளியிட்டார்.

கனடாவின் சில பகுதிகளில் இப்படம் முதல் கட்டமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது ஆனால் மற்றைய நாடுகளுக்கு வரவில்லை.

ரவி அச்சுதன் இப்படத்திற்கான ஒளிப்பதிவுகளை மேற்கொண்டிருந்தார் திரைப்பட ஒளிப்பதிவில் ரவிஅச்சுதன் புதிய நம்பிக்கை பெற்ற கலைஞராக உருவாகி வருகிறார்.

இது தவிர மனிதம், முதல்கனவே, காதல்வானிலே போன்ற திரைப்படங்களும் கனடாவில் தயாராகி வருகின்றன.

இயக்குநர் பராவின் புதிய முயற்சிகள் தொடர்கின்றன..

para.jpg

பிரான்சில் இருந்து பேரன் பேத்தி போன்ற நல்ல குறும்படங்களை எடுத்தவர் பிரான்சில் வாழும் பரா.

இவர் முழு நீள திரைப்படத்தை எடுக்க எடுத்த முயற்சிகள் தொடர்ந்து பொருளாதார காரணங்களினால் பின்தள்ளி வந்தன.

இப்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உட்பட பல பிரபல பாடகர்களை பாடவைத்து தனது புதிய திரைப்பட முயற்சியை முடுக்கிவிட இருக்கிறார் பரா.

ஒரு காலத்தில் புலம் பெயர் தமிழ் திரைப்பட முயற்சியில் அதி தீவிரம் காட்டிய பிரான்சிய கலைஞர்கள் அதுபோல மீண்டும் புதிய வேகம் பெற வேண்டுமென அலைகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

செல்வக்குமாரின் உபசாந்தி குறுந் திரைப்படம்.

selvakumar-cni.jpg

மனோரஞ்சிதம் புகழ் செல்வக்குமார் கனடா நாட்டில் இப்போது தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

தமிழீழத்தின் போராளியாக இருந்த இவர் அந்தப் போராட்டத்தின் பரிமாணங்களை உள்ளடக்கி உபசாந்தி என்ற குறுந்திரைப்படத்தை இவ்வாண்டு தயாரித்திருந்தார்.

கனடாவில் நடைபெற்ற குறுந்திரைப்பட விழாவில் இப்படம் பலரதும் பாராட்டுதலைப் பெற்றிருந்தது.

கனடாவிலேயே பெரும் பொருட் செலவில் தமிழர் தாயகக் காட்சிகளை செட் போட்டு படம் பிடித்த இவருடைய துணிச்சல் பலராலும் பாராட்டப்பட்டது.

நோர்வேயில் திரைப்பட முயற்சியில் குதித்த துருபனின் படைப்புக்கள்.

uyire.jpg

நல்ல கலைஞர்கள் நிறைந்துள்ள நாடாக உள்ள நோர்வேயில் இருந்து துருபன் என்ற இளைஞர் முன்னர் தொப்புள் கொடி என்ற திரைப்படத்தை எடுத்து பலரதும் பாராட்டுதல்களைப் பெற்றிருந்தார்.

தனது இரண்டாவது முயற்சியாக துளிதுளியாய் என்ற ஒரு படத்தை எடுத்து வெளியிட்ட அவர் முதலில் திருப்தி காணவில்லை.

அதன் பின்னர் அப்படத்தில் மேலும் பல மாற்றங்களை செய்து மீண்டும் திரையிட்டு பாராட்டுதல்களைப் பெற்றார்.

பிரான்சிலும் இப்படம் காண்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இப்போது தனது முயற்சிகளை வெளிப்படுத்தும் இணையத்தளமொன்றையும் அறிமுகம் செய்துள்ளார் துருபன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்தில் தயாரான இரு உள்ளங்கள் தீபத்தில் வெளியானது.

இங்கிலாந்தில் உள்ள ஷாருக் என்ற இளைஞர் தயாரித்த திரைப்படமான இரு உள்ளங்கள் இங்கிலாந்தில் வெளியாகி வெற்றிபெற முடியாமல் போனது.

1000 பவுண்ஸ் செலவழித்து விளம்பரம் செய்தும் யாரும் படம்பார்க்க வராத நிலையில் சோர்வுற்றிருந்தார்.

சிம்பு போல தமிழ் பேசி இவர் படத்தைத் தயாரித்தது குறை என்று கூறப்பட்டாலும் கூட படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நன்கு அமைத்திருந்தார்.

தீபம் தொலைக்காட்சி இப்படத்தை துணிச்சலுடன் வெளியீடு செய்தது இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாகும்.

புலம் பெயர் திரைப்படங்களுக்கு கனேடிய ஊடகங்கள் வழங்கிய ஆதரவு

pookkal20061.jpg

புலம் பெயர் தமிழ் திரைப்படங்களுக்கு கனேடிய ஊடகங்கள் இந்த ஆண்டு வழங்கிய ஆதரவு பெருமை தரும் நிகழ்வாக உள்ளது.

பூக்கள் திரைப்படத்திற்கு கனடாவில் உள்ள எல்லா ஊடகங்களும் தமக்குள் யாதொரு பேதமும் இல்லாமல் ஒன்றிணைந்து வழங்கிய ஆதரவு மிகப்பெரும் செயலாகும்.

கனடாவின் ரொரன்ரோ மென்றியல் ஆகிய இடங்களில் பூக்கள் பாரிய வெற்றிபெற கனேடிய தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள் ஆற்றிய பங்கும் ஆர்வமும் ஐரோப்பாவிலும் வரவேண்டியது அவசியமாகும்.

ஊடகங்கள் ஒற்றுமைப்பட்டால் மக்களிடையே ஒற்றுமை தானாக வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் திரைப்படங்களுக்காக வருகிறது அலைகள் ரீ.வீ

alaikaltv.jpg

அலைகள் இணையப்பத்திரிகை இப்போது இணையத் தொலைக்காட்சியாக மாறி வருவது அனைவரும் அறிந்ததே அத்தோடு வொய்ஸ் தமிழுழ் காட்சி இணையமாக மாறி சாதனை படைத்து வருகிறது.

இப்போது அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து அலைகள் இணையப்பத்திரிகையின் புதிய காட்சி இணையத்தளமான அலைகள் ரீ.வி புத்தாண்டு முதல் ஆரம்பிக்கிறது.

புலம் பெயர்ந்த கலைஞர்களின் திரைப்பட முயற்சிகளை கணப்பொழுதும் தாமதமின்றி உலக அரங்கிற்கு கொண்டுவர அலைகள் ரீ.வி தயாராகிறது.

அடுத்த ஆண்டு புலம் பெயர் தமிழ் சினிமாவிற்கான பொற்காலம் மலரும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டைத் தொடுவோம் என்கிறார்கள் அலைகள் மூவீஸ் நிறுவனத்தினர்.

புலம் பெயர் நாடுகளில் பெருந்தொகை மக்களால் பார்க்கப்பட்ட ஆணிவேர்.

aaniver.jpg

தமிழீழத்தின் முதலாவது தமிழ் திரைப்படம் என்ற பெயருடன் வெளிவந்தது தமிழகத்தின் பிரபல இயக்குநர் ஜானும், தமிழகத்தின் முக்கிய நடிகர்கள் பலரும் நடித்தது ஆணிவேர் திரைப்படமாகும்.

இப்படம் புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் காரியாலயங்களின் ஏகோபித்த ஆதரவுடன் காண்பிக்கப்பட்டது.

எல்லா ஊடகங்களும் இதை பாராட்டி எழுதின மக்கள் வெள்ளம் எல்லா நாடுகளிலும் இப்படத்தைப் பார்க்க குவிந்ததையும் காண முடிந்தது.

இது போல ஆதரவை வழங்க எங்களிடம் வளம் இருக்கிறது புலம் பெயர் தமிழ் திரைப்படங்களுக்கும் இதே ஆதரவை வழங்கினால் நமது சினிமா வளர்ந்துவிடும் என்ற உண்மையை ஆணிவேர் எடுத்துரைத்ததே அப்படத்தின் வெற்றியாகும்.

திரைத்துளி - தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் தற்போது ஜேர்மனி, கொலண்ட் போன்ற நாடுகளிலும் திரைப்பட முயற்சிக்கான வித்துக்கள் சிறப்பாக விழ ஆரம்பித்துள்ளன. இதுவரை புலம் பெயர் சினிமாவை காப்பாற்ற வேண்டும் வளர்க்க வேண்டுமென எண்ணும் பாங்கு விமர்சகர்களிடையே வரவில்லை. தமக்கு பாதுகாப்பு தேட புலம் பெயர் சினிமாவிற்கு எதிராக எழுதுவது வசதியானது என்று பலர் கருதுவதையும் காண முடிகிறது. வர்த்தகர்கள் பலர் தமது வர்த்தகத்தில் அடி விழுந்துவிடுமோ என விபரீதமாக எண்ணுவதும், இதனால் உருவாகக் கூடிய பக்க விளைவுகள் என்ன செய்யுமோ என்று அஞ்சும் கோழைகளாக இருப்பதும் புலம் பெயர் சினிமாவை வேகமாக முன்னெடுக்க தடைகளாக உள்ளன. இந்திய தொடர் நாடகங்களின் கால்களில் விழுந்து வீணம் வடிக்கும் நமது தொலைக்காட்சிகள் புலம் பெயர் தமிழ் திரைப்படங்களை ஏறெடுத்தும் பார்க்க மறுப்பது ஏன் என்பது முக்கிய கேள்வியாகும். எது எவ்வாறாயினும் மக்கள் மன்றில் கரை புரண்டோடும் ஆதரவு புலம் பெயர் சினிமாவிற்கு இருப்பதற்கு எடுத்துக்காட்டு பூக்கள் திரைப்படத்தின் வெற்றியாகும். எனவே நம்மிடம் ஆதரவு வளங்கள் உண்டு அதை வழங்கினால் புதிய சிகரங்களை சகல நாடுகளிலும் நம் கலைஞர் பெறுவர். தமிழீழ சினிமாவிற்கு அதுவே ஆணிவேராக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மையாகும்.

அனைவருக்கும் இனிய நத்தார் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனி பொங்கல் திரைச் செய்திகளில் சந்திக்கலாம்.

இவ்வார சினிமா செய்திகளை தொகுக்கும் புகைப்படம் அலைகள் மூவீஸ் புயல் திரைப்படத்தில் ஒரு காட்சி.

அலைகள் சினிமா செய்திகள் 25.12.06

http://www.alaikal.com

  • கருத்துக்கள உறவுகள்

அணிவேர், கனவுகள் நிஜமானால், தமிழச்சி ஆகிய 3 படங்கள் மட்டுமே சிட்னியில் சென்ற வருடம் காண்பிக்கப்பட்டது. அம்மூன்று படங்களுக்கும் சென்று பார்த்திருக்கிறேன். பூக்கள் படம் இன்னும் சிட்னியில் காண்பிக்கவில்லை. காண்பித்தால் கட்டாயம் சென்று பார்ப்பேன். சிட்னியில சில சனம் தென்னிந்தியத் திரைப்படங்கள் ஒன்றையும் தவற விட மாட்டினம். எங்கட படங்களுக்கு ஆதரவு தர மாட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அணிவேர், கனவுகள் நிஜமானால், தமிழச்சி ஆகிய 3 படங்கள் மட்டுமே சிட்னியில் சென்ற வருடம் காண்பிக்கப்பட்டது. அம்மூன்று படங்களுக்கும் சென்று பார்த்திருக்கிறேன். பூக்கள் படம் இன்னும் சிட்னியில் காண்பிக்கவில்லை. காண்பித்தால் கட்டாயம் சென்று பார்ப்பேன். சிட்னியில சில சனம் தென்னிந்தியத் திரைப்படங்கள் ஒன்றையும் தவற விட மாட்டினம். எங்கட படங்களுக்கு ஆதரவு தர மாட்டினம்.

தென்னிந்திய படங்களுக்கு அதரவு கொடுக்காட்டி சில பேருக்கு மூச்சே நின்றுவிடும்...............

:P :P :P

கந்தப் பு பு பு பு நீங்கள் அப்படி இல்லை

கந்தப்பு ஒரு தென்னிந்திய சினிமா நூலகம் சிட்னியில் அவரிட்ட கேட்டு தான் பழைய நடிகைகளின் பெயர்களை அக்குவேர் ஆணிவேராக தருவார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.