Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டில் மட்டும் 118 இடங்களில் இராணுவத்துக்குக் காணிகள் பறிப்பு! ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முக்கிய பேச்சு; விக்கி பங்கேற்கவில்லை!!

Featured Replies

குடாநாட்டில் மட்டும் 118 இடங்களில் இராணுவத்துக்குக் காணிகள் பறிப்பு! ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முக்கிய பேச்சு; விக்கி பங்கேற்கவில்லை!!

யாழ்.குடாநாட்டில் மட்டும், வலிகாமம் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்கு மேலதிகமாக, 118 இடங்களில் படையினருக்குக் காணி வேண்டும் என முப்படையினராலும் கோரப்பட்டுள்ளது. மேற்குறித்த காணிகளைப் படை யினருக்குக் கையகப்படுத்தும் நோக்கில் அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்துக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த எண்ணிக்கையின் பிரகாரம்

வலி. வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் உயர் பாதுகாப்பு வலயம் நீங்கலாக 3 நிலங்கள் கோரப்பட்டுள்ளன. இதேபோன்று மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 21 இடங்களும் , வேலணை மற்றும் சாவகச்சேரி ஆகிய இரு பிரதேச செயலக எல்லைப் பரப்புகளுக் குள் தலா 16 இடங்களும் , ஊர்காவற்றுறை, சங்கானை, கோப்பாய் ஆகிய மூன்று பிரதேச செய லாளர் பிரிவுகளிலும் தலா 8 இடங்களும் கோரப்பட்டுள்ளன. அத்துடன், சண்டிலிப்பாயில் 9 இடங்களிலும் நெடுந்தீவு, நல்லூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 6 இடங்களிலும், காரைநகரில் 5 இடங்களிலும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 3 இடங்களும் , கரவெட்டி மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 2 இடங்களும் கோரப்பட்டுள்ளன.

மேலும், குடாநாட்டின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மிகக் குறைந்த இடமாக உடுவிலில் ஓர் இடம் மட்டும் கோரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உயர் பாதுகாப்பு வலயத்தில் பல ஆயிரம் ஏக்கருடன் 118 இடங்கள் கோரப்பட்டுள்ளன. இவ்வாறு கோரப்பட்டுள்ள இடங்களில் பல மஹிந்த ஆட்சிக்காலத்தில் அளவீடு செய்ய முற்பட்டவேளையில், மக்களும் அரசியல்வாதிகளும் தலையிட்டு தடுப்பில் ஈடுபட்டனர்.

எனினும், நல்லாட்சி அரசின் ஆட்சியில் இந்த விடயத்திற்கு தீர்வு கிட்டும் என நம்பியிருந்த மக்களின் மனதில் மீண்டும் அச்சம் சூழ்ந்துள்ள நிலையில், நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதில் பங்கேற்கவில்லை. உடல் நலக் குறைவினால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றைய சந்திப்பில் யாழ். மாவட்டம் தவிர, வடக்கிலுள்ள ஏனைய நான்கு மாவட்டங்களிலும் (கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்) இராணுவத்தினருக்காகக் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்தச் சந்திப்பில் மீள்குடியேற்ற அமைச்சர், முப்படைத்தளபதிகள் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிபர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://malarum.com/article/tam/2016/04/18/14308/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான முக்கியமான விடயங்கள் ஆலோசிக்கப் படும் போது மட்டும்...இவர்களுக்கு உடல் நலக்குறைவு வந்து விடுகின்றது!

தங்கள் பிரதிநிதிகளையாவது அனுப்பியிருக்கலாம்!

ஆலோசனைகளில் பங்கெடுக்காமல்...பின்னர் குத்துது..குடையுது என்று கூறுவதெல்லாம் வெறும் அரசியல் பமாத்து என்றே நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் சிலதினங்களுக்கு முன்னர் உடல்நல குறைவினால் வைத்தியசாலையில் அனுமதி என்ற செய்தியை காணவில்லையா? 

ஏற்கனவே தாண்டிக்குளம்/ ஓந்தையில் விவசாய ஆராச்சிப்பண்ணை இருக்கும் இடத்தில் Newcity திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி மறுத்தும்

6 hours ago, புங்கையூரன் said:

இப்படியான முக்கியமான விடயங்கள் ஆலோசிக்கப் படும் போது மட்டும்...இவர்களுக்கு உடல் நலக்குறைவு வந்து விடுகின்றது!

தங்கள் பிரதிநிதிகளையாவது அனுப்பியிருக்கலாம்!

ஆலோசனைகளில் பங்கெடுக்காமல்...பின்னர் குத்துது..குடையுது என்று கூறுவதெல்லாம் வெறும் அரசியல் பமாத்து என்றே நினைக்கிறேன்!

அனுமதி வழங்கியவர்கள் இருக்கும் இடம் தான் வடமாகாண சபை. இந்த லட்சணத்தில் முதலமைச்சரின் பிரதிநிதியாக போகிறவர் எதனை தாரை வார்க்கிறாரோ தெரியாது. 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, MEERA said:

முதலமைச்சர் சிலதினங்களுக்கு முன்னர் உடல்நல குறைவினால் வைத்தியசாலையில் அனுமதி என்ற செய்தியை காணவில்லையா? 

ஏற்கனவே தாண்டிக்குளம்/ ஓந்தையில் விவசாய ஆராச்சிப்பண்ணை இருக்கும் இடத்தில் Newcity திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி மறுத்தும்

அனுமதி வழங்கியவர்கள் இருக்கும் இடம் தான் வடமாகாண சபை. இந்த லட்சணத்தில் முதலமைச்சரின் பிரதிநிதியாக போகிறவர் எதனை தாரை வார்க்கிறாரோ தெரியாது. 

முதலமைச்சருக்குச் சுகவீனம் என்ற செய்தியை நான் வாசித்திருக்கவில்லை!

அதனால் தான் அந்தக் கருத்தை எழுத வேண்டி ஏற்பட்டது, மீரா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.