Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைந்த வடக்கு கிழக்கு தீர்மானத்துக்கு' தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு

Featured Replies

இணைந்த வடக்கு கிழக்கு தீர்மானத்துக்கு' தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு

 

வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பிலான தீர்மானத்துக்கு தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

160423160623_national_congress_512x288_b
 

வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த வட மாகாண சபையின் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதுமா லெப்பை பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று தனித்துவமான தேசிய இனம் என்பதை மறந்து தமிழ் அரசியல் தலைமைகள் நடந்து கொள்வதாக கூறிய அவர் அதிகாரப் பகிர்வில், தமிழர் தரப்பு முஸ்லிம்கள் தொடர்பாக தனித்து தீர்மானங்களை எடுப்பது, ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் தெரிவித்தார்.

சனிக்கிழமை அக்கரைப்பற்று நகரில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ எல் அதாவுலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரன தீர்மானம் பிரதானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு இரு மாகாணங்களும் இணைக்கப்படுமாயின் சம அந்தஸ்துடையதாக தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அதேபோல் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அமையக் கூடியதாக மாகாண எல்லைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/04/160423_national_congress

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு இரு மாகாணங்களும் இணைக்கப்படுமாயின் சம அந்தஸ்துடையதாக தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அதேபோல் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அமையக் கூடியதாக மாகாண எல்லைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்

இந்த முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாகாண எல்லை எங்க போய் எங்க வரும். கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி வந்து.. தெற்குக்குப் போய்.. மேற்கில் வளைஞ்சு.. மத்தியை சுத்தி.. மலையகத்தை ஊடுருவி.. மீண்டும்..கிழக்கை அடையுமோ. இதிலும் பேசாம ஒட்டுமொத்த இலங்கையையும் இவர்களின் கையில் கொடுத்திடலாம் போல இருக்கு. இவர்கள் இலங்கையில் எங்க தான் இல்லை.. மசூதியும்.. கடையும் வைக்க ஒரு இடமிருந்தால்.. அங்கெல்லாம்.. இவர்கள் இருக்கக் காணலாமே...??!

முஸ்லீம்களுக்கு வடக்குக் கிழக்கில்.. பூர்வீக நிலம் என்று ஒன்றிருப்பதாகத் தெரியவில்லை. காத்தான்குடியும்.. தென்னிலங்கை வாழ் முஸ்லீம்களுக்கு புகலிடமாக அளிக்கப்பட்ட இடம் என்பதுதான் வரலாறு. மேலும் சனத்தொகை வடிவில்.. இலங்கைச் சோனகர்கள்.. தென்னிலங்கையில் தான் அதிகம் வாழ்கின்றனர். ஆகவே உந்த மாகாண எல்லை என்பது.. தென்னிலங்கைக்குள் தான் செறிவாக்கப்படனும். இதனை சிங்களவர்களிடம் கேட்டுப் பெறுவதே நல்லது.

முஸ்லீம்களுக்கு தனிமாகாணம் அமைய வேண்டும் எனின் மலைய தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து தனி மாகாணம் அமைக்க வேண்டியதும் அவசியம். அதுவும் தவிர்க்க முடியாததாகும். tw_blush::rolleyes:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.