Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேருந்தை மறித்து ரவுடிகள் அட்டகாசம் நடத்துநர், பயணி மீது தாக்குதல்

Featured Replies

கட்டுக்கடங்காமல் ரவுடிகளிகளின் அடாவடித்தனம் தொடர்ந்து செல்வதாக பொது மக்களினால் விசனம் வெளி யிடப்படுகிறது. பருத்தித்துறையில் இருந்து ஆழியவளை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை நாகர்கோவில் சந்தியில் மறித்த ரவுடிக்கும் பல் நடத்துநரை இழுத்து விழுத்தி தாக்கியதுடன் தட்டிக் கேட்ட இளைஞனையும் கொட்டன்களால் தாக்கியது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிய ளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
பருத்தித்துறையிலிருந்து ஆழியவளை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மாலை 6 மணியளவில் நாகர்கோவில் சந்தியை நெருங்கிய போது சந்தியில் 20-25 வரையிலான இளைஞர் குழு ஒன்று படுத்திருந்தது. 

பேருந்துச் சாரதி பேருந்தை நிறுத்திய போது கொட்டன்களுடன் பேருந்தின் இரு கதவுகள் ஊடாகவும் ஏறி உடுத் துறையைச் சேர்ந்தவர்கள் இருந்தால் இறங்குமாறு உரத்தக் குரலில் சத்தமிட்டது.
அவர்களை ஏன் இறங்கச் சொல்கிறீர்கள் எனக் கேட்ட நடத்துநரை பிடித்து  இழுத்து வீழ்த்தி சேட்டைக் கிழித்ததுடன்  தொலைபேசியையும் பறித்து எறிந்து அவரின் தங்கச் சங்கிலியையும் அறுத்து அட்டகாசம் புரிந்தனர்.

இதனை பேருந்துக்குள் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நடத்துநரை ஏன் அடிக்கிறீர்கள் எனக் கேட்ட போது அவரின் தலையில் கொட்டன்களால் தாக்கினர் அக் கும்பல். இதனால் அவர் மயங்கி விழுந்தார். வீழ்ந்தவரையும் சரமாரியாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தனையும் முடிய இரவு பேருந்தை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நிறுத்திய சாரதி  மருதங்கேணிப் பொலிஸாருக்கு விடயத்தைக் கூறியதுடன் காயமடைந்த வரை மருதங்கேணி வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கி ருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக  பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வளவு நடைபெற்றும் பொலிஸார் எதுவித நடவடிக் கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து நேற்று சனிக்கிழமை காலையில் இருந்து வடமராட்சிக் கிழக்கிற்கான சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தமது சேவையினை பகிஷ்கரிப்புச் செய்தன. தமக்கும் பேருந்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பில்லை  என்பதால்  பேருந்து சேவையில் ஈடுபடமுடியாது என அவர்கள் கூறினர்.
இது விடயம் புலனாய்வுப்  பிரிவு மூலம் மேலிடத்திற்கு தெரியவரவே பொலிஸார் உடனடியாக தலையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நபரை பருத்தித்துறை வைத்தியசாலைக்குச் சென்று பொலிஸார் பார்வையிட்டதுடன் தனியார் பேருந்து சங்கத்தினருடனும் கலந்துரையாடினர். 
பிரதேச செயலர், பொலிஸார் இணைந்து தமக்கு எவ்வித இடையூறும் விளைவிக்கப்படாது என உறுதி மொழி கொடுக்கப்பட்டதாக தனியார் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நண்பகலிலிருந்து பேருந்து சேவை யில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த அவர்கள் ஏதேனும் இடை யூறுகள் ஏற்பட்டால் பொலிஸாரும் பிரதேச செயலருமே பொறுப்பேற்க  வேண்டும் எனவும் கூறினர்.   

http://www.valampurii.lk/valampurii/content.php?id=9947&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

 இப்ப ஆமி ஆயுதங்களோட நடமாடுறதில்ல ஏனென்றால் அவங்கட வேலையை எங்கடயள் அவங்கட ஆசீர்வாதத்தோட செய்யுதுகள். அவனிப்ப நல்லவனாயிட்டான். வீட்டுக்குள்ள இருக்கிறதெல்லாம் கண்டுபிடிக்க முடியுது தெருக்காவாலிகளை பிடிக்க முடியேலை. பிறகு இன்னும் ஏன் எங்கட இடத்தை அடைச்சுக் கொண்டிருக்கினம். மூடை, முடிச்சுகளோடை வெளியேற வேண்டியதுதானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்காவாலி களிசடையள பொலிஸ் கைது செய்தால் அதுக்கும் கொஞ்சப்பேர் இஞ்ச வரிஞ்சுகட்டிக்கொண்டு வருவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

 வடக்கில் எந்தப் பக்கம் திரும்பினாலும் இராணுவம், பொலிஸ் பாதுகாப்பு. ஒரு அரசியல்வாதி வடக்கிற்கு விஜஜம் செய்தால் அத்தனை பந்தோபஸ்து. ஒருவர் புலிப்பாட்டு கேட்டால் உடனே கைது.ஆனால் திருட்டுகளையும், தெருச்சண்டைகளையும் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ  முடியவில்லை. எல்லாம் நடந்து முடிந்தபின் மட்டும் சரியாகச் செய்து விடுவார்களாக்கும். 
இத்தனை பாதுகாப்புக்களையும் கடந்து இவ்வளவு துணிகரமாக, பகிரங்கமாக இந்தத் தெருச்சண்டியர்களால் நடமாட முடியுதென்றால் இவர்கள் தங்கள் கடமையை எந்த வகையில் சரியாகச் செய்கிறார்கள்? இப்போ சரியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியுமென்றால் சம்பவம் நடைபெற முன்னோ, நடைபெறும்போதோ ஏன் கவனம்  செலுத்த முடியாதா? இவர்கள் இல்லாத காலத்தில் எல்லாம் கட்டுப்பாடாகவே இருந்ததே. தமிழ் மக்களுக்கு பாதுகாப்பையும், அமைதியையும் அளிக்க முடியாதவர்கள், அழித்துக்கொண்டு இருப்பவர்கள் ஏன் இன்னும் எங்கள் பிரதேசத்தை ஆக்கிரமித்து இருக்க வேணும்? 

இதெல்லாம் திட்டமிட்டு பல நோக்கங்களுக்காக  இயற்றப்பட்டு, வழிநடத்தப்பட்டு, அரங்கேற்றப்பட்டு வருகிறது. நாங்கள் திட்டமிட்டு மௌனம் காக்க வைக்கப் படுகிறோம்.எதிர்த்து ஏன் என்று  கேள்வி கேட்டால் எல்லாம் குழம்பிப் போகும் கண்டியளோ. 

  • கருத்துக்கள உறவுகள்

25 பேர் றோட்டில் படுத்திருந்தது ஒருத்தருக்கும் தெரியவில்லை பஸ் வரும் வரை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.