Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்தின் குரலின் மேடைப்பேச்சுக் கலை.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசத்தின் குரலின் மேடைப்பேச்சுக் கலை.

- கி.செ.துரை (நன்றி : அலைகள்)

antonbm0.pngஅறிஞர் அண்ணா போல எளிமைப்படுத்தி பாமர மக்களுக்குள் கச்சிதமாக எடுத்துச் சென்றது அவருடைய மேடைப்பேச்சுக் கலைதான். anna2gp7.png

தமிழீழ தேசத்தில் பொருள் நிறைந்த தேச விடிவு தேடும் குரலுக்கான உயர் விருதைப் பெற்றிருக்கிறார் தத்துவாசிரியர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள். ஆகவேதான் அவருடைய மேடைப் பேச்சுக்களின் சிறப்பைச் சீர்தூக்குகிறது இக்கட்டுரை.

ஒரு மனிதன் வாழ்வில் செய்த சாதனைகள் எப்படிப்பட்டவை என்பது அவர் இறக்கும்போது வரும் மக்கள் தொகையால் தீர்மானிக்கப்படும் என்று கூறுவார்கள். அந்த வகையில் மக்கள் மனம் கவர்ந்த சிந்தனைவாதி என்ற சிறப்பை அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு புலம் பெயர்ந்த மக்கள் இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனில் வைத்து வழங்கியுள்ளனர். புலம் பெயர்ந்த சின்னஞ்சிறிய தொகையான மக்கள் உள்ள ஈழத்தமிழ் இனத்திலிருந்து இவ்வளவு பெருந் தொகையாக மக்கள் வந்துள்ளார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் அவர் பெற்ற வெற்றியை நாம் எளிதில் உணரலாம்.

பேரறிஞர் அண்ணா 1969 ல் மரணமடைந்தபோது முழுத் தமிழகமுமே சென்னை மாநகரில் திரண்டது. மில்லியன் கணக்கில் அணி திரண்ட அந்த மக்கள் தொகை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட சாதனைத் தொகையாகியது. அண்ணா புற்றுநோயால் மடிந்தபோது தமிழக முதல்வராகவும் இருந்தார். சுமார் நாலு கோடி மக்களிடையே அந்தச் சாதனைத் தொகை வந்தது. ஆனால் அன்ரன் பாலசிங்கம் அவர்களோ தான் பிறவாத இரவல் நாட்டில், அதுவும் ஐரோப்பா கண்டத்தில் வைத்து இந்த அதி உயர் மக்கள் மரியாதையைப் பெற்றிருக்கிறார் என்றார் அது சாதாரண விடயமா என்ன?

அன்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தன்னுடைய தத்துவச் சிந்தனைகளாலும், சிறந்த அழகு தமிழ் மேடைப் பேச்சுக்களாலும் வெற்றியைத் தேடித்தந்து காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, தமிழகத்தில் திராவிட ஆட்சியைக் கொண்டு வந்தவர் அண்ணா. அன்று அவர் ஏற்படுத்திய ஆட்சி கடந்த 40 வருடங்களாக மாற்றமடையாமல் நீடித்து வருகிறது. இதுவே அண்ணாவின் மேடைப் பேச்சின் வெற்றி.

எதிரியையும் நேசிக்கும் மாண்பினால் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பது அண்ணா வைத்த பிரதான கொள்கை. அடுத்து தனது தோழருக்கு அவர் கூறிய தத்துவம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்று நெறி முறைகளுமாகும். அது மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்ற கொள்கையை முதலில் தமிழக மண்ணில் வைத்து முழங்கிய தத்துவாசிரியராக அண்ணாவே இருந்தார். அன்றைய சூழ் நிலையில் தனித்தமிழ் அரசுக்கான வாய்ப்புக்கள் குறைவாக இருந்தமையால் அதில் ஒரு திருப்பத்தை உண்டு பண்ணி தமிழ்நாடு என்று தமிழகத்திற்கு பெயரிட்டு புதுப்பாதை கண்டவர் பேரறிஞர் அண்ணா.

எளிய தமிழில் கவி புனைந்த பாரதியின் இறுதி யாத்திரைக்கு வந்தவர்கள் வெறும் 17 பேர் மட்டுமே என்பது கவலை தரும் செய்தி. அவருடைய கவிதையைப் புரிந்தவர்கள் அன்று அவ்வளவுபோர்தான். இன்று அவர் கவிதைகள் பெற்றிருக்கும் சிறப்பு காலத்தினால் அவர் பெற்ற மகத்தான வெற்றியாகும். ஆனால் அண்ணா தனது மேடைப் பேச்சுக்களுக்கான மக்கள் புரிதலை அவர் இறந்த அன்றே தான் பிறந்த மண்ணில் குவிந்த மக்கள் வெள்ளத்தால் பெற்றுக் கொண்டார்.

இவை அனைத்தும் இக்கட்டுரையின் பொருளை விளங்க வைக்க எடுத்துரைக்கப்பட்ட முன்னோட்டமாகும்.

இவற்றை அடிப்படையாக வைத்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் மேடைப்பேச்சுக்கலையை சீர்தூக்க வேண்டும். அன்ரன் பாலசிங்கம் ஒரு போராளியாக இருந்து எத்தனையோ நெருப்பு வளையங்களை தாண்டியவர் என்பது உண்மைதான். எனினும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை அவர் பிடிக்க உதவியதில் முக்கிய இடம் பிடிப்பது அவருடைய மேடைப் பேச்சுத்தான். தனது தத்துவங்களை அண்ணா போல எளிமைப்படுத்தி பாமர மக்களுக்குள் கச்சிதமாக எடுத்துச் சென்றது அவருடைய மேடைப்பேச்சுக் கலைதான். ஒவ்வொரு விடயத்தையும் நகைச்சுவையோடு வெளிப்படுத்தி, வசனத்தின் இறுதிப்பகுதியில் வல்லின அழுத்தம் கொடுத்து மக்கள் மனதில் பதிய வைப்பதில் அவரிடம் சிறந்த ஆளுமை இருந்தது. அதற்குரிய நுட்பங்களை அவர் எப்படிக் கையாண்டார் என்பதை இனிப் படிப்படியாகப் பார்க்க வேண்டும்.

பொதுவாக ஒரு தத்துவாசிரியரின் பேச்சுக்கு மற்றவர்கள் உரை சொல்வதுதான் வழமை. திருவள்ளுவர் போன்ற தத்துவ மேதைகள் கருத்துக்களுக்கு பரிமேலழகர் போன்றவர்கள் உரை கூறினார்கள். வள்ளுவர் என்னும் தத்துவாசிரியர் உரையாசிரியராக மாறியது கிடையாது. ஆனால் இவரோ தமிழீழத் தேசியத் தலைவருடைய பேச்சுக்களுக்கு உரை கூறினார். தனது தத்துவங்களுக்கு உரை கூறிய தத்துவாசிரியராக திகழ்ந்தவர் உலகில் அன்ரன் பாலசிங்கம் ஒருவராகத்தான் இருக்க முடியும். நேர் கோட்டில் பார்த்தால் இது ஒரு முரண்பட்ட நிலையாக தென்படும். ஆனால் கொஞ்சம் நிதானமாக இரன்டொரு அடிகள் பின் வைத்தால் உண்மையை உணர முடியும். தேசியத் தலைவரின் உரைகள் தனது தத்துவங்களோடு எப்படி இணைந்து நிற்கின்றன என்பதைப் பொருத்திக் காட்டுவனவே அவருடைய மாவீரர் நாள் உரைகள் என்றால் அது மிகைக் கூற்றல்ல.

பொதுவாகவே தத்துவம் என்றால் சாதாரண மக்களுக்குப் புரியாமலே இருப்பதுதான் வழமை. ஆனால் தனது தத்துவம் எப்படி ஒரு அமைப்பால் உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை அந்தத் தத்துவாசிரியரே வரிக்கு வரி உதாரணம் காட்டி விளக்குவது புதுமையானது. அந்த விளக்கமே தனது தத்துவத்தின் வெற்றி மீதான அவருடைய திருப்தியாகவும் அமைகிறது. அதனால்தான் அவருடைய பேச்சுக்கள் வேதனைகளை எடுத்துச் சொன்னாலும் கூட அவற்றை சிரிப்புடன் விண்டுரைத்தன.

பொதுவாகவே அவருடைய மேடைப்பேச்சுக்களுக்கு சில ஆபத்துக்கள் இருந்தன. ஒரு விடயத்தை அவர் தவறுதலாக பாராட்டி விட்டால் அது பாரதூரமானதாகிவிடும். சாதாரண மக்கள் அனைவரும் அதை மேற்கோள் காட்டி அந்த விடயத்தை ஏற்றுக் கொண்டுவிடுவார்கள். எனவேதான் பாராட்டும் அத்தோடு ஒரு நிராகரிப்பும் அவர் உரையில் இருக்கும். பேரறிஞர் அண்ணாவும் இதை பல தடவைகள் பயன்படுத்தியுள்ளார். சம்பத்தை கட்சியில் இருந்து நீக்கிய அண்ணா சம்பத் ஒரு வைரத் தோடு எனது காது புண்ணாக உள்ளதால் அந்த வைரத் தோட்டை கழற்றி வைத்துள்ளேன் என்றார். இது போல இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு மேடைப்பேச்சில் அன்ரன் பாலசிங்கம் அங்குள்ள சட்டத்தரணிகள் புரிந்த நல்ல காரியம் ஒன்றை பாராட்டினார். மக்கள் கைகளைத் தட்டி ஆரவரித்தார்கள். சட்டத்தரணிகளை பொதுப்படையாக ஆதரித்தால் மக்கள் அவர்கள் அனைவரையும் சரியானவர்கள் என்று நம்பிவிடும் ஆபத்து இருக்கிறது. புலிகளும் அதை ஏற்பதாக மக்கள் கருதிவிடும் அபாயமும் இருக்கிறது, எனவே அடுத்த வார்த்தையாக கள்ளப் பிரக்கிராசிகள் என்று கூறினார், முடிந்தது ஆபத்து நிலை.

இதன் பின்னர் பேச்சு வார்த்தையின் போது உதவி வழங்கு நாடுகள் எவ்வளவு பணத்தைத் தர இருக்கின்றன என்று பட்டியலிட்டுப் பேசினார். அந்த உரை பணம் புலிகளின் கைகளுக்கு வரப்போகிறது என்ற கருத்தை உண்டு பண்ணும் என்பதை பேசும் போதே அவருடைய மனம் உணர்கிறது. அடுத்த வரியாகக் கூறும்போது, அந்தப் பணத்தில நாங்கள் ஒரு சதத்தையும் எடுக்க முடியாது, ஒரு ஜில்மாலும் பண்ணவும் இயலாது என்று கூறிமுடித்தார். அதனுடைய நோக்கம் எதிரிகள் பண விடயத்தில் தம்மீது தவறான பிரச்சாரம் ஒன்றைச் செய்யக் கூடிய அபாயம் இருக்கிறது என்ற எச்சரிக்கைதான்.

இவ்வளவு உப விடயங்களை நோக்கினாலும் கூட, அவர் போல மையக் கருத்து சிதைவடையாமல் பேசுவது எல்லோராலும் இயலாத விடயமாகும். அவர் பேசும் ஒரு வார்த்தை கூட தமிழீழ தனியரசு உருவாக்கக் கோரிக்கையை கீழிறக்கிவிடக் கூடாது என்பதை அவதானிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் குறைந்தபட்சக் கோரிக்கை இதுவென ஒரு கருத்தை வைத்து எதிரிகளுக்கு பிடி கொடுத்துவிடக் கூடாது. மேலும் ஈழத்தில் தமிழர்கள் சிந்திய இரத்தம் பற்றிய யாதொரு இன்மை வறுமையும் தெரியாதவர்களுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய வாள்முனை வாழ்வை அவருடைய பேச்சுக்கள் சந்தித்திருந்தன. அதை யாதொரு பழுதும் இல்லாமல் இறுதிவரை நிறைவேற்றியதுதான் பாலசிங்கத்தின் பேச்சுக்களின் வெற்றி. சமீபத்தில் பாப்பரசர் போன்ற பெரியவர்கள் கூட தாம் நிகழ்த்திய மேடைப்பேச்சுக்களால் சந்தித்த கலவரங்களை நாம் அறிவோம். அன்ரன் பாலசிங்கத்தின் எந்தவொரு உரையும் சிங்கள தமிழ் மக்களிடையே ஒரு கலவரத்தை உருவாக்கவில்லை.

ஏன் என்று சிறிது ஆழமாக யோசிக்க வேண்டும். அவருடைய மேடைப் பேச்சுக்கள் அவ்வப்போது கேலி பேசும் தன்மையைக் கொண்டிருக்கும். அதை நகைச்சுவைப் பகுதியாகவே எடுக்கும் பான்மையை அவருடைய எதிரிகளுக்கே அது கொடுத்திருந்தது. ஒரு தடவை மாவீரர் உரையில் மோட்டுச் சிங்களவன் என்றே பேசியிருக்கிறார். அதன் பின்னும் சிங்கள அரசு அவரைப் பேச அழைத்திருக்கிறது. இவை அனைத்துமே அவருடைய மேடைப் பேச்சுக்கலை உருவாக்கத்தின் கட்டமைவுகளாகும். நடைபெறும் போராட்டத்தின் அசைவை திசை திருப்பிவிடாமலிருக்க வேண்டும் என்பதற்காக அவர் உருவாக்கிய நுட்பமான பேச்சுக்கலை ஏற்பாடுகளாகும்.

இவ்வளவு விடயங்களையும் உள்ளடக்கினாலும் போராட்டத்தை முன்னெடுப்பதலில் அவருக்கு இருந்த தளராத உறுதியை அவருடைய பேச்சுக்களின் மைய ஓட்டத்தில் எவருமே உணரலாம். அவர் கண்ட தத்துவம் மக்களுக்கு மிக இலகுவாக விளங்கியிருக்கிறது. அதனால்தான் யாருமே எதிர்பாராத விதமாக மக்கள் அவரைத் தேடி ஓடி வந்திருக்கிறார்கள். இங்கிலாந்து அலக்சாண்டிரா அரண்மனையே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. தான் பேச்சுக்களை வழங்கிய அதே மண்டபத்திலேயே பாலசிங்கம் பேசாது படுத்திருந்தார். ஆனால் அத்தருணம் அரைப்பற்றி உலகமே பேசிக் கொண்டிருந்தது. தமீழழத் தேசியத் தலைவர் அவருக்கு மாமனிதர் என்றொரு பட்டம் வழங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தலைவரோ தேசத்தின் குரல் என்று அவரை அழைத்தார். ஆம் பாலசிங்கம் பட்டம் பெற்றது அவருடைய குரலுக்காக, அந்தக் குரலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மேடைப்பேச்சுக் கலைக்காக என்றால் அது மிகைக் கூற்றல்ல.

எந்த மனிதனிடம் சிரிப்பு இருக்கிறதோ அவனின் பேச்சிலேயே ஜீவன் இருக்கிறது..

எந்தத் தத்துவமானாலும் அது உள்ளத்தில் இருந்து வந்தால்தான் அதன் உண்மை ஒளி மக்களைச் சென்றடையும்.

மக்களால் விளங்கப்பட்ட தத்துவம்தான் தேசத்தை வென்றெடுக்கும் வலிமை பெறுகிறது.

மார்க்சின் தத்துவங்கள் லெனினால் புரியப்பட்டபோது ரஸ்யாவில் விடுதலை மலர்ந்தது.

அது போல அன்று திரண்டு வந்த மக்கள் வெள்ளம் தேசத்தின் குரலின் தத்துவத்தை புரிந்தமையின் வெள்ளப் பெருக்குத்தான்.

இங்கிலாந்து நகரில் இன்னொரு மக்கள் சுனாமிப் பேரலையை உருவாக்கியிருக்கிறது அவருடைய மேடைப் பேச்சு.

தேசத்தின் குரல் பாலசிங்கத்தின் பேச்சுக்கள் இரு வகைப்படும். ஒன்று மேடைப்பேச்சு, இன்னொன்று அமைதிப்; பேச்சு.

மலரப் போகும் தேசம் பாலசிங்கத்தின் இந்த இரண்டு பேச்சுக்களையும் வெற்றிகரமான பேச்சுக்கள் என்று உறுதி செய்யப்போகின்றன.

ஆம் மக்கள் சுனாமியை ஏற்படுத்திய பாலசிங்கம் தத்துவாசிரியர் மட்டுமல்ல வெற்றிபெற்ற மேடைப் பேச்சாளராகும் கூடவே.

Edited by இளங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.