Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணசபை தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்:

Featured Replies

வடமாகாணசபை தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்:

 

அண்மையில் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேல் மாகாணசபையின் உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம்;, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டம் உள்ளட்ட திர்மானங்களை வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைத்தல் மற்றும் சமஸ்டி ஆட்சி முறைமையை வழங்குதல் ஆகியன ஆபத்தானவை என நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

மொழியை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டங்கள் பாதகமான நிலைமையையே ஏற்படுத்தும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131788/language/ta-IN/article.aspx

வடக்கு மாகாண சபை பிரேரணையை நிராகரித்தது மேல்மாகாணசபை!

வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு சமஸ்டி அலகை உருவாக்கவேண்டுமென கோரி வடக்குமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேல்மாகாண சபை நிராகரித்தது.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நிராகரிக்கும் பிரேரணை நேற்றைய தினம் மேல்மாகாணத்தில் முன்வைக்கப்பட்டது.

ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர் நிசாந்த சிறிவர்ணசிங்க இந்தப் பிரேரணையை முன்வைத்தார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து இரண்டு சமஸ்டி அலகுகளை உருவாக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாடு மோசமான விளைவுகளைச் சந்திக்கநேரிடும் என நிசாந்த சிறிவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் வடக்கு மாகாணசபையின் தீர்மானத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர். இதையடுத்து, வடக்கு மாகாணசபையின் தீர்மானத்தை நிராகரிக்கும் பிரேணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

http://tamilleader.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Athavan CH said:

வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து இரண்டு சமஸ்டி அலகுகளை உருவாக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாடு மோசமான விளைவுகளைச் சந்திக்கநேரிடும் என நிசாந்த சிறிவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

எந்தமாதிரியான மோச விளைவுகளை ஏற்படுதும் எண்டு விரிவாய் சொன்னியளெண்டால்  நாங்களும் விளங்கிக்கொள்ளுவமெல்லே tw_joy:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.