Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று நாடகதாரிகளால் உருவாக்கப்படும் தமிழீழம்!

Featured Replies

மூன்று நாடகதாரிகளால் உருவாக்கப்படும் தமிழீழம்!

இலங்கையின் புதிய அரசியலமைப்பு ரீதியாக தன்னாட்சியைப் பெற்றுக்கொள்வதற்கான நாடகம் மோடி, சம்பந்தன், மைத்திரி ஆகிய மும்மூர்த்திகள் மூலம் இந்தியாவில் அரங்கேற்றப்படுவதாக தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும், எம்.பி.யுமான விமல் வீர வன்ச தெரிவித்துள்ளார்.

27,000 ஆயிரம் படையினரின் உயிரைப் பலிகொடுத்து உருவாக்கப்பட்ட நாட்டினை காட்டிக்கொடுக்க அரசு முயற்சிக்கின்றது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் அலு­வ­ல­கத்­தில நேற்று திங்­கட்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கை­யி­லேயே விமல் வீர­வன்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

அண்மையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கு செவ்வி வழங்கியிருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியலமைப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகின்றார்.

இதேவேளை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், சம்பந்தனுக்கு ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து அங்கே பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இவ் அனைத்து நிகழ்ச்சி நிரல்­க ளிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் முயற்­சிக்கும் வட­கி­ழக்கு ஒற்­றை­யாட்­சியை பெற்றுக் கொள்ளும் விட­யமே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

தற்பொழுது அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தன்னாட்சியை வழங்க இணங்கியுள்ளனர். இது சம்பந்தனுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகும். புதிய அரசியலமைப்பில் தன்னாட்சி உள்வாங்கப்படவுள்ளது.

தன்னாட்சியை புதிய அரசியலமைப்பினூடாகப் பெற்றுக்கொள்ளும் சம்பந்தன், அடுத்த கட்டமாக ஐநாவின் உதவியுடன் தனித் தமிழீழத்தை பெற்றுக்கொள்வார். இதில் எந்தவொரு சிக்கலும் இல்லை.

ஆயுதப்போராட்டத்தால் தனித் தமிழீழம் பெற்றுக்கொள்ளும் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. தற்போது அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக ஐ.நா.வின் உத­வி­யுடன் அதனை நிறை­வேற்றிக் கொள்ளும் முயற்சி சம்­பந்­த­னி­னால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இலங்­கையில் விக்­கி­னேஸ்­வரன் அதற்­காக அடிப்­படை நட­வ­டிக்­கை­க­ளையும் படிப்படியாக முன்னெடுக்கின்றார். மோடி மறுபுறம் தனது நாடகத்தை அரங்கேற்றுகிறார்.

நாம் ஜனவரி 8இற்கு முன்னரே சொன்னது தற்போது அனைத்தும் உண்மையாகிக்கொண்டிருக்கின்றது என்றார்.

http://thuliyam.com/?p=26828

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Athavan CH said:

 

நாம் ஜனவரி 8இற்கு முன்னரே சொன்னது தற்போது அனைத்தும் உண்மையாகிக்கொண்டிருக்கின்றது என்றார்.

http://thuliyam.com/?p=26828

இவர் கிளி யோசியம் சொல்லப்போக‌லாம்........சிங்களவர்களில் ஒரு கோஸ்டி ஈழம் கிடைச்சிடும் என்று பயப்பிடியினம்,தமிழர்களில் ஒரு கோஸ்டி ஈழம் கிடைக்காது இனி என்று சந்தோசப்படுது,,,,,,என்னத்தைச் சொல்ல?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, putthan said:

இவர் கிளி யோசியம் சொல்லப்போக‌லாம்........சிங்களவர்களில் ஒரு கோஸ்டி ஈழம் கிடைச்சிடும் என்று பயப்பிடியினம்,தமிழர்களில் ஒரு கோஸ்டி ஈழம் கிடைக்காது இனி என்று சந்தோசப்படுது,,,,,,என்னத்தைச் சொல்ல?

அவையள் ஈழம் கிடைக்காது எண்டு சந்தோசப்படுறதுமில்லாமல்...... எவன் தமிழ் தமிழ் எண்டு உணர்ச்சியாய் சொல்லுறானோ அவனை அவையளுக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது.

உண்மையானவர்களுக்கு பொய்யர்களை எப்பவும் பிடிக்காது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.