Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொதுமக்களே எச்சரிக்கை! மட்டக்களப்பில் போதை மாத்திரைகள் விற்பனை

Featured Replies

4014_1463604217_PhototasticCollage-2016-

ஏறாவூர் நகரிலுள்ள மருந்தகம் ஒன்றில் ஒரு வகைப் போதை மாத்திரைகளை மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப்பொருள் பிரிவினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், அம்மருந்தகத்தில் குறித்த மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவரும் கைதுசெய்துப்பட்டுள்ளார்.

குறித்த மருந்துக்கடையில் போதையூட்டும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் திடீர்ச் சோதனையை மேற்கெண்டனர்.

இதன்போது, ஒவ்வொன்றும் 150 மில்லிகிராம் கொண்ட 18 மாத்திரைகளைக் பொலிசார் கைப்பற்றியுள்ளர்.

குறித்த மாத்திரைகள் இளவயதினருக்கு குறிப்பாக, பாடசாலை மாணவர்களுக்குப் போதையூட்டுவதற்காக சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக அறியப்படுகின்றது.

இந்த மாத்திரைகள் போதை தரக்கூடியது என்றும் மேலும் நீண்டகாலப்போக்கில் நரம்பு மண்டலங்களைத் தாக்கி நிரந்தரமாக ஊனமுறச் செய்யக்கூடியது என்றும் சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து தாம் சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப் பொருள் பிரிவினர் தெரிவித்தனர்.

http://battinaatham.com/description.php?art=4014#

  • கருத்துக்கள உறவுகள்

Battinaatham செய்திகள் கேவிக்குரியனவாக உள்ளன ....இந்த தகவல்கள் தொடர்பாக விசாரித்து மிக விரைவில் அறியத்தருகிறேன் 
தொடர்ந்து பொய் வதந்திகளையும் ..பேச்சுவாக்கில் கேட்ட செய்திகளையுமே இந்த தளம் தொடர்ந்து இணைத்து வருகிறது...
மிகவிரைவில் யாழின் கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் 

பட்டினாதம்  அடிக்கடி உசுப்பேற்றும் செய்திகளையும் வெளியிடும் கற்பனையாக.  

கண்ணை மூடிக்கொங்கோ!

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாணவர்களுக்கு போதைமருந்து மாத்திரை விற்பனை!

மட்டக்களப்பு மாணவர்களுக்கு போதைமருந்து மாத்திரை விற்பனை!

ஏறாவூர் கடைத்தொகுதி ஒன்றில் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் விற்பனை செய்யப்பட்ட ஒருவகை போதைமாத்திரையை கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு உணவு மற்றும் மருந்துப் பொருள் விற்பனைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த மருந்துக்கடையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து ஏறாவூர் காவல்துறை அதிகாரி சிந்தக பீரிஸ் தலைமையிலான குழுவினரும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உணவு மற்றும் மருந்துப்பொருள் பரிசோதகர் ரீ. வரதராஜன் தலைமையிலான குழுவினரும் திடீர் பரிசோதனையை மேற்கொண்டபோதே இந்தப் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு, 18 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும், ஒவ்வொன்றும் தலா 180 மில்லிக்கிராமைக் கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இளம் பராயத்தினருக்கு போதையை ஊட்டும் நடவடிக்கையாகவே இந்த மாத்திரைகள் விற்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போதை மாத்திரையானது காலப்போக்கில் நரம்புமண்டலத்தைத் தாக்குவதோடு, பாவனையாளர்களை நிரந்தரமாக ஊனமுறச் செய்யும் தன்மை கொண்டவை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் மீது சடநடவடிக்கை எடுத்திருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

http://thuliyam.com/?p=27313

Edited by Athavan CH

  • தொடங்கியவர்
On 19.5.2016 at 10:53 AM, அக்னியஷ்த்ரா said:

 

 

On 19.5.2016 at 4:53 PM, பெரியார் said:

 

http://thuliyam.com/?p=27313

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மை...... உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 
ஆனால் இவர்கள் முதலில் வெளியிட்ட நாயிறைச்சி செய்தி முற்றிலும் வதந்தி 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, அக்னியஷ்த்ரா said:

செய்தி உண்மை...... உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 
ஆனால் இவர்கள் முதலில் வெளியிட்ட நாயிறைச்சி செய்தி முற்றிலும் வதந்தி 

விற்பவர்கள்.... 
குறிப்பிட்ட இனத்தையும், மதத்தவர்ககளையும் சேர்ந்தவர்களாய்   இருப்பார்களே....
அது,  எவ்வளவு தூரம் உண்மை என்று..... யாருக்கும் தெரியாது.
வாங்குபவன், தமிழனாய் மட்டுமே... இருக்க முடியும்.

Edited by தமிழ் சிறி

1 hour ago, தமிழ் சிறி said:

விற்பவர்கள்.... 
குறிப்பிட்ட இனத்தையும், மதத்தவர்ககளையும் சேர்ந்தவர்களாய்   இருப்பார்களே....
அது,  எவ்வளவு தூரம் உண்மை என்று..... யாருக்கும் தெரியாது.
வாங்குபவன், தமிழனாய் மட்டுமே... இருக்க முடியும்.

இதை விற்பவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல, தமிழன், சிங்களவன் எல்லாருமே விற்கிறார்கள். கொழும்பிற்கு வந்து பாருங்கள்.

எல்லா இனத்தவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கின்றனர்.

வாங்குபவர்களும் அப்படித்தான்!

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

செய்தி உண்மை...... உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 
ஆனால் இவர்கள் முதலில் வெளியிட்ட நாயிறைச்சி செய்தி முற்றிலும் வதந்தி 

தெருவோரம் விற்றால், அது ஓகே. 

ஏனெனில், இலங்கையில் பொதுவாக எல்லா இடத்திலும் விற்கிறார்கள்.

Pharmacy இல், விற்கப்படுகிறது என்றால் எங்கோ இடிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெரியார் said:

இதை விற்பவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல, தமிழன், சிங்களவன் எல்லாருமே விற்கிறார்கள். கொழும்பிற்கு வந்து பாருங்கள்.

எல்லா இனத்தவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கின்றனர்.

வாங்குபவர்களும் அப்படித்தான்!

ஐயா...பெரியாரே......
தமிழன்.... மனச் சாட்சி உறுத்தும்,  என்று வாழ்ந்து.... கெட்டுப் போன சனம்.
முஸ்லிமும், சிங்களவனும் அப்படியல்ல.
எம்மை... ஏமாற்றி, கொடுமைப் படுத்தி, கேவலப் படுத்தி, கொள்ளையடித்து...... ஆண்டும், ஆள நினைக்கும் இனம்.
அதனுடன், கொழும்பு....  இறைச்சியை ஒப்பிடுவது சரியல்ல.
இங்கு.....  நாய் இறைச்சி விற்ற, ஆரம்ப இடம் தான்...  சந்தேகத்துக்கு இடமானது. 
இப்போதும்... உங்களுக்கு, புரியாவிட்டால், உங்களுடன் தொடர்ந்து விவாதிப்பதற்கு  அர்த்தம் இல்லை.
நன்றி ஐயா....பொய் வாருங்கள்.

13 minutes ago, தமிழ் சிறி said:

ஐயா...பெரியாரே......
தமிழன்.... மனச் சாட்சி உறுத்தும்,  என்று வாழ்ந்து.... கெட்டுப் போன சனம்.
முஸ்லிமும், சிங்களவனும் அப்படியல்ல.
 

சிங்களவன், தமிழன், முஸ்லிம் எல்லாரும் வாழ்ந்து கெட்டுப் போன சனங்கள்தான் -  யுத்தத்தால்.

அதிலும், சிங்களவனைவிட, தமிழனும் முஸ்லிமும் அதிகம் - வட, கிழக்கில் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

ஐயா...பெரியாரே......
தமிழன்.... மனச் சாட்சி உறுத்தும்,  என்று வாழ்ந்து.... கெட்டுப் போன சனம்.
முஸ்லிமும், சிங்களவனும் அப்படியல்ல.
எம்மை... ஏமாற்றி, கொடுமைப் படுத்தி, கேவலப் படுத்தி, கொள்ளையடித்து...... ஆண்டும், ஆள நினைக்கும் இனம்.
அதனுடன், கொழும்பு....  இறைச்சியை ஒப்பிடுவது சரியல்ல.
இங்கு.....  நாய் இறைச்சி விற்ற, ஆரம்ப இடம் தான்...  சந்தேகத்துக்கு இடமானது. 
இப்போதும்... உங்களுக்கு, புரியாவிட்டால், உங்களுடன் தொடர்ந்து விவாதிப்பதற்கு  அர்த்தம் இல்லை.
நன்றி ஐயா....பொய் வாருங்கள்.

நீங்கள் நான்  வெளிநாட்டில் இருப்பதால் இலங்கையில் நடப்பது நமக்கு தெரியாது தமிழ் சிறிய அண்ணா 

இதற்கு முன்னர் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் இரு முஸ்லீம் இளைஞர்களையும் கைது செய்தார்கள் கிழக்கில் போதை தரும் மாத்திரைகளை விற்பனை செய்வதாக 

பொலிஸ் உத்தியோகத்தர் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது

  • தொடங்கியவர்

வாழைச்சேனையில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

4049_1463860024_PhototasticCollage-2016-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளுடன் ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிறைந்துரைச்னை முஹம்மதியா வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர்கள் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.அமீர் அலி தலைமையில் பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மேலும் பொலிஸாரினால் தேடுதல் வேட்டை நடாத்தப்பட்ட வேளை பிறைந்துரைச்சேனை அஸ்கர் பாடசாலை வீதியில் வைத்து குறித்த சந்தேக நபரை கைது செய்ததுடன் போதை மாத்திரைகளையும் அந்த மாத்திரைகள் மறைத்து வைத்திருந்த முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் பிறைந்துரைச்னை முஹம்மதியா வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://battinaatham.com/description.php?art=4049

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.