Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணித்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது : குடும்பங்களை கட்டியெழுப்ப முடியும் : சபையில் மஹிந்த

Featured Replies

மர­ணித்­த­வர்­க­ளுக்கு உயிர் கொடுக்க முடி­யாது : குடும்­பங்­களை கட்­டி­யெ­ழுப்ப முடியும் :  சபையில் மஹிந்த    

 

மர­ணித்­த­வர்­க­ளுக்கு உயிர் கொடுக்க முடி­யாது. ஆனால் அவர்­க­ளது குடும்­பங்­களை கட்­டி­யெ­ழுப்ப முடியும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் துரி­த­மாக முன்­னெ­டுக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி. யுமான மஹிந்த ராஜபக் ஷ நேற்று சபையில் தெரி­வித்தார்.1617-3.jpg

அழிந்­து­வரும் வனங்­களை பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென்றும் அவர் சபையில் வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற

நாட்டில் ஏற்­பட்ட அனர்த்தம் தொடர்­பி­லான விசேட சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்­ற­கை­யி­லேயே மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

1958 இல் நாட்டில் பாரிய வெள்ளம் ஏற்­பட்­டது. அதன் பின்னர் 1997 இல் புயல் வந்­தது 2004இல் சுனாமி வந்­தது. இவ் அனைத்து அனர்த்­தங்­க­ளுக்கும் நாங்கள் முகம் கொடுத்தோம். மக்­களை மீளக் கட்­டி­யெ­ழுப்­பினோம்.

அதற்­கான அனு­பவம், திறமை எமது படை­யி­ன­ருக்கும் பொலி­ஸா­ருக்கும் அரச அதி­கா­ரி­க­ளுக்கும் உள்­ளது.

எனவே இன்­றைய அனர்த்த வேளையில் ஒரு­வரை குற்­றம்­சாட்டிக் கொண்­டி­ருக்­காது அர­சியல் பேதங்­களை மறந்து அனை­வரும் இணைந்து செயல்­பட வேண்டும். நாம் இதனை அர­சி­ய­லுக்­காக பயன்­ப­டுத்தக் கூடாது.

அர­சாங்கம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் நட­வ­டிக்­கை­களை எடுக்கும் அதே­வேளை குறை­பா­டு­களும் உள்­ளன. இயற்கை அனர்த்தம் தொடர்பில் நேர காலத்­தோடு அறி­விப்பு விடுத்­தி­ருந்தால் பாரிய பாதிப்­புக்­களை தவிர்த்­தி­ருக்க முடியும்.

அதே­வேளை அரச அதி­கா­ரிகள், உத்­தி­யோ­கத்­தர்கள் ஊழி­யர்கள் தமது கட­மை­களை செய்ய அச்­சப்­ப­டு­கின்­றனர். எனவே அவர்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்கி தடை­யின்றி மக்கள் சேவை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இட­ம­ளிக்­கப்­பட வேண்டும்.

மலை­நாட்டில் அழிந்­து­வரும் வன வளத்தை பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவால் மர­ணித்­த­வர்­க­ளுக்கு மீள உயிர் கொடுக்க முடி­யாது.

ஆனால் மர­ணித்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு உத­வி­களை வழங்கி அக் குடும்­பங்­களை வாழ வைக்க முடியும். இதற்­காக அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக முன்­னெ­டுக்க வேண்டும்.

அதே­வேளை, அனர்த்­தத்­தினால் சேத­ம­டைந்த வீடுகள் சட்ட ரீதி­யா­னதா? சட்ட விரோ­த­மா­னதா? தாழ்நிலங்களில் அமைக்கப்பட்டதா? என்பது தொடர்பில் கவனம் செலுத்தாது வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு முன்னெடுக்கும் அனைத்து நிவாரண நடவடிக்கைகளுக்கும் எமது பூரண ஆதரவை வழங்குவோம் என்றார்.

http://www.virakesari.lk/article/6815

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.