Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கட்டுநாயக்கவில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் என்பவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்ல தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் தற்கொலை அங்கி உட்பட வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இவர் எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய அணியை இவரே வழி நடத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.

சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் தகவல்கள் கிடைத்த பின்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்த சந்தேக நபரின் வீட்டை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் சோதனையிட்டனர். எனினும் இந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

போர் நடைபெற்ற காலத்தில் மன்னார் மற்றும் வன்னி பிரதேசங்களில் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்த ஆதவன் மாஸ்டர், 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.

சுமார் ஒன்றரை மாதம் புனர்வாழ்வு முகாமில் இருந்த இவரை பின்னர், இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.

சாவகச்சேரி குண்டு மீட்பு சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தலைவர்கள் உட்பட 20 முன்னாள் புலிப் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/statements/01/105699

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் முக்­கி­யஸ்தர் எனக் கூறப்­படும் ஆதவன் மாஸ்டர் எனும் அய்­யாத்­துரை மோகன்தாஸ் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல் கள் தெரி­விக்­கின்­றன.

Athavan-Master.jpg

இந்­தி­யா­வுக்கு தப்பிச் செல்ல முற்­பட்ட போது, கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து அவர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாவ­கச்­சேரி - மற­வன்­பு­லவு பிர­தேச வீடொன்றில் தற்­கொலை அங்கி உட்­பட வெடிப் பொருட்கள் கைப்­பற்­றப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நப­ராக கரு­தியே அவர் கைது செய்­யப்பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

இது குறித்து பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வாவின் கீழ் முன்­னெ­டுக்­கப்பட்டு வரும் விசா­ர­ணை­களில் இது­வரை முன்னாள் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தைச் சேர்ந்த புல­னாய்­வா­ளர்கள் 15 இற்கும் மேற்­பட்டோர் கைது செய்­யப்பட்­டுள்ள நிலையில் குறித்த அணியை ஆதவன் மாஸ்­டரே வழி நடத்­தி­யுள்­ள­தாக தக­வல்கள் வெளியாகியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில், யாழ்ப்­பா­ணத்தில் உள்ள ஆதவன் மாஸ்­டரின் வீட்டை பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வினர் சோத­னை­யிட்­ட­போதும் அவர் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றி­ருந்தார். இந் நிலை­யி­லேயே நேற்று முன் தினம் கட்­டு­நா­யக்க ஊடாக இந்­தி­யா­வுக்கு தப்பிச் செல்ல முற்­பட்­ட­போது ஆதவன் மாஸ்டர் கைது செய்­யப்பட்­ட­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

போர் நடை­பெற்ற காலத்தில் மன்னார் மற்றும் வன்னி பிர­தே­சங்­களில் புலி­களின் புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக செயற்­பட்டு வந்த ஆதவன் மாஸ்டர், 2009 ஆம் ஆண்டு போர் முடி­வுக்கு வந்த பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.

சுமார் ஒன்றரை மாதம் புனர்வாழ்வு முகாமில் இருந்த இவரை பின்னர், இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.

http://www.virakesari.lk/article/6864

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

போர் நடை­பெற்ற காலத்தில் மன்னார் மற்றும் வன்னி பிர­தே­சங்­களில் புலி­களின் புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக செயற்­பட்டு வந்த ஆதவன் மாஸ்டர், 2009 ஆம் ஆண்டு போர் முடி­வுக்கு வந்த பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.


 

brikediar%2Bkadafi.jpg

:unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பெயர் பிரச்சனை என்று நினைக்கிறேன், 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடாபி ஏற்க்கனவே வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது இப்போது எப்படி ?????????

வீரகேசரி சரியான படத்தையா இணைத்துள்ளது படத்தில் உள்ள படம் கடாபி உடையது இதில் எதோ பெரிய குழப்பம் உள்ளது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.