Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குப் பல்கலைகழகத்திற்குள் மகிந்தவின் புலனாய்வு அணி!

Featured Replies

4120_1464283736_3.jpg

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைகழகத்திற்குள் மகிந்த அரசாங்கத்தினால் திட்டமிட்டு அனுப்பிவைக்கப்பட்ட சிங்கள புலனாய்வு மாணவர்கள் கல்விகற்பது தெரியவந்துள்ளது.

மகிந்தராஜபக்சவின் காலத்தில் கோதபாயராஜபக்சவின் தலைமையில் உருவாக்கப்பட்ட இனவாத மனநிலையை கொண்ட புலனாய்வு அணிகள் இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு மூலைச்சலவை செய்யப்பட்ட சிங்கள மாணவர்கள் கிழக்குப் பல்கலைகழகத்திற்குள் உள்வாங்கப்பட்டு இயங்கிவருகின்றனர்.
கொம்மாதுரை இராணுவமுகாமிற்குள் தங்கியிருக்கும் இந்த சிங்கள மாணவர்களுக்கு இங்குள்ள இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவதுடன் இவர்கள் பகல்நேரங்களில் சேகரிக்கும் செய்திகளை இரவுநேரங்களில் அங்குள்ள புலனாய்வுதுறையினருக்கு வழங்கிவருவதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த சிங்கள மாணவர்களுக்கு புலனாய்வுதுறையின் ஊடாக கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இவர்களே கடந்த காலங்களில் கிழக்குப் பல்கலைகழகத்திற்குள் நடைபெறவிருந்த பல தமிழ் தேசியத்திற்கான இன உணர்வு கூட்டங்களை தடுத்துநிறுத்தியதுடன் சில மாவீரர்தின நிகழ்வுகளையும் திட்டமிட்டு நடத்தியிருந்தனர்.

இனவாத மனநிலையில் பயிற்றுவிக்கப்பட்டு மூலைச்சலவை செய்யப்பட்ட மேற்படி மாணவர்களே தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தி இனக்கலவரத்தை தூண்டி நல்லாட்சி அரசை இல்லாதொழிக்க முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழில் தேசியகீதம் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியது மற்றும் ஏற்கனவே பல தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல வன்முறைச்சம்பவங்களை திட்டமிட்டு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

http://battinaatham.com/description.php?art=4120

  • தொடங்கியவர்

கிழக்கு பல்கலைக்கழத்தில் ஆர்ப்பாட்டம் பா.உ வியாழேந்திரன் தலையீடு

மட்டக்களப்பு  கிழக்குப் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு முகாமைத்துவபீட மாணவன் இலட்சியமூர்த்தி சுமேஸ்காந் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் குறித்த நபர்களை கைது செய்யுமாறும் இது ஒரு இனவாதத்தை தூண்டுவதற்காக திட்டமிட்டு நடாத்தப்பட்ட செயல் என்றும் கூறி  இன்று (26) பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக  மானவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

குறித்த பல்கலைக்கழக மாணவன் கடந்த மே 18ம் திகதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தினை நினைவு கூறும் பொருட்டு முகப்புத்தகமொன்றில் மே 18 என்று வாசகமிட்ட ஒரு புகைப்படத்தை பதிவுசெய்ததன் காரணமாகவே பல சிங்கள மாணவர்களால் கடந்த (23) தாக்கப்பட்டிருந்தார்.

தாக்குதல் நடாத்திய நபரைக் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடாத்திக் கொண்டிருந்த வேளையில் ஸ்தலத்திற்கு விரைந்த  மட்டக்களப்பு மாவட்ட பா.உறுப்பினர்களான கௌரவ சதாசிவம் வியாழேந்திரன்   மாணவர்களுடன் இது தொடர்பில் உரையாடினர்.
இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கின்ற மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் இது தொடர்பில் அடுத்த  பாராளுமன்ற அமர்வில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  உறுதியளித்தனர் இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்த, கைவிட்டு  மாணர்கள் கலைந்து சென்றனர்.

 

4118_1464274845_13277942_899139270232854   

4118_1464274845_13278002_899139220232859   

http://battinaatham.com/description.php?art=4118

  • கருத்துக்கள உறவுகள்

தனது பாதுகாப்பையும்  மட்டக்களப்பு மாவட்ட பா.உறுப்பினர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் நல்லாட்சியிடமிருந்தே பெறவேண்டிய நிலையில் உள்ளார். நல்லாட்சியை அநுபவித்த யாரேனும் இங்கு உள்ளனரா?. :unsure:   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.