Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிக இளவயதில் 10,000 ஓட்டங்கள்: அலெஸ்டர் குக் சாதனை

Featured Replies

மிக இளவயதில் 10,000 ஓட்டங்கள்: அலெஸ்டர் குக் சாதனை

 

உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், மிக இளவயதில் 10,000 ஓட்டங்களை எடுத்தவர் எனும் பெருமையை இங்கிலாந்து அணியின் தலைவர் அலெஸ்டர் குக் பெற்றுள்ளார்.

140710172459_alastair_cook__624x351_afpg

 

 டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்துள்ள இங்கிலாந்து அணியின் தலைவர் குக்

இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாம் டெஸ்ட் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற போது இந்த சாதனையை அவர் படைத்தார்.

அப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் 31ஆண்டுகள், ஐந்து மாதங்கள் மற்றும் ஐந்து நாட்கள் ஆன குக், இதுவரை சச்சின் டெண்டூல்கரின் பெயரில் இருந்த சாதனையை முறியடித்துள்ளார்.

டெண்டூல்கர் 31 ஆண்டுகள், 10 மாதம், 20 நாட்கள் எனும் வயதில் இருந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு 10,000 ஓட்டங்களை பெற்று மிக இளவயதில் அவ்வளவு ஓட்டங்களை பெற்றவர் எனும் பெருமையை அடைந்தார்.

140713165211_england_captain_alastair_co 

இலங்கைக்கு எதிரான தொடரிலும், குக் தலைமையிலான அணி வெற்றி

 

குக்கின் இந்த சாதனையைத் தவிர இந்த டெஸ்ட் மற்றும் தொடரையும் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 10,000 ஓட்டங்களுக்கும் மேலாக 12 வீரர்கள் பெற்றுள்ளனர்.

அவ்வகையில் வயதின் அடிப்படையில் குறைந்த வயதில் இப்பெருமையை பெற்றுள்ளோர் பட்டியலில் குக் மற்றும் டெண்டூல்கருக்கு அடுத்து தென் ஆப்ரிக்காவின் ஜாக் காலிஸ், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் இலங்கையில் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் உள்ளனர்.

பிரெயின் லாரா, குமார் சங்கக்கார, ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், ஆலர் பார்டர், ஷிவ்நரெயின் சந்திரபால் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகியோரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000க்கும் அதிக ஓட்டங்களை எடுத்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/sport/2016/05/160530_cook_10000runs

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இளவயதுச் சாதனைக்கு வாழ்த்துகள்!. ஆனாலும் குக் 229 இனிங்ஸ் விளையாடித்தான் இச்சாதனையைப் படைத்துள்ளார். டெண்டுல்கர் 135 இனிங்ஸில் 10, 000 ரன்களை எடுத்தார். குக் காயங்களால் பாதிக்கப்படாததால் முதல் பல டெஸ்ட்களை குறைந்த ஆண்டுகளில் விளையாடக் கூடியதாக இருந்தது.

 

  • தொடங்கியவர்

13315734_1253511574667936_49521188138775

Tendulkar
Ponting
Kallis
Dravid
Sangakkara
Lara
Chanderpaul
Jayawardene
Border
Waugh
Gavaskar
Cook

The 10,000 Club

  • தொடங்கியவர்

டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த குக் ; வாழ்த்துத் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்

 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10ஆயிரம் ஓட்டங்களைப்பெற்று முதலிடத்திலுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை இங்கிலாந்து அணித் தலைவர்  அலிஸ்டெயர் குக் முறியடித்துள்ளார்.

Alastair_Cook.jpg

இந்நிலையில், சாதனை புரிந்த அலெஸ்டயர் குக்கிற்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமரின் டுவிட்டர் வாழ்த்தில் “ வாழ்த்துக்கள் அலிஸ்டெயர் குக். 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடக்கும் முதலாவது ஆங்கிலேயர். இது ஒரு வியக்கத்தக்க சாதனை ” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

david.jpg

இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது.

 

இதில் 2 ஆவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் அலெஸ்டயர் குக் 10,000 ஓட்டங்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார். 

இந்த சாதனையை 127 டெஸ்டில் பங்கேற்று 31 வயது 5 மாதத்தில், அலெஸ்டயர் குக் புரிந்துள்ளார். மேலும் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். 

சச்சின் டெண்டுல்கர், தனது 10 ஆயிரம் ஓட்டங்களை 31 ஆவது வயது 10 மாதங்களில் எடுத்து சாதனை படைத்தார். 

கடந்த 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கொல்கத்தாவில் இடம்பெற்ற டெஸ்டில் இந்த சாதனையை சச்சின் புரிந்தார். 

அதாவது இதுநாள் வரை குறைந்த வயதில் 10000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனை சச்சின் டெண்டுல்கருக்கு உரியதாக இருந்தது. 

அதனை இங்கிலாந்து அணியின் இடதுகை  துடுப்பாட்ட வீரரும் அணித் தலைவருமான  அலெஸ்டயர் குக் முறியடித்துள்ளார். 

இருப்பினும் குறைந்த போட்டிகளில் 10000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனை சச்சினுக்கு உரியதாகும். ஏனெனில் சச்சின் 122 போட்டிகளிலேயே 10000 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/6992

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குக்...மெம் மேலும் சாதனை படைக்க வேண்டும்

  • தொடங்கியவர்
சச்சினின் சாதனையை குக் முறியடிக்க முடியும்: கவாஸ்கர்
 
01-06-2016 08:55 PM
Comments - 0       Views - 163

article_1464787909-TamilCookalLEAD-1.jpgடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்றமை என்ற இந்திய அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டென்டுல்கரின் சாதனையை, இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்டெயர் குக் முறிடிக்க முடியும் என, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

31 வயதான அலஸ்டெயர் குக், இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, 10,000 ஓட்டங்களைக் கடந்த 12ஆவது வீரராக மாறியிருந்தார். இந்த மைல்கல்லை அடைந்த, இளைய வீரராக, குக் மாறியிருந்தார். இதற்கு முன் காணப்பட்ட சச்சின் டென்டுல்கரின் சாதனையை, 5 மாதங்களால் குக் முறியடித்திருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், 'டென்டுல்கரின் டெஸ்ட் ஓட்டங்களுக்கான சாதனையை, குக் முறியடிக்க முடியும். அவருக்கு வயது உள்ளதோடு, அதிக டெஸ்ட்களில் இங்கிலாந்து விளையாடுகிறது" என்றார்.

'ஒவ்வோர் ஆண்டும் இங்கிலாந்து விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது, அடுத்த 7 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து போர்மில் குக் இருப்பாரானால், டென்டுல்கரை அவர் முந்த முடியும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது, 10,042 ஓட்டங்களைப் பெற்றுள்ள அலஸ்டெயர் குக், சச்சின் டென்டுல்கரின் சாதனை ஓட்டங்களான 15,921 ஓட்டங்களைப் பெறுவதற்கு, இன்னமும் 5,879 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், ஆண்டொன்றுக்குச் சராசரியாக 12.4 டெஸ்ட்களில் விளையாடுகிறார். அக்காலத்தில் அவர், 44.66 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெறுகிறார். அதைவிட முக்கியமாக, இனிங்ஸ் ஒன்றில் அவர், தலா 42.292 ஓட்டங்களைப் பெறுகிறார். போட்டியொன்றில் அவர், சராசரியாக 1.822 இனிங்ஸ்களில் (சில நேரங்களில் இனிங்ஸ் வெற்றி, சில நேரங்களில் மழையால் பாதிப்பு என, ஒரு போட்டியில் 2 இனிங்ஸ்களிலும் துடுப்பெடுத்தாட முடியாது) துடுப்பெடுத்தாடுகிறார்.

இதன்படி, இனிங்ஸொன்றில் அவர் பெறும் 42.292 ஓட்டங்களின்படி, இன்னமும் 139 இனிங்ஸ்களில் விளையாட வேண்டியிருக்கும். அவ்வாறு 139 இனிங்ஸ்களில் விளையாடுவதற்கு, 76.295 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும். சராசரியின்படி, அந்தளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட, குக்குக்கு 6.15 ஆண்டுகள் எடுக்கும். தற்போது 31 வயதான குக், அப்போது 37 வயதானவராக இருப்பார். எனவே, கவாஸ்கரின் கருத்தின்படி, சச்சினின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு, குக்குக்கு உள்ளது. ஆனால், அவர் போர்மில் இருப்பது தான், அதற்கு முக்கியமாக உள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/173622/சச-ச-ன-ன-ச-தன-ய-க-க-ம-ற-யட-க-க-ம-ட-ய-ம-கவ-ஸ-கர-#sthash.lzD51Fmq.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.