Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் 10 வருடங்களுக்குள் தீவாக மாற்றமடையும் சாத்தியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் 10 வருடங்களுக்குள் தீவாக மாற்றமடையும் சாத்தியம்

[ Wednesday,1 June 2016, 05:31:41 ]   
_13451165250.jpg

எதிர்வரும் 10 வருடங்களுக்குள் கடல் மட்டம் ஒரு மீற்றர் வரை உயரக்கூடும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் கலாநிதி செனவி ஏபிடவத்த தெரிவித்துள்ளார்.

தனது கருத்துக்கு எதிராக சில கலாநிதிகளும், பேராசிரியர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கடலில் மாற்றங்கள் ஏற்படுவதனை தற்போதே காணக்கூடியதாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று கடந்த காலங்களில் ஏற்பட்ட சூழல் மாற்றங்களால் உஷ்னத்தன்மை, மழை வீழ்ச்சி மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். குடா நாட்டிலுள்ள களப்புக்கள் மற்றும் கடலிலும் இதனை மிக தெளிவாக அவதானிக்க முடியும் என கலாநிதி செனவி ஏபிடவத்த குறிப்பிட்டுள்ளார்.

அதனால் எதிர்வரும் காலங்களில் யாழ். குடா நாட்டின் வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக காணப்படுவதாகவும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.

அதேபோன்று யாழ்ப்பாணம் ஒரு தீவாக மாற்றமடையக்கூடிய சந்தர்ப்பமும் காணப்படுவதாக கலாநிதி குறிப்பிட்டுள்ளார்.

http://ibctamil.com/news/index/24521

  • கருத்துக்கள உறவுகள்

கடல்மட்ட உயர்வு: இந்தியாவுக்குப் பேராபத்து ஐநா அறிக்கை

சனி, 21 மே 2016

1463788809.jpg

ஐநா சுற்றுச்சூழல் மாநாடு கென்யா தலைநகர் நைரோபியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதையடுத்து, ‘சர்வதேச பருவநிலை மாறுபாடு’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை ஐநா வெளியிட்டுள்ளது.

அதில்,"பருவநிலை மாறுபாட்டால் உலக நாடுகள் அனைத்தும் எதிர்காலத்தில் பேரிடர்களைச் சந்திக்கும் என்றபோதிலும், பசிபிக், தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகளே அதிக அளவில் பாதிக்கப்படும். நகரமயமாக்கல், மாசு அதிகரிப்பு, நீர்நிலைகள் அழிப்பு உள்ளிட்ட காரணங்களால் எதிர்வரும் 2050-ம் ஆண்டுவாக்கில் கடல்மட்டம் அபரிமிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்படி கடல்மட்டம் அதிகரித்தால் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சீனா, இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 10 முக்கிய நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இந்தப் பட்டியலில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் கடலோர நகரங்களில் வசிக்கும் சுமார் 10 கோடி பேர் இந்தப் பேராபத்தினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும். சீனாவின் குவாங்சூ, ஷாங்காய், வங்கதேசத்தின் டாக்கா, மியான்மரின் யாங்கூன், தாய்லாந்தின் பாங்காக், வியட்நாமின் ஹாய்ஃபோங் ஆகிய நகரங்களும் கடுமையான ஆபத்தைச் சந்திக்க நேரிடும். கடல்மட்ட உயர்வால் உண்டாகும் பேரிடர் நிகழ்வுகளால் கடும் வறட்சி, எண்ணற்ற உயிரிழப்புகள் ஆகியவை ஏற்படும். இதனைத்தடுக்க, பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டிய பல்வேறு நாடுகளில் கிராமங்களை அழித்து நகரமயமாக்கும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கும்போது மற்ற இடங்களில் காடுகளை வளர்ப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப் போக்குவரத்து வசதி, வீடுகள், மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை குறைந்த விலையில் வழங்குவது போல, கிராமப்பகுதி மக்களுக்கும் இந்த வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போதுதான், நகர்ப்புறங்களை நோக்கி நகராமல் கிராமங்களில் மக்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாறுபாடு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழலில், ஐநா-வின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

 

https://minnambalam.com/k/1463788809

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை இருக்கிற காணியை.... இப்பவே, யாருக்கும் வித்துவிட்டு... மலைநாட்டில், ஒரு காணியை வாங்குவதுதான் நல்லம் போலை கிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.