Jump to content

நானும் என் ஈழமும் - பகுதி 1


Recommended Posts

பதியப்பட்டது

என் வலைப்பூவை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். அதில் நான் எழுதி வரும் ஒரு சிறு அனுபவப்பதிவு..என்னை எழுத தூண்டிய யாழில் பதியும் ஆசையுடன்..

title.jpg

தமிழ்மணத்தில் இணைந்த பின்னர் உங்களில் பலரின் வலைப்பூக்களை பார்த்தேன். அதில் பெரும்பாலனவை அனுபவப்பதிவுகளாகவே இருக்கின்றது. பெரும்பாலும் நான் எழுதுவதும் எனது அனுபவங்களையோ, அல்லது என்னை சுற்றி நடப்பவையாகவே இருக்கும்.

ஈழத்தில் வருடக்கணக்கில் வாழாவிடினும், எனக்கும் பங்கருக்குள் தொடர்ந்து பல நாட்கள் வசித்த அனுபவம் உண்டு. சாவையும், இரத்தத்தையும் நானும் பார்த்திருக்கின்றேன். காயம்பட்டவர்களுடன் ஒரே வாகனத்தில் பயணித்திருக்கின்றேன்.

வெளிநாட்டு மண்ணிலேயெ இருந்த எனக்கு, ஊர் செல்லும் காலம் வந்தால் இருக்கும் மனநிலையை எழுத்தில் எழுத முடியாது. எனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து என் மனது எப்பொழுதும் ஈழத்தை நோக்கியே இருக்கும். விடுமுறை காலம் என்றால் என்னை விட சந்தோசமடைபவர்களை காண முடியாது என்றே சொல்லலாம்.

எத்தனையோ மனிதர்கள், எத்தனையோ சம்பவங்கள், எத்தனையோ இடங்கள்...ஈழத்தில் என்னை கவர்ந்தவர்கள், கவர்ந்தவற்றை சொல்வதெனில் ஒரு புத்தகமே எழுதிவிடலாம். என் அனுபவங்களை எழுதி உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் எனும் பெரு அவாவினால் தான் இந்த ஆரம்பம்.

இங்கு நான் எழுதுவது தமிழீழ புலத்து வாரிசு ஒருத்தியின் (அது நான் தாங்க) அனுபவங்கள், உணர்வுகள் மட்டுமே. இதில் அரசியலோ அல்லது விவாதத்திற்கான எந்தவொரு கருவும் இடம்பெறாது. அதனால் யார் மனதையும் புண்படுத்தமாட்டேன் என்று நினைக்கிறேன். இருப்பினும் நான் எழுத போவது யாரையாவது புண்படுத்தினால், மன்னிக்கவும். என் நோக்கம் அதுவல்ல.

அவசர உலகில் பந்தி பந்தியாக எழுதி உங்களை நோகடிக்கமாட்டேன். சின்ன சின்ன ஞாபக முத்துக்களை அப்பப்போ தூயாவிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

இப்பொழுதே அதிகம் எழுதிவிட்டேன். அதனால் ஒரு பாடலுடன் இத்தொடரை முடிக்க இருக்கின்றேன்.

ஈழத்தில் என்னை மிகவும் கவர்ந்த விடயங்களில் ஒன்று பாடல்கள்..அதிலும் மாவீரர் பாடல்கள் என்றால் எனக்கு உயிர். பல பாடல்கள் எனக்கு மனப்பாடம். என்னை கவர்ந்த ஒரு பாடல் உங்களுக்காக...வரிகளை பொறுமையாக வாசித்து பாருங்கள்..

-----------------------------------------------------------------

மானம் ஒன்றே வாழ்வென கூறி

வழியில் நடந்தான் மாவீரன்

அவன் போன வழியில் புயலென எழுந்து

போரில் வந்தார் புலிவீரர்

(2)

உலகபடைகள் ஒன்றாக வரினும்

உரிமை தன்னை இழப்போமா?

(2)

அந்த நிலமும்,கடலும் சான்றாக

எங்கள் நிலத்தில் ஆட்சி பிடிப்போமா?

(2)

(மானம் ஒன்றே..)

பாயும் புலிகள் வீரத்தை அஞ்சி

பழி கொண்டிறப்பார் பகையாளர்

(2)

எங்கள் தாயின் விலங்கை அறுப்பவர் வாழ

தனியாய் மலரும் தமிழீழம்

(2)

(மானம் ஒன்றே..)

களத்தில் வீழும் வேங்கைகள் மேலாம்

கல்லில் உறைவார் கலையாக

(2)

அவர் உளத்தில் கொண்ட கனவுகள் எல்லாம்

உலகில் நிற்கும் நிலையாக

(2)

(மானம் ஒன்றே)

தாழ்வும் உயர்வும் இணையென சொன்ன

தலைவன் வாய்மை தப்பாது

(2)

நல்ல வாழ்வை இழந்து மருகிய மாந்தர்

மகிழ்ந்தே இருப்பர் எப்போதும்

(2)

(மானம் ஒன்றே)

-------------------------------------------------------------------

வரிகளை படித்தீர்களா? உங்கள் மனதில் தோன்றுபவற்றையும் இங்கே எழுத்தில் விட்டு செல்லுங்களேன்.

தூயா

புலிகளின் (ஈழ தமிழரின்) தாகம் தமிழீழ தாயகம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களை கவர்ந்த பாடல் வரி என்னையும் கவர்கிறது அம்மணி. இப்படி மேலும் தாங்க . வாசிக்க நான் தயார்

Posted

தூயா இந்த பாடல் வரிகளை படிக்கும்போது தமது பொன்னான வாழ்வையும் உறவுகளையும சுகங்களை யாவற்றையும் துறந்த லட்சக்கணக்கான இளம் சகோதரர்களின்..மனோவலிமையும்..வ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடல் மனதை மிகவும் நெருடுகிறது.மானம் வீரம் அதை விட்டு நாமெல்லாம் வெகு தூரம் போய்விட்டோம்.தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பதிவிற்கு நன்றி தூயா.

கனமான உணர்வுகளோடு உங்கள் பதிவுகள் உலாவர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Posted

கறுப்பி, மிக்க நன்றி. அடுத்த பாகம் இன்னும் 2 நிமிடங்களில் போட்டுவிடுவேன்.

வி.கவி, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே..பதிலுக்கு நன்றி

ஈழபிரியேன் & தேவன்,

மிக்க நன்றி. இந்த பாடலை கேட்கும் பொழுது ஏற்படும் உணர்வை வார்த்தையில் சொல்ல முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறது

Posted

தூயா அக்கா முதலில் உங்கள் பாடல் பதிவுக்கு நன்றி எனக்கு மிகவும் பிடித்த பாடல். ம்ம் உங்கள் அனுபவங்களும் நன்றாக உள்ளது தொடருங்கள் அதுவும் மாவீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை மிகவும் போற்றத் தக்கது.

Posted

நன்றி கந்தப்பு & சந்தியா...அடுத்த பாகத்தையும் போட்டு இருக்கேனே..

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.