Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றையாட்சியா- ஒற்றுமையாட்சியா? - குழப்பும் அரசமைப்பு ஆலோசனைக் குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரசியல் சாசன மறுசீரமைப்புக்கான பொது மக்களின் கருத்துக்களை அறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையில் இலங்கை தொடர்ந்தும் ஒற்றையாட்சி நாடாகவே இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிங்களத்தில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரையில் ஒற்றையாட்சி மாற்றப்படாது என உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் தமிழில் ஒற்றுமை என்றும், ஆங்கிலத்தில் Unity என்ற பதமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அரசியல் சாசன மறுசீரமைப்புக்கான பொது மக்களின் கருத்துக்களை அறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையில் இலங்கை தொடர்ந்தும் ஒற்றையாட்சி நாடாகவே இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிங்களத்தில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரையில் ஒற்றையாட்சி மாற்றப்படாது என உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் தமிழில் ஒற்றுமை என்றும், ஆங்கிலத்தில் Unity என்ற பதமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

   

புதிய அரசியல் சாசன மறுசீரமைப்புக்கான பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையில் நியமிக்கப்பட்ட குழு நேற்றுமுன்தினம் மாலை தனது 309 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையை பிரதமரிடம் கையளித்துள்ளது. 20 பேர் அடங்கிய இந்த குழுவிற்கு அரச கட்டமைப்பு தொடர்பில் ஒரு மனதான உடன்பாட்டிற்கு வர முடியாததால் மூன்று வடிவங்களில் பரிந்துரைகளை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும் அரச கட்டமைப்பு தொடர்பில் சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மூன்றிலும் அரச கட்டமைப்பு ஒற்றையாட்சியாகவே இருக்கும் என்று உறுதிப்படத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஒற்றுமை என்றும் ஆங்கில மொழியிலான அறிக்கையில் Unity என்றும் ஒரு பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம் சமஷ்டி அடிப்படையிலான அரச கட்டமைப்பை வலியுறுத்தி வந்த கலாநிதி குமுது குசும் குமூர வட மாகாண எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா மற்றும் கலாநிதி எஸ் விஜேசந்திரன் ஆகியோர் சமஷ்டியிலிருந்து இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக லால் விஜேநாயக்க அறிக்கை கூறுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத்தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு யோசனையொன்றை வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களுக்கு மேலதிகமாக நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முன்மொழிந்துள்ளனர். நாடு பிரிந்துவிடும் என்ற அச்சம் காரணமாக சிங்கள மக்கள் சமஷ்டி ஆட்சி முறைக்கு எதிர்ப்பை வெளியிடுவதற்கு அதிகாரங்கள் தொடர்ந்தும் மத்தியில் குவிந்துள்ள நிலமையே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் இந்த அறிக்கையில் ஒன்பது யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இரண்டு மாகாணங்கள் அல்லது அதற்கு மேலதிகமான மாகாணங்களை இணைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் எந்தவொரு மாகாணமும் அரசியல் ரீதியாகவோ அல்லது நிர்வாக ரீதியாகவோ இணைவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் வாழும் முஸ்லீம் சமூகத்திற்கும் மத்திய பிரதேசத்தில் வாழும் தமிழர்களுக்கும் உள்ளக சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் அலகுகளை ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இனம் மொழி மதம் மற்றும் இனக் குழுமங்களை அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்தை பகிர்வதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள லால் விஜேநாயக்க அறிக்கை தர்க்க அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்களின் போது அலகுகளின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் யோசனை முன்வைத்துள்ளது.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுளு்ள போதிலும் ஜனாதிபதியே அரசின் பெயரளவிலான தலைவராக இருக்க வேண்டும் என்ற முன்மொழிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஜனாதிபதியே முப்படைகளின் கட்டளைத் தளபதியாகவும் இருப்பார் என்றும் ஜனாதிபதியை மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர மேலும் 22 பரிந்துரைகள் இந்தக் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ளன.

http://www.seithy.com/breifNews.php?newsID=158692&category=TamilNews&language=tamil

சிங்கள பௌத்த இனவெறி அரசாங்கத்தால் சிங்கள இனவாதிகளைக் கொண்டு (கண்துடைப்புக்கு ஓரிரு தமிழர்களையும் உள்ளடக்கி) அமைக்கப்படும் அத்தனை குழுக்களும், ஆணைக்குழுக்களும், விசாரணைக் குழுக்களும், குறிப்பிட்ட சில நோக்கங்களுடன் தான் அமைக்கப்படுகின்றன. அவற்றில் சில:
(1) உலகையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவது
(2) குற்றம் செய்த சிங்கள பௌத்த குற்றவாளிகளை காப்பாற்றுவது
(3) காலத்தை இழுத்தடித்து தமிழினப் படுகொலைகளை , தமிழினஅழிப்புக்களை மெதுவாக கொண்டு செல்வது
(4) முடிந்தளவு காலத்தை இழுத்தடித்த பின் ஏற்கனவே தீர்மானம் செய்திருந்த முடிவுகளை அறிக்கைகளாக வெளியிடுவது
(5) முடிவில் அறிக்கைகளை குப்பையில் போடுவது  

ஏமாந்த தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இதுபோன்ற கண்துடைப்புக் குழுக்கள், ஆணைக்குழுக்கள், விசாரணைக் குழுக்கள் சிங்கள பௌத்த இனவெறி அரசுகளால் அமைக்கப்பட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.