Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை ஆரம்பிக்கிறது முக்கோணத் தொடர்

Featured Replies

நாளை ஆரம்பிக்கிறது முக்கோணத் தொடர்
 

article_1464866250-TamilsrwaTriseries.jpமேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகள் பங்குபற்றும் முக்கோணச் சுற்றுத் தொடர் நாளை வெள்ளிக்கிழமை (03) ஆரம்பிக்கிறது.

இலங்கை நேரப்படி இரவு 10.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியில், தொடரை நடாத்தும் நாடான மேற்கிந்தியத் தீவுகளை தென்னாபிரிக்கா கயானாவில் எதிர்கொள்கின்றது.

இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் பகலிரவுப் போட்டிகளாகவே இடம்பெறவுள்ளதுடன், இறுதிப் போட்டியானது பார்படோஸில், ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெறவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் குழாமில், அவ்வணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, அன்றே ரஸல், டரன் சமி ஆகியோர் இடம்பெறாத நிலையில், சுனில் நரைன், பொலார்ட் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்ற நிலையில், அவர்கள் சிறந்த பெறுபேறை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தம் காணப்படுகிறது.

மறுகணத்தில், தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயினுக்கு இத்தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவ்வணியின் பந்துவீச்சு வரிசை எவ்வாறு செயற்படப் போகின்றது என்றும் உலக இருபதுக்கு-20-இல் அவ்வணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்காத நிலையில், சிறந்த துடுப்பாட்ட பெறுபேறை வழங்கவேண்டிய அழுத்தமும் அவ்வணிக்கு காணப்படுகின்றது.

- See more at: http://www.tamilmirror.lk/173714/ந-ள-ஆரம-ப-க-க-றத-ம-க-க-ணத-த-டர-#sthash.McUT5Qgg.dpuf
1 hour ago, நவீனன் said:

நாளை ஆரம்பிக்கிறது முக்கோணத் தொடர்

இதுக்கெல்லாம் போட்டி வைக்கமாட்டீங்களா நவீனன். :grin:

  • தொடங்கியவர்
15 hours ago, ஜீவன் சிவா said:

இதுக்கெல்லாம் போட்டி வைக்கமாட்டீங்களா நவீனன். :grin:

முதல் இப்ப இந்த போட்டிக்கு பதிலை தாங்கோ..:grin: பிறகு பார்ப்பம்..:unsure:

 

  • தொடங்கியவர்

சுனில் நரைன் சுழல், பொலார்ட் அதிரடியில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா

 

 
narine_2881270f.jpg
 

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மே.இ.தீவுகள் அணி, தென் ஆப்பிரிக்க அணியை அபாரமாக வீழ்த்தி வெற்றித் தொடக்கம் கண்டுள்ளது.

முதல் முறையாக மே.இ.தீவுகளில் முழுதும் பகலிரவு ஆட்டங்களாகவே நடைபெறும் இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் விளையாடுகின்றன.

நேற்று கயானாவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ், ஸ்பின் சாதக ஆடுகளத்தில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சுனில் நரைன் தனது சர்வதேச கிரிக்கெட் ‘ரிடர்னில்’ அசாத்தியமாக வீசினார். 9.5 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். மே.இ.தீவுகள் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஸ்பின்னர் ஒருவரின் மிகச்சிறந்த பந்துவீச்சு இது என்ற சாதனைக்கு நரைன் சொந்தக்காரர் ஆக தென் ஆப்பிரிக்க அணி 46.5 ஓவர்களில் 188 ரன்களுக்குச் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 25.3 ஓவர்களில் 76/4 என்று சற்றே தடுமாறிய போது கெய்ரன் பொலார்ட் இறங்கினார் சடுதியில் 6 சிக்சர்களை வெளுத்துக் கட்டினார் 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் என்று மே.இ.தீவுகள் அபார வெற்றி பெற்றது. கெய்ரன் பொலார்ட் 67 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழந்தார்.

சுனில் நரைன் தேர்வு செய்யப்பட்டதை கிறிஸ் கெயில், டேரன் சமி, டிவைன் பிராவோ ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அவரோ தன்னை அணியில் தேர்வு செய்ததை நேற்று நிரூபித்தார். பந்துகள் ஆஃப் ஸ்பின்னில் மைல்கணக்கில் திரும்பின. திடீரென தூஸ்ராவையும் அவர் வீச தென் ஆப்பிரிக்க அணியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தென் ஆப்பிரிக்க அணி டி காக் மற்றும் ஆம்லா மூலம் 9.5 ஓவர்களில் 52 ரன்கள் என்ற ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தைக் கண்டன. டி காக் வழக்கம் போல் அருமையான கவர் டிரைவ், ஆன் டிரைவ்கள் மூலம் 6 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது பிராத்வெய்ட் பந்தை புல் ஷாட் ஆட முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். இது ஒருவிதத்தில் திருப்புமுனையானது.

ஹஷிம் ஆம்லா 26 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து நரைனின் ஸ்பின்னுக்கு எல்.பி.ஆகி வெளியேறினார். ரைலி ருசோவ், டிவில்லியர்ஸ் இணைந்தனர், ரன் வருவது கடினமானது, பவுண்டரிகள் வரும் இடைவெளியும் அதிகமானது. டிவில்லியர்ஸ் கூட 49 பந்துகளில் பவுண்டரி எதுவும் அடிக்க முடியாமல் 31 ரன்களை எடுத்து டெய்லரின் வேகம் குறைந்த பந்துக்கு அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் என்றால் பந்துவீச்சு பற்றி நாம் புரிந்துகொள்ள முடிகிறது. டிவில்லியர்ஸ், ருசோவ் 20 ஓவர்களில் 78 ரன்களையே சேர்க்க முடிந்தது. ருசோவ் மிகவும் எச்சரிக்கையுடன் ஆடி 83 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்ததே தென் ஆப்பிரிக்கா ஓரளவுக்கு மீண்டதற்குக் காரணமாக அமைந்தது. ருசோவையும் நரைன் காலி செய்தார்.

மிக அருமையான பந்து அது, முரளிதரன் பந்து போல் லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆகி கடுமையாக திரும்பி ருசோவின் மட்டை விளிம்பைத் தட்டிச் சென்று ஸ்லிப்பில் பிராத்வெய்ட்டிடம் கேட்ச் ஆனது. ஸ்லிப் நிறுத்தி வீசியது நரைனின் ஆக்ரோஷ அணுகுமுறைக்குச் சான்று. அதே ஓவரில் பெஹார்டீன், நரைனின் தூஸ்ராவுக்கு ஏமாந்தார், ரன் எடுக்காமல் அவுட் ஆனார். ஐபிஎல் புகழ் கிறிஸ் மோரிஸும் நரைனுக்கு இலக்கானார். கடைசியில் இம்ரான் தாஹிர் எல்.பி.தீர்ப்பு நாட் அவுட், ஆனால் சுனில் நரைன் தனது 6-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். 130/2 என்ற நிலையிலிருந்து தென் ஆப்பிரிக்கா 188 ரன்களுக்குச் சுருண்டது. குறிப்பாக கடைசி 7 விக்கெட்டுகளை 28 ரன்களுக்கு பறிகொடுத்தது.

பொலார்ட் அதிரடியில் வெற்றி!

பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவை மட்டுப்படுத்திய பிறகு பேட்டிங்கில் வெஸ்ட் இண்டீஸ் தனது அனாயாச பாணியில் தொடங்கியது. தொடக்க வீரர் சார்லஸ் 3 எட்ஜ் பவுண்டரிகளை முதல் 2 ஓவர்களில் அடித்தார். ஆனால் கவலைப்படவில்லை, இதில் ஒன்று டி காக் கிளவ்வில் பட்டுச் சென்றது. மேலும் ரபாதாவின் அருமையான யார்க்கரை சார்லஸ் பூட்ஸில் வாங்கினார், அது பிளம்ப் எல்.பி. நடுவர் நாட் அவுட் என்றார். ரிவியூ இருந்தும் டிவில்லியர்ஸ் தவறாக ரிவியூ வேண்டாம் என்று முடிவெடுத்தார்.

அதன் பிறகு எச்சரிக்கை மணி அடிக்கப்பட சார்லஸ், பிளெட்சர் நிதானம் காட்டி 11 ஒவர்களில் 37 ரன்களைச் சேர்த்தனர். வழக்கம் போல் தென் ஆப்பிரிக்க அணிக்கு இம்ரான் தாஹிர்தான் தனது கூக்ளியினால் விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தார். பிளெட்சர் தடுப்பு மட்டையைத் தாண்டி உள்ளே புகுந்த தாஹிர் கூக்ளி ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது. 31 ரன்கள் எடுத்த அபாய வீரர் சார்லஸும் தாஹிரின் பந்தை மேலேறி வந்து ஆட முயன்று கூக்ளியில் பவுல்டு ஆனார். ஆனால் சார்லஸ் அடித்த ஒரு புல்ஷாட் புதிதாக இருந்தது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்தை சாதாரணமாக கட் ஷாட் ஆட முயன்று பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொள்வதுதான் பேட்ஸ்மென்களின் வழக்கம், ஆனால் அளவு குறைவாக ஆனால் உயரம் குறைவாக வந்த பந்தை ஒரு விதமான பிளிக்-புல் கலந்த ஒரு ஷாட்டை ஆடினார் பந்து பவுண்டரிக்குப் பறந்தது.

சார்லஸ், பிளெட்சர் ஆட்டமிழக்க, மே.இ.தீவுகளின் நம்பிக்கை நட்சத்திரம் சாமுவேல்ஸ் 1 ரன்னில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பங்கீஸோவின் நேர் பந்துக்கு எல்.பி.ஆகி வெளியேறினார். அந்த பந்துக்கு முன்னமேயே காலைத்தூக்கி குறுக்கே போட்டார் பந்து திரும்பவில்லை. நேராக கால்காப்பைத் தாக்கியது. தினேஷ் ராம்தின் 10 ரன்களில் டுமினியிடம் ஆட்டமிழக்க 26-வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 76/4 என்று லேசாக ஆட்டம் கண்டது.

டேரன் பிராவோ ஒரு முனையில் நிதானம் காட்ட கெய்ரன் பொலார்ட் இணைந்தார். ஆனால் உடனேயே கைல் அபாட், ரபாதாவை கொண்டு வந்து பொலார்டை காலி செய்திருக்க வேண்டும், டிவில்லியர்ஸ் கேப்டன்சியில் தப்புக் கணக்குப் போட்டார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம் காட்டிய பொலார்டுக்கு ஸ்பின்னை நம்பினார், டுமினியிடம் கொடுக்க முதல் சிக்சை அடித்தார் பொலார்ட், பிறகு எதிர்முனையில் பங்கீசோவை அழைக்க அவரை 2 சிக்சர்கள் அடித்தார் பொலார்ட் ஒன்று நேர் பவுண்டரியில் ஆன் திசையில் மைதானத்திலிருந்து காணாமல் போனது, அடுத்த சிக்ஸ் மேலும் துல்லியமானது நேராக ஆஃப் திசையில் சிக்ஸ்.

இவர் அடிக்க ஆரம்பித்தவுடன் டேரன் பிராவோவும் 2 பவுண்டரிகளை அடித்தார். ஒன்று இம்ரான் தாஹிரை தரையோடு தரையாக அடித்த நேர் பவுண்டரி, ‘லாரா டச்’. 5-வது விக்கெட்டுக்காக இருவரும் 74 ரன்களைச் சேர்க்க, தென் ஆப்பிரிக்காவின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது.

பங்கீஸோ, தனது நல்ல பந்து வீச்சின் மூலம் பிராவோ, பிராத்வெய்ட் ஆகியோரை வீழ்த்தி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் அவரது முயற்சி விரயமானது. ஒரு வேளை டேல் ஸ்டெய்னுக்கு ஓய்வளிக்காமல் இருந்திருக்கலாம் என்று தென் ஆப்பிரிக்கா யோசிக்க வாய்ப்பிருக்கிறது. அவருக்கு ஓய்வு எனும் அதே வேளையில் அவரோ நாட்வெட்ஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் வெள்ளியன்று 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆட்ட நாயகனாக மிகச்சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்திய சுனில் நரைன் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/சுனில்-நரைன்-சுழல்-பொலார்ட்-அதிரடியில்-வீழ்ந்தது-தென்-ஆப்பிரிக்கா/article8690334.ece

  • தொடங்கியவர்
West Indies 70/5 (16.2 ov)
Australia
Australia won the toss and elected to field
  • தொடங்கியவர்
மே.இ.தீவுகள்  116 (32.3 ov)
அவுஸ்திரேலியா 20/0 (3.4 ov)

244611.jpg

  • தொடங்கியவர்

வோர்னர் அதிரடி மேற்கிந்திய தீவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா 

 

முக்கோணத் தொடரின் நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான முக்கோணத்தொடரின் நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின.

Warner.jpg
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
மேற்கிந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சார்லஸ் 22 ஓட்டங்களையும் பிராத்வேட் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரெலிய அணி சார்பாக லையோன் மற்றும் சாம்பா  தலா 3 விக்கட்டுக்களை பை்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியினர் 25.4 பந்து ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியை பெற்றுக்கொண்டனர்.
இதில் அவுஸ்திரேலிய அணி சார்பாக வோர்னர் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் ஸ்மித் 27 ஓட்டங்களையும் பெற்றக்கொண்டனர்.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலியாவின் லையோன் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை இந்த வெற்றியின் மூலம் மேலதிக  ஒரு புள்ளியுடன் சேர்த்து 5 புள்ளிகளுடன்  அவுஸ்திரேலிய அணி முதலிடத்திலும் மேற்கிந்திய தீவுகள் 4 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும் தென்னாபிரிக்க அணி எவ்வித புள்ளிகளுமின்றி 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/7214

  • தொடங்கியவர்

போனஸ் புள்ளியுடன் ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

 
படம்: ஏஎஃப்பி
படம்: ஏஎஃப்பி

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றுள்ளது.

கயானா பிட்ச் ஸ்பின்னுக்குச் சாதகமாக இருப்பதால் தாஹிர், பேங்கிஸோ, ஷம்சி ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து பிஹார்டியனின் அபாரமான 62 ரன்களால் 112/6 என்ற நிலையிலிருந்து 189 ரன்களுக்கு உயர்ந்தது. பிஹார்டியனின் இந்த இன்னிங்ஸ்தான் தென் ஆப்பிரிக்க அணியின் நேற்றைய வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 34.2 ஓவர்களில் 142 ரன்களுக்குச் சுருண்டது. ரபாதா 7 ஓவர்களில் 13 ரன்களுக்கு 3 விக்கெடுகளைச் சாய்த்தார்.

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களில் மிகவும் அச்சுறுத்தியவர் சைனமன் பவுலர் தாப்ரைஸ் ஷம்சி ஆவார். இது இவரது அறிமுக போட்டி. ஆனால் மிகவும் அபாயகரமான ஒரு பவுலர் இவர் என்பது நேற்று தெரியவந்தது. ஒவ்வொரு பந்துமே விக்கெட் வீழ்த்தும் அச்சுறுத்தலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. அவர் 8 ஓவர்களில் 36 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்தார் என்ற ஸ்கோர் விவரம் நிச்சயம் அவரது பந்து வீச்சுத் திறமைக்கு நியாயம் செய்வதாகாது.

மேலும் நடுவர் தீர்ப்புகளும் விளையாடிவிட்டன. ஆஸ்திரேலியாவில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்த ஏரோன் பிஞ்ச் (72), மற்றும் மேத்யூ வேட் விக்கெட்டுகளை ஷம்சி கைப்பற்றியிருக்க வேண்டும், இரண்டு எல்.பி.முறையீடுகளையும் நடுவர் தவறாக நிராகரித்தார், இரண்டுமே அவுட்.

ஆனால் ஷம்சி வருவதற்கு முன்னரே வெய்ன் பார்னெல் மிக முக்கியமான விக்கெட்டை தனது முதல் ஓவரிலேயே வீழ்த்தினார், இதுதான் திருப்பு முனை, கிட்டத்தட்ட ஜூலை 2015-க்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்துள்ள இடது கை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெல், அபாய வீரர் டேவிட் வார்னரை 1 ரன்னிற்கு எல்.பி. செய்து வெளியேற்றினார். பிறகு இவர் மீண்டும் 8-வது ஓவரில் கேப்டன் ஸ்மித் (8) விக்கெட்டை எல்.பி.மூலம் வீழ்த்தினார்.

ஆனால் இதற்கிடையே நல்ல பார்மில் இருக்கும் உஸ்மான் கவாஜாவை 2 ரன்களில் ரபாதா அருமையான பந்தின் மூலம் பவுல்டு செய்தார். நல்ல வேகத்தில் கவாஜா பீட் ஆனார். ஷம்சியின் முதல் விக்கெட்டானா கிளென் மேக்ஸ்வெல் மிட்செல் மார்ஷ் (8), இம்ரான் தாஹிர் பந்தை கட் செய்ய கேட்ச் கொடுத்து வெளியேறினார். 17-வது ஓவரில் 72/5 என்று ஆஸ்திரேலியா திணறியது.

ஏரோன் பிஞ்ச் மட்டுமே ஒருமுனையில் இருந்தார் அவர் 58 பந்துகளில் தனது அரைசதத்தை எடுத்தார். பிறகு டிவில்லியர்ஸ் பிடியை விட்டுக் கொடுக்காமல் ரபாதாவை பந்து வீச அழைத்தார். மேத்யூ வேட், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, கூல்ட்டர் நைலை இன்ஸ்விங்கிங் யார்க்கரில் பவுல்டு செய்தார் ரபாதா, ஆஸ்திரேலியா 85/7. ஆடம் சாம்பாவை இம்ரான் தாஹிர் வீழ்த்த 90/8. அதன் பிறகு நேதன் லயன் 31 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து கடைசியில் பாங்கிசோவிடம் எல்.பி. ஆனார். முன்னதாக ஏரோன் பிஞ்ச் 103 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 72 ரன்களெடுத்து 9-வது விக்கெட்டாக பேங்கிசோவிடம் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா 142 ரன்களுக்குச் சுருண்டது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாதா 3 விக்கெட்டுகளையும் பார்னெல், தாஹிர், பேங்கிசோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முன்னதாக ஸ்பின் பிட்சில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், கூல்டர் நைல் எப்படி வீச வேண்டும் என்று கற்றுக் கொடுப்பது போல் வீசினர். ஸ்டம்புக்கு வீசினர் லேசாக ஸ்விங் ஆனது. குவிண்டன் டி காக் (18) விக்கெட்டை ஹேசில்வுட் எல்.பியில் வீழ்த்தினார். டிவில்லியர்ஸ் (22), டுமினி (13) ஆகியோரை இரு எதிரெதிர் பந்துகளில் பவுல்டு செய்தார் கூல்டர் நைல். முதல் 25 ஓவர்களில் டாப் 5 பெவிலியன் திரும்ப, ஃபர்ஹான் பிஹார்டியனின் அபார ஆட்டம் கைகொடுத்தது. இவர் பேங்கிசோ, ரபாதா ஆகியோருடன் இணைந்து முறையே 37 மற்றும் 39 ரன்கள் கூட்டணி அமைத்தார். முன்னதாக ஆம்லாவும், டிவில்லியர்ஸும் இணைந்து சேர்த்த 40 ரன்கள்தான் இந்தப் போட்டியில் அதிகபட்ச கூட்டணி ரன்களாகும். ஆட்ட நாயகனாக பிஹார்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணியில் 8 வீரர்கள் வெள்ளையரல்லாதாரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/போனஸ்-புள்ளியுடன்-ஆஸியை-வீழ்த்தியது-தென்-ஆப்பிரிக்கா/article8704013.ece

  • கருத்துக்கள உறவுகள்
201606081033001117_South-Africa-beats-Au
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. 
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும்.

நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா திணறியது. 112 ரன்னுக்கு 6 விக்கெட்டை (28.2) இழந்தது.பெஹர்தின் ஆட்டத்தால் 150 ரன்னை கடந்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 189 ரன்னே எடுத்தது. பெஹர்தின் 62 ரன் எடுத்தார்.

எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா சரிவை சந்தித்தது. தென் ஆப்பிரிக்காவில் அபாரமான பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியவாறு இருந்தனர். தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் மட்டுமே நிலைத்து நின்றார்.

அந்த அணி 22.5 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 90 ரன் எடுத்து இருந்தது. 9-வது விக்கெட்டாக ஆரோன் பிஞ்ச் (72 ரன்) அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 34.2 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3 அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளன. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் போனஸ் புள்ளியை சேர்த்து 5 புள்ளியுடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளன.

http://www.dailythanthi.com/News/Cricket/2016/06/08103302/South-Africa-beats-Australia-after-huge-Tri-Series.vpf

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
முத்தரப்பு கிரிக்கெட்:ஆஸி 36 ரன்னில் வெற்றி
 
 
Tamil_News_large_154096420160612071010_3
 

செயின்ட்கிட்ஸ்: வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா-தென்னாப்ரிக்கா அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் சேர்த்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் சதமடித்து(109 ரன்) அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் 36 ரன்னில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணிவீரர்கள் அதிகபட்சமாக டூபிளசிஸ் 63 ரன்களும் ஆம்லா 60 ரன்னும் டிவிலியர்ஸ் 39 ரன்னும் டுமினி 41 ரன்களும் எடுத்தனர். ஆஸி தரப்பில் மிச்சல் ஸ்டார்க் , ஹஷில்வுட் மற்றும் ஷம்பா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பட்டியலில் 3ல் 2ல் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1540964

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்தது மே.தீவுகள்
 
 

article_1465897511-TamilausthowestTri-Seமேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிர்ச்சி வெற்றிபெற்றது.

சென். கிற்ஸில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது ஓட்டத்துக்கே முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி சார்பாக, இரண்டாவது விக்கெட்டுக்காக 170 ஓட்டங்கள் பகிரப்பட்டன. ஆனால், பின்வரிசை வீரர்களால் அதிரடியான ஆட்டத்தை வழங்க முடியாது போனது.

துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா 98 (123), ஸ்டீவன் ஸ்மித் 74 (95), ஜோர்ஜ் பெய்லி 55 (56) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜேஸன் ஹோல்டர், கிறெய்க் பிறெத்வெய்ட், கெரான் பொலார்ட் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

266 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 45.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டுக்காக 74 ஓட்டங்கள் பகிரப்பட்டதோடு, சீரான இணைப்பாட்டங்கள் பகிரப்பட்டதால், அவ்வணி வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் மார்லன் சாமுவேல்ஸ் 92 (116), ஜோன்சன் சார்ள்ஸ் 48 (38), டெரன் பிராவோ 39 (63), டினேஷ் ராம்டின் 29 (38) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அடம் ஸாம்பா, நேதன் கூல்ட்டர்நைல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, மார்லன் சாமுவேல்ஸ் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/174670/அவ-ஸ-த-ர-ல-ய-வ-க-க-அத-ர-ச-ச-யள-த-தத-ம-த-வ-கள-#sthash.oDVH86iA.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முத்தரப்ப ஒருநாள் போட்டி: இம்ரான் தாஹிர் சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி

Date: 2016-06-16@ 06:20:23
Daily_News_1529766321183.jpg

செயின்ட் கிட்ஸ்: முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் 139 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா அணி அபாரமாக வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 343 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக அம்லா 110, டு பிளிஸ்சிஸ், 73 டி காக் 71 ரன்கள் எடுத்தனர்

இதனையடுத்து 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணி 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சார்லஸ் 49, சாமுவேல்ஸ் 24 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்ரிக்கா அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த முத்தரப்பு போட்டியில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா அணிகள் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=224539

  • தொடங்கியவர்

சாமுவேல்ஸ் சதம் வீண்: முத்தரப்பு இறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா

 

 
மே.இ.தீவுகளுக்கு எதிரான முக்கிய வெற்றியைக் கொண்டாடும் மார்ஷ், மேக்ஸ்வெல். | படம்: ஏ.எஃப்.பி.
மே.இ.தீவுகளுக்கு எதிரான முக்கிய வெற்றியைக் கொண்டாடும் மார்ஷ், மேக்ஸ்வெல். | படம்: ஏ.எஃப்.பி.

மே.இ.தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மே.இ.தீவுகள் அணியை ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா 12 புள்ளிகளுடனும் மே.இ.தீவுகள் 8 புள்ளிகளுடனும் மற்றொரு ஆட்டத்தில் மோத வேண்டியுள்ளது. இதில் மே.இ.தீவுகள் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற வேண்டும் அல்லது சாதாரண வெற்றி பெற்றால் ரன் விகிதம் அடிப்படையில் இறுதிக்குள் நுழைய வேண்டும். எனவே மே.இ.தீவுகள் தங்களது கடைசி லீக் போட்டியில் அசாதாரணமாக விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

டாஸ் வென்ற ஸ்டீவ் ஸ்மித் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைக்க அந்த அணி சார்லஸ், பிளெட்சர், டேரன் பிராவோ ஆகியோரை சொற்ப ரன்களுக்கு ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோரிடம் இழக்க 8.1 ஓவர்களில் 31/3 என்று தடுமாறியது. அதன் பிறகு மர்லன் சாமுவேல்ஸ் (125), தினேஷ் ராம்தின் (91) ஆகியோரது 34 ஓவர் 192 ரன்கள் பார்ட்னர்ஷிப்பினால் 50 ஓவர்களில் 282/8 என்ற நிலைக்கு உயர்ந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஸ்மித், மிட்செல் மார்ஷ் அரைசதங்களுடன் கிளென் மேக்ஸ்வெல் அதிரடி பினிஷிங்குடன் 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.

தொடக்கத்தில் பிட்சின் உதவியுடன் மிட்செல் ஸ்டார்க் நல்ல வேகத்துடன் பந்துகளை உயரம் எழுப்பி சார்லஸ், பிளெட்ச்சருக்கு அதிக தொல்லைகள் கொடுத்தார். கடுமையான ஸ்லெட்ஜிங்குக்குப் பிறகு அவர் சொற்ப ரன்களில் சார்லஸ், பிளெட்சர் ஆகியோரை வீழ்த்தினார். இரண்டுமே அருமையான பந்து. ஹேசில்வுட்டுக்கும் பந்து எழும்பியது, அப்படிப்பட்ட பந்தில்தான் டேரன் பிராவோ 15 ரன்களில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மித்தின் அருமையான கேட்ச் ஆகும் இது.

அதன் பிறகு சாமுவேல்ஸ், ராம்தின் இணைந்தனர், நிதானமாக ஆடியதால் பவுண்டரி வரவேயில்லை, 7 ஓவர்கள் பவுண்டரி வறட்சிக்குப் பிறகு 20-வது ஓவரில் 64/3 என்ற நிலையில் போலண்ட், மார்ஷை சாமுவேல்ஸ் கவனித்தார். 2 ஓவர்களில் 27 ரன்கள் வந்தது.

பிட்ச் கொஞ்சம் மெதுவாக ஸ்மித் ஸ்பின்னரை நம்பாததால் சாமுவேல்ஸ் ஆட்டம் சூடு பிடித்தது. ஆனால் 65 ரன்களில் மேத்யூ வேட், சாமுவேல்ஸுக்கு கேட்ச் ஒன்றை நழுவ விட்டார். முன்னதாக 8 பவுண்டரி 1 சிக்சருடன் சாமுவேல்ஸ் தனது அரைசதத்தை எடுத்தார். பின்ச், மேக்ஸ்வெல் 5 ஓவர்கள் வீசி 26 ரன்களை கொடுத்தனர், ஆனால் விக்கெட் விழவில்லை. சாமுவேல்ஸ், தினேஷ் ராம்தின் நன்றாக செட்டில் ஆயினர். ராம்தின் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 69 பந்துகளில் அரைசதம் கண்டார். சாமுவேல்ஸ் பிறகு 123 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் சதம் எடுத்தார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் சதமாகும் இது. 40.2 ஓவர்களில் 200 ரன்களை எட்டிய மே.இ.தீவுகள் 46.4 ஓவர்களில் 250 ரன்களை எட்டியது, ராம்தின் 92 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 91 எடுத்து ஸ்டார்கிடம் பவுல்டு ஆனார். 50வது ஓவரின் கடைசி பந்தில் சாமுவேல்ஸ் 125 ரன்களில் ஆட்டமிழந்தார், மே.இ.தீவுகள் 282 ரன்கள் எடுத்தது.

உஸ்மான் கவாஜா, பிஞ்ச் மூலம் 27 பந்துகளில் 35 ரன்கள் தொடக்கம் கண்ட ஆஸ்திரேலியா இருவரையும் அடுத்தடுத்து இழந்தது. ஸ்மித், பெய்லி இணைந்து 13 ஓவர்களில் 64 ரன்களைச் சேர்த்தனர், பெய்லி 34 ரன்களில் பென்னிடம் அவுட் ஆனார்.

பிறகு ஸ்மித், மிட்செல் மார்ஷ் இணைந்தனர் இருவரும் ஸ்கோரை 42-வது ஓவரில் 221 ரன்களுக்கு உயர்த்தினர், ஸ்மித் 78 ரன்களில் ரன் அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் சுனில் நரைனை ரிவர்ஸ் ஸ்வீப் சிக்சுடன் அதிரடி காண்பித்து 26 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ மிட்செல் மார்ஷ் 79 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழந்தார். 48.4 ஓவர்களில் 283/4 என்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஆட்ட நாயகனாக சாமுவேல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/சாமுவேல்ஸ்-சதம்-வீண்-முத்தரப்பு-இறுதியில்-நுழைந்தது-ஆஸ்திரேலியா/article8760303.ece

  • தொடங்கியவர்

டேரன் பிராவோ அபார சதம்; தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றியது மே.இ.தீவுகள்

 

 
  • 21/4 என்று தடுமாறிய அணியை சதத்தின் மூலம் வெற்றி பெறச் செய்த டேரன் பிராவோ. | படம்: ஏ.எஃப்.பி.
    21/4 என்று தடுமாறிய அணியை சதத்தின் மூலம் வெற்றி பெறச் செய்த டேரன் பிராவோ. | படம்: ஏ.எஃப்.பி.
  • படம்: ஏ.எஃப்.பி.
    படம்: ஏ.எஃப்.பி.

தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் ஒரு முறை தனது ‘சோக்கர்ஸ்’ என்ற அடையாளத்தை உறுதி செய்தது. மே.இ.தீவுகளுக்கு எதிராக தோல்வியடைந்து இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை நழுவவிட்டது.

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முத்தரப்ப்பு ஒருநாள் தொடர் கடைசி லீக் போட்டியில் போனஸ் புள்ளிகளுடன் வெற்றி பெற்று மே.இ.தீவுகள் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் சந்திக்கிறது.

டாஸ் வென்ற டிவில்லியர்ஸ் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்தார், ஆனால் ரபாதாவின் மிக அருமையான தொடக்க யார்க்கர் பந்து வீச்சில் மே.இ.தீவுகள் 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்களை எடுத்து தடுமாறியது அந்த நிலையிலிருந்து ஜோடி சேர்ந்த டேரன் பிராவோ (102), கெய்ரன் பொலார்ட் (62) ஆகியோர் கொண்டு செல்ல, ஜேசன் ஹோல்டர் (40) பிராத்வெய்ட் (33) ஆகியோர் நன்றாக ஆடி அணியின் ஸ்கோரை 285 ரன்களுக்கு உயர்த்தினர்.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 46 ஓவர்களில் 185 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 12 புள்ளிகளில் இருந்த தென் ஆப்பிரிக்கா போனஸ் புள்ளியுடன் மே.இ.தீவுகள் வெற்றி பெற அனுமதித்ததால் வெளியேறியது. 8 புள்ளிகளில் இருந்த மே.இ.தீவுகள் 13 புள்ளிகளுடன் இறுதிக்கு முன்னேறியது.

5-வது விக்கெட்டுக்காக பிராவோ, பொலார்ட் இணைந்து 156 ரன்களைச் சேர்த்தது ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்தியது. ஆந்த்ரே பிளெட்சரை வெய்ன் பார்னெல் விக்கெட் கீப்பர் கேட்சில் வீழ்த்திய பிறகு ரபாதா புகுந்தார். சார்லஸை ஒரு அபாரமான எழும்பிய அவுட் ஸ்விங்கரில் ஸ்லிப் கேட்சில் வீழ்த்திய ரபாதா அடுத்த பந்திலேயே அபாய வீரர் மர்லன் சாமுவேல்ஸுக்கு ஒரு விளையாட முடியாத யார்க்கரை வீசி பவுல்டு செய்தார், அதாவது பந்தை பார்க்கும் முன்னரே என்ன ஆனது என்று சாமுவேல்ஸுக்குத் தெரியவில்லை, நேராக பந்தை ஆஃப் ஸ்டம்பின் அடிப்பகுதியில் வீசியது போன்ற ஒரு யார்க்கர், விளையாடவே முடியாத யார்க்கர். ஹாட்ரிக் வாய்ப்பு பந்தை வெளியே வீசினார் ரபாதா.

ஆனால் அவரது அடுத்த ஓவரில் பவுன்சர் ஒன்றை வீசி தினேஷ் ராம்தின் தோள்பட்டையைப் பதம் பார்த்த ரபாதா, அடுத்த பந்தை ஃபுல் லெந்தில் அதாவது முக்கால் யார்க்கர் கால் ஓவர்பிட்ச் லெந்தில் வீச பிளிக் செய்ய முயன்று ராம்தின் பவுல்டு ஆனார். இம்முறை மிடில் ஸ்டம்ப் படுத்தது.

இந்நிலையில் டேரன் பிராவோ, கெய்ரன் பொலார்ட் ஒன்று சேர்ந்தனர், வெய்ன் பார்னெல், பொலார்டை எல்.பி. செய்யுமாறு வீசினார், பலனளிக்கவில்லை. ஆனால் 11 ரன்களில் இருந்த டேரன் பிராவோ மோர்னி மோர்கெல் பந்தை டாப் எட்ஜ் செய்ய பந்தை பிடிக்கும் முயற்சியில் சிக்ஸுக்கு தட்டி விட்டார் பார்னெல். உடனடியாக மழை வர 20 நிமிடம் இடைவேளை கிடைத்தது, இது தென் ஆப்பிரிக்காவின் உத்வேகத்தை கெடுத்தது, மாறாக டேரன் பிராவோ, பொலார்ட் செட்டில் ஆயினர். கிறிஸ் மோரிஸ், மோர்கெல் பந்துகளை பொலார்ட் பதம் பார்த்தார், இம்ரான் தாஹிரை டேரன் பிராவோ உறுதியுடன் ஆடினார். இதனால் தாஹிர் இந்தத் தொடரில் முதல் முறையாக விக்கெட் எடுக்க முடியாமல் முடிந்தார். இருவரும் ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் அடித்தனர், டிவில்லியர்ஸ் அடிக்கடி பந்து வீச்சில் மாற்றம் செய்து பார்த்தார். நோபால்-வைடுகளில் 19 ரன்கள் வரும் அளவுக்கு பந்துவீச்சு தடம் புரண்டது. பொலார்ட் 71 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து டுபிளெசிஸின் நல்ல கேட்சுக்கு மோர்கெல்லிடம் அவுட் ஆனார்.

பொலார்ட் அவுட் ஆகும் போது பிராவோ அவரது 80களில் இருந்தார். அதன் பிறகு அவர் தனது 3-வது ஒருநாள் சதம் கண்டார். 103 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 102 ரன்கள் எடுத்து 37-வது ஓவரில் மோரிஸிடம் அவுட் ஆனார். ஆனால் ஸ்கோர் 210 என்றுதான் இருந்தது. இன்னும் 14 ஒவர்கள் மீதமிருந்தன.

ஜேசன் ஹோல்டர் முதல் ரன்னை எடுக்க 17 பந்துகள் எடுத்துக் கொண்டாலும் கடைசியில் 46 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 40 ரன்களையும், பிராத்வெய்ட் 42 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 33 ரன்களையும் எடுக்க தென் ஆப்பிரிக்காவின் எக்ஸ்ட்ரா 24 ரன்களையும் சேர்த்து 21/4 லிருந்து மே.இ.தீவுகள் அபாரமான முறையில் 285 ரன்கள் எடுத்தது.

உத்வேகம், திட்டமிடுதல் இல்லாத ‘சவசவ’ தென் ஆப்பிரிக்கா பேட்டிங்:

286 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கில் எந்த வித உந்துதலும் இல்லை. கேட்ச்கள் விடப்பட்டும் அந்த அணி 65/6 என்று ஒன்றும் செய்ய முடியாத நிலைக்குச் சென்றது.

ஹஷிம் ஆம்லா வந்தவுடனேயே அவுட் ஆகியிருக்க வேண்டியது, காப்ரியேல் வீசிய அவுட் ஸ்விங்கரை துரத்தி கேட்ச் கொடுத்தார், ஆனால் தினேஷ் ராம்தின் கேட்சை கோட்டை விட்டார். ஆனால் 2 ஓவர்கள் கழித்து குவிண்டன் டி காக்கிற்கு அருமையான ஒரு கை கேட்சை எடுத்து ராம்தின் ஈடு செய்தார்.

டுபிளெசிஸ் ரிஸ்க் சிங்கிளில் ரன் அவுட் ஆகியிருப்பார் ஆனால் பிளெட்சர் பாயிண்டிலிருந்து அடித்த நேரடி ‘ஹிட்’ முயற்சி ஸ்டம்பை தவற விட்டது. ஆனால் காப்ரியேல், பிளெஸிசை நிற்க விடவில்லை அருமையான ஆஃப் கட்டர் ஒன்றை வீசி எல்.பி.செய்தார், டுபிளெசிஸின் ரிவியூ பயனற்று போனது. அதேபோல் காப்ரியேல் வீசிய சற்றே விலகிச் சென்ற பந்தை டிவில்லியர்ஸும் தேவையில்லாமல் ஆடி ராம்தின்னிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் வெளியேறினார். இந்தத் தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் டிவில்லியர்ஸ் தடுமாறியது உறுதியானது. சுனில் நரைன், ஆம்லாவை நேராக எல்.பி.செய்ய 35/4 என்று ஆனது.

ஜே.பி.டுமினியை ஹோல்டரும், கிறிஸ் மோரிசை நரைனும் வீழ்த்த 65/6 என்று 18வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா பரிதாபமானது. பிஹார்டியனுக்கு காப்ரியேல் எளிதான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட அவர் 35 ரன்களை எடுத்தார். கடைசியில் பார்னெல் (28), மோர்கெல் (32 நாட் அவுட்), இம்ரான் தாஹிர் (29, 7 பவுண்டரிகள்) ஆகியோர் மே.இ.தீவுகளை வெறுப்பேற்றினர் ஆனால் வெற்றியை தடுக்க முடியவில்லை. 185 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டது.

ஆட்ட நாயகனாக டேரன் பிராவோ தேர்வு செய்யப்பட்டார், மே.இ.தீவுகள் தரப்பில் காப்ரியேல் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற பிராத்வெய்ட் 2 விக்கெட்டுகளையும் ஹோல்டர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ரபாதா ரன் அவுட் ஆனார்.

http://tamil.thehindu.com/sports/டேரன்-பிராவோ-அபார-சதம்-தென்-ஆப்பிரிக்காவை-வெளியேற்றியது-மேஇதீவுகள்/article8772921.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

மும்முணை ஒருநாள் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா சாம்பியன்

மும்முணை ஒருநாள் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது:-


மும்முணை ஒருநாள் போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.


மேற்கிந்திய தீவுகளில், தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்றன.


இறுதிப் போட்டிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியும் அவுஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுக்கொண்டது.


மேற்கிந்திய தீவுகளின் பார்படோஸ் தீவுகளின் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி நடைபெற்றது.


நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.


நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


இதில் மெத்தியு வடே 57 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 7 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.


பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் செனோன் கப்ரியேல் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 45.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.


இதில் ஜொன்சன் சார்லஸ் 45 ஓட்டங்களையும் தினேஸ் ராம்டீன் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.


பந்து வீச்சில் ஜோஸ் ஹசல்வுட் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
போட்டியின் ஆட்ட நாயகான மிச்சல் மார்சும், தொடரின் நாயகனாக ஹசல்வுடும் தெரிவு செய்யப்பட்டனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133500/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

மார்ஷ், ஹெசில்வுட் பவுலிங், மேத்யூ வேட் பேட்டிங் அபாரம்: கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

 

 
மே.இ.தீவுகளை வீழ்த்தி கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா. | படம்: ஏ.எஃப்.பி.
மே.இ.தீவுகளை வீழ்த்தி கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா. | படம்: ஏ.எஃப்.பி.

இறுதிப் போட்டி என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவை அசைப்பது, வீழ்த்துவது கடினம். நேற்றும் அதுதான் நடந்தது. மே.இ.தீவுகள் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா முத்தரப்பு ஒருநாள் தொடரில் கோப்பையைக் கைப்பற்றியது.

பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்மித் முதலில் பேட் செய்து 50 ஒவர்களில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் பிரகாசமான, தன்னம்பிக்கையான தொடக்கத்திற்குப் பிறகு மிட்செல் மார்ஷ், ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோரது அபாரமான பந்து வீச்சில் மளமள விக்கெட்டுகளை இழந்து கடைசியில் 212 ரன்களுக்குச் சுருண்டது. ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் மிட்செல் மார்ஷ் கடந்த போட்டி சத நாயகன் டேரன் பிராவோ, மற்றும் அதிரடி வீரர் மர்லன் சாமுவேல்ஸ் ஆகியோரை விரைவில் வீழ்த்தியது மே.இ.தீவுகளுக்கு மீள முடியா பின்னடைவை ஏற்படுத்தியது.

அதாவது அடுத்தடுத்த ஓவர்களில் டேரன் பிராவொ, சாமுவேல்ஸ், நன்றாக ஆடிவந்த சார்லஸ் ஆகியோரை வீழ்த்தி முதுகெலும்பை உடைத்தார் மார்ஷ். டேரன் பிராவோவுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஒரு அருமையான லெந்தில் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீச, அதனை ஆட டேரன் பிராவோ ஈர்க்கப்பட்டார், அதாவது ஈர்க்கச் செய்யப்பட்டார், எடுத்தது எட்ஜ், வெளியேறினார். மர்லன் சாமுவேல்ஸ், ஒரு பவுண்டரியுடன் 6 ரன்களில் இருந்தபோது, ஏற்கெனவே திட்டமிட்டபடி ஷார்ட் கவர் நிறுத்தப்பட்டது. மிட்செல் மார்ஷ் பந்தை கொஞ்சம் இழுத்து வேகம் குறைவாக வீசினார் டிரைவுக்கு கமிட் ஆகிவிட்ட சாமுவேல்ஸ் கட்டுப்படுத்த முடியவில்லை பந்தை ஆட ஷார்ட் கவரில் கேட்ச் ஆனது.

61 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து நன்றாக ஆடிவந்த சார்லஸ், எதிர்முனையில் பிராவோ, சாமுவேல்ஸ் ஆட்டமிழந்ததையடுத்து சற்றே தளர்ச்சியடைந்த நிலையில் நேராக வந்த பந்தை கோட்டை விட எல்.பி.ஆனார். ஆனாலும் பந்து லேசாக லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் போல் ரிப்ளேயில் தெரிந்தது. பொலார்ட் இறங்கி அருமையான ஒரு ஃபிளாட் நேர் சிக்சரும் பவுண்டரியும் அடித்து 20 ரன்கள் எடுத்த நிலையில் ஸாம்பா பந்தில் ஹேசில்வுட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

27.1 ஓவர்களில் 105/5 என்ற நிலையில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 34 ரன்களை 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 37 பந்துகளில் எடுத்தார், நன்றாக விளையாடினார், எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரியும் நேர் சிக்ஸும் அபாரமானது. பிராத்வெய்ட், சுனில் நரைன் முயற்சிகள் பொழுதுபோக்காக இருந்ததே தவிர வெற்றிக்கான எந்த வித அறிகுறியும் ஏற்படவில்லை. 45.4 ஓவர்களில் 212 ரன்களுக்குச் சுருண்டது மே.இ.தீவுகள். ஹேசில்வுட் 9.4 ஓவர்களில் 50 ரன்களுக்கு 5 விக்கெடுகளை வீழ்த்தினார். ஷான் மார்ஷ் 10 ஓவர்களில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள். இதனால் இவர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக ஹேசில்வுட் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக 31-வது ஓவரில் 152/3 என்ற நிலையிலிருந்து ஆஸ்திரேலியா அடுத்த 59 ரன்க்ளுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு மேத்யூ வேடிற்கு சில மோசமான பந்துகளை பொலார்ட், பிராத்வெய்ட், கப்ரியேல் ஆகியோர் வீச 52 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்தார். ஸ்டார்க் 17 ரன்களுடனும் கூல்டர் நைல் 15 ரன்களும் பங்களிப்பு செய்தனர். 230-40 ரன்களுக்கு மட்டுப்பட்டிருக்க வேண்டிய ஆஸ்திரேலியா 270 ரன்களை எடுத்தது.

ஏரோன் பிஞ்ச் 41 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிச்சருடன் 41 ரன்கள் எடுத்து பொலார்டிடம் வீழ்ந்தார். கவாஜா 14 ரன்களுக்கு ஹோல்டரிடம் ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்மித் (46), மேக்ஸ்வெல் (4) ஆகியோரை 31வது ஓவரில் முறையே 2 மற்றும் 6வது பந்துகளில் ஒரே ஓவரில் வீழ்த்தினார் கப்ரியேல். ஸ்மித்திற்கு அருமையான ஷார்ட் பிட்ச் பந்தை வீச அவர் புல் ஷாட் முயற்சியில் டாப் எட்ஜ் எடுக்க அருகிலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். மேக்ஸ்வெல்லுக்கு நல்ல பந்து, எல்.பி.ஆனார்.

இடையில் ஜார்ஜ் பெய்லி, தோனியுடன் ஆடியதன் சகவாச தோஷத்தை வெளிப்படுத்தினார். 17 பந்துகளில் 13 ரன்கள் என்று இருந்த அவர் ஒரு மெய்டன் ஓவரை அனுமதித்தார், அதன் பிறகு 27 பந்துகளில் 9 ரன்களையே அவரால் எடுக்க முடிந்தது, கடைசியில் 44 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து பிராத்வெய்ட் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். இவர் ஆட்டத்தை மந்தப் படுத்திய நெருக்கடியில்தான் ஸ்மித் வெறுப்பில் அவுட் ஆனார். ஒரு வழியாக மேத்யூ வேட் அரைசதத்துடன் ஆஸ்திரேலியா 270 ரன்களை எடுத்தது. சுலைமான் பென் சிக்கனமாக வீசி 38 ரன்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

மொத்தத்தில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கு எந்த ஒரு அணியும் கடினமாக திட்டமிட்டு, அதனை கறாராகச் செயல்படுத்துவது அவசியம் என்பதையும் எதிரணிகள் முழு ஆதிக்கம் செலுத்தி ஆஸி.யை எழும்ப விடாமல் செய்ய வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறது.

http://tamil.thehindu.com/sports/மார்ஷ்-ஹெசில்வுட்-பவுலிங்-மேத்யூ-வேட்-பேட்டிங்-அபாரம்-கோப்பையை-வென்றது-ஆஸ்திரேலியா/article8779830.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.