Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள்

Featured Replies

யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள்

 

பிரான்சின் மார்செய் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ரஷியாவுக்கு இடையிலான யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள் நடைபெற்றுள்ளன.

160612032238_euro2016_fans_tear_gas_640x

 பிரான்ஸ் காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தன்னீரை பீச்சியடித்தும் சண்டையிட்டோரை கலைத்தனர்

ஐரோப்பிய கால்பந்து விளையாட்டின் நிர்வாக அமைப்பான யுஇஃபா, கடுமையாக காயமடைந்த இருவர் உட்பட குறைந்தது முப்பது பேரை காயமடைய செய்துள்ள, இந்த வன்முறைகள் தொடர்பாக புலனாய்வு ஒன்றை தொடங்கியுள்ளது.

160612002002_euro_2016_clashes_640x360_g

 30 பேரை காயமடைய செய்த இந்த வன்முறை தொடர்பாக யுஇஃபா புலனாய்வு ஒன்றை தொடங்கியுள்ளது

கால்பந்து போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மார்செய்யின் பழைய துறைமுகப் பகுதியில் நடைபெற்று கொண்டிருந்த மோதல்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சியடித்தும் கலைத்தனர்.

160612032628_euro2016_fans_violence_640x

 

 மார்செய் கால்பந்து விளைாயட்டு அரங்கிற்குள் இங்கிலாந்து மற்றும் ரஷிய அணிகளின் ரசிகர்கள் தாக்கி கொண்டனர்.

இரு அணிகளும் தலா ஒரு கோல் என்று போட்டி ஆட்டம் சமநிலையில் முடிந்தவுடன் ரஷிய அணி ரசிகர்கள் இங்கிலாந்து அணி ஆதரவாளர்களை விளையாட்டு அரங்கிற்குள் வைத்து தாக்கினர்.

160612001935_euro_2016_clashes_640x360_g

நீஸ் நகரத்திலும் வட அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ரசிகர்களுக்கு இடையே மோதல்கள் நடைபெற்றன.

160612001821_euro_2016_clashes_640x360_g

 

அவ்விடத்தில் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதற்கு முன்னர் ஆறு பேர் காயமடைந்திருந்தனர்.

 

http://www.bbc.com/tamil/sport/2016/06/160612_eurofootball?ocid=socialflow_facebook

  • தொடங்கியவர்
யூரோ 2016: வன்முறைகளால் பெரும் அச்சம்; 31 பேர் காயமடைந்தனர்
 
 

article_1465732974-LEAD-131inporajdf.jpgகடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த யூரோ 2016 தொடரில், இரசிகர்களுக்கிடையிலான வன்முறைகள், பாரிய அளவில் ஏற்பட்டுள்ளதோடு, அவை அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளன.

இரண்டாவது நாளான சனிக்கிழமை, பிரான்ஸின் இரண்டாவது நகரத்துக்கும் அந்த வன்முறைகள் பரவியதோடு, பாதுகாப்புத் தொடர்பான கேள்விகளும் ஏற்பட்டுள்ளன.
மார்சிலேயில் இங்கிலாந்து இரசிகர்களுக்கும் ரஷ்ய இரசிகர்களுக்குமிடையில் மோதலேற்பட்டது. இதன்போது, பியர் போத்தல்களும் கதிரைகளும் வீசப்பட்டதோடு, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

பின்னர், ரஷ்யாவுக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான போட்டி நிறைவடைந்ததும், மைதானத்துக்குள்ளேயே வைத்து, ரஷ்ய இரசிகர்களால் இங்கிலாந்து இரசிகர்கள் தாக்கப்பட்டனர்.

இரசிகர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தக் குழப்பத்தைத் தொடர்ந்து, ரஷ்ய அணிக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி காணப்படுகிறது. இதற்கு முன்னர் போலந்தில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற யூரோ கிண்ணப் போட்டிகளில், இரசிகர்களின் நடவடிக்கை காரணமாக, ரஷ்ய அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, ஒத்திவைக்கப்பட்ட 6 புள்ளிகள் குறைக்கப்பட்டிருந்தன.

மறுபுறத்தில், மத்தியதரைக் கடற்கரைப் பக்கமாக, வட அயர்லாந்து அணியின் இரசிகர்களுக்கும் உள்ளூர் இரசிகர்களுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ஏழு பேர் காயமடைந்தனர். பொலிஸாரின் தகவலின்படி, இதுவரை 31 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில், கடந்தாண்டு நவம்பரில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, பிரான்ஸில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இப்போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு மத்தியிலும் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பொலிஸார், படைவீரர்கள், தனியார் பாதுகாப்பு அதிகாரிகளென 90,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/174508/ய-ர-வன-ம-ற-கள-ல-ப-ர-ம-அச-சம-ப-ர-க-யமட-ந-தனர-#sthash.rlO8LT0I.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

two men hold a blood-stained England flag

 

அதே வேளை

CkvqSDrWkAAf2rD.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.