Jump to content

3000 ஆண்டுகள் பழமையானது : யானைகளின் வாழ்விடத்தை உறுதிப்படுத்தும் பாறை ஓவியம் - கொங்கு மண்டலத்தின் அரிய தொல்லியல் ஆவணம்


Recommended Posts

கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி என்பது காலம் காலமாக யானைகள் வாழ்விடம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் உள்ளது.

Rock_Incriptions.jpg

குமிட்டிபதியில் காணக்கிடைக்கும் பெருங்கற்கால பாறை ஓவியம்

கோவை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டியிருக்கிறது. வன ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு போன்ற காரணங்களால் கோவையில் சமீப காலமாக வனவிலங்குகள் ஊடுருவல் தவிர்க்க முடியாத பிரச்சினையாகிவிட்டது. இதனிடையே விவசாய பரப்புகளில் சேதம் விளைவித்து வரும் காட்டுயானை ஒன்றை பிடித்து, கும்கியாக மாற்றும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். ஆனால் யானைகளால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படும் கோவையின் தென்மேற்குப் பகுதி முழுவதும் ஒரு காலத்தில் யானைகளின் வாழ்விடங்களாக இருந்தவை என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால பாறை ஓவியம் ஒன்றும் கோவையில் காணக்கிடைக்கிறது.

கோவையின் தென்மேற்குப் பகுதியில் வேலந்தாவளம் அருகே குமிட்டிபதி கிராமத்தில் தனியார் கல்லூரி ஒன்றின் அருகே, ‘பதி மலை’ என்ற பாறைக் குன்று உள்ளது. முருகன் கோயிலையொட்டி அமைந்துள்ள இந்த குன்று, கீழ் பகுதியில் பல குகைகளைக் கொண்டுள்ளது. அதில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று, இந்த பாறை ஓவியம். வெண்மை நிறத்தைக் கொண்டு வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தில் யானை ஒன்றை, அதன் மேலிருந்து கட்டுப்படுத்திச் செல்லும் மனிதனும், அவற்றைச் சுற்றி பெரிய பெரிய கோடுகள் குறுக்கும் நெடுக்குமாகவும் உள்ளன. சுமார் 4 அடி அகலமும், 2 அடி உயரத்திலும் உள்ள இந்த பாறை ஓவியம், அப்பகுதியில் யானைகள் வாழ்விடமாக இருந்ததற்கு உதாரணமாகக் கூறப்படுகிறது.

சூழலியல் செயல்பாட்டாளர் மோகன் கூறும்போது, ‘இங்குள்ள வேலந்தாவளம் (வேளம் - யானை, தாவளம் - விற்பனை இடம்) யானை சந்தையைக் குறிப்பதாகவும், மாவூத்தம்பதி (மாவூத் - யானைப்பாகன், பதி - வசிப்பிடம்) யானை வளர்ப்பவர்கள் வசிப்பிடமாகவும் இருந்திருக்கிறது. அங்குள்ள வனப்பகுதியில் கொப்பம் என்ற குழிகளை ஏற்படுத்தி யானைகளை பிடித்துள்ளனர் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. டாப்சிலிப்பிலும் கொப்பங்கள் உள்ளன. சாதாரணமாக சுற்றித்திரியும் யானைகளை மனிதர்கள் கட்டுப்படுத்தி வாழ்ந்ததையே குமிட்டிபதி பாறை ஓவியம் விளக்குகிறது. தெற்கே உள்ள ஆனைமலைக்கும் வடக்கே உள்ள கோவை மாவட்ட காடுகளுக்கும் இடையே உள்ள பாலக்காட்டு கணவாய் என்பது கேரள, தமிழக யானை வழித்தடமாக இருந்திருக்கிறது. யானைகளை விற்கும் இடமாகவும், பழக்கப்படுத்தும் இடமாகவும் இந்த பகுதிகள் இருந்துள்ளன. அந்த வரலாற்றுத் தொடர்பே, இன்று வரை யானைகள் அதிகம் ஊடுருவும் பகுதியாக இருக்கக் காரணம். யானைகளின் வசிப்பிடமே இன்று விளைநிலங்களாகவும், மக்கள் வசிப்பிடங்களாகவும் மாறியுள்ளன’ என்றார்.

தொல்லியல் துறை

பாறை ஓவியம் குறித்து தொல்லியல் துறையினர் கூறும்போது, ‘கொங்கு மண்டலத்தில் நீலகிரி மாவட்டம் கரிக்கியூரில் உள்ளதைப் போல கோவையில் வெள்ளருக்கம்பாளையம், குமிட்டிபதி என ஒரு சில பாறை ஓவியங்களே உள்ளன. அதில் யானையை மனிதன் ஓட்டிச் செல்வது போன்றுள்ள இந்த ஓவியம் 3000 ஆண்டுகள் முந்தைய பெருங்கற்கால (அல்லது) இரும்புக்காலத்தில் வரையப்பட்டதாகும். போர் உருவானபோது யானைப்படை உருவானது. அதனாலேயே யானைகளை பிடிக்கவும், விற்கவும் மனிதன் கற்றுக் கொண்டான். கோவையின் வரலாற்றையும், யானையின் வாழ்விடத்தையும் கூறும் அரிய பாறை ஓவியம் இது. பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று’ என்கின்றனர்.

பாண்டியன் பாறை

குமிட்டிபதியைச் சேர்ந்த முத்துச்சாமி (60) கூறும்போது, ‘பாறை ஓவியத்துக்கான விளக்கம் தெரியவில்லை. ஆனால் சுமார் 10 பேர் அமரக்கூடிய அந்த குகையை பாண்டியன் பள்ளி (அ) பாண்டியன் பாறை என்பார்கள். பாண்டிய மன்னர்கள் காலத்தில் இங்கு பாடம் நடத்தவும், உயரமாக இருப்பதால் கண்காணிக்கவும் பயன்படுத்தி இருக்கலாம். மேலும் யானைகளை கட்டுப்படுத்துவது குறித்து அங்கு பாடம் நடத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது’ என்றார்.

பாதுகாக்க வேண்டும்

பாறை ஓவியங்கள் பலவும் எளிதில் பார்க்க முடியாத வகையில் அடர்ந்த காடுகளுக்குள்ளேயே இருக்கின்றன. ஆனால் குமிட்டிப்பதியில் உள்ள பாறை ஓவியம் எளிதில் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த குகையானது அங்குள்ளவர்களின் மது அருந்தும் இடமாகவும், சமூக விரோத செயல்களுக்கான இடமாகவும் இருக்கிறது. இதை தொல்லியல் துறை புனரமைத்து பாதுகாத்தால் ஆய்வு மாணவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பயனளிக்கும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/3000-ஆண்டுகள்-பழமையானது-யானைகளின்-வாழ்விடத்தை-உறுதிப்படுத்தும்-பாறை-ஓவியம்-கொங்கு-மண்டலத்தின்-அரிய-தொல்லியல்-ஆவணம்/article8748446.ece?ref=sliderNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.