Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸம்மிலின் மனைவியின் வங்கிக் கணக்கில் 62 இலட்சம் ரூபா! - மாட்டியது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் ஜூலை 04 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் வாகனத்தை பயன்படுத்தி அரசாங்கத்தின் ரூபா 62 இலட்சம் பணத்தை முறையற்ற விதத்தில் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்காகவே அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் ஜூலை 04 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் வாகனத்தை பயன்படுத்தி அரசாங்கத்தின் ரூபா 62 இலட்சம் பணத்தை முறையற்ற விதத்தில் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்காகவே அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

   

பொது சொத்துகள் தொடர்பான கட்டளைச் சட்ட இலக்கம் 05, பண மோசடி தொடர்பான 03 இலக்க சட்டம், இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் இல. 300, 386, 389 மற்றும் 400 இன்கீழ் அவர் மீது மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை, பொலிஸ் நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவினால் முன்வைக்கப்பட்டிருந்தது. சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான எவ்வித சிறப்புக் காரணம் இல்லை என்பதாலும், விசாரணைகள் இன்றும் நிறைவடையவில்லை என்பதாலும், நீதவான் அவருக்கு பிணையை நிராகரித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் ஐ.ம.சு.மு.வில் போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு, ஜனாதிபதி செயலகத்தினால் வாகனங்கள் வழங்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த வாகனங்கள் 'எலிகென்ட் ரென்ட் எ கார்' எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும், அவ்வாகனங்களுக்கு 2014 வரை, ஜனாதிபதி செயலகத்தினால் வாடகை செலுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

2010 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், சந்தேகநபரான முஸம்மில் தனது பாராளுமன்ற பதவியை இழந்ததை அடுத்து, அவர் அரச பொறியியலாளர் திணைக்களத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்காக அவருக்கு உரித்தான வாகனத்திற்கு பதிலாக, சந்தேகநபர் தனக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்தியுள்ளதோடு, அது வாடகைக்கு பெற்றுக்கொண்ட வாகனம் எனும் போர்வையில் அரச பொறியியல் திணைக்களத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டுள்ளார் என விசாரணைகளிலிருந்து புலனாகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அரச பொறியியல் திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொண்ட குறித்த வாடகைப் பணத்தை குறித்த நிறுவனத்திற்கு, செலுத்துவது போன்று மோசடி செய்துள்ளதாகவும், இதற்காக குறித்த நிறுவனத்தின் உரிமையாளரான ஐ.பி. பிரியங்கனி என்பவரது பெயரில் அரச பொறியியல் திணைக்களத்திற்கு அப்பணத்தை பெற்றுக்கொண்டதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதோடு, குறித்த பணத்தை சந்தேகநபரின் மனைவியின் பெயரில் வைப்பிடுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

ஆயினும் குறித்த கடிதங்களில் உள்ள கையொப்பம் தன்னுடையதல்ல என வாகன வாடகை நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த வாகனம் தொடர்பில் அரச பொறியியல் திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொண்ட பணம், 2011 முதல் 2014 வரை சந்தேகநபரின் மனைவியான நதீகா கால்லகே என்பவரின் கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=159944&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.