Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமைக்கான காரணத்தை கூறும் மஹிந்த!

Featured Replies

தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனது அரசாங்கம் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டுகளாக நீடித்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடிய யுத்தத்தினை தனது அரசாங்கமே முடிவுக்கு கொண்டு வந்தது.

தமிழ் மக்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்த்து மற்றும் சமாதானம் உள்ளிட்டவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் உறுதியாக இருந்தது.

அதற்காக வேண்டியே விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடிய யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தேன்.

எனினும், எனது ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை மூடி மறைக்கும் முயற்சியில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் இறங்கியுள்ளது.

தேர்தல் காலங்களில் பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து காலத்தினை வீணடிக்காதீர்கள்.

அத்துடன், தன்மீது வீண்பழி சுமத்தி வழக்கு தொடர்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை வழங்குவதற்கு எனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், அரசியல் பழிவாங்கும் நோக்கிலேயே தற்போதையை நல்லாட்சி அரசாங்கம் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/109055

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அவர்கள் எனது கடந்த கால வாழ்வு தொடர்பாகவும் எனது தற்கால வாழ்வு தொடர்பாகவும் விசாரணை செய்வார்கள். அவர்கள் இறந்து போன எனது கணவர் தொடர்பாகக் கேட்பார்கள். இவை அனைத்தும் நான் எனது கடந்த கால வாழ்வை மறப்பதற்குப் பதிலாக தொடர்ந்தும் என் மீதும் என் மகள் மீதும் பாதிப்பைச் செலுத்துகிறது’ என ரஞ்சினி தெரிவித்தார்.

எப்படி தமிழர்களுக்கு உரிமை கிடைத்து இருக்கும்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.