Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்குடியேற்றதை துரிதப்படுத்த வலியுறுத்தி

Featured Replies

மீள்குடியேற்றதை துரிதப்படுத்த வலியுறுத்தி

 

 

மீள்குடியேற்றதை துரிதப்படுத்த வலியுறுத்தி

 

 
தமது மீள்குடியேற்றதை துரிதப்படுத்த வலியுறுத்தி, யாழ் நல்லூர் கோயில் முன்றலில் வலி வடக்கு மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

15.06.1990ம் ஆண்டில் இருந்து இடம்பெயர்ந்துள்ள குறித்த மக்களின் இன்னல்களை நேரில் கண்டறிந்த ஐனாதிபதி, "06 மாதங்களுக்குள் உங்களை மீளக்குடியேற்றுவேன்.." என வாக்குறுதியளித்த நிலையில், அது இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 08 அம்ச கோரிக்கைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஐா, சிறிதரன், சரவணவன் மற்றும் ஈழ மக்கள் ஐனநாயகட்சியின் ஆதரவாளர்கள், சிவில் சமூக அமைப்பினர் எனப் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் மகஐர் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் வடமாகாண ஆளுனருக்கும், மாகாண முதலமைச்சர் மற்றும் மனித உரிமைகள் காரியாலத்திலும் மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திலும் கையளிக்கப்பட்டன.

http://tamil.adaderana.lk/news.php?nid=2184&mode=head

  • கருத்துக்கள உறவுகள்
மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் இன்று காலை 9 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அமைதிப்பேரணியை நடத்தவுள்ளனர். மயிலிட்டி மீள்குடியேற்ற குழு, மயிலிட்டி மீன்பிடி கூட்டுறவு சங்கமும், நிலன்புரி நிலையத்தின் அமைப்புக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம்  தெரிவித்தார்.

மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் இன்று காலை 9 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அமைதிப்பேரணியை நடத்தவுள்ளனர். மயிலிட்டி மீள்குடியேற்ற குழு, மயிலிட்டி மீன்பிடி கூட்டுறவு சங்கமும், நிலன்புரி நிலையத்தின் அமைப்புக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்தார்.

   

இதேவேளை மயிலிட்டியை சேர்ந்த 3 கிராமசேவகர் பிரிவு மக்களும், பலாலியை சேர்ந்த 5 கிரமசேவகர் பிரிவு மக்களும், தையிட்டியை சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவு மக்களும், காங்கேசன்துறையை சேர்ந்த 3 கிராமசேவகர் பிரிவை சேர்ந்த மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் 26 வருடகாலமாக நலன்புரி நிலையங்கள், மற்றும் உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.மயிலிட்டி, பலாலி, ஊரணி, தையிட்டியை சேர்ந்த 6 ஆயிரம் குடும்பங்கள், மீள்குடியேற்றம் செய்யபப்டவுள்ளன. எனினும் மோதலின்போது இடம்பெயர்ந்த 10 ஆயிரம் குடும்பங்கள் இன்னமும் 32 நலன்புரி நிலையங்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். மயிலிட்டி பிரதேசம் விடுவிக்கப்படாதவிடத்து 32 நலன்புரி நிலையங்களும் மூடப்படபோவது இல்லை எனவும் வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=160335&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

 

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைத்து, அவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என கோரி திங்களன்று யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முற்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

 

160627131233_valikamam_512x288_bbc_nocre

 இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

இதற்கான அழைப்பை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழு விடுத்திருந்தது.

கடந்த 1990-ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயரச் செய்யப்பட்ட குடும்பங்களில், 10 ஆயிரம் குடும்பங்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் 32 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

இவர்களை ஆறு மாத காலத்தில் மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அந்த மக்களிடம் நேரடியாக உறுதியளித்திருந்தார்.

அந்த காலக்கெடு முடிவடைந்துவிட்ட போதிலும், ராணுவத்தின் பிடியில் உள்ள வலிகாமம் வடக்கு காணிகளை விடுவிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

வலிகாமம் வழக்கு காங்கேசன்துறை பகுதியில் 200 ஏக்கர் காணிகள் ராணுவத்தினரால், இரு தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, ராணுவத்தின் வசமுள்ள காணிகளில் ராணுவத்தின் பயன்பாட்டிற்குரிய காணிகள் போக, எஞ்சிய காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

இந்த நடவடிக்கை வரும் 2018-ஆம் ஆண்டிற்குள் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/06/160627_jaffna-protest

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.