Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்குதல் நடத்த உதவிய தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தாபய ராஜபக்ஷ

Featured Replies

தாக்குதல் நடத்த உதவிய தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தாபய ராஜபக்ஷ

 

தன் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க தன்னால் முடியாதென்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

160627122348_kothabaya_640x360_bbc_nocre

 

 நீதிமன்றத்தில் சாட்சியளித்த கோத்தாபய ராஜபக்ஷ

கொழும்பில், கடந்த 2006-ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பயணித்த வாகனம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்த உதவியதாக நான்கு தமிழ் கைதிகளுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சாட்சியளித்தார்.

அதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கோத்தாபய ராஜபக்ஷ, தன் மீது குண்டு தாக்குதலை மேற்கொள்ள உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நோக்கம்தனக்கு இல்லை என்று தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணையொன்று நடத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், பொது மன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டுமென்று அறிவித்தார்.

மேலும், கருத்துக்களை தெரிவித்த கோத்தாபய ராஜபக்ஷ தனக்கு வழங்கப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பை நீக்குவதற்கு அரசாங்கம் தயாராகிவருவதாக குற்றம்சாட்டினார்.

இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த அவர், எனவே இந்த தீர்மானத்தை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு தற்போதைய பாதுகாப்பு செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/06/160627_kothabaya_rajapakshe

இயற்கை நியதிகளின்படி உலகின் மிக மோசமான போர்க் குற்றவாளியின், கொலைகாரனின், கடத்தல்காரனின், சித்திரவதைக்காரனின்  துள்ளல்கள் அடங்கியே தீரும். அது சும்மா அடங்காது அவனுக்கு ஒத்தூதிய சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் அனைவரையும் அழித்தபடி அடங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.