Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரில் 9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில்

Featured Replies

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று உத்தரவிட்டார்.

மூதூர், பாட்டாளிபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதோடு மனைவியோடு ஏற்பட்ட தகராறு காரணமாகவே சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உறவுக்காரர் எனவும், சிறுமியின் தாய் தந்தை காட்டுக்கு விறகு எடுக்கச் சென்ற நிலையிலே சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் தாய், தந்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த சந்தேக நபரை புதன்கிழமை மாலையில் மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilwin.com/crime/01/109662

  • தொடங்கியவர்
7 hours ago, போல் said:

சந்தேக நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உறவுக்காரர்

ஆசிரியர்கள் உறவினர்கள் போன்ற நம்பிக்கைக்கு உரியவர்களின் மனங்கள் கூட கடுமையாக விகாரமடைந்து வருகின்றமை ஆபத்தானது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.