Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா பொருளாதார வலயத்திற்கு 2010ம் ஆண்டே ஓமந்தையில் காணி ஒதுக்கீடு!

Featured Replies

வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மையம் அமைப்பதற்காக 2010ம் ஆண்டே ஓமந்தையில் 18 ஏக்கர் காணி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

15.06.2010ம் ஆண்டு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் வட மாகாண ஆளுனர் சந்திரசிறி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வவுனியா மாவட்ட அபிவிருத்தி குறித்து பேசப்பட்ட போது மாவட்ட பொருளாதார வலயமாக ஓமந்தை, பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் 18 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த 18 ஏக்கர் காணிக்கும் அனுமதி வழங்கப்பட்டு வனஇலாகாவிடம் இருந்து அவை விடுவிக்கப்பட்டு அதற்கான வரைபடங்கள் கூட 2011ம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த 18 ஏக்கர் காணியும் கைவிடப்பட்ட வெற்றுக் காணியாகவே அமைந்துள்ளது. அதற்கு அண்மித்ததாக கைத்தொழில் வலயத்திற்காக 30 ஏக்கர் காணியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், நூர்தின் மசூர், நுனைஸ் பாறுக், நகரசபை உறுப்பினர்களாக எஸ்.என்.ஜி.நாதன், ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என 84 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, இவ்வாறு காணி 2010ம் ஆண்டே காணி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் தற்போது வவுனியாவிற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க இடத்தெரிவு தொடர்பில் இழுபறி நிலை காணப்படுகின்றமை வேடிக்கையாகவுள்ளது என பலரும் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/development/01/109732

Edited by போல்

  • தொடங்கியவர்

இப்போது பேசப்படும் விடயம் வட மாகாண பொருளாதார "மத்திய" நிலையம் பற்றியது (வவுனியா மாவட்ட பொருளாதார "வலயம்" பற்றியது இல்லை). இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாத மடையர்கள் தான் பிரச்சினையே.     

அப்போது 2010ல் முடிவு எடுக்கப்பட்டது வவுனியா மாவட்ட அபிவிருத்தியை மட்டும் பற்றியது. சர்வதேச நிதியைப் பெற்றுக்கொள்ள  இது போன்ற பல நாடகங்களை சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு நடத்தி வந்தது.  இந்த முடிவு தமிழின விரோதிகள் இருவர் தலைமையில் எடுக்கப்பட்டது. நிதி கிடைத்தது. அந்த நிதியின் ஒருபகுதியை தெற்கின் அபிவிருத்திக்கு சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு பயன்படுத்தியது. ஒரு பகுதி ராஜபக்சக்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

இதற்கு உடந்தையாக இருந்த முஸ்லிம் ரவுடி அரசியல்வாதிக்கு பிரதிபலனாக அப்போதைய அரசாங்கம் கள்ளக் காணி பிடிக்க அனுமதித்திருந்தது. பின்னர் அதுவும் பிரச்சினை ஆகியிருந்தது. இதில் ஏமாந்தது முஸ்லிம் வெறியர்களும், வவுனியா தமிழ் அரசியல்வாதிகளும் தான். இதை எதிர்த்து அப்போது போராடாத தமிழ் அரசியல் அறிவிலிகள் இப்போது பிரதேசவாதம் கிளப்பி போராடுவது தான் பிரச்சினை.

எனவே இப்போது சர்ச்சையில் சிக்கிய வடமாகாண பொருளாதார மையம் அனைவருக்கும் பொதுவான, மையமான மாங்குளத்தில் அமையட்டும்.

ஏற்கனவே 2010ல் முடிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்ட பொருளாதார வலயம் ஓமந்தையில் அமைய வட மாகாணத்துக்கு கிடைத்த நிதியை,  வட மாகாண பொருளாதார "மத்திய" நிலையத்துக்கு கிடைத்த நிதியை சுரண்டாமல் வவுனியா அரசியல்வாதிகள் முயற்சி செய்யலாமே.

இதை விட்டுவிட்டு சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகள் தமது தேவைகளுக்கு சர்வதேச நிதியைப் பெற்றுக்கொள்ள மயக்கும் வார்த்தை ஜாலங்கள் உதவியுடன் போடும் நாடகங்களுக்கு துணை போவதை அறிவற்ற வவுனியா தமிழ் அரசியல்வாதிகள் (முஸ்லிம் ரவுடி அரசியல்வாதிகளும் தான்) கைவிட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.