Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார மத்திய நிலைய இழுபறி தீர்ந்தது: வாக்கெடுப்பில் ஓமந்தை தெரிவு

Featured Replies

பொருளாதார மத்திய நிலைய இழுபறி தீர்ந்தது: வாக்கெடுப்பில் ஓமந்தை தெரிவு
 

-குணசேகரன் சுரேன்

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 21 பேரின் ஆதரவுடன் ஓமந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

2,000 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கவுள்ள இந்த பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் அமைக்குமாறு மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வவுனியாவில் எந்த இடத்தில் அமைப்பது என்பது தொடர்பில் குழப்பங்கள் தோன்றின.

பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதற்கான அதிகாரம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கீழ் இருந்தமையால், அவரின் தெரிவாக ஓமந்தை இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் அமைக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில மாகாண சபை உறுப்பினர்களும் கோரினர்.

இந்நிலையில், இந்த இழுபறியைத் தீர்;க்கும் பொருட்டு, முதலமைச்சர் அலுவலகத்தால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வாக்குச்சீட்டு அனுப்பப்பட்டது.

வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை (11) முடிவுற்ற நிலையில், பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமையப் பெறுவதற்கு 21 உறுப்பினர்களும், தாண்டிக்குளத்தில் அமையப் பெறுவதற்கு 5 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மேலும் 13 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தவில்லை.

- See more at: http://www.tamilmirror.lk/176742/ப-ர-ள-த-ர-மத-த-ய-ந-ல-ய-இழ-பற-த-ர-ந-தத-வ-க-க-ட-ப-ப-ல-ஓமந-த-த-ர-வ-#sthash.5YyrTo2n.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். உடல்நலம் பாதிப்பு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று சந்தித்தார். இதன்போது, பொருளாதார மத்திய நிலையக் காணிப்பிரச்சினைத் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். உடல்நலம் பாதிப்பு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று சந்தித்தார். இதன்போது, பொருளாதார மத்திய நிலையக் காணிப்பிரச்சினைத் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

   

இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் ‘இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேசினோம். நன்மைகள், தீமைகள் தொடர்பாகவும் பேசினோம். தம்பி மாவை அவர்கள் குறித்த காணிகளை பார்வையிட்டிருக்கின்றார். ஓமந்ததையில் மத்திய நிலையம் அமைக்கப்படுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார ரசபையின் முடிவு பெறப்படவேண்டும் எனஇந்தச் சந்திப்பில் என்னிடம் கூறியிருக்கின்றார். ஆனால் அவ்வாறில்லை. இது கிராமப்புறம் இங்கே அவர்களுடைய முடிவு தேவையில்லை.

அவ்வாறிருந்தாலும் 2010ம் ஆண்டு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சகல அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார்கள். காணியை

உடனடியாக எடுக்க கூடிய நிலையில் இருக்கின்றது. எனவே நாங்கள் இந்த விடயத்தில் உறுப்பினர்களின் கருத்துக்களை எதிர்பார்த்திருக்கின்றோம். இதில் அனேகமாக ஓமந்தையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமையும் சாத்தியம் உள்ளது’ என்றும் கூறினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=161270&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நவீனன் said:

பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதற்கான அதிகாரம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கீழ் இருந்தமையால், அவரின் தெரிவாக ஓமந்தை இருந்தது

இது தான் முக்கியம் ......ஐயா வாக்கெடுப்பு நடத்தாமல் அதிகாரத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும்.....எது எப்படியோ வெற்றி ஐயாவுக்கே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.