Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு

Featured Replies

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு

 

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவினங்களையும் சேர்ந்த வியாபாரிகள் வவுனியா நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

160713143851_vavuniya1_640x360_bbc_nocre

 

 வவுனியா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனைச் சந்தைக்கு எதிரில் இருந்து வவுனியா அரச செயலகத்திற்கு பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் நிலவிய கருத்து வேற்றுமை வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பெரும்பான்மையோரின் தெரிவுக்கமைவாக ஓமந்தையில் அமைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் இந்த வாக்கெடுப்பின் முடிவில் அறிவித்திருந்தார்.

ஆயினும், மக்கள் நடமாட்டமற்ற பகுதியில் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு அனுமதிக்க முடியாது என கிராமிய பொருளாதார அமைச்சகம் அறிவித்திருந்த பின்னணியில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

160713143951_vavvuniya2_640x360_bbc_nocr

 

 வவுனியா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இந்த பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படுமேயானால், வவுனியா, கெப்பிட்டிகொல்லாவ, மதவாச்சி, வெலிஓயா போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஓமந்தையில் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மகஜரை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட வவுனியா அரச அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார, எந்தவொரு அபிவிருத்தி திட்டம் தொடர்பிலும் பொதுமக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஓர் உடன்பாட்டுக்கு வரும் வரையில் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என தெரிவித்தார்.

  160713144107_vavuniya3_640x360_bbc_nocre

இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்குத் தாமதிக்கும் பட்சத்தில் இதற்கென அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய் நிதி அரச திறை சேரிக்குத் திரும்பிச் செல்லும் ஆபத்து உண்டு என்றும் வவுனியா அரசாங்க அதிபர் கூறினார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160713_vavuniya_protest

19 minutes ago, நவீனன் said:

இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்குத் தாமதிக்கும் பட்சத்தில் இதற்கென அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய் நிதி அரச திறை சேரிக்குத் திரும்பிச் செல்லும் ஆபத்து உண்டு என்றும் வவுனியா அரசாங்க அதிபர் கூறினார்.

இப்படி எவ்வளவு போட்டுது. இதுவும் போகட்டுமே - என்ன நட்டம் 

banging head on keyboard emoticon

இவர்களுக்கு எந்த நட்டமும் இல்லை. 
 

6 hours ago, நவீனன் said:

இந்த பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படுமேயானால், வவுனியா, கெப்பிட்டிகொல்லாவ, மதவாச்சி, வெலிஓயா போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

வட மாகாண மக்களுக்கான பொருளாதார மத்திய நிலையம் அங்குள்ள தமிழ் மக்களுக்கு பயனளிக்காமல், தமிழ் மண்ணில் சட்டவிரோதமாக கள்ளக்காணி பிடித்து வாழும் சிங்கள, முஸ்லிம் காடையர்களுக்கு பயனளிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வேறு பிரதேசங்களுக்கு மாற்றப்படும் எனவும் மிரட்டும் சிங்கள, முஸ்லிம் இனமதவெறிக் கும்பல்களுக்கு ஆதரவாக சந்தர்ப்பவாத சுயநல தமிழ் எட்டப்பர்கள் சிலர் தாண்டிக்குளத்தில் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பதன் பின்னணிகளில் இதுவும் ஒன்று.

Insult_09_Bone_Licking.gif

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.