Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்பாடு தொடர்பாக விசாரணை வேண்டும்! அனுரகுமார

Featured Replies

இலங்கை அரசாங்க படைகளுக்கும்- தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற 2009ம்ஆண்டு இறுதிக்கட்ட போரில் மோசமான மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்பயன்படுத்தப்பட்டிருந்தால் அவை தொடர்பாக உடனடி விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.

இதனைநாம் சுட்டிக்காட்டுவது எவரும் கோபப்படுவதற்காக அல்ல. இவ்வாறான சம்பவங்கள்எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்வதற்கே ஆகும்.

மேற்கண்டவாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான,அனுரகுமார திஸநாயக்க கூறியுள்ளார்.

நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கான விஜயம்ஒன்றை மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் 2009ம் ஆண்டு போரின்இறுதிக்கட்டத்தில் கொத்து குண்டுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்த எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கேள்விக்கு மேலும் அவர் பதிலளிக்கையில், மாவோ சேதுங் கூறியிருக்கின்றார். போர் என்பது இரவு விருந்து அல்ல. என அதேபோல் போர் என்பது நாகரீகம் அற்ற, மனிதாபிமானம் அற்ற ஒரு செயற்பாடே ஆகும்.

உலகம் முழுவதும் அவ்வாறே நடக்கின்றது. இலங்கையிலும் நடைபெற்ற போர் மிக மனிதாபிமானமற்ற போர். அவ்வாறான ஒரு போர் எதிர்காலத்தில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இத்தகைய போரில் மோசமான ஆயுதங்கள் மற்றும் தடைசெய்யப்பட் ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக உடனடியாக விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.

அதுவே நீதியான செயலாகும். இதனை நாங்கள் எதற்காக கூறியிருக்கின்றோம். என்றால் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் பாதுகாப்பதற்கே தவிர இது எவருடைய கோபத்தையும் தூண்டுவதற்காக அல்ல. என்றார்.

தொடர்ந்து போருக்கு பின்னர் வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து சடுதியாக இறந்து கொண்டிருக்கின்றமை மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும், சந்தேகங்களையும் எழுப்பியிருக்கின்றமை தொடர்பாக கேட்டபோது. அவ்வாறான சந்தேகங்கள், அச்சம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றமை உண்மையாக இருக்கலாம்.

இந்நிலையில் அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாக தலையீடு செய்யவேண்டும். நடந்த போரில் பல சம்பவங்கள் இ டம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை நடத்தி உண்மை நிலை என்ன? என்பதை கண்டறிவது மிக மிக அவசியமான ஒன்றாகும்.

இல்லையேல் இந்த விடயத்தை பலரும் பலவாறான தங்களுக்கு உகந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளும் நிலை உருவாகும். என்பதுடன், அரசாங்கம் ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வினை நடத்தி மக்களுக்கு உண்மை நிலையினை வெளிப்படுத்துவதன் ஊடாக மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகங்களும் நீங்கும் வாய்ப்புக்களும் இருக்கின்றன என்றார்.

சிங்கள குடியேற்றங்கள் - விகாரைகள் அமைத்தல் போன்ற விடயங்களில் தமிழ் அரசியல்வாதிகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய நிலங்களில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் தமிழர் நிலங்களில் விகாரைகள் அமைத்தல் போன்ற விடயங்களில் தமிழ் அரசியல்வாதிகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பாக மக்கள் விடுதலை முன்னணி குரல் கொடுக்க தயாரகவே இருக்கின்றது.

மேற்கண்டவாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸநாயக்க கூறியுள்ளார்.

முல்லை மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய நிலங்களை அபகரித்து திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள் மற்றும், தமிழர் நிலங்களில் பௌத்தர்களே இல்லாமல் விகாரைகள் அ மைக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

போர் நிறைவடைந் த பின்னர் அதிகளவான காணி பிணக்குகள் உருவானது. குறிப்பாக படையினர் எடுத்த காணிகள், புலிகளின் போராளிகளின் காணிகள், புலம்பெயர்ந்த மக்களின் காணிகள், இறந்தவர்களின் காணிகள் என பல பிணக்குகள் உருவானது.

இதனை தீர்க்க அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை. இந்நிலையில் பலர் அந்த காணிகளில் தலையீடு செய்கிறார் கள். அது உண்மை.

இந்நிலையில் அரசாங்கம் என்றவகையில் இந்த விடயத்தில் உரிய தீர்வினை காணவேண்டு ம். இது தமிழ், முஸ்லிம், சிங்களம் என எந்த இனம் சார்ந்த மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு அவர்களுடை ய காணிகள் வழங்கப்பட வேண்டும்.

மேலும் இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் கூடிய கவனம் செலுத்தவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல் கொடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தயாராகவே இருக்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் தகவல்களை வழங்கி னால் நாம் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வோம்.

இதேவேளை முல்லை மாவட்டத்தில் தொடரும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக கேட்டபோது, வரலாற்று ரீதியாக ஒரு பிரதேசம் சார்ந்த மீனவர்கள் வேறு இடங்களில் மீன் பிடிப்பது வழக்கமாக இருந்து வரும் ஒரு விடயம்.

குறிப்பாக திருகோணமலை மீனவர்கள் சிலாபத்திலும், சிலாபம் மீனவர்கள் திருகோணமலையிலும் மீன்பிடிப்பார்கள். நாம் தென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக போராடுவதை காட்டிலும், எங்களுடை ய வளத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக போராடுவதே மிகவும் சிந்த ஒன்றாக இருக்கும்.

இலங்கையின் கடல் அனைத்து இலங்கையர்களுக்கும் சொந்தமானது. எனவே எங்களுடைய கடலில் நாங்கள் மீன்பிடிக்க வேண்டும். அதற்கான உரிமையை நாங்கள் நிலைநாட்டவேண்டும். என அவர் மேலும் கூறினார்.

http://www.tamilwin.com/politics/01/111120

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.