Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுகளின் மூலம் ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்கலாம்!

Featured Replies

விளையாட்டுக்கள் மூலம் உடல், உள ஆரோக்கியத்துடன் எமது இளைய சமுதாயம் வழிதவறிச் செல்வதைத் தடுத்து ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்கலாம் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி-உருத்திரபுரம் உழவர் ஒன்றியம் விளையாட்டுக்கழகம் நடத்திய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று 3.00 மணிக்கு விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக் கலந்துகொண்ட வடமாகாண அமைச்சர் குருகுலராசா உரையாற்றும் போதே மேற்படிகருத்துக்களைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,

இங்கு உதைபந்தாட்டத்தில் பங்குபற்றிய வீரர்கள் மிகவும் சிறப்பான முறையில் விளையாடியிருந்தார்கள்.

உருத்திரபுரம் ஊரைச்சேர்ந்த அமரத்துவமடைந்தவர்களின் நினைவாக இப்போட்டிகளை நடத்துவது மிகவும் வரவேற்கத்தக்க நல்லவிடயமாகும்.

இந்த மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்ட முன்வரவேண்டும் எனவும், கழக வீரர்கள் தமது விளையாட்டுச் சீருடைகள் ஒழுக்கங்கள் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இதன்போது கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டுக்குரிய தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் வடக்கு மாகாணத்திலே நடைபெறவுள்ளன.

இருப்பினும் இங்கு நடத்த முடியாமல் போகலாம் என்றும் ஒருகருத்து நிலவுகின்றது.

விளையாட்டுக்களை மேம்படுத்திக்கொள்வதற்காக எங்களுடைய விளையாட்டு மைதானங்களை தரமுயர்த்தி மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

விளையாட்டு வீரர்கள் பயிற்சிகள் மூலம் தமது திறன்களை வளர்த்துக்கொள்வதுடன் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்து எதிர்காலச் சந்ததிக்கு வழிகாட்டிகளாகத் திகள வேண்டும் எனவும் இதன்போது சுட்க்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நா.வை.குகராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளரும் கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான வி.சுவிஸ்கரன் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.tamilwin.com/othersports/01/111137

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.