Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் மீது தொடரும் நடவடிக்கை!

Featured Replies

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லாமல் பாடசாலை நேரங்களில் வீடுகளிலும் வீதிகளிலும் பொழுது போக்கும் பாடசாலை மாணவர்களை இனங்கண்டு, அவர்கள் மீதும் இதற்குக் காரணமாக உள்ள பெற்றோர்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களில் பல சிறுவர்கள் பாடசாலை செல்ல வேண்டிய வயதில் வீடுகளிலும் வீதிகளிலும் வீணாக பொழுதை போக்குகின்றார்கள். பாடசாலை மாணவர்கள் பலர் பாடசாலை செல்லாதமைக்கு அவர்களது பெற்றோர், பாதுகாவலர்களே காரணமாகவிருந்து செயற்படுவதுடன் அவர்களின் நோக்கங்களுக்காக இந்தச் சிறுவர்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

சில பகுதிகளில் சிறுவர்களைப் பயன்படுத்தி சட்ட விரோத மதுபான விற்பனை, போதைவஸ்த்தை இடம் மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு அந்தச் சிறுவர்களுடைய பெற்றோர்களும், பெற்றோர்களுக்குப் பழக்கமானவர்கள் சிலரும் இப்படியான சிறுவர்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

சிலர் பாடசாலைச் சிறுமிகளை ஏமாற்றிப் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றார்கள். சில பகுதிகளில் பாடசாலை செல்லவேண்டிய சிறுவர்கள் பாடசாலை நேரங்களில் பெரியவர்களுடன் வேலைக்குச் செல்கின்றார்கள்.

அவ்வாறு வேலைக்குச் செல்லுமிடங்களில் பெரியவர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்துதல், பீடி, சிகரட் போன்ற தீய பழக்கங்களுக்கும் அடிமையாகின்றார்கள். மற்றும் இப்படியான சிறுவர்கள் 15, 16 வயதாகியவுடனேயே திருமணம் செய்கின்றார்கள், சில காலங்களில் விட்டு ஓடிச் செல்கின்றார்கள்.

இப்படியாகச் சிறுவர்கள் சீரழிந்து போவதற்கு இவர்களது பெற்றோர்களின் பூரண சம்மதமும் ஒத்துழைப்பும் காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் பாடசாலை செல்லாத மாணவர்களை அவர்களது வீடுகளுக்குத் தேடிச் சென்று பெற்றோர்களுடன் கதைத்து ஆசிரியர்களை பெற்றோர்கள்

ஏசியதுடன் “உங்களுக்கு வேலை பாடசாலையில்தான், பாடசாலை நேரத்தில என்னுடைய பிள்ளை பாடசாலைக்கு வரேல்லை என்று வீட்டிற்கு தேடி வரவேண்டாம்,, நாங்கள் எங்களுடைய பிள்ளைகளை எப்பொழுது பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும், எங்களுடைய பிள்ளைகள் பற்றிக் கவலைப்பட எங்களுக்குத் தெரியும் இனி இங்கே வரவேண்டாம், அவ்வாறு இனி வந்தால் நடக்கின்றதே வேறு, எங்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட எங்களுக்குத் தெரியும் நீங்கள் ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை” என்று ஆசிரியர்களை மிரட்டிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களில் பெருமளவான மாணவர்கள் பாடசாலை செல்லாது பெற்றோர்கள் பாதுகாவலர்கள் மூலம் அவர்களது பாடசாலைக் காலங்கள் சீரழிக்கப்படுகின்றன.

இதனைக் கருத்திற்கொண்ட சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம், சிறுவர் மேம்பாட்டு அதிகாரிகள், பொலிஸார் ஆகியோர் இணைந்து நீதிபதியின் உத்தரவுக்கமைவாக கிளிநொச்சியில் பாடசாலை செல்லாத மாணவர்களை இனங்கண்டு, பிடித்து அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர்களின் மீதும் நீதிமன்றம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரவுள்ளது.

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பாது அவர்களது இளமைக் காலத்தைப் பாழாக்கிய பெற்றோர்கள் பலர் தற்போது தமது பிள்ளைகள் கல்வி கற்ற பாடசாலைகளுக்குச் சென்று தமது பிள்ளைகள் ஒழுங்காகப் பாடசாலைக்கு வந்ததாகவும் ஓரிரு நாட்கள்தான் பாடசாலைக்கு வரவில்லை எனவும் உறுதிப்படுத்திக் கடிதம் தருமாறு அதிபர்களைக் கேட்டு பல பாடசாலைகளில் படையெடுத்துள்ளார்கள் என அறியமுடிகின்றது.

http://www.tamilwin.com/statements/01/111223

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.