Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமரோன் கற்றுத்தந்த பாடம்!

Featured Replies

"1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையின் வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டு தலைவர் என்ற ரீதியில் என்னுடன் சில முக்கியமான ஊடகங்களை அழைத்துச்சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை வெளியுலகிற்கு சொல்லியிருக்கிறேன்" என்று கொழும்பு திரும்பியவுடன் டேவிட் கமரோன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நாம் ஒவ்வொரு தலைவர்களையும் சந்திக்கும் போது எனக்கு இருக்கும் ஆனந்தம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று. அப்படியான ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது தான் கமரோன் சந்திப்பும். வெறுமனே ஆனந்தம் மட்டுமல்லாது ஒரு அதிர்ச்சசியும் கூட நவம்பர் மாதம் 15 ம் திகதி யாழ்ப்பாணம் மிகப்பிரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது அதற்கும் மேலாக ஊடகவியாளர்கள் வேகமாக செயற்பட்டுக்கொண்டிருந்தோம்

சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர் ஒருவர் எங்கள் மண்ணுக்கு வருகின்றார் என்று அவருக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் நிலைகளை சொல்லவேண்டும் என்று காத்துக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் காணாமல் போனவர்களின் உறவுகள் கமரோனை சந்திப்பது தடை செய்யப்பட்டு மக்கள் பொலிஸாரால் தாக்கப்படட சம்பவமும் நடைபெற்றது.

முதலைமைச்சரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரையும் சந்தித்த கமரோன் யாழ் நூலகத்து மேல் வந்து அங்கு கூடியிருந்த மக்களை பார்த்தார் அது மக்களுக்கு ஒரு ஏமாற்றமாக இருந்தாலும் ஒரு நம்பிக்கை தரும் விடயமும் அங்கு நடந்தது. சனல் 4 ஊடகவியாளர் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை அந்த ஊடகவியாளரிடம் கையளித்த சில மணி நேரங்களில் அதனை கமரோனின் உதவியாளர் ஒருவர் வாங்கிச் சென்றமை எங்கு செல்லவேண்டுமோ அங்கு சென்றமை ஒரு திருப்தி அளித்த விடயமாக அமைந்தது.

இருந்தாலும் எமக்கு ஒரு கவலை என்னடா கமரோனை ஒரு போட்டோ எடுக்க முடியவில்லையே என்ற கவலை தான் அது இருந்தாலும் நாங்கள் சுன்னாகத்தில் உள்ள சபாபதி பிள்ளை முகாமுக்கு செல்ல முடிவு செய்தோம் யாழ் நகரில் இருந்து 20 நிமிட தூரத்துக்கு செல்ல வேண்டும். அதற்கிடையில் யாழில் உள்ள ஊடக நிறுவனம் ஒன்றுக்கு செல்வது பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் இருந்ததால் நாங்கள் அங்கு செல்லும் நேரம் சரியாக இருந்தது.

சிறிது நேரத்தில் பிரதமரின் வாகனம் வந்து நின்ற போது எங்களுக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி , முதலமைச்சருடனான சந்திப்பு, ஊடக நிறுவனம் ஒன்றிக்கு விஜயம் எல்லாமே கோட் சூட்டோடு நடைபெற்றது யாழ் நகரில் இருந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமுக்கு வரும் போது சாதாரணமாக செட், ஜீன்ஸ்ஸோடு வந்தது எங்களுக்கு முதல் அதிர்ச்ச்சி 20 நிமிட போக்கு வாரத்தில் உடைகள் மாற்றப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அவருடன் வந்தவர்கள் உறுதி செய்த பின்னர் வாகனத்தை விட்டு இறங்கியவரை பிரிட்டன் தூதரகத்தில் பணியாற்றும் முஸ்லீம் சகோதரி ஒருவர் மொழி பெயர்ப்பாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார்.வழமையாக வெளிநாடடவர்கள் வரும் போது வடிவான ஒரு வீட்டை தெரிவு செய்வது காட்டுவது தான் அரச அதிகாரிகளின் வேலையாக இருந்தது அதே வேலையை கமரோனுக்கும் காட்ட முற்பட்ட போது அதனை அவர் நேரடியாக மறுத்து நானே சென்று பார்க்கிறேன் என்று அந்த நலன்புரி நிலையத்தை பார்வையிடடார்.

வீட்டு வாசல்களில் நின்ற மக்களை கையெடுத்து கும்பிட்டு "எவ்வளவு காலம் இங்கு வாழ்கிறீர்கள்" " உங்கள் வீடு எங்கே" " அங்கே இப்போது யார் இருக்கிறார்கள் " என்ற பல்வேறு வினாக்களை வினாவியவாறு அந்த நலன்புரி நிலையத்தை வலம்வந்தார்.

எதிரே ஒரு வயதான தாய் தடி ஒன்றை ஊண்டி வருவதை கண்ட கமரோன் அந்த தாயை கட்டி அணைத்த போது தாய் கையில் வைத்திருந்த தடி கீழே விழுந்த போது அதனை குனிந்து எடுத்து செல்வீசில் காலை இழந்த அந்த தாயின் காலை தொட்டுப்பார்க்கும் போது உண்மையில் எமக்கு மெசிலிர்த்து போனது.

தொடர்ந்து ஒரு வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்றார் கமரோன் அவருக்கு பின்னால் செல்ல முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதமரின் உதவியாளர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களின் வீட்டு முற்றத்தில் நின்று கொண்டு அவர்களின் துன்பங்களை கேட்டறிந்தவர் திடீர் என்று வீட்டுக்குள் சென்று விட்டார் அங்கு மக்கள் வாழும் குடிசைகளை பார்த்த அவர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90

இதுவரை எந்த அரசியல் வாதிகளோ அரச அதிகாரிகளோ செல்லாத எங்கள் மக்களின் வீடுகளுக்கு கமரோன் சென்றது அந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கையை தந்தது. இவற்றுக்கு மேலாக நலன்புரி நிலையத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து உலகத்துக்கு அங்கு வாழும் மக்களின் நிலைமைகளை சொன்னதில் அவர் ஒரு உயந்த மனிதர் என்பதை காட்டி நிக்கிறது.

விடைபெறும் நேரம் அவருக்கு முன்பாக வந்து கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை அனைத்து அவர்களை நலன் விராசரித்து மகிழ்ந்தமை இன்றும் என் மனக்கண்ணில் படமாக ஓடுகிறது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90

 

இன்று எத்தனை அரசியல் தலைவர்கள் மக்களுக்காக சேவை செய்கிறார்கள் எல்லாமே ஊடக அரசியலாக இருக்கிறதே தவிர மக்கள் நலன் சார்ந்த அரசியலாக இல்லை என்பதே இன்று எமக்கிருக்கும் கவலை ஒரு தலைவன் விடை பெற்று செல்லும் போது அவனுக்காக மக்கள் அழுகிறார்கள் என்றால் அவன் அந்த மக்களின் மனங்களின் நீங்காத இடத்தில் இருந்து விட்டுச்செல்கிறான் என்று அர்த்தம்.

எப்ப இவன் தொலைந்து போவான் என்ற சிந்தனை மக்கள் மத்தியில் இருக்கும் என்றால் அவன் மக்களை நன்றாக ஏமாற்றி இருக்கிறான் என்று அர்த்தம் இன்று எங்கள் அரசியல் தலைவர்கள் அப்படி தான் மக்கள் மனங்களில் இருக்கிறார்கள் மாமியார் வீட்டுக்கு பண்டிகைக்கு வந்து போகும் மருமகன் போல தேர்தல் காலத்தில் மட்டும் மக்களிடம் வந்து வாக்குப்பிச்சை கேட்டும் அரசியலாக தான் எங்களின் அரசியல் இன்றும் இருக்கிறது.

வலிகாமம் வடக்கில் இருந்த இடம்பெயர்ந்த மக்கள் எந்ததெந்த நலன்புரி நிலையங்களில் இருக்கிறார்கள், அவர்கள் எப்படியான வீடுகளில் இருக்கிறார்கள் என்று கூட தெரியாத பல அரசியல் தலைவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் இந்த நிலை மாறவேண்டும் விடுதலை போராடடம் எப்படி மக்கள் மயப்படுத்தப்படட போராட்டமாக மாற்றம் பெற்றதோ அதே போன்று அரசியலும் மக்கள் மயப்படுத்தப்பட்டு மக்களுக்கான அரசியலாக மாற்றப்பட வேண்டும் வெறுமனே கட்சி அரசியலாக மட்டும் இருந்து விட்டால் தமிழ் மக்களின் நிலை இன்னும் மோசமானதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

டேவிட் கமரோனின் வடக்கிற்கான விஜயம் எமக்கு பல படிப்பினைகளை தந்தது போல அவருடைய பதவி விலகலும் பல படிப்பினைகளை எமக்கு தந்திருக்கிறது அவற்றில் இருந்து நாங்கள எத்தனை பெற்றுக்கொள்ள போகிறோம் எனபது தான் எமக்கு முன்னாள் இருக்கும் கேள்வியாக இருக்கிறது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90

 

http://www.tamilwin.com/politics/01/111229

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.