Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலை மோதலுக்கு கண்டிய நடனம் மாத்திரமா காரணம் ?

Featured Replies

யாழ். பல்கலை மோதலுக்கு கண்டிய நடனம் மாத்திரமா காரணம் ?

யாழ். பல்கலை மோதலுக்கு கண்டிய நடனம் மாத்திரமா காரணம் ? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மயூரப்பிரியன்:


யாழ்.பல்கலை கழகத்தின் விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கண்டிய நடனம் ஆடப்பட்டதால் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகின.

அதில்  தனியே நிகழ்வில் கண்டிய நடனம் ஆடப்பட்டது தான் மோதலுக்கு காரணமா  எனும் சந்தேகம் தற்போது எழுந்துள்ளது , ஏனெனில் மோதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள் தனியே விஞ்ஞான பீட மாணவர்கள் மாத்திரமல்ல. முகாமைத்துவம் பீட மாணவர்களும் மோதலில் ஈடுபட்டு உள்ளனர்.

ஊடகங்களில் வெளியான புகைப்படம் ஒன்றில் மாணவன் ஒருவன் கையில் கொட்டான் ஒன்றினை தூக்கி பிடித்து எதிரில் உள்ளவரை அச்சுறுத்து போன்று உள்ளான். அந்த மாணவன் முகாமைத்துவ பீட சிங்கள மாணவன் ஆவான். அவனுக்கு அருகில் உள்ள ஏனைய மாணவர்களும் முகாமைத்துவபீடத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மோதல் நடைபெற்ற தினம் சனிக்கிழமை ஆகும். அன்றைய தினம் தனியே விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மாத்திரமே பல்கலைகழகத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் சனிக்கிழமை ஆகையால்  ஏனைய பீடங்கள் மூடப்பட்டு இருந்தன.

அந்நிலையில் விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் , விஞ்ஞான பீட மாணவர்கள் தவிர்ந்து முகாமைத்துவ மாணவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் உட்பட. அதற்கு அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளே சாட்சி.

மாணவர்களின் கண்டிய நடனம் ஆரம்பிக்க முயலும் போதே மாணவர்கள் மத்தியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். அவ்வேளை பல மாணவர்கள் கைகளில் தடிகள் பொல்லுகள் காணப்பட்டனர்.

மோதல் ஆரம்பிக்கப்பட்ட உடனையே எவ்வாறு மாணவர்கள் கைகளில் தடிகள் பொல்லுகள் வந்தன ? எனவே மோதல் ஏற்படும் என்பது அறிந்து மாணவர்கள் தயார் நிலையில் இருந்து உள்ளனர்.

இதேவேளை கடந்த ஏப்பிரல் மாதம் 5ம் திகதி இரவு யாழ்.பல்கலைகழக ஆண்கள் விடுதிக்குள் காரில் வந்த மூவர் அத்துமீறி உள்நுழைந்து தாம் தென்னிலங்கை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் , தாம் தமது கட்சி பரப்புரை கூட்டத்தை மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ள போவதாக தெரிவித்து உள்ளனர்.

அதற்கு விடுதி காவலாளிகள் அனுமதிக்காததால் , தாம் தனியே அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மாத்திரமல்ல இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் எனவும் கூறி காவலாளியை அச்சுறுத்தியுள்ளனர்.

அதனை அடுத்து அது குறித்து காவலாளி பல்கலைகழக நிர்வாகத்திற்கு அறிவித்ததுடன் கோப்பாய் பொலிசாருக்கும் அறிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிசார் அவர்களுடன் உரையாடி விட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காது விட்டு சென்று இருந்தனர். அதன் பின்னர் அங்கு வந்த விரிவுரையாளர்கள் இரவு நேரத்தில் மாணவர் விடுதியில் மாணவர்களை சந்திக்க முடியாது என கூறி அவர்களை திருப்பி அனுப்பி இருந்தனர்.

அது தொடர்பில் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,

விடுதியில் பிரச்சனையை ஏற்படுத்திய மூவரில் இருவர் பல்கலைகழக மாணவர்கள் எனவும் , அவர்களில் ஒருவர் பல்கலைகழகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் எனும் காரணத்தால் பல்கலைகழக நிர்வாகத்தால் தண்டிக்கப்பட்டவர் எனவும் மூன்றாம் நபர் பல்கலைகழகத்தை சாராதவர் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த சம்பவம் கடந்த ஏப்பிரல் மாதம் நடைபெற்றது. மாணவர்கள் விடுதிக்குள் இரவு நேரம் அத்துமீறி உள்நுழைந்து தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் பரப்புரையை மாணவர்கள் மத்தியில்  மேற்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது ? அந்த பரப்புரையின் நோக்கம் என்னவாக  இருந்து இருக்கும் ? போன்ற விடயங்களை தற்போது சிந்திக்க வேண்டி உள்ளது.

பல்கலைகழகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பல்கலைகழக நிர்வாகத்தினால் ஆணைக்குழு ஒன்று நியமிப்பது என ஞாயிற்றுக் கிழமை துணைவேந்தர் தலைமையில் பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்கள் உடனான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு நியமிக்கப்படும் ஆணைக்குழுவானது , தனியே சனிக்கிழமை மாத்திரம் நடைபெற்ற மோதல் தொடர்பிலும் , யார் மோதலை ஆரம்பித்தார்கள் , யார் யார் மோதலில் ஈடுபட்டார்கள் என்பதனை விசாரணை செய்து கண்டுபிடிபதுடன் மாத்திரம் நின்று விடாது.

மோதலுக்கான காரணம் மற்றும் இனிவரும் காலங்களில் இரு தரப்பு மாணவர்கள் மத்தியில் மோதல்கள் உருவாகவிடாது தடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த மோதலுக்கு பின்னணியில் இருந்து செயர்ப்பட்டவர்கள் யார் ? மாணவர்கள் மத்தியில் தமது சுயலாப அரசியலை எவரேனும் திணிக்க முற்படுகின்றார்களா என்பது தொடர்பில் விசாரணை நடாத்தி அவ்வாறானவர்களை இனம் காண வேண்டும்.

அதன் மூலமே இனிவரும் காலங்களில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் இடம்பெறாது தடுக்க முடியும். இல்லாவிடின் இவ்வாறு இரு தரப்பினரும் அடிக்கடி தமக்குள்ள மோதுபடுவார்கள்.

இதுவரை காலமும் தமிழ் மாணவர்கள் தமக்குள்ளும் , சிங்கள மாணவர்கள் தமக்குள்ளும் மோதிக் கொண்ட சம்பவங்கள் யாழ்.பல்கலைகழகத்தில் பல இடம்பெற்று உள்ளான. ஆனால் தற்போது  தமிழ் சிங்கள மாணவர்கள் மோதிக்கொண்டு உள்ளார்கள். இந்த மோதலே யாழ்ப்பாண பல்கலைகழகத்தினுள் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான இறுதி மோதலாக இருக்க வேண்டும்.இனிவரும் காலத்தில் இவ்வாறன மோதல் இடம்பெறாமல் இருக்க அனைத்து தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்.  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134162/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.