Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரியோ 2016 | ஒலிம்பிக் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக்

31 ஆவது ஒலிம்பிக் போட்டி பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை 4.30 மணியளவில் தொடங்கியது.

தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைப்பெற்றன.

 

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

 

 

 

...

  http://cdn.virakesari.lk/uploads/medium/file/14486/36EA4F2C00000578-3726239-image-a-31_1470437980821.jpg

...

...

http://www.virakesari.lk/collections/95

  • Replies 145
  • Views 19.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக்கில் ஈரானின் கொடியை ஏந்திய நம்பிக்கை ஒளி

l.jpg

    உலகின் மிகப்பெரிய திருவிழா தொடங்கிவிட்டது. ஜிகா வைரஸ், பொருளாதார வீழ்ச்சி, கிரிமினல் குற்றங்கள் போன்ற அனைத்து பிரச்னைகளையும் கடந்து வெற்றிகரமாக மரக்கான மைதானத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவிட்டது பிரேசில். கண்கவர் கலைநிகழ்ச்சிகளோடு நடந்த வண்ணமயமான துவக்க விழா அனைவரையும் ஈர்த்தது. ஆனால் மொத்த அரங்கமும் அதிசயித்த தருணம் நாடுகளின் அணிவகுப்பின்போது நடந்தது. உடல் குறைபாடுகள் சாதிப்பதற்கு எந்த வகையிலும் தடையில்லை என்று ஒவ்வொருவருக்கும் புரிய வைத்தது அவ்வணிவகுப்பு.

    ஒரு காலத்தில் பெண்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கே அனுமதிக்காத ஈரான் நாட்டின் தேசியக் கொடியை ஒரு பெண் ஏந்தி வந்தது இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.  அதையும் தாண்டி தேசியக் கொடியை ஏந்தி வந்த அப்பெண் மாற்றுத்திறனாளி என்பது தான் மேலும் சிறப்பு. வில்வித்தையில் பாராலிம்பிக் சாம்பியனான சாரா நெமாடி தன் தாய்நாட்டின் தேசியக் கொடியை ஏந்தி வரும் மிகப்பெரிய கவுரவத்தைப் பெற்றார்.

    டேக்வாண்டோவில் சாதித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று நினைத்த நெமாடியின் வாழ்க்கையில் பேரிடி விழுந்தது. ஓர் கார் விபத்தால் இளம் வயதிலேயே இவரது கால்கள் செயலிழந்தன. கால்களே மூலதனமான டேக்வாண்டோ விளையாட்டில் பிளாக் பெல்ட் வாங்கிய அந்த வீராங்கனையால் இனி அவ்விளையாட்டைப் பற்றி நினைத்தே பார்க்க முடியாத நிலை. மனதில் உறுதி கொண்ட ஒரு பெண் பூகம்பமே வந்தாலும் இடுக்குகளுக்கு இடையே பூவாய் பூப்பாள். அப்படித்தான் மீண்டெழுந்தார் நெமாடி. அவர் இழந்தது கால்களின் செயல்பாட்டை மட்டும் தான். ஆனால் நம்பிக்கையை அல்ல. டேக்வாண்டோவை விட்டுவிட்டு வில்வித்தையை தேர்வு செய்தார் நெமாடி. அடுத்த ஆறே மாதங்களில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தினார்.

l2.jpg

 

    ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்ற அவரது வேட்கை அவரை தீயாய் எரிய வைத்தது. உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு இணையாக பட்டையைக் கிளப்பிய நெமாடி, 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தினார். தனிநபர் ரீ-கர்வ் பிரிவில் தங்கமும், குழு பிரிவில் வெண்கலமும் வென்று அசத்திய நெமாடி அதோடு நின்றுவிடவில்லை. எதற்காக பாராலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும். பிரச்சனை காலில் தானே. தனது குறியிலும் மனதிலும் பிரச்சனைகள் ஏதும் இல்லையே. பிறகு என்ன? தனது குறையை தூக்கி எறிந்தார். இதோ ரியோ ஒலிம்பிக்கில் உலகின் தலைசிறந்த வில்வித்தை வீராங்கனைகளுக்குப் போட்டியாக களமிறங்குகிறார் இந்த இரும்புப் பெண்.

    வலிகளைத் தாண்டி யாராலும் சாதிக்க முடியும் என்பதற்கு நெமாடி மிகப்பெரிய உதாரணம். கடந்த ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று அனைவரையும் அசத்தியது போல் இம்முறை பிரேசிலைக் கலக்கக் காத்திருக்கிறார் நெமாடி. வெற்றி என்பது பதக்கம் வெல்வது மட்டுமல்ல. வாழ்க்கையோடு போராடி வலிகளை வென்று இந்த மகத்தான நிலையை அடைந்திருப்பதே ஒரு மிகப்பெரிய வெற்றி தான். அந்த வகையில் இந்த ஒலிம்பிக்கின் முதல் வெற்றியாளர் நெமாடி தான்!

http://www.vikatan.com/news/sports/66879-zahra-nemati-carried-the-iranian-flag-into-the-maracana-stadium.art

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய டி லாமாவுக்குள் மறைந்திருக்கும் சோகம்!

ரியோ ஒலிம்பிக் போட்டியில், கால்பந்து ஜாம்பாவன் பீலேதான் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் விழாவைத் தொடங்கி வைப்பதாக இருந்தது.  ஆனால் பீலேவால் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலையில் பிரேசில் முன்னாள் டென்னிஸ் வீரர் கஸ்டாவோ கியூர்ட்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 

fire.jpg

இந்த கஸ்டாவோ, பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியன். ரஃபேல் நடாலுக்கு முன்னர் களிமண் தரையில் கட்ஸோவாதான் அசைக்க முடியாதவராக வலம் வந்தார். .கடந்த  1997, 2000, 2001ம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றவர். 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் மற்றும் 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தொடர்களில் பிரேசில் டென்னிஸ் அணியில் இடம் பெற்றிருந்தார்.

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 2000ம் ஆண்டில் 43 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். டென்னிஸ் வாழ்க்கையில் 28 பட்டங்களை வென்றுள்ளார். அதில் 20 ஒற்றையர் பட்டங்களும் 8 இரட்டையர் பட்டங்களும் அடங்கும். கடந்த 2012ம் ஆண்டு 39 வயது கஸ்டோவா சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால்  ஹால் ஆப் ஃபேமில் சேர்க்கப்பட்டார். இந்த பெருமையை  பெற்ற முதல் பிரேசில் டென்னிஸ் வீரர் இவர்தான்.

ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் மாரத்தான் வீரர் கார்டிரோ டி லாமா ஏற்றி வைத்தார். கடைசி நேரத்தில் பீலே உடல் நலக் கோளாறு காரணமாக ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதால்,  அவருக்கு பதிலாக டி லாமாவுக்கு இந்த வாய்ப்பு வாங்கப்பட்டது.

                                      

விளையாட்டு உலகில் பீலே போல டி லாமா அறியப்பட்டவர் இல்லை. ஆனால் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி லாமா , சந்தித்த இடையூறு மட்டும்  வெகு பிரபலம்.  ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 50 மீட்டர் மாரத்தானில் தங்க பதக்கத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் டி லாமா. முதல் 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு  அவர்தான் முதலிடத்தில் இருக்கிறார். அப்போதுதான் அந்த இடையூறு நிகழ்கிறது.

மது அருந்திய  பார்வையாளர் ஒருவர், டி லாமாவின் குறுக்கே புகுந்து தடுத்து அவரை கரையில் தள்ளுகிறார். இதன் காரணைமாக அவரால், தொடர்ந்து 30 விநாடிகள் வரை ஓட முடியாத நிலை ஏற்ப்டுகிறது. இதனால் டி லாமாவின் தங்கக் கனவு பறி போனது. முடிவில் 2  மணிநேரம் 12 நிமிடம் 11 விநாடிகளில் இலக்கினை கடந்த அவரால், வெண்கலப் பதக்கத்தையே வெல்ல முடிந்தது. முதலிடத்தை பிடித்த இத்தாலி வீரர் 2 : 10: 55 விநாடிகளிலும் 2வது இடத்தை பிடித்த அமெரிக்க வீரர் 2:11:29 விநாடிகளிலும் இலக்கை கடந்தனர்.

மறுபடியும் இந்த  போட்டி நடத்த வேண்டுமென பிரேசில் கோரிக்கை விடுத்தது. ஆனால் பயன் இல்லை. எனினும் ஸ்பிரிட் ஆப் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் விருதை வழங்கி அப்போது டி லாமாவை கௌரவித்தது ஒலிம்பிக் கவுன்சில்.

மது அருந்திய ஒருவரால், ஒரு வீரரின் ஒலிம்பிக் கனவே பாழகிப்போனது. அப்போது உலகமே டி லாமாவுக்காக பரிதாபப்பட்டது. அந்த மனக் காயத்தை ஆற்றும் வகையில், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைக்கும் பெருமை கிடைத்துள்ளது இப்போது.

http://www.vikatan.com/news/sports/66881-the-inspiring-reason-de-lima-lit-the-olympic-flame.art

  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா: 10 கவன ஈர்ப்பு அம்சங்கள்!

 

  • ரியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பு. | படம்: ராய்ட்டர்ஸ்
    ரியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பு. | படம்: ராய்ட்டர்ஸ்
  • ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா கோலாகலம்.
    ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா கோலாகலம்.
  • ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா கோலாகலம்.
    ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா கோலாகலம்.

31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவில், இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

இன்று தொடங்கி மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.

உலக வரலாற்றில் முதல் முறையாக அகதிகள் ஓர் அணியாக இணைந்து ஒலிம்பிக்கில் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து 118 பேர் கலந்து கொள்கின்றனர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிக அளவிலான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை.

ஒலிம்பிக் தொடக்க விழாவின் கவனிக்கத்தக்க முக்கிய 10 அம்சங்கள்:

* நாட்டின் பொருளாதார சரிவு, விலையேற்றம், ஜிகா வைரஸ் உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு நடுவே ஒலிம்பிக் ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள், ரியோ டி ஜெனிரோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் தொடங்கின. தொடக்க விழாவில் சுமார் 5 ஆயிரம் நடன கலைஞர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவை பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருந்தன.

* ஒலிம்பிக்கின் பாரம்பரிய கருப்பொருளான அமைதி, இம்முறை மரங்கள் குறித்த விழிப்புணர்வாக மாறியிருந்தது தொடக்க விழாவில், ''பூமிக்கு தீங்குசெய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினால் மட்டும் போதாது; இயற்கையை குணப்படுத்த இதுவே சரியான நேரம். மரங்களை நடுவோம். மானுடத்தையும், இயற்கையையும் காப்பாற்றுவோம். இதுதான் நம்முடைய ஒலிம்பிக் செய்தி'' என்று கூறப்பட்டது.

* பிரேசில் விழா ஏற்பாட்டாளர்கள் தங்களின் உணர்வுபூர்வ விளையாட்டான கால்பந்தை ஒதுக்கி, பருவநிலை மாற்றத்தையும் இயற்கை வளங்களின் சிதைவையும் விழாவின் மையக்கருவாக மாற்றியிருந்தனர். பிரேசிலின் பாரம்பரிய நடனமான சம்பா விழாவில் கோலாகலத்துடன் அரங்கேறியது.

* விழா 22 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதல் 11 பகுதிகளில் பிரேசிலைப் பற்றியும், அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. முதல் 45 நிமிடங்கள் பிரேசில் வரலாறும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அதன் நிலை பற்றியும் கூறப்பட்டது. வடகிழக்கு பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளைப் பற்றியும் தகவல்கள் பரிமாறப்பட்டன. பின்னர் சமகாலத்திய பிரேசிலின் கட்டமைப்பும், அதன் நகரமயமாக்கலும் கூறப்பட்டன.

* அடுத்ததாக வீரர்கள் அணிவகுப்பு தொடங்கியது. ஒலிம்பிக்கின் பிறப்பிடம் கிரேக்கம் என்பதால் அந்நாட்டினர் முதல்வரிசையில் கொடியேந்திச் சென்றனர். அதைத் தொடர்ந்து மற்ற நாட்டினர் அணிவகுக்க கடைசியாக போட்டியை நடத்தும் பிரேசில் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் சென்றனர். இந்திய அணி 95-வது நாடாக அணிவகுப்பில் பங்கேற்றது. துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தேசியக்கொடியை ஏந்திச் சென்றார்.

* இந்திய வீரர்கள் அணிவகுப்பில் 70 வீரர்களும், 24 அதிகாரிகளும் கலந்துகொண்டனர். வீரர்கள் கடல் நீல வண்ண கால்சட்டையும், மேல்சட்டையும் அணிந்திருந்தனர். வீராங்கனைகள் பாரம்பரிய புடவையையும், நீல மேல்சட்டையும் அணிந்திருந்தனர். தனது 7-வது ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் லியாண்டர் பயஸ், மக்கள் கூட்டத்தில் உற்சாகத்துடன் காணப்பட்டார். பேட்மின்டன் வீராங்கனைகள் ஜ்வாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா மற்றும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகரையும் காண முடிந்தது.

* ஸ்பானிய, பிரிட்டிஷ் நாடுகளின் அணிவகுப்பு, பிரபல வீரர்களான ரஃபேல் நடால் மற்றும் ஆண்டி முர்ரேவின் முன்னெடுப்போடு களைகட்டியது. 60 உறுப்பினர்களைக்கொண்ட ஜமைக்கா குழு, உலக சாம்பியனான உசேன் போல்ட் இல்லாமலேயே நடந்து சென்றது. நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தலைமையில், 500 உறுப்பினர்களோடு அமெரிக்க அணி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிவப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் அணிவகுத்துச் சென்றது.

* வீரர்களின் அணிவகுப்புக்குப் பிறகு, சர்வதேச ஒலிபிக் கவுன்சில் தலைவரும், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனுமான தாமஸ் பாச் நீண்ட உரையாற்றினார். அதில், ''ஒலிம்பிக் அமைதியை வளர்க்கிறது. நாம் நிலையில்லாத, அவ நம்பிக்கை கொண்ட, நெருக்கடியான உலகத்தில் வாழ்கிறோம். உலகின் தலைசிறந்த 10,000 வீரர்கள் ஒற்றை ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி, தங்களின் உணவையும், உணர்வையும் பகிர்ந்து வாழ்கின்றனர். இந்த ஒலிம்பிக் உலகில், எல்லோருக்கும் ஒரே விதிதான். எல்லோரும் சமம் என்பதே அது.

இந்த விழாவில் புதிதாக இணைந்துள்ள அகதிகள் ஒலிம்பிக் அணியை முழுமனதோடு வரவேற்கிறேன். நீங்கள் உலகில் இருக்கும் அனைவருக்கும் இதன்மூலம் செய்தி அனுப்புகிறீர்கள். நீங்கள் சமுதாயத்துக்கு சிறந்த பங்கை அளித்திருக்கிறீர்கள்'' என்று குறிப்பிட்டார்.

* ஒலிம்பிக் விளையாட்டுக்கள் குறித்த முறையான அறிவிப்புக்குப் பிறகு, பார்வையாளர்களின் பலத்த கரவொலிக்கிடையில், முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரரும், மூன்று முறை ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் பெற்ற பிரேசில் வீரருமான கஸ்டாவோ குயர்டன் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திவந்தார்.

* 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் மாரத்தான் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற பிரேசில் வீரரான வெண்டர்லி டி லிமா, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவதாக இருந்த கால்பந்து லெஜண்ட் பீலே உடல்நிலையைக் காரணமாகக் கொண்டு விலகியது குறிப்பிடத்தக்கது.

> ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் மிகப்பெரிய அணியும் இதுதான். அதன் விவரம் > ரியோ ஒலிம்பிக்: இந்திய வீரர்களின் களம் | தமிழக நட்சத்திரங்கள்

http://tamil.thehindu.com/sports/ரியோ-ஒலிம்பிக்-தொடக்க-விழா-10-கவன-ஈர்ப்பு-அம்சங்கள்/article8952492.ece?homepage=true

  • தொடங்கியவர்

'நீங்கள்தான் ஒலிம்பிக்கின் அடையாளம்!'

ரியோ ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தொடக்க விழா நிகழ்ச்சியில் முதன்முறையான நாடிழந்தவர்கள் அணியும் பங்கேற்றது. ரியோவில் இன்று நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில், நாடிழந்தவர்கள் அணியில் இடம் பெற்றிருந்த வீரர் வீராங்கனைகள் அணி வகுப்பில் கலந்துகொண்ட போது, அரங்கமே கரகோஷம் எழுப்பி அதை வரவேற்றது. 

ris.jpg

 

நாடிழந்தவர்கள் அணியில் மொத்தம் 10 வீரர் - வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். அதில்  யூஸ்ரா மெர்டினி, என்ற சிரிய நீச்சல் வீராங்கனை மிகவும் பிரபலமானவர். சிரியாவில் இருந்து துருக்கி நாட்டுக்கு படகில் தப்பி செல்லும் போது தன்னுடன் பயணித்த 19 அகதிகளை காப்பாற்றிய பெருமைக்குரியவர். இவர் 200 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் பங்கேற்கிறார். காங்கோ மற்றும் பிறநாடுகளை சேர்ந்த சில வீரர்களும் நாடிழந்தவர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

தொடக்க விழாவில் பேசிய சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச், நாடிழந்தவர்கள் அணியில் இடம் பெற்றுள்ள வீரர் - வீராங்கனைகளுக்கு புகழாரம் சூட்டினார். அவர் பேசுகையில், '' நீங்கள்தான் இந்த ஒலிம்பிக்கின் அடையாளம், உலகம் முழுக்க பரவியுள்ள லட்சக்கணக்கான நாடிழந்தவர்களுக்கு உங்களால் பெருமை. அவர்களிடத்தில் நீங்கள் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளீர்கள். போர், வன்முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய்நாட்டை விட்டு நீங்கள் பிரிந்து சென்றாலும்,  ஊக்கம் நிறைந்த உங்களை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே பெருமை'' என்றார்.

http://www.vikatan.com/news/sports/66889-refugee-olympic-team-opening-ceremony.art

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் வில்வித்தை: தீபிகா குமாரி, லட்சுமிராணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

 
ரியோ ஒலிம்பிக்கில் இலக்கை குறிவைக்கும் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி. | படம்: ஏ.பி.
ரியோ ஒலிம்பிக்கில் இலக்கை குறிவைக்கும் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி. | படம்: ஏ.பி.

ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை போட்டியில் ரேங்கிங் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி, பாம்பய்லா தேவி, லட்சுமி ராணி பங்கேற்கின்றனர். இதில் தீபிகாகுமாரி 640 புள்ளிகள் பெற்று 20-வது இடத்தை பிடித்தார். பம்பய்லாதேவி 24-வது இடத்தையும், லட்சுமிராணி 43-வது இடத்தையும் பிடித்தனர். 3 பேரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இந்த சுற்றில் தீபிகாகுமாரி, ஜார்ஜியா வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதுகிறார். லட்சுமிராணி சுலோ வாக்கியாவின் அலெக்சாண்டராவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். ஆடவர் ரீகர்வ் தனிநபர் பிரிவு ரேங்கிங் சுற்றில் 5-வது இடத்தை பிடித்த இந்தியாவின் அட்டானு தாஸ் அடுத்த சுற்றில் நேபாள வீரர் ஜிட்பெகதூருடன் மோதுகிறார்.

மகளிர் அணிகள் பிரிவில் தீபிகாகுமாரி, லட்சுமிராணி, பம்பய்லோ தேவி ஆகியோரை கொண்ட இந்திய அணி ரேங்கிங் சுற்றில் 7-வது இடத்தை பிடித்தது. இந்திய அணி 1892 புள்ளிகள் எடுத்தது.

http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-வில்வித்தை-தீபிகா-குமாரி-லட்சுமிராணி-அடுத்த-சுற்றுக்கு-முன்னேற்றம்/article8953266.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் தனிநபர் படகுப்போட்டி காலிறுதியில் இந்திய வீரர் தத்து பபன் போகனால்

 

தத்து போகனால். | படம்: ராய்ட்டர்ஸ்.
தத்து போகனால். | படம்: ராய்ட்டர்ஸ்.

ரியோ ஒலிம்பிக் ஆடவர் தனிநபர் படகுப் போட்டியில் இந்திய வீரர் தத்து பபன் போகனால் காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.

தகுதிச் சுற்று போட்டியில் இவர் 3-வது இடத்தைப் பிடித்ததால் காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.

2,000 மீ படகுச் சவாரி தனிநபர் பந்தயத்தில் போகனால் 7:21.67 என்ற கால அளவில் கடந்து 3-வது இடம் பிடித்தார். முதல் 500 மீட்டர் தூரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தார் போகனால் ஆனால் 700 மீ தூரத்தை நெருங்கும் போது 2வது பாதையில் இருந்த மெக்சிகோ வீரர் யுவான் கார்லோஸ் காப்ரெரா (7:08.27) 2-ம் இடத்துக்கு முன்னேறினார்.

இதில் கியூபா வீரர் ஆஞ்செல் ஃபூர்னியர் ரோட்ரிக்ஸ் 7:06.67 என்ற கால அளவில் கடந்து முதலிடம் பிடித்தார்.

http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-தனிநபர்-படகுப்போட்டி-காலிறுதியில்-இந்திய-வீரர்-தத்து-பபன்-போகனால்/article8953243.ece?homepage=true

  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக்: அமெரிக்காவுக்கு முதல் தங்கம்

 
 
தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை திராஷர் நடுவில். வெள்ளி, வெண்கலம் வென்ற சீன வீராங்கனைகள். | படம்: ஏ.எஃப்.பி.
தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை திராஷர் நடுவில். வெள்ளி, வெண்கலம் வென்ற சீன வீராங்கனைகள். | படம்: ஏ.எஃப்.பி.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது அமெரிக்கா.

10மீ ஏர் ரைபிள் - துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில் அமெரிக்க இளம் வீராங்கனை வர்ஜினியா திராஷர் முதல் தங்கம் வென்று பெருமை சேர்த்தார்.

சீனாவின் டூ லி என்ற வீராங்கனையை வீழ்த்தினார் வர்ஜினியா திராஷர். அதாவது 208 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் திராஷர்.

சீனாவின் டூ லியிற்கு 207 புள்ளிகளுக்காக வெள்ளியும், சீனாவின் மற்றொரு வீராங்கனை யீ சைலிங் வெண்கலமும் வென்றனர்.

http://tamil.thehindu.com/sports/ரியோ-ஒலிம்பிக்-அமெரிக்காவுக்கு-முதல்-தங்கம்/article8953371.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

 
 
 
 
ரியோ ஒலிம்பிக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி: அயர்லாந்தை 3-2 என வீழ்த்தியது
 
ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெற்ற முதல் லீக்கில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. 15-வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி ரகுநாத் வாக்காலிகா கோல் அடித்தார்.

27-வது நிமிடத்தில் மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை ரூபிந்தர் பால் சிங் சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. 

அதன்பின்னர் கடுமையாக போராடிய அயர்லாந்துக்கு 45-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பில் அயர்லாந்து வீரர் ஜான் ஜெர்மைன் கோல் அடித்தார். அதன்பின் 49-வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங் மேலும் ஒரு கோல் அடித்து அணியை வலுவான முன்னிலை பெறச் செய்தார். அதன்பின்னர் 56-வது நிமிடத்தில் கானோர் ஹார்ட்டே ஒரு கோல் அடிக்க, இந்தியா 3-2 என முன்னிலையில் இருந்தது.

கடைசி நான்கு நிமிடத்தில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது. இந்தியா 8-ந்தேதி ஜெர்மனியையும், 9-ந்தேதி அர்ஜென்டினாவையும், 11-ந்தேதி நெதர்லாந்து அணியையும், 12-ந்தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/06214824/1031202/India-outplay-Ireland-3-2-in-hockey-Group-B-opener.vpf

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபாரத் தொடக்கம்

 

 
 
இடி போன்ற அடியால் 2-வது கோலை அடித்த இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங். | படம்: ஏ.எஃப்.பி.
இடி போன்ற அடியால் 2-வது கோலை அடித்த இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங். | படம்: ஏ.எஃப்.பி.

ரியோ ஒலிம்பிக் போட்டி ஆடவர் ஹாக்கி ‘பி’பிரிவு போட்டியில் அயர்லாந்து அணியை இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரத் தொடக்கம் கண்டது.

இந்திய அணியில் ரகுநாத் முதல் கோலையும் பிறகு ருபீந்தர் பால் 2 கோல்களையும் பெனால்டி முறையில் அடித்தனர். ஆனால் அயர்லாந்து அணியினர் கடைசி 15 நிமிட நேர ஆட்டத்தில் இந்திய அணியை கதிகலக்கினர் என்றே கூற வேண்டும், இந்த கடைசி 15 நிமிட ஆட்டத்தில்தான் 2-வது கோலை பெனால்டி முறையில் அடித்த அயர்லாந்து 3-வது கோலுக்காக கடும் நெருக்குதல் கொடுத்தது, இந்திய அணி இதனை ஆக்ரோஷமாக எதிர்கொள்ளாமல் சற்றே தொய்வு காட்டியதால் வந்த விளைவு, இதில் 3-வது கோல் விழுந்து விடும் என்ற அளவுக்கு அயர்லாந்து சார்பில் தொடர் பெனால்டி கார்னர்கள்! ஆனால் அயர்லாந்து வெளியில் அடித்ததும், ஸ்ரீஜேஷ் ஒரு ஷாட்டை அற்புதமாகத் தடுத்ததும், மற்றபடி தடுப்பும் கோலாகாமல் தடுத்தன.

கடைசியில் கோல் கீப்பரையும் களத்தில் இறக்கி 11 வீரர்களும் களத்தில் இருந்தனர். ஆனால் ஆட்டம் முடிய 2 நிமிடங்களே இருந்தன, கவலைதரும் அயர்லாந்து ஆக்ரோஷத்தை இந்திய அணியினர் ஒருவாறாக முறியடித்து இறுதி விசில் அடித்தவுடன் கொண்டாடினர்.

முன்னதாக ஆட்டம் தொடங்கி 3-வது நிமிடத்திலேயே ஹர்மன்பிரீத் ஒரு அருமையாக மூவைச் செய்ய கோலுக்கு நெருக்கமாகச் சென்றனர். அயர்லாந்தும் சளைக்கவில்லை ஒரு ஷாட்டை அடுத்த 3-வது நிமிடத்தில் தூக்கி அடிக்க ஸ்ரீஜேஷ் தலைக்கும் மேல் சென்றது. அடுத்ததாக ஸ்ரீஜேஷ் கைகொடுக்க அயர்லாந்து கோல் முயற்சி வீணானது.

இப்படியே சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் இடது புறம் உத்தப்பா பந்தை அருமையாக எடுத்துச் சென்றார், ஆனால் அயர்லாந்து தடுப்பாட்டம் சம அளவில் சிறப்பாக அமைந்தது. முதல் கால் மணி ஆட்டத்தின் இறுதியில் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு வீணானது பினிஷிங் இல்லை, இதற்கு அடுத்தபடியான பீல்ட் கோல் வாய்ப்பையும் இந்தியா தவற விட்டது.

கடைசியில் அயர்லாந்து டி-வட்டத்துக்குள் இந்தியா நுழைய சர்தார் சிங் அடித்த ஷாட் அயர்லாந்து வீரர் காலில் பட்டது என்று ஒரு முறையீடு, வீடியோ ரெபரலில் உறுதியாக இந்தியாவுக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு. இதனையும் விரயம் செய்தது இந்தியா, ஆனால் மீண்டும் அயர்லாந்து வீரர் காலில் பட்டதாக நடுவர் தீர்ப்பளிக்க இன்னொரு பெனால்டி வாய்ப்பு உடனடியாகக் கிடைத்தது. இப்போது வந்த பெனால்டி கார்னர் ஷாட்டை ரகுநாத் மிக அருமையாக டிராக் பிளிக் மூலம் கோலாக மாற்றினார் இந்தியா 1-0 என்று முன்னிலை வகித்தது.

2-வது 15 நிமிட நேர ஆட்டம் தொடங்கியது, இந்திய கோல் பகுதியிலிருந்து நிகின் திம்மையாவுக்கு ஒரு பந்து தூக்கி அடிக்கப்பட கவர் செய்யாமல் இருந்த அவர் மிக வேகமாக இடது புறம் பந்தை எடுத்து சென்று அயர்லாந்து கோலுக்குள் நுழைந்தார். ஆனால் இவரது கடைசி பாஸை ரமந்தீப் சிங் கோலுக்குள் செலுத்த தவறினார்.

இந்நிலையில் லாங் பாஸுக்கு சென்ற அயர்லாந்து இந்தியப் பகுதிக்குள் தங்களது 2-வது கார்னரைப் பெற்றனர், ஆனால் வைடாக அடித்து விரயம் செய்தனர். இதற்கு அடுத்த படியாக இந்திய அணி அழுத்தம் கொடுத்து அயர்லாந்து கோல் பகுதிக்குள் நுழைந்து கடுமையாக ஆட்டம் காண்பிக்க அயர்லாந்து தவறு செய்தது இந்தியாவுக்கு பெனால்டி கார்னர். தற்போது ருபீந்தர் பால் சிங் அருமையாக அதனை கோலாக மாற்றினார்.

ரகுநாத் 15-வது நிமிடத்திலும் ருபிந்தர் பால் சிங் 27-வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றது.

சர்தார் சிங் இன்று அருமையாக ஆடினார், எஸ்.வி.சுனிலும் இவரும் ஒரு மூவில் அருமையாக கூட்டணி அமைத்து அயர்லாந்தை சிறிது படுத்தினர், மற்றபடிக்கு சுனிலுக்கு அமைதியான போட்டியாக இது அமைந்தது.

அதன் பிறகுதான் 45-வது நிமிடத்தில் ரகுநாத் இந்திய கோல் பகுதிக்குள் தவறிழைக்க அயர்லாந்து பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பெற்றது, அதனை அயர்லாந்தின் ஜெர்மைன் அதிரடி ஷாட்டாக ஸ்ரீஜேஷுக்கு வலது புறம் கோல் அடித்தார். இந்தியா 2 அயர்லாந்து 1.

4வது கால் மணி நேர ஆட்டம் தொடங்கி 3-வது நிமிடத்திலேயே இந்திய அணியினர் அயர்லாந்து பகுதிக்குள் ஊடுருவி பெனால்டி வாய்ப்பை பெற்றனர். இதனை மீண்டும் ருபிந்தர் பால் சிங் கிடைத்த சிறிய இடைவெளியில் தண்டர் போல்ட் அடி என்பார்களே அந்த வகையில் கோலிக்கு வலது புறம் கோலுக்குள் செலுத்தினார் இந்தியா 3-1 என்று முன்னிலை பெற்றது.

இதன் பிறகுதான் அயர்லாந்து தங்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கடுமையாக இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர், ஸ்ரீஜேஷ் இருமுறை தடுத்தார், அதில் ஒரு தடுப்பு நம்பமுடியாத தடுப்பாகும். இதில்தான் அயர்லாந்து தங்களது 8-வது பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றனர். இது கோலானது ஆனால் இந்தியா வீடியோ ரெபரலுக்குச் சென்றனர். அதாவது தடுக்கப்பட்ட பந்து மீண்டும் புல்டாஸாக சற்று உயரே வர அதனை அயர்லாந்து வீரர் மீண்டும் ஸ்டிக்கினால் கோலினில் தள்ளினார். இது அபாயகரமான ஷாட்டா என்ற கேள்வி எழ ரெபரல் சென்றது, ஆனால் கோல் என்று முடிவானது, அயர்லாந்து 2-3 என்று நெருக்கியது.

அதன் பிறகு 9-வது பெனால்டி வாய்ப்பையும் நெருக்குதல் மூலம் அயர்லாந்து பெற்றது ஆனால் இம்முறை இந்திய தடுப்பாட்டம் அவர்கள் 3-வது கோல் ஆசையை முறியடித்தது.

அடுத்ததாக சாம்பியன் ஜெர்மனி அணியுடன் கடினமான போட்டியில் இந்தியா விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3 கோல்கள் அடித்த பிறகே ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது, அயர்லாந்தை எழும்ப விட்டது மந்தமான ஆட்டத்தினால்தான், இதுவல்லாமல் வெறியுடன் கடைசி வரை ஆடியிருந்தால் அயர்லாந்து கடைசியில் நெருக்கடி கொடுக்க விடாமல் செய்திருக்கலாம். தடுப்பாட்டம் திடீரென மோசமானதே அயர்லாந்தின் 2-வது கோலுக்குக் காரணம்.

http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-ஹாக்கி-அயர்லாந்தை-வீழ்த்தி-இந்தியா-அபாரத்-தொடக்கம்/article8953432.ece?homepage=true

  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டி: பயஸ்-போபண்ணா இணை தோல்வி!

 

  • paes-bopanna.jpg

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்கள்  இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளின் முதல் சுற்றில், இந்தியாவின் பயஸ் - போபண்ணா இணை தோல்வியடைந்தது.

ரியோ டே ஜெனிரோவில் ஒலிம்பிக்  போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் பயஸ்-போபண்ணா இணை, போலிஷ் நாட்டின் மட்கோவ்ஸ்கி-குபோட் இணையுடன் விளையாடியது.

இந்த போட்டியில் 4-6. 6-7  என்ற செட் கணக்கில் பயஸ்-போபண்ணா இணை தோல்வியடைந்து, ரியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறியது.  

http://www.dinamani.com/sports/2016/08/06/ரியோ-ஒலிம்பிக்-ஆண்கள்-இரட்ட/article3566654.ece

  • தொடங்கியவர்

Screenshot%2048_zpsoyiaizrg.png

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒலிம்பிக்கில் அகதிகள் குழு: துரதிர்ஷ்டம் வாழ்வின் எல்லை இல்லையென நிரூபித்த யுஸ்ரா மதினி

 

ஒலிம்பிக்கில் அகதிகள் குழு: துரதிர்ஷ்டம் வாழ்வின் எல்லை இல்லையென நிரூபித்த யுஸ்ரா மதினி

2016 ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அகதிகள் அடங்கிய குழுவொன்று முதன்முதலாகப் பங்கேற்றுள்ளனர்.
 
விளையாட்டிற்கு சட்ட விதிமுறைகள் உண்டென்ற போதும், இனம், மதம், மொழிகள் எனும் பேதம் கிடையாது என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.
 
சிரியாவிலிருந்து ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்த யுஸ்ரா மதினி உள்ளிட்ட குழுவினரால் தற்போது புதியதொரு அத்தியாயம் பிறந்துள்ளது.
 
யுஸ்ரா மதினி உள்ளிட்ட குழுவினர் பல துன்பியல் மிக்க அனுபவங்களை எதிர்கொண்டதன் பின்னரே ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
 
சிரியாவின் டமஸ்கஸ் நகரைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான மதினியின் கனவுகள் துப்பாக்கி வேட்டுக்களின் சத்தங்களினால் நிராசையாகிப் போனது.
 
பல நாட்களில் எனக்கு பயிற்சி செய்யக் கிடைப்பதில்லை. ஒரு நாள் பயிற்சி செய்துவிட்டு அடுத்த நாள் செல்கின்ற பொழுது, நீச்சல் தடாகத்தையே அழித்திருப்பார்கள்
 
என தெரிவித்துள்ளார் யுஸ்ரா மதினி.
 
சிரியாவைச் சூழ்ந்துள்ள யுத்த மேகத்தினால் மதினி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.
 
இறுதியில் தம் உயிரையாவது காப்பாற்றிக்கொள்வதற்காக தாம் பிறந்த தேசத்தை விட்டுச் செல்வதைத் தவிர வேறு மார்க்கங்கள் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.
 
மதினி உள்ளிட்ட 22 பேர் படகு ஒன்றின் மூலம் தம் தேசத்தை விட்டுத் தப்பிச் சென்றபோது அரை மணித்தியாலம் கடப்பதற்கு முன்னரே இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இடைநடுவில் படகு கடலில் தத்தளித்தது.
 
படகில் இருந்த நால்வருக்கே நீச்சல் தெரிந்திருந்தது. கயிறு ஒன்றினால் படகினைக் கட்டி அதனை எனது கையில் சுற்றிக்கொண்டு இரண்டு கால்களையும் ஒரு கையையும் பயன்படுத்தி மூன்றரை மணித்தியாலங்கள் நீச்சலடித்து 20 பேரைக் காப்பாற்றினேன்.
 
ஆம், 20 பேரின் உயிரைக் காப்பாற்றியவர் தான் யுஸ்ரா மதினி.
 
அந்தப் படகினை மசிடோனேயாவின் லெஸ்போஸ் தீவை நோக்கிக் கொண்டு செல்ல மதினியால் முடிந்தது.
 
அதன் பின்னர், செர்பியா, ஹங்கேரி, ஓஸ்ரியா ஊடாக ஜெர்மனியை அடைந்த பொழுதிலும் தாம் எதிர்நோக்கிய
கடினமான அனுபவங்களினால் வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கிவிடவில்லை.
 
விடாமுயற்சியின் பயனாக 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மகளிருக்கான 100 மீற்றர் பட்டர்ஃப்ளை ஃப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பத்தை மதினி பெற்றுக்கொண்டார்.
 
சிரியாவைச் சேர்ந்த அகதிச் சிறுமியான யுஸ்ராவின் வாழ்க்கைக் கதை, துரதிர்ஷ்டம் வாழ்க்கையின் எல்லை இல்லை என்பதையும் கடினமான அனுபவங்களை வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான ஏணிகளாகப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்தி நிற்கின்றது.

http://newsfirst.lk/tamil/2016/08/ஒலிம்பிக்கில்-அகதிகள்-கு/

  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா: கண்ணைப் பறிக்கும் காட்சிகள்! (படங்கள்)

 


 

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி மரக்காணா மைதானத்தில் அதிகாலை அமர்க்களமாகத் தொடங்கியது. இதனையொட்டி, பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரம் விழாக்கோலம் பூண்டது.

31-வது ஒலிம்பிக் போட்டியான ரியோ ஒலிம்பிக், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு (பிரேசில் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி) தொடங்கியது.

தொடக்க விழா நடைபெற்ற மரக்காணா மைதானத்தில் 75 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தார்கள். 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற தொடக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

தொடக்க விழா புகைப்படங்கள்

 

CpJZMtBWAAERaDZ.jpg  

 

 

CpJaVIhWIAALD5z.jpg  

 

 

0EcPCIDO%20%281%29.jpg  

 

 

320qRDD2.jpg  

 

 

59vJwvrk.jpg

 

 

8dFDXEsr.jpg  

 

 

CpIHou8WYAA5wRi.jpg  

 

 

CpIhzx7XgAAZS6o.jpg  

 

 

CpJ0IrlXYAAX_cn.jpg  

 

 

fYP4Mi4M.jpg  

 

 

kgvdbyVd.jpg  

 

 

MhDzFmhP.jpg  

 

 

PWVamdM0.jpg  

 

 

CpJHzy5WgAArlF4.jpg  

 

 

http://www.dinamani.com/sports/2016/08/06/ரியோ-ஒலிம்பிக்-தொடக்க-விழா-க/article3566113.ece

  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளில் தங்கப் பதக்க வேட்டையை தொடங்கிய நாடுகள்

160807051939_olympics_brazil_640x360_reu

 

 ஆண்கள் சுதந்திரப் பாணி (ஃபிரி ஸ்டைல்) 400 மீட்டர் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற சுன் யாங் (சீனா), மார்க் ஹோர்டன் (ஆஸ்திரேலியா), கபிரியேல் டெட்டி (இத்தாலி)

பிரிசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாளில், ஆஸ்திரேலியா நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

400 மீட்டர் ஆண்கள் சுதந்திரப் பாணி (ஃப்ரீ ஸ்டைல்) நீச்சல் போட்டியில், போட்டியாளர் சுன் யாங் என்ற சீன வீரரை விட ஒரு வினாடிக்கு குறைவான நேரத்தில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவின் மார்க் ஹோர்டன் தங்கம் வென்றார்.

160807003914_beslan_mudranov_640x360_epa  60 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் தங்கம் வென்ற பெஸ்லான் முடிராநோவ் (ரஷியா)

சற்று நேரத்திற்கு பிறகு, 400 மீட்டர் பெண்கள் தொடர் நீச்சல் போட்டியில், உலக அளவில் பதிய பதிவோடு அமெரிக்காவையும், கனடாவையும் தோற்கடித்து ஆஸ்திரேலியா அணியினர் தங்கம் வென்றனர்.

ரஷியாவின் முதல் தங்கப்பதக்கத்தை 60 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் பெஸ்லான் முடிராநோவ் பெற்றிருக்கிறார்.

ஆண்கள் சாலை மிதி வண்டி போட்டியில் பெல்ஜியத்தின் கிரெக் வான் அவர்மயட் தங்கம் வென்றுள்ளார்.

அம்பு எய்தல் போட்டியில் தென் கொரிய விளையாட்டு வீரர்கள் அணியானது அமெரிக்கா மீது ஆதிக்கம் செலுத்தி தங்கம் வென்றிருக்கின்றனர்.

 

http://www.bbc.com/tamil/sport/2016/08/160807_fistday_gold_medal

  • தொடங்கியவர்

புதிய குற்றச்சாட்டுக்கள் எதிரொலி: புலனாய்வை சந்திக்கும் கென்ய விளையாட்டு அணி மேலாளர்

160625055121_brazil_anti-doping_lab_640x

 

பிரேசிலின் ரியோ டி ஜெனிரொ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், கென்ய தடகள விளையாட்டு அணியின் மேலாளருக்கு எதிரானப் புதியக் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யப் போவதாக அந்நாட்டின் ஊக்க மருத்து எதிர்ப்பு முகமை தெரிவித்திருக்கிறது.

லஞ்சம் வாங்கிக்கொண்டு , ஊக்க மருந்துகள் சோதனை அதிகாரிகள் மேற்கொள்ள இருக்கும் சந்திப்பை பற்றி கூறி, தடகள வீரர்களுக்கு மேஜர் மைக்கேல் ரோடிச் எச்சரிக்கை வழங்க முன்வருவதாகக் கூறும் , ரகசியமாக பதிவுச்செய்யப்பட்ட காணொளியை லண்டனின் சன்டே டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

160625054205_anti-doping_lab_file_512x28 

இத்தகைய முன்னறிவிப்பு, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பொருட்களை விளையாட்டு வீரர்கள் தங்களுடைய உடலில் இருந்து வெளியேற்றிவிட அவகாசம் அளிக்கும்.

தகவறாகச் செயல்படவில்லை என்று மறுத்துள்ள மேஜர் ரோடிச், இரகசிய நிருபர்கள் யார் என தெரிந்து கொள்ள விரும்பியதால் தான், அத்தகைய நிருபர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக கூறியிருக்கிறார்.

160617111828_worst_dopers_digihub_main_6 

கென்ய ஊக்க மருந்து பரிசோதனைகளில் குளறுபடிகள் தொடர்ந்து நிலவியதால், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் அந்நாடு பங்கேற்பது சிக்கலுக்குள்ளாகி, வெள்ளிக்கிழமை தான் பங்கேற்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.

http://www.bbc.com/tamil/sport/2016/08/160807_kenya

  • தொடங்கியவர்

பதக்கப் பட்டியல்

 

10zo9bs.png

  • தொடங்கியவர்

ஒலிம்பிக்: மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்ஸா ஜோடி தோல்வி

 

  • olimpics-sania.jpg

ஒலிம்பிக்கில் பெண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு போட்டியில் சானியா-பிராத்தனா ஜோடி, சீனாவின் ஷூகாய் பெங்-ஷூகாய் ஷங் ஜோடியிடம் 6-7,7-5, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா – பிரார்த்தனா தோம்ரே இணை சீனாவின் ஷுய் பென்ங், ஷுஆய் சங் இணையுடன் மோதியது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன ஜோடியை சானியா – தோம்ரே இணை இரண்டாம் சுற்றில் வீழ்த்தியது. இருப்பினும் 3ஆம் சுற்றில் பதிலடி கொடுத்து சீன இணை வெற்றி பெற்றது.

முதல் செட்டை 6க்கு7 என்ற கணக்கில் சீன இணை கைப்பற்றிய நிலையில், இரண்டாம் சுற்றில் 7க்கு 5 என்ற கணக்கில் சானியா இணை சமன் செய்தது. 3வது சுற்றில் எழுச்சி பெற்ற சீன இணை 5க்கு7 என்ற கணக்கில் சானியா ஜோடியை வீழ்த்தியது.

http://www.dinamani.com/latest_news/2016/08/07/ஒலிம்பிக்-மகளிர்-இரட்டையர்-/article3567800.ece

  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக்கில் பிரிட்டன் வீரர் ஆடம் பியாட்டி உலக சாதனை

 

  • Adam%20Peaty.jpg

பிரேசிலின் ரியோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் பிரிட்டன் வீரர் ஆடம் பியாட்டி, ஆண்கள் 100 மீ., பிரஸ்ட் ஸ்டோக் தகுதிச் சுற்றுப் போட்டியில்,  57.55 நிமிடங்களில் எல்லைக் கோட்டை எட்டி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் தனது முந்தைய உலக சாதனையான 57.92 நிமிடம் என்பதை அவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆடம் பியாட்டி கூறியது:

என்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ப்பது மிகவும் உற்சாகம் அளிக்கிறது. தகுதிச்சுற்றில் என்னுடன் எந்த பிரேசில் வீரரும் கலந்து கொள்ளவில்லை. நான் வேகமாக போட்டிகளில் கலந்து கொண்டு, விரைவாக போட்டியை முடித்து அடுத்த சுற்றுக்கு தயராகிவிட்டேன்.

ஆனால் ரசிகர்கள் திடீரென பாராட்டதுவங்கினர். எதற்கு பாராட்டுகிறார்கள் என முதலில் எனக்கு தெரியவில்லை. எங்கள் போட்டியாளர்களில் ஒரு பிரேசில் வீரரும் இல்லையே என யோசித்துக்கொண்டிருந்தேன். அதன்பின் தான் உலக சாதனை படைத்ததே எனக்கு தெரியும் இவ்வாறு ஆடம் பியாட்டி கூறினார்.

http://www.dinamani.com/latest_news/2016/08/07/ரியோ-ஒலிம்பிக்கில்-பிரிட்ட/article3567924.ece

  • தொடங்கியவர்

றியோ ஒலிம்பிக்: சீனாவைத் தோற்கடித்து தங்கம் வென்றது வியட்னாம்
 

article_1470566556-Olympic-Goldvinsuvaeaறியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற வண்ணமயமான வாணவேடிக்கைகள் நிறைந்த ஆரம் நிகழ்வுகளைத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இதில், பிரேஸில் நேரப்படி சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஆண்களுக்கான 10 மீற்றர் காற்றுத் துப்பாக்கி சுடும் போட்டியில், வியட்னாமுக்குத் தங்கம் கிடைத்தது.

ஒலிம்பிக் வரலாற்றில் வியட்னாமுக்குக் கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவென்பதோடு, இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஆசிய நாடொன்று பெற்றுக் கொண்ட முதலாவது தங்கமாகவும் அது அமைந்தது. இவற்றுக்கெல்லாம் மேலாக, வியட்னாமின் போட்டி நாடான சீனாவைத் தோற்கடித்து இந்தத் தங்கம் பெறப்பட்டமை என்பது, அந்நாட்டுக்கு மேலும் மகிழ்ச்சியை வழங்கியது.

41 வயதான ஹூவாங் ஸூவான் வின்ங் என்ற இராணுவ கேணலே, இந்தத் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்தவராவார். போட்டிகளை நடத்தும் பிரேஸிலின் பெலிப்பே அல்மெய்டா, இரண்டாமிடத்தையும் சீனாவின் பங் வெய், மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

வரலாறு படைத்த ஹூவாங் ஸூவானுக்கு, 100,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளதாக, வியட்னாமின் அரச ஊடகம் தெரிவித்தது. வருடாந்த சராசரி வருமானமாக 2,100 அமெரிக்க டொலர்களைக் கொண்ட வியட்னாமில், 100,000 அமெரிக்க டொலர்கள் என்பவை, மிகப்பெரிய பணமாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/178848/ற-ய-ஒல-ம-ப-க-ச-ன-வ-த-த-ற-கட-த-த-தங-கம-வ-ன-றத-வ-யட-ன-ம-#sthash.MrhjCjfR.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒலிம்பிக்: பெண்களுக்கான நீச்சல் போட்டியில் தங்கம் வென்றது ஹங்கேரி

 

  • Hungary%27s%20Katinka%20Hosszu.jpg

பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடக்கும் 31வது ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான நீச்சல் பிரிவில் ஹங்கேரி தங்கம் வென்றுள்ளது.

பெண்களுக்கான 400 மீட்டர் நீச்சல் போட்டியில் ஹங்கேரியின் கதின்கா ஹோஸ்ஜூ வெற்றி பெற்றுள்ளார். இவர் இப்போட்டியில் தங்க பதக்கம் வென்றதுடன், மிக குறுகிய நேரத்தில் இலக்கை அடைந்தவர் என்ற புதிய உலக சாதனையையும் நிகழ்த்தி உள்ளார்.

இவர் 4 நிமிடம் 26.36 விநாடிகளில் இலக்கை அடைந்துள்ளார். இவர் ஒலிம்பிக்கின் நீச்சல் தனிப்பிரிவில் தங்கம் வெல்வது இது 4வது முறையாகும்.

இப்போட்டியில் அ அமெரிக்க வீராங்கனை மாயா டிராடோ 4 நிமிடம் 31.15 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஸ்பெயின் நாட்டின் மரியா பில்மோனேட் 4 நிமிடம் 32.39 விநாடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடம் பெற்றார்.

http://www.dinamani.com/latest_news/2016/08/07/ஒலிம்பிக்-பெண்களுக்கான-நீச/article3567811.ece

  • தொடங்கியவர்

ரியோ 2016

பதக்கப் பட்டியல்

i6gsk1.png

 

  • கருத்துக்கள உறவுகள்
Rank Country
Total
1 USA.pngUnited States
3
5
4
12
2 CHN.pngChina
3
2
3
8
3 ITA.pngItaly
2
3
2
7
4 JPN.pngJapan
1
0
6
7
5 AUS.pngAustralia
3
0
3
6
6 KOR.pngRepublic of Korea
2
2
1
5
7 RUS.pngRussia
1
2
2
5
8 HUN.pngHungary
2
0
0
2
9 GBR.pngGreat Britain
1
1
0
2
9 SWE.pngSweden
1
1
0
2
11 TPE.pngChinese Taipei
1
0
1
2
11 THA.pngThailand
1
0
1
2
13 CAN.pngCanada
0
1
1
2
13 KAZ.pngKazakhstan
0
1
1
2
15 UZB.pngUzbekistan
0
0
2
2
16 ARG.pngArgentina
1
0
0
1
16 BEL.pngBelgium
1
0
0
1
16 KOS.pngKosovo
1
0
0
1
16 NED.pngNetherlands
1
0
0
1
16 VIE.pngVietnam
1
0
0
1
21 BRA.pngBrazil
0
1
0
1
21 PRK.pngDPR Korea
0
1
0
1
21 DEN.pngDenmark
0
1
0
1
21 FRA.pngFrance
0
1
0
1
21 INA.pngIndonesia
0
1
0
1
21 NZL.pngNew Zealand
0
1
0
1
21 PHI.pngPhilippines
0
1
0
1
21 RSA.pngSouth Africa
0
1
0
1
29 GRE.pngGreece
0
0
1
1
29 POL.pngPoland
0
0
1
1
29 ESP.pngSpain
0
0
1
1
  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக்: ஜிம்னாஸ்டிக் வீரருக்கு கால் உடைந்த அதிர்ச்சி சம்பவம் - வீடியோ

ரியோ ஒலிம்பிக் 2016ல் சனிக்கிழமை நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஃப்ரான்ஸ் வீரர் சமீரின் கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் போட்டியில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சமீருக்கு ரியோவில் உள்ள மருத்துவமனயில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அறுவைசிகிச்சை முடிந்து நன்றாக இருப்பதாகவும், காலை ஆறு மணிக்கு மயக்கம் தெளிந்து எழுந்ததாகவும் அவரது முன்னாள் அணி வீரர் ஹாமில்டன் ட்விட்டர் இணையதளத்தில் தெரிவித்தார். அவர் காயமடைந்த வீடியோ அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

வீடியோ:

 

 

http://www.vikatan.com/news/sports/66923-french-gymnast-samir-ait-broke-his-leg-during-rio-olympics.art

  • தொடங்கியவர்

ஜோக்கோவிச், செரினா, வீனஸ்... டென்னிஸ் டாப்பர்சின் ஒலிம்பிக் அதிர்ச்சி!

லிம்பிக் போட்டிகள், அதன் இரண்டாவது நாளிலேயே அதிர்ச்சித் தோல்விகளை வெளிப்படுத்த தொடங்கி உள்ளன. டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரர்கள் பலர்,  முதல் சுற்றிலேயே வெளியேறி,  ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

t3.jpg

ஜோக்கோவிச் தோல்வி...

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான செர்பியாவின் ஜோக்கோவிச், அர்ஜென்டினாவின் டெல் பொட்ரோவிடம் 7-6 (4), 7-6 (2) என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். டெல் பொட்ரோ டென்னிஸ் அரங்கில், தற்போது அவர் 145-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2012-ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்ஸிலும், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஜோக்கோவிச்சை வென்றார் டெல் பொட்ரோ.

t1.jpg

வில்லியம்ஸ் ஜோடி அவுட்...

ஒலிம்பிக் போட்டிகளில் வில்லியம்ஸ் ஜோடி களம் இறங்கினாலே, கண்டிப்பாக பதக்கம் வெல்வார்கள். மூன்று முறை இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளனர் அமெரிக்காவின் செரினா-வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி. செக் குடியரசின் லூசி சஃபரோவா, பார்பொரா ஸ்ட்ரைகோவா ஜோடியிடம் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டுவிட்டது. இதற்கு முன்னர் சிட்னி (2000), பீஜிங் (2008), லண்டன் (2012) என மூன்று முறை இரட்டையர் பிரிவில் வில்லியம்ஸ் ஜோடி தங்கம் வென்று இருக்கிறார்கள் . ஒற்றையர் பிரிவிலும், வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினார். செரினா வில்லியம்ஸ் முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் டார்லா கவ்ரிலோவாவை 6-4,6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

t2.jpg

முர்ரே, நடால் அடுத்த சுற்றுக்கு தகுதி...

 


நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே,  செர்பியாவின் விக்டர் ட்ராய்கியை 6-3 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். முழங்கால் வலி காரணமாக ஓய்வில் இருந்த ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பின், தற்போதுதான் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார். முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் ஃபெடெரிக்கோ டெல்பொனிஸை 6-2, 6-1 என்ற நேர் செட்கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். 14 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற நடால், 2008-ம் ஆண்டு தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டையர் பிரிவிலும், நடால்-லோபெஸ் ஜோடி, நெதெர்லேண்டு அணியை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

http://www.vikatan.com/news/sports/66929-rio-olympicsserena-venus-williams-lose-doubles.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.