Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பாராளுமன்றமும் அதற்குள்ள அதிகாரமும் புதிய அரசியலமைப்பும் ஓர் ஆய்வு

Featured Replies

1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் கீழ் பாரா­ளு­மன்­றமும் அதற்­குள்ள அதி­கா­ரமும் புதிய அர­சி­ய­ல­மைப்பும்
ஓர் ஆய்வு

இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­த­தி­லி­ருந்து இன்று வரை மூன்று அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் கீழ் ஆளப்­பட்டு வந்­தது. 1948 ஆம் ஆண்டு முதல் சோல்­பரி அர­சியல் சட்­டத்தின் கீழும் 1972ஆம் ஆண்டு முதல் முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் கீழும் 1978 ஆம் ஆண்டு முதல் இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் கீழும் ஆளப்­பட்டு வந்­தது.

தற்­போது அமுலில் உள்ள 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் அடுத்த பட்ஜெட் தொட­ருக்­கி­டையில் மாற்­றப்­ப­ட­வி­ருப்­ப­தாக செய்­திகள் கசிந்­துள்­ளன. ஆகவே நாலா­வது அர­சி­ய­ல­மைப்பு கட்­டாயம் அமு­லுக்கு வரும் என்­பது மறுக்க முடி­யாத உண்­மை­யாக மாறி­யுள்­ளது. ஏனெனில் முழுப்­பா­ரா­ளு­மன்­றமும் அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாறி­யுள்­ளதால் அர­சி­ய­ல­மைப்பை தடுக்க வேறு ஒரு அமைப்பும் இல்­லா­ததால் கட்­டாயம் அர­சி­ய­ல­மைப்பு வரும் என கொள்­ள­வேண்­டி­யுள்­ளது.

சிலர் கூறு­வது போல் அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்ற 2/3 பெரும்­பான்மை கிடைக்­காது என்றும் மக்கள் தீர்ப்பால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாது எனவும் கூறு­வது கற்­ப­னை­யாகும். சில உறுப்­பு­ரை­களை மனதில் வைத்தே இக்­கூற்று தொடர்ந்து கூறப்­ப­டு­வது உண்­மை­யா­யினும் புதிய அர­சியல் அமைப்பு அமு­லுக்கு வந்தே தீரும் எனலாம்.

தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் உள்ள சக­லரும் அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாறி­யி­ருப்­பதால் அர­சி­ய­ல­மைப்பு சபையில் அங்கம் வகிப்­ப­வர்­களே அடுத்த பாரா­ளு­மன்­றத்தின் அங்­கத்­த­வர்­க­ளா­கவும் மாறுவர் என்­ப­தாலும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை நிறை­வேற்­றாமல் யாரா­வது வெளி­யே­றினால் அவர்கள் பார­ாளு­மன்ற அங்­கத்­த­வர்­க­ளாக வர­மு­டி­யாது. இதனை எந்த பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வரும் விரும்­ப­மாட்­டார்கள். ஆகவே அவர்கள் அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­ப­டும்­போது கட்­டாயம் சபையில் இருப்­பார்கள். ஆனால் எதிர்த்து வாக்­க­ளிக்­கலாம் அதனை தடுக்க முடி­யாது. எதிர்த்து வாக்­க­ளித்­தாலும் புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வே­றியே தீரும் எனத் திட­மாக கூறலாம். ஆகவே புதிய அர­சி­ய­ல­மைப்பு அமு­லுக்கு வரு­வ­தற்கு முன்னர் தற்­போது அமுலில் உள்ள அர­சி­ய­ல­மைப்பை பற்றி தெரிந்து கொள்­வது நல்­லது. சகல உறுப்­பு­ரை­க­ளையும் தெரிந்து கொள்­வதை விட பாரா­ளு­மன்­றத்­திற்கு தற்­போ­துள்ள அதி­கா­ரத்தை பற்றி அறி­வது நன்று.

1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு

அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்­டுள்­ள­துபோல் சட்­ட­மாக்கற் தத்­துவம் பாரா­ளு­மன்­றத்­திற்­கே­யுண்டு. ஆனால் சட்­ட­மாக்கும் தத்­துவம் பற்றி ஆராயும் போது ஜனா­தி­பதிக்கும் சட்­ட­மாக்கும் தத்­துவம் உண்டு என்­பதை கண்­டு­கொள்­ளலாம். ஆகவே 1972 ஆம் ஆண்டு அமுலில் இருந்த அர­சி­ய­ல­மைப்பின் கீழ் பாரா­ளு­மன்­றத்­திற்­கி­ருந்த குறை­வில்­லாத சட்­ட­மாக்கும் தத்­துவம் இந்த பாரா­ளு­மன்­றத்­திற்கு இல்லை என்று கூறலாம்.

ஜனா­தி­ப­தியும் மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­வதால் அவ­ருக்கும் ஓர­ளவு சட்­ட­மாக்கும் தத்­துவம் கொடுப்­பதில் தவறு இல்லை என்று கூறி­னாலும் ஜன­ப­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­படும் ஆளி­னது மன­நி­லை­யாலும் செய­லாலும் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களை விட மேலான நிலை ஒன்று அவ­ரிடம் உரு­வாக இடம் உள்­ளது. ஆளைப் பொறுத்து அது அமைந்­துள்­ளது. விசேட­மாக ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­ட­வரது கட்­சியே பாரா­ளு­மன்­றத்­திலும் கூடு­த­லான ஆச­னங்­களை கொண்­டி­ருக்­கு­மாயின் இவ்­வ­தி­கா­ரத்தை ஜனா­தி­பதி பாவிப்­பதை தடுக்க முடி­யாது. இதன் மூலம் பாரா­ளு­மன்­றத்தின் கெள­ரவம், செயல்­பாடு ஜனா­தி­ப­திக்கு கட்­டுப்­பட்­ட­தாக மாற இடம் உள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தின் அந்­தஸ்து கேள்­விக்­கு­றி­யாக இருந்­தது.

மேலும் ஜனா­தி­பதி ஒரு கட்­சி­யா­கவும் அரசு வேறு ஒரு கட்­சி­யா­கவும் இருந்தால் அரசு ஆறு வரு­ட­காலம் ஆட்­சி­யி­லி­ருக்கும் என்று கூற­மு­டி­யாது. ஜனா­தி­பதி ஒரு வரு­டத்தின் பின்னர் பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்­கலாம். இதன் மூலம் பாரா­ளு­மன்­றத்தின் சட்­ட­மாக்கும் தத்­து­வத்தை கட்­டுப்­ப­டுத்­தலாம். கலா­நிதி என்.எம்.பெரேரா பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரையில் 1981 இல் இதனை மிகத் தெளி­வாக காட்­டி­யுள்­ளார். அத்­துடன் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்தை இரு­வ­ருட காலத்­திற்கு முன்னர் கலைத்­தது இதனை உறு­திப்­ப­டுத்­து­கிறது. இவ்­வாறு இடை­யூறு இல்­லா­விட்டால் பாரா­ளு­மன்­றத்தின் சட்­ட­மி­யற்றும் அதி­காரம் ஆறு வரு­டங்­களும் தடை­யில்­லாமல் இருக்கும்.

பாரா­ளு­மன்­றத்தின் சட்­ட­மி­யற்றும் தத்­துவம்

ஆயின் அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் 75 ஆம் உறுப்­புரை பின்­வ­ரு­மாறு கூறு­கி­றது.

கடந்த காலத்­தையும் உள்­ள­டக்கும் பயன்­கொண்ட சட்­டங்­களை (அர­சி­யல­மைப்பின் ஏதேனும் ஏற்­பாட்டை நீக்கும் அல்­லது திருத்தும் அல்­லது அர­சி­ய­ல­மைப்­புக்கு ஏதேனும் புதிய ஏற்­பாட்டைச் சேர்க்கும் சட்­டங்கள் உட்­பட்ட சட்­டங்­களை) ஆக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்றம் தத்­துவம் கொண்­டி­ருத்தல் வேண்டும்.

ஆயின் பாரா­ளு­மன்­ற­மா­னது பின்­வரும் சட்­டங்­களை ஆக்­கு­த­லா­காது. அதா­வது,

அ) அர­சி­ய­ல­மைப்பை முழு­மை­யா­கவோ அல்­லது பகு­தி­ய­ள­விலோ இடை நிறுத்தி வைக்­கிற ஏதேனும் சட்­டத்தை , அல்­லது

ஆ) இயற்­றப்­ப­டு­கின்ற சட்­ட­மா­னது ஏற்­க­ன­வே­யுள்ள அர­சியல் அமைப்பை மாற்­றீடு செய்­கின்ற ஒரு புதிய அர­சி­ய­ல­மைப்பை இயற்­றி­னா­லொ­ழிய அர­சியல் அமைப்புச் சட்­டத்தை முழு­மை­யாக நீக்­கு­கின்ற ஏதேனும் சட்­டத்தை ஆக்­கு­த­லா­காது என்­கி­றது.

மேலும் அர­சி­ய­ல­மைப்பின் 76 (1) பின்­வ­ரு­மாறு கூறு­கி­றது,

பாரா­ளு­மன்றம் அதன் சட்­ட­மாக்­கற்­றத்­து­வத்தைத் துறத்­தலோ, எவ்­வி­தத்­திலும் பரா­தீ­னப்­ப­டுத்­து­தலோ ஆகாது என்­ப­துடன், ஏதேனும் சட்­ட­மாக்கும் தத்­து­வத்தை உடைய ஏதேனும் அதி­கா­ரத்தை நிறு­வு­த­லு­மா­காது (Shall not set up any Authority with any Legislative Power’) என்­கி­றது.

ஆயின் 76 (2) பின்­வ­ரு­மாறு கூறு­கி­றது. பொது மக்கள் பாது­காப்புப் பற்­றிய ஏதேனும் சட்­டத்­துக்­கி­ணங்க அவ­ச­ர­கால விதி­களை ஆக்­கு­வ­தற்குச் ஜனா­தி­ப­திக்கு தத்­து­வ­ம­ளிக்­கின்ற ஏற்­பா­டு­களை அத்­த­கைய பொது­மக்கள் பாது­காப்புப் பற்­றிய சட்­டத்தில் செய்து இவ் உறுப்­பு­ரையின் (1) ஆம் பந்­தியின் ஏற்­பா­டு­களை மீறு­வ­தா­காது என்­கி­றது.

மேலும் அர­சி­ய­ல­மைப்பின் 85 ஆம் பிரிவு (2) ஆவது உறுப்­புரை பின்­வ­ரு­மாறு கூறு­கி­றது. “ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­தினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட ஏதேனும் சட்­ட­மூ­லத்தை (அர­சி­ய­ல­மைப்பில் ஏதேனும் ஏற்­பாட்டை நீக்­கு­வ­தற்­கான அல்­லது திருத்­து­வ­தற்­கான அல்­லது ஏதேனும் ஏற்­பாட்டை அர­சி­ய­ல­மைப்பில் சேர்ப்­ப­தற்­கான அல்லது அர­சியல் அமைப்பை நீக்­கு­வ­தற்கும் மாற்­றீடு செய்­வ­தற்­கு­மான சட்­ட­மூ­ல­மாக இல்­லாத அல்­லது அர­சி­யல­மைப்பின் ஏதேனும் ஏற்­பாட்­டோடு ஒவ்­வா­த­தா­யுள்ள சட்­ட­மூ­ல­மாக இல்­லாத ஏதேனும் சட்­ட­மூ­லத்தை) தனது தற்­து­ணிவின் பேரில் மக்கள் தீர்ப்­புக்­கென மக்­க­ளிடம் சமர்ப்­பிக்­கலாம் என்­கி­றது.

இப்­பி­ரி­வு­க­ளி­லி­ருந்து ஜனா­தி­ப­தி­யா­னவர் அர­சி­ய­ல­மைப்பை திருத்­து­வது தவிர்ந்த வேறு ஏதா­வது ஒரு சட்­ட­மூ­லத்தை மக்கள் தீர்ப்­புக்கு விட அதி­கா­ர­மு­டை­ய­வ­ரா­கிறார்.

ஆகவே பாரா­ளு­மன்­றத்தில் ஜனா­தி­ப­தியின் கட்சி அங்­கத்­தவர் தொகை குறை­வாகவும் ஏனைய கட்­சி­களின் அங்­கத்­துவம் கூடு­த­லா­கவும் இருக்கும் சந்­தர்ப்­பத்தில் கூட பாரா­ளு­மன்­றத்தைவிட சட்­ட­மாக்கும் அதி­கா­ரத்தை ஜனா­தி­பதி கொண்­டி­ருக்­கிறார் எனலாம். ஆகவே தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் நிலை என்­ன­வெனில் பாரா­ளு­மன்­றத்தின் 2/3 அங்­கத்­த­வர்­களின் ஆத­ரவு இல்­லா­மலும் மக்கள் தீர்ப்பு இல்­லா­மலும் ஜனா­தி­ப­தி­யாலோ, பிர­தமராலோ அர­சி­ய­ல­மைப்பை மாற்ற முடி­யாது என்­ப­தாகும். ஜனா­தி­ப­தி, பிர­தமர் ஆகிய இரு­வரும் சேரும்­பொ­ழுது 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­பான இன்­றைய அர­சியல் அமைப்பை மாற்­றலாம். இன்று அச்­சூழ்­நிலை நில­வு­கி­றது.

ஜனா­தி­ப­தியின் அதி­காரம்

1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு திட்­டத்­தின்­படி பாரா­ளு­மன்­றமே சட்­ட­மாக்கல் தத்­து­வத்தின் உயர்­பீடம் என கூறப்­பட்­ட­போதும் நாம் மேலே கண்­ட­வாறு பாரா­ளு­மன்­றத்­திற்கு சம­மான அல்­லது பாரா­ளு­மன்­றத்தின் சட்­ட­மாக்க தத்­து­வத்தின் எல்­லையை மலி­னப்­ப­டுத்த ஜனா­தி­ப­தியால் முடியும் எனவும் கண்டோம். இதன் கார­ண­மா­கவே இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தாலும் 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தி­ருத்­தத்தை கொண்டு வந்து நிறை­வேற்­றி­யது. இதன்­படி இச்­சீர்­தி­ருத்­தத்­தின்­படி ஜனா­தி­ப­தியின் சட்­ட­மாக்கும் தத்­துவம் தற்­போது பாரா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு சபை உரு­வாக்­கப்­பட்­டது இதன் கார­ண­மாக அர­சாங்கம் எடுக்­கின்ற நட­வ­டிக்­கைகள் அனைத்தும் வெளிப்­ப­டை­யாக அமைந்­தது. பாரா­ளு­மன்­றத்தின் சார்பில் பிர­தமர் கட­மை­யாற்­று­கிறார். சிலர் விட­யத்தை நன்கு விளங்­கிக்­கொள்­ளாமல் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவே சக­ல­வற்­றையும் கூறு­கிறார் அல்­லது செய்­கிறார் என்று குறை கூறு­வது இத­னா­லே­யே­யாகும். தற்­போது பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ள அதி­காரம் பற்றி கூற­வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பை திருத்­துதல்

1. அர­சி­ய­ல­மைப்பை திருத்தும் அதி­காரம் தற்­போது பாரா­ளு­மன்­றத்­துக்கு உண்டு. அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் xii அத்­தி­யாயம் மிக முக்­கி­ய­மா­னது, ஏனெனில் புதி­ய­தொரு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க நட­வ­டிக்­கை எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வதால் அப்­பு­திய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க பாரா­ளு­மன்­றத்­துக்கே முடியும் என அவ்­அத்­தி­யாயம் தெளி­வாக கூறு­கி­றது.

அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் 82 (1) ஆம் உறுப்­புரை பின்­வ­ரு­மாறு கூறு­கி­றது.

82 (1) அர­சி­ய­ல­மைப்பின் ஏதேனும் ஏற்­பாட்டைத் திருத்­து­வ­தற்­கான சட்­ட­மூலம் எதுவும், அவ்­வாறு நீக்­கப்­ப­டு­வ­தற்­கான, திருத்­தப்­ப­டு­வ­தற்­கான அல்­லது சேர்க்­கப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பாடும் விளை­வாந்­தன்­மை­யி­ன­வான திருத்­தங்­களும் (CONSEQUENTIAL AMENDMENTS) அச்­சட்­ட­மூ­லத்தில் வெளிப்­ப­டை­யாகக் குறிக்­கப்­பட்­டி­ருப்­ப­தோடு அந்தச் சட்­ட­மூ­ல­மா­னது அர­சி­ய­ல­மைப்பைத் திருத்­து­வ­தற்­கான ஒரு சட்டம் என அதன் விரிவும் பெயரில் (LONG TITLE) விவ­ரிக்­கப்­பட்டும் இருந்தால் ஒழிய பாரா­ளு­மன்­றத்தின் நிகழ்ச்சித் தாளில் இடம்­பெ­ற­லா­காது என்­கி­றது.

சபா­நா­ய­கரின் அபிப்­பி­ரா­யப்­படி அர­சி­ய­ல­மைப்பைத் திருத்­து­வ­தற்­கான சட்­ட­மூலம் எதுவும் மேலே­யுள்ள பந்­தியில் கூறப்­பட்­ட­படி இணங்­கி­யி­ருந்தால் ஒழிய சபா­நா­யகர் அச்­சட்­ட­மூலம் தொடர்பில் எச் செயலும் செய்ய அனு­மதி வழங்­க­மாட்டார். மேலே­யுள்ள பிரிவின் படி ஒழி­கி­யி­ருந்து அர­சியல் சட்­ட­தி­ருத்தம் பின்­வ­ரு­மாறு திருத்­தப்­ப­ட­வேண்டும். அதா­வது சட்­ட­மாக மாறு­வ­தற்கு பின்­வ­ரு­மாறு நடை­பெற்று இருக்க வேண்டும்.

இது­பற்றி 5 ஆம் பிரிவு பின்­வ­ரு­மாறு கூறு­கிறது. அர­சி­ய­ல­மைப்பின் ஏதேனும் ஏற்­பாட்டைத் திருத்­து­வ­தற்­கான அல்­லது அர­சி­ய­ல­மைப்பை நீக்­கு­வ­தற்கும் மாற்­றீடு செய்­வ­தற்­கு­மான ஒரு சட்­ட­மூலம் அதற்குள் சாத­க­மாக அளிக்­கப்­படும் வாக்­கு­களின் எண்­ணிக்கை உறுப்­பி­னர்­களின் மொத்த எண்­ணிக்­கையில் (சமுக­ம­ளிக்­காதோர் உட்­பட) மூன்றில் இரண்­டுக்கு குறை­யா­த­தாக இருப்­ப­துடன் ஜனா­தி­ப­தி­யி­னதும் அல்­லது சபா­நா­ய­க­ரி­னதும் சான்­றுரை அதன் மீது எழு­தப்­பட்டும் இருந்தால் மட்­டுமே சட்­ட­மாக வருதல் வேண்டும் என்று கூறு­கி­றது.

இதில் திருத்தம் என்­பது நீக்கம், மாற்றம் அத்­துடன் சேர்ப்பு ஆகி­ய­வற்­றையும் உள்­ள­டக்கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆயின் சில சட்ட மூலங்கள் மேலே கூறி­ய­வாறு

2/3 பங்கு வாக்­கு­க­ளினால் நிறை­வேற்­றப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இருந்­தாலும் மக்கள் தீர்ப்­பி­னாலும் அங்­கீ­க­ரிக்­கப்­படல் வேண்டும் என்று அர­சி­ய­ல­மைப்பு உறுப்­புரை 83 கூறு­கி­றது.

அச்­சட்ட மூலங்கள் எவை எனப் பார்ப்போம்.

1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 30, 62 ஆகிய உறுப்­பு­ரை­களில் காணப்­படும் விட­யங்கள் ஆகும். அவை பின்­வ­ரு­மாறு கூறப்­பட்­டுள்­ளது.

உறுப்­புரை 1: இலங்கை சுதந்­தி­ரமும் இறை­மையும் தன்­னா­திக்­கமும் கொண்ட ஜன­நா­யக சோச­லிஷ குடி­ய­ர­சாகும் என்­ப­தோடு இலங்கை ஜன­நா­யக சோச­லிஷ குடி­ய­ரசு என அறி­யப்­ப­டு­தலும் வேண்டும்.

உறுப்­புரை 2: இலங்கை குடி­ய­ரசு ஒற்­றை­யாட்­சி­யு­டைய அர­சாகும்.

உறுப்­புரை 3: இலங்கை குடி­ய­ரசில் இறைமை மக்­க­ளுக்­கு­ரி­ய­தா­கவும் பரா­தீ­னப்­ப­டுத்த முடி­யா­த­தா­கவும் இருக்கும். இறைமை என்­பது ஆட்சித் தத்­து­வங்கள், அடிப்­படை உரி­மைகள், வாக்­கு­ரிமை ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கும்.

உறுப்­புரை 6: இலங்கை குடி­ய­ரசின் தேசியக் கொடி சிங்க கொடி­யாக இருத்தல் வேண்டும்.

உறுப்­புரை 7: இலங்கை குடி­ய­ரசின் தேசிய கீதம் ஸ்ரீ லங்கா தாயே என்­ப­தாக இருத்தல் வேண்டும்.

உறுப்­புரை 8: இலங்கை குடி­ய­ரசின் தேசிய தினம் பெப்­ர­வரி நான்காம் நாளாக இருத்தல் வேண்டும்.

உறுப்­புரை 9: இலங்கை குடி­ய­ரசில் பௌத்த மதத்­திற்கு முதன்மை ஸ்தானம் வழங்­கப்­ப­டுதல் வேண்டும்.

உறுப்­புரை 10: ஆள் ஒவ்­வொ­ரு­வரும் தான் விரும்பும் மதத்தை அல்­லது நம்­பிக்­கையை உடை­ய­வ­ரா­யி­ருத்­தற்­கான அல்­லது மேற்­கொள்­வ­தற்­கான சுதந்­தி­ர­முட்­பட சிந்­தனை செய்யும் சுதந்­திரம் மனச்­சாட்­சியை பின்­பற்றும் சுதந்­திரம் மதச் சுதந்­தி­ரத்­திற்கு உரித்­து­டை­ய­வ­ராதல் வேண்டும்.

உறுப்­புரை 11: ஆள் எவரும் சித்­தி­ர­வ­தைக்கு அல்­லது கொடூ­ர­மான மனி­தா­பி­மா­ன­மற்ற அல்­லது இழி­வான நடத்­தைக்கு அல்­லது தண்ட­னைக்கு உட்­ப­டுத்தல் ஆகாது என்­றாகும். இவற்றில் மாற்றம் செய்யும் போது சில சங்­க­டங்­களை அரசு எதிர்­நோக்கும் என கூறலாம். விசே­ட­மாக உறுப்­புரை 2, உறுப்­புரை 9 என்­பன அவற்றில் முக்­கிய எதிர்ப்­பு­களை அரசு எதிர்­நோக்க வேண்டும்.

உறுப்­புரை 2: ஒற்­றை­யாட்சி

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு ஒற்­றை­யாட்சி முறையால் முடி­யாது என்றும் சமஷ்டி ஆட்­சி­யா­லேயே முடியும் என்றும் கருதும் பலர் உண்டு. விசே­ட­மாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி அக்­கொள்­கை­யி­லேயே ஆரம்­பிக்­கப்­பட்டு அதி­லேயே நிலைத்தும் இருக்­கி­றது. இன்றும் இந்த கொள்­கையை விட்டு கொடுக்­க­வில்லை. ஆனால் அதே சமயம் பெரும்­பான்­மை­யி­ன­ரான சிங்­கள மக்கள் சமஷ்டி என்­பது நாட்டை பிரிப்­பது என்ற எண்­ணத்­து­ட­னேயே இருக்­கின்­றனர். முஸ்லிம் மக்­களும் சமஷ்­டியை விரும்­ப­வில்லை. சமஷ்டி அமைப்பு வழங்­கப்­ப­டு­மானால் கிழக்கு மாகா­ணத்தில் உள்ள சில பகு­திகள் இணைத்து பிராந்­தி­யங்­க­ளாக்­கப்­பட வேண்டும் என்றும் அவற்றின் ஆட்­சியும் தமக்கு வழங்­கப்­பட வேண்டும் என்றும் கூறி வரு­கின்­றனர். ஆகவே இல­குவில் ஒற்­றை­யாட்சி என்ற கருத்தில் இருந்து பெரும்­பான்மை மக்கள் வெளி­வ­ருவர் என கருத முடி­யாது.

இதன் பய­னா­கவோ என்­னவோ தற்­போது ஒற்­றை­யாட்­சிக்குள் சமஷ்டி நிர்­வாகம் என்ற ஒரு புதிய அர­சியல் கொள்­கையை சிலர் கூறி வரு­கின்­றனர். இன்னும் சிலர் இந்­திய அர­சி­ய­ல­மைப்பு முறையில் மத்­தியில் ஒற்­றை­யாட்சி மாநி­லங்­களில் சுயாட்சி என்ற முறையை வற்­பு­றுத்­து­கின்­றனர். அர­சியல் அதி­கா­ரத்தில் படு­தோல்­வி­ய­டைந்த சிலர் சமஷ்டி முறைக்கு எதி­ரான முறையில் செயல்­ப­டுவர் என்­பதில் சந்­தே­க­மில்லை. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இது பற்றி தெரி­விக்­கையில், அதி­காரப் பகிர்வு (சமஷ்­டிக்கு இது அடிப்­ப­டை­யாகும்) என்ற விடயம் இன்று தமிழ், சிங்­கள மக்கள் மத்­தியில் பெரும் குழப்ப நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என தெரி­வித்­துள்ளார். அத்­துடன் மத்­திய அர­சிற்கும் மாகாண பிர­தேச சபை­களின் அதி­கா­ரங்கள் கூடு­த­லாக பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு நாடு ஆளப்­பட வேண்டும் என்ற கருத்­து­ப­டவும் அவர் சில விப­ரங்­களை தெரி­வித்­துள்ளார். எப்­ப­டி­யி­ருப்­பினும் இலங்கை ஒற்­றை­யாட்சி குடி­ய­ரசு என்ற வாக்­கி­யத்தை அர­சி­ய­ல­மைப்பில் இருந்து எடுப்­பது கஷ்டம். மக்கள் தீர்ப்பு அதற்கு எதி­ரா­கவே கிடைக்கும் எனவும் கூறலாம். அவ்­வாறு நடை­பெ­றாமல் இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு சுமுக­மாக ஒரு முறைமை அர­சி­ய­ல­மைப்பு சீர்­திருத்த சபை சிபா­ரிசு செய்­யு­மாயின் அதனை எல்­லோரும் வர­வேற்பர்.

தற்­போது சில எதிர்க்­கட்­சி­யி­ன­ரதும் அரசில் இணைந்­துள்ள சிலரின் கருத்­துக்­க­ளையும் பார்க்­கும்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பில் இனப் பிரச்­சி­னையை தீர்க்கும் வழி­வ­கைகள் பெரு­ம­ளவில் காணப்­படும் எனக் கூற முடி­யாது. ஆகவே பழைய நிலையே நிலவ இட­முண்டு எனவும் ஊகிக்­கலாம்.

இன்­றுள்ள அர­சியல் நிலைமை இனிமேல் ஒரு போதும் ஏற்­படப் போவ­தில்லை. இன்று தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னைகள் பின்னர் தீர்க்­கப்­படும் என எதிர்­பார்க்­கவும் முடி­யாது.

பிரச்­சினை இருப்­ப­தற்கும் இருக்கப் போவ­தற்கும் கார­ண­மாக அமை­வது சுய­ந­ல­மான அர­சியல் கொள்­கை­க­ளாகும். எப்­ப­டியோ தாம் அதி­கா­ரத்தில் இருக்க வேண்டும் என்ற எண்­ணத்தில் செயல்­ப­டு­ப­வர்­களே அர­சி­யலில் தற்­போது காணப்­ப­டு­கின்­றனர். கொள்கை பிடிக்­கா­விட்டால் பத­வியை விட்டு விலகி உரிய வழியை காட்­டு­ப­வர்கள் யாரும் இல்லை.

ஜன­நா­யகம் என்­பது ஆரம்­பத்தில் மக்­களால் நேரி­டை­யாக கையா­ளப்­பட்­ட­தொன்று. அது சாத்­தி­ய­மில்­லா­ததால் மக்­களின் பிர­தி­நி­திகள் மக்­களின் அதி­கா­ரத்தை பெற்று நாட்டை ஆளத் தொடங்­கினர். ஆகவே மக்­களின் பிர­தி­நி­தி­க­ளிடம் இருக்கும் அதி­காரம் மக்­க­ளது அதி­கா­ர­மாகும். மக்­க­ளது அதி­கா­ரத்தை மக்­க­ளது விருப்­பத்தின் படியே பாவிக்க வேண்டும். மக்கள் பிர­தி­நி­தி­களின் விருப்­பத்­திற்கு அமைய மக்கள் தமது கொள்­கையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மாறு­படும் வரையும் இலங்­கையின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பது கஷ்­ட­மாகும்.

சிலர் கூறு­வது என்­ன­வெனில் எதிர்க்­கட்­சியின் விசே­ட­மாக முன்னாள் ஜனா­தி­பதி அவர்கள் யுத்­தத்தை வென்­றவர் என்றும் நாட்டை மீட்­டவர் என்றும் மீண்டும் தற்­பே­ாதைய அரசு நாட்டை பிரிக்கப் போகி­றது என்றும் கூறு­வதை நாம் காணலாம்.

நாட்டின் மீது கொண்ட பற்­று­தலால் இவ்­வாக்­கி­யங்கள் பிறப்­ப­தில்லை. தன் சுய நலத்­திற்­கா­கவே அர­சி­யல்­வா­திகள் அவற்றை கூறி வகுப்பு வாதத்தை விதைக்­கின்­றனர். இந்த விதை சாதா­ர­ண­மான வெற்று நிலத்தில் விழ­வில்லை பசளை கொண்ட ஈர­லிப்­பான நிலத்­தி­லேயே விழுந்­தி­ருக்­கி­றது. ஆகவே தான் வகுப்­பு­வா­தத்தை இலங்­கை­யி­லி­ருந்து களைய முடி­ய­வில்லை.

அமு­லுக்கு வரப்­போகும் அர­சியல் அமைப்­பி­லே­யே­யா­வது இந்த கருத்து முற்­றாக மறைக்க முடி­யாமல் விட்­டாலும் அவற்றை குறைக்க மக்கள் பிர­தி­நி­திகள் முயற்­சிப்­பார்கள் என பிரார்த்­திப்­போ­மாக.

தொகுப்­புரை

இலங்கை இதற்கு முன்னர் மூன்று அர­சியல் அமைப்­பு­க­ளையும் மூன்று பெரும் வன்­மு­றை­க­ளையும் சந்­தித்­தது. இனி அமையப் போகும் அர­சியல் அமைப்பு மேலும் ஒரு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு தேவையை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவோ அல்­லது இன வன்­மு­றை­களை தூண்டும் செயற்­பா­டு­களை கொண்­டுள்­ள­தா­கவோ உரு­வா­கக்­கூ­டாது என்­பதை கவ­னத்தில் எடுக்க வேண்டும்.

இன்­றுள்ள அர­சியல் சமூக சூழ்­நிலை இனி ஒரு­போதும் வரப்­போ­வ­தில்லை. ஆகவே இச்­சந்­தர்ப்­பத்தை நன்கு பயன்­ப­டுத்தி இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னை­யையும் அர­சியல் சூழ்­நி­லை­யையும் மாற்ற வேண்டும்.

இன்­றைய அர­சியல் சூழ்­நி­லையை மாற்ற வேண்டும் என்று சுய­நல அர­சி­யல்­வா­திகள் பல உபா­யங்­களை கையா­ளு­வதை நாம் காணலாம்.

ஆகவே அர­சியல் அமைப்பு நகல் வெளி­யி­டப்­படும் போது தற்­போது உள்ள நிலை மேலும் மோச­மாக மாற்­ற­ம­டை­யலாம். இவற்றை தவிர்ப்­ப­தற்கு இன மத வேறு­பா­டு­களை சற்று குறைத்து கதைக்க பழகிக் கொள்ள வேண்டும். ஒன்­றுக்கு ஒன்று எதி­ரான வார்த்­தை­களை பாவித்து நாட்டை நாச­மாக்கக் கூடாது.

அந்­ந­ியரின் உத­வியால் பிரச்­சினையைத் தீர்க்­கலாம் என்று எண்­ணிய எண்ணம் தவ­றா­னது என்­பதை நாம் அனு­ப­வத்தில் கண்டோம். எமது பிரச்­சி­னையை இதய சுத்­தி­யுடன் களைய நாமே முயற்­சிக்க வேண்டும்.

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=27/07/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.