Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 17-01-2007 10:10 மணி தமிழீழம் [செந்தமிழ்]

சிறீலங்கா அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைவு?

சிறீலங்கா அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைந்து கொள்ளவுள்ளது.சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைவதற்கு முன்வைத்த 9 கோரிக்கைகளும் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு அமைச்சரவை அந்நதஸ்தற்ற இரண்டு அமைச்சுக்களும் ஒரு பிரதி அமைச்சு பதவியும் முஸ்லீம் காங்கிரசிற்கு வழங்கப்படவுள்ளன.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவுத் பொறுப்பேற்றபார் என்றும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியினை ஏற்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி -பதிவு

அப்ப ஹக்கீம் துறைமுக அமைச்சர் அட்றா சக்கை சொந்த இனத்தை காட்டிக்கொடுத்து இப்படியும் வாழனுமோ :huh:

அப்ப ஹக்கீம் துறைமுக அமைச்சர் அட்றா சக்கை சொந்த இனத்தை காட்டிக்கொடுத்து இப்படியும் வாழனுமோ :huh:

துறைமுகம் சுத்திச் சுத்தி அவங்கட கையுக்குள்ள தான் இருக்கும் போல இருக்கு.

:huh::rolleyes:

Edited by YARLVINO

இந்தத் தேன் நிலவு எத்தனை நாளைக்கு?

ஜானா

3ம் தரப்பு என்ற உபத்திரபவம் தொலைந்து போய்விட்டது. அடிடா கெட்டி மேளம்

ஊதடா சங்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:3d_039: ஆகாhhhh பிரட்டிட்டாங்கய்யா தொப்பிய

வாழ்க்கை வாழத்தான் ஆனால் அப்படியான வாழ்க்கை குறிக்கோள் உள்ளவர்க்கு! ஆனால் வைக்கோள் பட்டறைகளுக்கு எப்படி வாழ்க்கையில் குறி இருக்கும். இவர்கள் தங்கள் இனத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டு தாங்களும் நக்கத்தான்! ஆனால் முஸ்லீம் உண்மைச்சகோதரர்கள் பாவம் பரிதாபம்! நாம் என்ன செய்ய முடியும் தகுதியான தலைவன் இல்லாது போனால் நம்ம கதியும் இப்படித்தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வடிவேலுடைய கருத்துத் தொடர்பாக...

தொண்டமானும் தான் மாறி மாறி எல்லா அரசிலும் அமைச்சராக இருக்கிறார். பிறகு எதற்காக இனவாதத் தொனியிலே கருத்துச் சொல்கிறீர்கள்.

:3d_039: ஆகாhhhh பிரட்டிட்டாங்கய்யா தொப்பிய

There was a time when 99% of the muslims understood the agony of tamils and morally supported them when they voiced their grievances. But never their violent protests because muslims are for a united Sri Lanka. When the tigers butchered innocent muslims in Jaffna and ordered them to get out of Jaffna within 24 hours leaving their homes in which they lived peacefully for centuries, that's when all the muslims attitude changed against the tigers and their terrorist activities.

When the government kills the innocent civilians muslims do not agree with the government. But the tigers exploded bombs in public places and inside the vehicles the govt. too follow the same path. So violence begets violence.

The comments you had here are racial. Most of the people outside of Jaffna, even the fellow tamils call the Jaffna people "PANANG KOTTA SOOPPI". Even that is racial. You have the right to voice your opinion here in this forum. Tamil is a beautiful language that unites the people above the religion, race or country. So do not spoil that wonderul unity by exposing your dirty mind.

மகிந்தவின் பதிலுக்காகக் காத்திருந்து ஏமாந்த முஸ்லிம் காங்கிரஸ்.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், நிபந்தனையின் அடிப்படையில் ஆளும் கட்சியுடன் கூட்டுச் சேர்வது என முடிவெடுத்திருந்தனர்.

பின்னர் இந்த முடிவை மாற்றி, ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அரசில் இணைவதாக இணக்கம் காணப்பட்டது.

இதன் அடிப்படையில், முஸ்லிம் காங்கிரசால் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், அரச தரப்பிடம் கையளிக்கப்பட்டது. இவர்களைச் சந்தித்த இரு அமைச்சர்களான விஸ்வ வர்ணபால மற்றும் ஜனக பண்டார தென்னக்கோன் ஆகியோரிடம் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இருப்பினும், உடனடியாக பதில் வரும் என்று காத்திருந்த முஸ்லிம் காங்கிரசினருக்கு இதுவரை பதில் எதுவும் கூறப்படவில்லை.

ஆளும் கட்சியில் சேர விரும்புபவர்கள் முன்வைக்கின்ற அத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு அவர்களைக் கட்சியில் சேருவதற்கு அழைக்குமாறு, பசில் ராஜபக்சவிடம் மகிந்த தெரிவித்து விட்டதாக, கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடும் அவசியமில்லை, எந்த நிபந்தனையாக இருந்தாலும் அதற்கு சரி என்று சொல்லுங்கள், பின்னர் பார்க்கலாம் என்று மகிந்த கூறிவிட்டார்.

இப்படி கைச்சாத்திட்ட உறுதிப்பாடு இல்லாமல், அரசில் சேருவது குறித்து தற்போது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும் பட்சத்தில், ஒப்பந்தத்தைக் கைவிட்டு அரசில் சேர ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இறுதி முடிவு எடுத்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

-Puthinam-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசுடன் மு.கா. இணைவதை வரவேற்கின்றோம் ஆனால் செய்யவுள்ள உடன்படிக்கை கண்துடைப்பு

வீரகேசரி நாளேடு

உல மாகட்சி அறிக்கையில் தெரிவிப்பு அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைவதை உலமாகட்சி வரவேற்றாலும் இருதரப்பினரிடையேயுமான புரிந்துணர்வு ஒப்பந்தமென்பது வெறும் கண் துடைப்பு என உலமாக்களின் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைவதை உலமாக்கட்சி பெரிதும் வரவேற்கிறது. இதன்மூலம் பல முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒன்றிணைந்துள்ளார்கள். சுமார் ஒரு வருடம் கடந்த பின்னராவது மஹிந்த சிந்தனையை ஏற்று அரசுடன் இணைவதன் மூலம் கிடைக்கும் அமைச்சுப் பதவிகளைப் பயன்படுத்தி நாட்டினதும் சமூகத்தினதும் அபிவிருத்திக்காக பாடுபடுவதுடன் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் அரசில் உள்ள ஏனைய அமைச்சர்களுடன் இணைந்து செயற்படுவர் என எதிர்பார்க்கிறோம். கடந்த காலங்களில் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம் அரசியல் கட்சிகள் பிளவுபட்டு நிற்கின்றன என்ற காரணத்தைக்காட்டி முஸ்லிம் தனித்தரப்பை புலிகள் நிராகரித்தனர். தற்போது எதிரணியில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்ததன் மூலம் அனைத்து முஸ்லிம்களும் ஓரணியில் இணைந்துள்ளதால் முஸ்லிம் தனித்தரப்பை இனி புலிகள் நிராகரிக்க முடியாது.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை. 2001இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களுக்கு தனித்தரப்பு கிடைக்கவில்லை. வாழைச்சேனை எரிந்தபோது அரசு எதுவும் செய்யவில்லை. மூதூர் தாக்கப்பட்டபோது ரணில் நேரடியாக வந்து பார்வையிட வேண்டுமென ஹக்கீம் கோரிக்கைவிடுத்தபோதும் அது நடக்கவில்லை.

ஆகவே அரசாங்கங்களுடனான முஸ்லிம் காங்கிரஸின் ஒப்பந்தங்கள் பாமர மக்களை ஏமாற்றும் வேலைகளாகும். இத்தகைய ஏமாற்று அரசியலை உலமா கட்சி கண்டிப்பதோடு இணைவின்மூலம் கிடைக்கும் அமைச்சுப்பதவிகள் மூலமும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலமும் முஸ்லிம் சமூகத்துக்கு நன்மைகள் கிடைக்க வேண்டுமென்பதே எமது பேரவாவாகும். உலமாக்கட்சி சார்பில் அதன் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.