Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய குற்றசாட்டு

Featured Replies

புதிய குற்றசாட்டு

showImageInStory?imageid=288729:mr

 

 

இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த அல்­லது படை­யி­னரால் கைது செய்­யப்­பட்ட முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­க­ளுக்கு புனர்­வாழ்வு முகாம்­களில் வைத்து ஏற்­றப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்ற ஊசி மருந்து இப்­போது சமூ­கத்­திலும், அர­சியல் மட்­டத்­திலும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. தடுப்­பூசி மருந்து என்ற பெயரில் ஏற்­றப்­பட்ட ஊசி மருந்து கார­ண­மாக ஒருவர் மருந்து ஏற்­றப்­பட்ட அன்றே உயி­ரி­ழந்­த­தா­கவும், சில­ருக்கு மயக்கம் ஏற்­பட்­ட­தா­கவும் நாள­டைவின் பின்னர் தனக்கு சக்தி இழப்பு ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் முன்னாள் போராளி ஒருவர் பகி­ரங்­க­மாகத் தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

தங்­க­ளுக்கு ஏற்­றப்­பட்ட ஊசி மருந்தில் இர­சா­யனம் ஏதோ கலந்­தி­ருந்­தது என்­பது அந்த முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னரின் குற்­றச்சாட்டாகும். தடுப்­பூசி என்ற பெயரில் தங்­க­ளுக்கு என்ன தடுப்பு மருந்து ஏற்­றப்­பட்­டது என்­பது பற்­றிய விபரம் தங்­க­ளுக்குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என அவர் கூறி­யி­ருக்­கின்றார். ஒரு­வ­ரை­யொ­ருவர் கொன்­றொ­ழிக்க வேண்டும் என்ற பகை உணர்­வோடு யுத்­த ­க­ளத்தில் செயற்­பட்­டி­ருந்த நிலையில் திடீ­ரென யுத்தம் முடி­வுக்கு வந்­த­­தை­ய­டுத்து, இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்து அவர்­களின் பாது­காப்பில் இருக்க வேண்­டிய கட்­டா­ய­மான ஒரு சூழ்­நி­லையில் இரா­ணு­வத்­தினர் தங்­க­ளுக்கு என்ன செய்­கின்­றார்கள் என்­பது குறித்து முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் கேள்வி எழுப்­பி­யி­ருக்க முடி­யாது.

சந்­தேகம் ஏற்­பட்­டி­ருந்­தா­லும்­கூட, பதற்­றமும், பாது­காப்பு தொடர்­பான நம்­பிக்­கை­யற்ற ஒரு நிலை­மையில் இரு தரப்­பி­னரும் எதிர்த்­த­ரப்­பினர் எவ்­வாறு நடந்து கொள்­வார்­களோ என்ற சந்­தே­கத்­தோடு பழ­கிய நிலையில் இந்த ஊசி விட­யத்தை அவர்கள் முன்­னெ­டுத்­தி­ருக்க முடி­யாது. விவ­கா­ர­மாக்­கி­யி­ருக்­கவும் முடி­யாது என்­பதில் சந்­தே­க­மில்லை. தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த போது, அவர்­க­ளுக்குப் புனர்­வாழ்வுப் பயிற்சி வழங்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்ட போதிலும், அந்தச் சூழல் உண்­மை­யி­லேயே மூளைச்­ச­ல­வைக்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட சூழ­லா­கவே இருந்­தது என்று புனர்­வாழ்வுப் பயிற்­சியின் பின்னர் விடு­த­லை­யா­கிய பலரும் கூறு­கின்­றனர். புனர்­வாழ்வுப் பயிற்சி முகா­முக்கு இவர்கள் அனுப்பி வைக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் இறுக்­க­மான விசா­ர­ணை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். 

இந்த விசா­ர­ணை­களில் ஒரு­வ­ரு­டைய பிறப்பு முதல் விசா­ரணை நேரம் வரை­யி­லான வாழ்க்கை வர­லாறு விரி­வாக விசா­ரணை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்த வாழ்க்கைச் சம்­ப­வங்­களில் பல­வற்றை பல்­வேறு அரச எதிர்ப்புத் தாக்­குதல் நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்தி பல்­வே­று­பட்ட வினாக்­க­ளுக்கும் அப்­போது அவர்கள் பதி­ல­ளிக்க வேண்­டிய கட்­டாய நிலை­மைக்குத் தள்­ளப்­பட்­டி­ருந்­தார்கள். 

இந்த விசா­ர­ணை­களில் உண்மைச் சம்­ப­வங்­களை உள்­ளது உள்­ள­ப­டியே தெரி­விக்­கப்­பட்­டி­ரு­ந­்தா­லும்­ கூட, இரா­ணுவ புல­னாய்­வா­ளர்கள் எதிர்­பார்த்­தி­ருந்த வகையில் விப­ரங்­களைப் பெறு­வ­தற்­கா­கவும், பதில்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவும், கடு­மை­யான விசா­ரணை நடை­மு­றைகள் பின்­பற்­றப்­பட்­ட­தாக புனர்­வாழ்வு பெற்று சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் கூறு­கின்­றனர். 

தடுப்­புக்­கால நிலைமை 

இந்த விசா­ர­ணை­க­ளின்­போது மிக மோச­மான மன உளைச்­ச­லுக்கும் அச்ச உணர்­வுக்கும், எதிர்­காலம் குறித்த நிச்­ச­ய­மற்ற ஒரு நிலை­மைக்கும் தாங்கள் உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அவர்கள் தனிப்­பட்ட முறையில் கலந்­து­ரை­யா­டு­கையில் தெரி­வித்­துள்­ளனர். 

எனவே, இரா­ணு­வத்தின் இறுக்­க­மான பிடிக்குள் கடு­மை­யான நடை­மு­றை­க­ளுக்­குள்ளே இருந்­து­விட்டு, புனர்­வாழ்வு முகா­முக்குச் சென்­றி­ருந்த போது, அங்கு தங்­க­ளுக்கு ஏற்­றப்­பட்ட ஊசி­ பற்­றியோ அல்­லது அந்த மருந்து பற்­றியோ அவர்கள் பிரஸ்­தா­பிக்­கத்­தக்க மன நிலையில் இருந்­தி­ருப்­பார்கள் என்­பதில் எந்­த­வி­த­மான சந்­தே­கமும் இல்லை.  இறுதி யுத்­தத்தின் பின்னர், இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த செட்­டி­குளம் மனிக்பாம் இடைத்­தங்கல் முகாமில் சாதா­ரண மக்கள் மீது இரா­ணு­வத்­தி­னரும் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களும் எந்த அள­வுக்குக் கடு­மை­யாக நடந்து கொண்­டார்கள் என்­பதை உல­கமே நன்­க­றியும். இந்த நிலையில் இரா­ணு­வத்­திற்கு எதி­ராக யுத்­த­க­ளத்தில் ஆயுதத் தாக்­கு­தல்­களில் ஈடு­பட்­டி­ருந்த முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களின் நிலைமை இரா­ணு­வத்தின் பிடியில் எவ்­வாறு இருந்­தி­ருக்கும் என்­பது சொல்லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.  இதன் கார­ண­மா­கத்தான் இந்த தடுப்­பூசி மருந்து பற்­றிய விட­யத்தை முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் புனர்­வாழ்வுப் பயிற்­சி­யின்­போது பெரிய விட­ய­மாகக் கருத முடி­யா­தி­ருந்­தது. அது மட்­டு­மல்ல. புனர்­வாழ்வுப் பயிற்சி முடி­வ­டைந்து சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களை இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்கள் மிகத் தீவி­ர­மாகக் கண்­கா­ணித்து வந்­தார்கள். 

இந்தக் கண்­கா­ணிப்­ப­தென்­பது, சாதா­ர­ண­மாக அவர்­க­ளு­டைய நாளாந்தச் செயற்­பா­டு­களை அவர்­க­ளுக்குத் தெரிந்தும் தெரி­யா­மலும் நெருக்­க­மாக நோட்டம் விடு­வ­தாக மட்டும் இருக்­க­வில்லை. இடை­யி­டையே அவர்­க­ளிடம் விசா­ர­ணை­களும் குறை­வில்­லாமல் இடம்­பெற்று வந்­தன. விசா­ர­ணைகள் எனும்­போது, சாதா­ரண விசா­ர­ணை­க­ளில்லை.  தேசிய பாது­காப்­புக்குக் குந்­தகம் விளை­வித்தல் என்று சந்­தே­கிக்­கப்­படும் ஒரு­வரை முதற் தட­வை­யாக விசா­ரணை செய்­வது போலவே அந்த விசார­ணைகள் அமைந்­தி­ருக்கும் என்று தங்கள் அனு­ப­வத்தைப் பற்றி தகவல் வெளி­யிட்ட பலரும் தெரி­வித்­தனர். குறிப்­பாக ஒரு­வ­ரு­டைய பிறப்­பி­லி­ருந்து விசா­ரணை நேரம் வரையில் அவ­ரு­டைய வாழ்க்கை வர­லாறு, சந்­தே­கத்­திற்­கு­ரிய செயற்­பா­டுகள் பற்­றிய விளக்­கங்கள் உள்­ளிட்ட வகை­யி­லேயே இந்த விசா­ர­ணைகள் அமைந்­தி­ருந்­தன. அமைந்­தி­ருக்­கின்­றன என்று அவர்கள் குறிப்­பி­டு­கின்­றார்கள்.

 

புனர்­வாழ்வுப் பயிற்­சியின் பின்னர் சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் மீதான கண்­கா­ணிப்பு மற்றும் விசா­ர­ணை­களில் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் கடுமை சற்று குறைந்­தி­ருக்­கின்­ற­தே­யொ­ழிய விசா­ர­ணை­க­ளுடன் கூடிய கண்­கா­ணிப்பு முடி­வுக்கு வந்­த­பா­டில்லை என அவர்கள் கூறு­கின்­றார்கள். 

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் யுத்தம் முடி­வுக்கு வந்து ஏழு வரு­டங்கள் கடந்த பின்னர் இரா­ணு­வத்­தினர் மீதான இந்த ஊசி மருந்து ஏற்­றப்­பட்ட குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. நல்­லாட்­சிக்­கான அர­சாங்கம் என அழைக்­கப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான இந்த அர­சாங்­கத்தில் பொது­வாக இரா­ணுவ நெருக்­கு­வா­ரங்கள் குறைந்­தி­ருக்­கின்­றன. அதன் கார­ண­மா­கத்தான், நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைந்­தி­ருக்க வேண்டும் என்­பது குறித்த மக்கள் கருத்­த­றியும் ஒரு நிகழ்வில் முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பினர் ஒருவர் புனர்­வாழ்வு முகாமில் தனக்கு ஏற்­பட்­டி­ருந்த நிலைமை குறித்து தகவல் வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

தடுப்­பூசி என்ற பெயரில் தங்­க­ளுக்கு ஏற்­றப்­பட்ட ஊசி மருந்­தா­னது, காலம் செல்லச் செல்ல மெது­வாக பல்­வேறு உடற் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தத்­தக்க வகை­யி­லான இர­சா­யனம் அல்­லது ஒரு வகை­யான விஷம் கலந்­த­தாக இருக்க வேண்டும் என்ற தொனி­யி­லேயே அந்த முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பினர் தகவல் வெளி­யிட்­டி­ருக்­கின்றார். 

முன்னர் சிறந்த தேகா­ரோக்­கி­யத்­துடன் இருந்­த­தா­கவும் பெரும் சுமை­யொன்றைச் சுமந்த வண்ணம் வேக­மாக ஒடக்­கூ­டிய தன்மை பெற்­றி­ருந்­த­தா­கவும், ஆனால் புனர்­வாழ்வு முகாமில் இருந்து வெளியில் வந்­த­பின்னர், தனது தேகா­ரோக்­கியம் ஏதோ வகையில் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், முன்­னரைப் போலில்­லா­விட்­டாலும், சாதா­ரண சுமையைக் கூட தன்னால் சுமக்க முடி­யா­திருப்ப­தா­கவும் அவர் கவலை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். இவ­ரு­டைய கூற்று சமூ­கத்தில் மட்­டு­மல்­லாமல், அர­சியல் வட்­டா­ரங்­க­ளிலும் அதிர்ச்சி அலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இதற்குக் காரணம் இல்­லாமல் இல்லை.

முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களின் காரணம் தெரி­யாத மர­ணங்கள்

முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் பலர் காரணம் தெரி­யாத வகையில் திடீர் திடீ­ரென மர­ண­ம­டைந்­த­தா­கவும், பலர் புற்று நோய் கார­ண­மாக உயிர் துறந்­தி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. 

விடு­த­லைப்­பு­லி­களின் மக­ளிர்­துறை அர­சியல் பொறுப்­பா­ள­ராக இருந்த தமி­ழினி புனர்­வாழ்வுப் பயிற்­சியின் பின்னர் பூந்­தோட்டம் புனர்­வாழ்வு முகாமில் இருந்து விடு­தலை செய்­யப்­பட்டு சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டி­ருந்தார். இவர் தனது தாயார் மற்றும் சகோ­த­ரர்­க­ளுடன் வாழ்ந்­த­போது புற்­று­நோய்க்கு ஆளாகி மக­ர­கம வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற்று சிகிச்சை பல­னின்றி இறந்து போனார். 

மிகுந்த திட­காத்­தி­ர­மாகச் செயற்­பட்­டி­ருந்த இவ­ருக்கு இரா­ணு­வத்தின் பிடியில் இருந்து புனர்­வாழ்வுப் பயற்­சி­ய­ளிக்­கப்­பட்­டதன் பின்னர் எவ்­வாறு, என்ன கார­ணத்­திற்­காகப் புற்று நோய் ஏற்­பட்­டது என்ற கேள்வி இன்னும் பதி­ல­ளிக்­கப்­ப­டாத ஒன்­றா­கவே இருக்­கின்­றது. 

இவரைப் போலவே கணவன் இல்­லாமல் பிள்­ளை­க­ளுடன் இருந்த முன்னாள் விடு­த­லைப்­புலி மகளிர் உறுப்­பி­னர்கள் சிலரும் புற்று நோய் கார­ண­மாக மர­ண­ம­டைந்­த­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. 

இவ்­வாறு சுமார் நூறு பேர் வரை­யி­லான ஆண்­களும் பெண்­க­ளு­மான முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் சந்­தே­கத்­திற்கு உரிய வகையில் மர­ண­ம­டைந்­த­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. 

இந்தத் தக­வல்கள் சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் மற்றும் அவர்­க­ளு­டைய குடும்­பத்­தினர் உற­வி­னர்கள் மட்­டு­மல்­லாமல் மனித நேயம் மிக்­க­வர்கள், சமூக நலன்­களில் அக்­கறை கொண்­ட­வர்கள் என பல­த­ரப்­பட்­ட­வர்கள் மத்­தி­யிலும் பெரும் அதிர்ச்­சி­யையும் கவ­லை­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வர்­களின் மர­ணங்கள் குறித்து விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு உண்மை நிலைமை கண்­ட­றி­யப்­பட வேண்டும் என்று புலம் பெயர் தமிழர் தரப்பில் இருந்து குரல் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன. இந்த விடயம் குறித்து கருத்து வெளி­யிட்ட வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், இந்த விடயம் குறித்து உண்­மை­யான நிலைப்­பாடு என்ன என்­பது விசா­ர­ணை­களின் மூலம் கண்­ட­றி­யப்­பட வேண்டும் என தெரி­வித்­தி­ருந்தார். இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் புனர்­வாழ்வு முகாம்­களில் இருந்த போது முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­க­ளுக்கு சந்­தே­கத்­திற்கு உரிய வகையில் ஊசி மருந்து ஏற்­றப்­பட்­டது என்ற முன்னாள் உறுப்­பினர் ஒரு­வ­ரு­டைய கூற்று பல­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்து பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அத்­துடன் புனர்­வாழ்வுப் பயிற்சி பெற்று சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு உரிய மருத்­துவ பரி­சோ­தனை நடத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையும் எழுந்­துள்­ளது.

விசா­ர­ணை­யொன்று தேவை

முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­க­ளுக்கு ஏற்­ற­பட்ட தடுப்­பூசி அல்­லது தடுப்­பூசி மருந்து இப்­போது சமூக மட்­டத்­திலும் அர­சியல் மட்­டத்­திலும் முக்­கிய விவ­கா­ர­மா­கி­யி­ருக்­கின்­றது. 

முகாம்­களில் மருந்து ஏற்­றப்­பட்­ட­தனால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­புக்கள் குறித்து மத்­திய அமைச்­சர்­களும், இரா­ணு­வத்­தி­னரும் கருத்துக்களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றார்கள்.

அமைச்சர் ராஜித சேனா­ரத்ன இத்­த­கைய பாதிப்­புக்கள் குறித்து முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­ப­டு­மானால் அது குறித்து கவனம் செலுத்­தப்­படும் என கூறி­யி­ருக்­கின்றார். அதே­வேளை, அவ்­வாறு எந்­த­வி­த­மான இரசா­யனம் கலந்த ஊசியோ அல்­லது பின்னர் பாதிப்பை ஏற்­ப­டுத்த வல்ல மருந்­து­களோ புனர்­வாழ்வுப் பயிற்சி பெற்­ற­வர்­க­ளுக்கு ஏற்­றப்­ப­ட­வில்லை என இரா­ணுவ தரப்பில் மறுத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. 

அது மட்­டு­மல்­லாமல் இது ஒரு பௌத்­த­நாடு, மிரு­கங்­க­ளுக்­குக்­கூட இங்கு நச்சு மருந்து ஏற்­றப்­ப­டு­வ­தில்லை. அவ்­வா­றி­ருக்­கும்­போது புனர்­வாழ்வு பயிற்­சி­யின்­போது முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­க­ளுக்கு இர­சா­யனம் கலந்த மருந்து ஏற்­றப்­பட்­டது என்­பது அபத்­த­மான குற்­றச்­சாட்­டாகும் என்ற தொனியில் இரா­ணுவ தரப்பின் மறு­த­லிப்பு அமைந்­தி­ருக்­கின்­றது.

ஆட்­க­டத்தல், அடை­யாளம் தெரி­யாத வகையில் மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள். விளை­யாட்­டுத்­துறை ஊட­கத்­துறை உள்­ளிட்ட வேறு துறை­களைச் சார்ந்­த­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் புதிய ஆட்­சியில் வெளி­வ­ரு­கின்ற விசா­ரணைத் தக­வல்கள் படைத்­த­ரப்­பி­ன­ரு­டைய மறு­த­லிப்பை முரண் நகைமிக்­க­தாக்­கி­யி­ருக்­கின்­றது என்றே கூற வேண்டும். 

எது எப்­ப­டி­யா­யினும், இர­சா­யனம் கலந்த ஊசி மருந்து புனர்­வாழ்வு பயிற்சி பெற்­ற­வர்­க­ளுக்கு ஏற்­றப்­பட்­டது என்­ற­தொரு குற்­றச்­சாட்டு படைத்­த­ரப்­பினர் மீது பகி­ரங்­க­மாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இதற்கு ஆதா­ர­மான முறையில் புனர்­வாழ்வுப் பயற்­சியின் பின்னர் சமூ­கத்தில் இணைக்­கப்­பட்ட சிலரின் மர­ணங்கள் சம்­ப­வித்­தி­ருக்­கின்­றன. அத்­த­கைய மர­ணங்­களில் தெளி­வான மரண விசா­ரணைத் தக­வல்கள் வெளி­யா­க­வு­மில்லை.

சாதா­ர­ண­மாக சமூ­கத்தில் உள்ள ஒருவர் புற்று நோயினால் மர­ண­ம­டைந்தால், புற்று நோய் கார­ண­மா­கவே அவ­ரு­டைய மரணம் நேர்ந்­துள்­ளது என்று மர­ணத்­திற்­கான கார­ணத்தைக் கூறி­விட்டுப் போகலாம். 

ஆனால் இரா­ணு­வத்தின் பரா­ம­ரிப்பில் பல வரு­டங்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களின் இத்­த­கைய மர­ணங்கள் குறித்து மிகத் தெளி­வான காரண காரி­யங்­களை வெளிப்­ப­டுத்­தத்­தக்க வகையில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அது இங்கு நடை­பெ­ற­வில்லை. ஆகவே, புனர்­வாழ்வுப் பயிற்­சி­யின்­போது என்ன வகை­யான மருந்து ஊசி மூலம் ஏற்­றப்­பட்­டது, அந்த மருந்தின் தன்மை என்ன, காலங் கடந்த நிலையில் அது என்ன வகை­யான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்த வல்­லது, என்ன கார­ணத்­திற்­காக அந்த மருந்து ஏற்­றப்­பட்­டது, அதற்­கான உத்­த­ரவை யார் வழங்­கி­னார்கள், தகுதி வாய்ந்த மருத்­து­வர்­க­ளினால் அந்த மருந்து ஏற்­றப்­பட்­டதா என்­பது போன்ற வினாக்­க­ளுக்கு விடை­ய­ளிக்­கத்­தக்க வகையில் விரி­வான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு விசா­ரணை அறிக்கைகள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இல்­லையேல், தாம­தித்து உயி­ரா­பத்­துக்­களை ஏற்­ப­டுத்தும் மருந்­துகள் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள் அல்­லது தடுப்பு மருந்து என்ற பெயரில் அர­சுக்கு எதி­ராக ஆயு­த­மேந்திப் போரா­டி­யதன் பின்னர் தமது பாது­காப்பில் வந்­த­வர்­களை மனி­தா­பி­மா­னத்­துக்கு விரோ­த­மான முறையில் பழி வாங்­கி­யி­ருக்­கின்­றார்கள் என்ற பழிச்­சொல்­லுக்­கு ­இ­ரா­ணு­வத்­தி­னரும், முன்­னைய அர­சாங்­கமும், ஆளாக நேரிடும். 

மருத்­துவ பரி­சோ­த­னையும் உள­வியல் சார்ந்த நிவா­ர­ணமும் அவ­சியம்

புனர்­வாழ்வுப் பயற்­சி­யின்­போது உண்­மை­யி­லேயே என்ன நடந்­தது என்­பது பற்­றிய விசா­ரணை ஒரு புற­மி­ருக்க, புனர்­வாழ்வுப் பயிற்­சியின் பின்னர் சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் முழு­மை­யா­ன­தொரு மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

அவ்­வா­றான ஒரு பரி­சோ­த­னையின் மூலமே அவர்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்­ப­ட­மாட்­டாது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட முடியும்.  இல்­லையேல் அவர்­க­ளுக்கு இயல்­பா­கவே ஏற்­ப­டு­கின்ற உடற் பாதிப்­புகள் கூட, இர­சா­யன மருந்து ஏற்­றி­யதன் கார­ண­மா­கவே ஏற்­பட்­டி­ருக்­கின்­றன என்ற குற்­றச்­சாட்­டிற்கு அரச தரப்­பினர் ஆளாக நேரி­டலாம். 

அர­சாங்­கமும் அதே­வேளை, வட­மா­காண சுகா­தா­ரத்­துறை அமைச்சர் சத்­தி­ய­லிங்­கமும் முன்னாள் விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­க­ளுக்கு மருத்­துவ பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்­றார்கள். 

இந்த உறு­தி­மொ­ழியை ஒரு சாரார், நட­வ­டிக்கை எடுக்கப் போகின்­றார்­கள்­தானே, எனவே, இந்த விடயத்தை அர­சி­ய­லாக்கக் கூடாது என கூறி­யி­ருக்­கின்­றார்கள். 

மருத்­துவ பரி­சோ­தனை என்­பது சாதா­ர­ண­மா­ன­தல்ல. தொடர்ச்­சி­யான உள­வியல் பாதிப்­புக்கும், உள நெருக்­கீடு மிக்க உடல் உபா­தைகள் கொண்ட நடை­மு­றைக்கும் சில சம­யங்­களில் சித்­தி­ர­வதை சார்ந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கும் ஆளா­கி­யி­ருக்­கின்ற முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­க­ளுக்கு

 

சாதா­ர­ண­மான ஆரோக்­கிய நிலையில் உள்­ள­வர்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற மருத்­துவ பரி­சோ­த­னையைப் போன்­ற­தொரு பரி­சோ­தனை போதி­ய­தாக இருக்க மாட்­டாது. 

அவர்­க­ளுக்கு மிகவும் பரந்த அள­வி­லா­னதும், விசேட கவனம் மிக்­க­து­மான மருத்­துவ பரி­சோ­தனை நடத்­தப்­பட வேண்டும். இதற்கு துறை­சார்ந்த வைத்­திய நிபு­ணர்­களும், துறை­சார்ந்த வைத்­தி­யர்­களும் கொண்­ட­தொரு மருத்­துவர் அணி தேவை. 

புனர்­வாழ்வுப் பயிற்சி பெற்ற 12 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டி­ருக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதென்பது இலகுவானதொரு காரியமல்ல. 

வெறும் உடல் மருத்துவ பரிசோதனை மட்டும் போதுமானதென்று கூற முடியாது. அவர்களுக்கு சிறப்பான உளவியல் மருத்துவம் சார்ந்த மருத்துவ பரிசோதனையும், அவர்களின் உளவியல் நிலைமைக்கு ஏற்ற வகையிலான உளவியல் மருத்துவமும் அவசியம். 

ஏனெனில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தாங்கள் வரித்துக்கொண்ட கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டிருந்தார்கள். அந்த கொள்கைக்காக தமது உயிர்களையே ஆயுதமாக்குவதற்கு பக்குவப்படுத்தப்பட்டிருந்தார்கள். அதற்காகவே அவர்கள் வார்த்து உருவாக்கப்பட்டிருந்தார்கள். அத்தகையவர்களே தமது எதிரிகளிடம் சரணடைந்து அல்லது கைது செய்யப்பட்டு, அவர்களின் தயவில் தடுப்புக்காவலில் - புனர்வாழ்வுப் பயிற்சி என்ற கவர்ச்சியற்ற செயற்பாடுகளுக்கு ஆளாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

 இதன் காரணமாக அவர்கள் உளவியல் ரீதியாக மிக மோசமான முரண் நிலைக்கும் உள நெருக்கீட்டிற்கும் ஆளாகியிருந்தார்கள். யுத்தத்தில் தோல்வியடைந்ததும் - அர்த்தமற்ற சவாலாக இருந்தாலும், ஏன் அங்கேயே சாகாமல் உயிர் மீது ஆசை கொண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்தோம் அல்லது இராணுவத்தின் தடுப்புக்குள் சென்றோம் என்று தாழ்வுச்சிக்கல் சார்ந்த மன உணர்வுகளில் ஆழ்ந்து ஆற்றாது பெருந் துயரடைந்திருந்தார்கள்.

இத்தகைய மனப்பாதிப்புக்கு உள்ளாகிய அவர்கள் இப்போது தங்களுக்கு மெல்லப் பாதிக்கும் மருந்து ஏற்றப்பட்டிருக்கின்றது என்று எண்ணினால் --- நம்பினால், அதுவே அவர்களுக்கு மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தவல்ல உளவியல் பாதிப்பாகி விடும். அந்த நிலை அவர்களிடம் மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தினரிடமும் தலையெடுத்திருப்பதை உணர முடிகின்றது. 

எனவே, இந்த ஊசி மருந்து விடயம் என்பது மிகவும் பாதிப்புக்களை ஏற்படுத்த வல்லதொரு விவகாரமாகும். ஆதனை உரிய முறையில் கையாள வேண்டும். அதற்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும் வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் சமூகம் மோசமான பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அபாயம் ஏற்படலாம் என்பதில் சந்தேகமில்லை.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=06/08/2016

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.