Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகோதரியைக் கடத்தி தந்தையிடம் 7 இலட்சம் ரூபா கப்பம் கோரிய 17 வயதுச் சிறுவன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்த சகோதரியை கப்பம் கோரிக் கடத்திய குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முதல் பிள்ளையான குறித்த 17 வயதுடைய சிறுவன், தனது சகோதரியைக் கடத்திச் சென்று மாற்றுக் குரலில் தந்தையிடம் சுமார் 700,000 ரூபாய் கப்பம் கோரியதாகக் கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

தனது சொந்த சகோதரியை கப்பம் கோரிக் கடத்திய குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முதல் பிள்ளையான குறித்த 17 வயதுடைய சிறுவன், தனது சகோதரியைக் கடத்திச் சென்று மாற்றுக் குரலில் தந்தையிடம் சுமார் 700,000 ரூபாய் கப்பம் கோரியதாகக் கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

   

சிறுவனின் தாயார், மூன்று பிள்ளைகளையும் அவர்களின் தந்தையின் பராமரிப்பில் விட்டு, வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். தனது மூத்த மகன், இசைக் குழுவொன்றை அமைப்பதற்காக தன்னிடம் 500,000 ரூபாய் கோரியிருந்ததாகவும் தனது 15 வயதுடைய மகள் திடீரெனக் காணாமல் போனதையடுத்து அயலவர்களுடன் இணைந்து மகளைத் தேடிய போது சந்தேகநபரும் இணைந்து தேடியதாகவும், எங்கு தேடியும் மகள் கிடைக்காமையால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தந்தை தெரிவித்துள்ளார். தனது மகளை விடுவிக்க வேண்டுமாயின் 700,000 ரூபாய் கப்பம் வேண்டுமென அழைப்பொன்று வந்ததாகக் குறித்த முறைப்பாட்டில் தந்தை தெரிவித்திருந்தார்.

தந்தை வழங்கிய முறைப்பாட்டுக்கமைய பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான கம்பஹா பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் காணாமற்போன மகள், கடந்த சனிக்கிழமை இரவு 09 மணியளவில் வீடு திரும்பினார். அறியப்படாத ஒரு பகுதியிலுள்ள வீடொன்றில் தான் கடத்தி வைக்கப்பட்டதாகவும் பின்னர் தன்னைக் கடத்திய இனந்தெரியாத நபர்கள், முச்சக்கரவண்டியொன்றில், தனது வீடு அமைந்துள்ள சந்திப் பகுதியில் விட்டுச் சென்றதாகவும் தந்தையிடம் மகள் தெரிவித்துள்ளார். பின்னர் கம்பஹா பொலிஸார் நடத்திய தொடர் விசாரணைகளில் நடந்த விடயங்களை மகள் முழுமையாக விளக்கிக் கூறியுள்ளார்.

தனது சகோதரர், அவரது நண்பரின் வீட்டுக்கு தன்னை அழைத்துச் சென்றதாகவும் இசைக் குழுவை அமைப்பதற்கான பணத்தை தந்தையிடம் பெற சகோதரன் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்தே சந்தேகநபர், கம்பஹா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=163162&category=Puthinam&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.