Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போனோர் அலுவலகத்தினால் தீர்வேதும் கிடைக்காது-மக்கள் அதிருப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள காணாமல்போனோரின் உறவினர்கள் குறித்த அலுவலகத்தினால் தமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையற்ற நிலையிலேயே உள்ளதாக அலுவலகம் உட்பட நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பிலான மக்களின் கருத்துக்களை அறிந்த அரசாங்கத்தின் விசேட செயலணி தெரிவித்துள்ளது.

 

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான  அரசாங்கம் தமக்குரிய பொறுப்பை உதாசீனம் செய்தமையே இந்த நிலமைக்குப் பிரதான காரணம் என்றும் குறித்த செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மனோரி முது்தெட்டுவேகம தலைமையிலான 11பேர் அடங்கிய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பிலான மக்களின் கருத்துக்களை அறியும் செயலணி வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் அமர்வுகளை நடாத்தி மக்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளது.

 

இதற்கமைய நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள குறித்த செயலணிஇ பல தசாப்தகாலமாக தொடரும் காணாமல்போகச் செய்யும் சம்பவங்களை பாரதூரமான குற்றச்செயலாக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளhமையை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

 

மக்களை அச்சுறுத்துவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் காணாமல் போகச் செய்யும் சம்பவங்களை பாரதூரமான குற்றச்செயலாக அறிவிக்கப்படாமை அரசாங்கத்திற்கு இவற்றை தடுப்பதற்கான தேவை இன்மையையே கோடிட்டுக்காட்டுவதாக குறித்த செயலணி தெரிவித்துள்ளது.

 

எவ்வாறாயினும் காணாமல்போனோர் அலுவலகம் ஊடாக யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவருக்கும் தண்டனை வழங்கப்படாது என  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மிகத் தெளிவாக குறித்த அலுவலக சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட தினம் நாடாளுமன்றில் உறுதியளித்திருந்தார்.

 

இந்த நிலையில் காணாமல்போனோரின் உறவினர்கள்இ காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களை உள்வாங்காது அரசாங்கம் குறித்த அலுவலகத்தை அமைத்துள்ளமை தொடர்பில் மக்கள் கருத்தறியும் செயலணி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

 

எவ்வாறாயினும் காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தாம் நடாத்திய அமர்வுகளில் அதிகளவில் பங்குபற்றி தமது நிலைப்பாடுகளை கூறியிருந்ததாகவும் செயலணி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதன்மூலம் காணாமல்போனோரின் அலுவலகத்தினால் தமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தும் இவ்வாறான நடவடிக்கைகளால் ஏதாவது ஒன்று கிடைத்துவிடும் என்ற சிறிய நம்பிக்கை கொண்டிருப்பதையும் காணக்கிடைத்ததாக மனோரி முத்தெட்டுவேகம செயலணி தெரிவித்துள்ளது. 

http://www.onlineuthayan.com/news/16588

இலங்கை: காணாமல் போனவர்களுக்கான செயலணியில் தமிழர்களும், முஸ்லிம்களும் இடம்பெற கோரிக்கை

இலங்கையில் அரசினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனவர்களுக்கான செயலணியில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம் முஸ்லிம் சிவில் அமைப்புகளினால் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஓன்றான ஏறாவுரில், இன்று (புதன்கிழமை) நடைப்பெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வின் போது, இந்த யோசனை ஏறாவுர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் முன் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த அமர்வு நடைபெற்று முடிந்த நிலையில், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்ததாக முஸ்லிம் சிவில் அமைப்புகளினால் இந்த செயலணி மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.

ஏறாவுர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இன்றைய அமர்வின் போது, குறிப்பாக முஸ்லிம்கள் தமது காணி உரிமை , மீள் குடியேற்றம், இழப்பீடுகள் , ஆட்கள் காணாமல் போனமை போன்ற விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை முன் வைத்தனர்.

ஏறாவுர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் முன் வைக்கப்பட்ட யோசனைகளில் சில:-

'' வட மாகாணத்தை போன்று கிழக்கு மாகாணத்திலும், தமிழர்களும், முஸ்லிம்களும் காணாமல் போயுள்ள நிலையில் காணாமல் போனவர்கள் விவகாரம் வட மாகாணத்தை மட்டும் மையப்படுத்தி முன்னெடுக்கப்பட கூடாது.

காணாமல் போனவர்களுக்கான செயலணியில் கிழக்கு மாகாணத்தை வாழ்விடமாக கொண்ட தமிழரும், முஸ்லிமும் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்

யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் ஆயுதம் ஏந்திய தரப்பினரால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன ரீதியான செயல்பாடுகளின் உண்மை நிலை கண்டறிப்பட்டு நீதி கிடைக்க வேண்டும். பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இழப்பீடு கிடைக்க வேண்டும்.'' என வலியுறுத்தி கூறப்பட்டுள்ளன.

நாட்டின் இறைமைக்கு பாதிப்பு இல்லாத பக்க சார்பற்ற நம்பகத்தன்மையான நீதி விசாரனையே முஸ்லிம்கள் விரும்புவதாக ஏறாவுர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள யோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"உள்நாட்டு பொறிமுறையிலான விசாரனை நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறப்பு வழக்கு தொடுரர் குழாமில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழரும், முஸ்லிமும் அதில் இடம் பெற வேண்டும்.

சர்வதேச விசாரணை அல்லது சர்வதேச கண்காணிப்புடனான விசாரனையாக அது அமையும் பட்சத்தில் இலங்கை முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளக கூடிய முஸ்லிம் நாடுகளுக்கும் அதில் இடமளிக்கப்பட வேண்டும் '' என்றும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம் சமர்பிக்கப்பட்ட மனுவில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/08/160824_eravur

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.