Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணச்சான்றிதழ் பெற்ற 7200 குடும்பங்களும் காணமல்போனோர் சான்றிதழை பெறமுடியும்

Featured Replies

மரணச்சான்றிதழ் பெற்ற 7200 குடும்பங்களும் காணமல்போனோர் சான்றிதழை பெறமுடியும்

 

தமது உறவுகளைத் தொலைத்த 7200 குடும்பங்கள் மரணச்சான்றிதழைப் பெற்றுள்ளன. அவர்கள் அனைவருக்கும் காணமல்போனேர் சான்றிதழைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள். அதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் உள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

இவ்விடயம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

பாராளுமன்றத்தில் இறப்புக்களின் பதிவு(தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமூலம் கடந்த வியாழக்கிழமையன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திருத்தச்சட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முக்கிய திருத்தமொன்று கொண்டுவரப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

canada_11813_102.jpg

உறவுகளை இழந்து அவர்களை கண்டறிவதற்காக பல்வேறு இன்னல்களை சந்தித்தவாறு அன்றாடம் தேடியலைந்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் யுத்தம் நிறைவடைந்து தற்போது வரையிலான ஏழாண்டு காலப்பகுதியில் அவ்வாறு உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் 7200 பேர் ஏதோவொரு காரணத்திற்காக அவர்களின் உறவுகள் இறந்து விட்டதாக கூறி வழங்கப்பட்ட மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 

உண்மையிலேயே தமிழ் மக்கள் இந்தச் சான்றிதழை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. நெருக்கடியான சூழலில் தான் இவ்வாறு மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக கண்டித்திருந்தது. 

இந்நிலையில்  தற்போது    நிறைவேற்றப்பட்டுள்ள    இறப்புக்களின் பதிவு(தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமூலத்தில் மரணச்சான்றிதழ்  பெற்றவர்கள்  தமது  சுய விருப்பத்தின் அடிப்படையில் அதனை மீள கையளித்து காணமல்போனோர் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவர்கள் என்ற திருத்தம் எமது கட்சி சார்பில் என்னால் முன்வைக்கப்பட்டது. 

அத்திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே மரணச்சான்றிதழை பெற்றுக்கொண்ட எமது மக்கள் அதனை மீளக் கையளித்து காணமல்போனோர் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளமுடியும். அதற்கு அவர்களுக்கு சட்ட ரீதியான உரித்துடையவர்கள். 

http://www.virakesari.lk/article/10707

  • கருத்துக்கள உறவுகள்

வலிமையான பல செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய எதிர்கட்சியில் இருந்தும்..... காணாமல்போனோரைக் கண்டறிவதற்கான அழுத்தங்களை அரசுக்குக் கொடுக்க முடியாதவர்..... காணாமல்போனோர் சான்றிதழைப் பெற்றுக்கொடுக்கும் திருத்தம் "என்னால் முன்வைக்கப்பட்டது" என்று பெருமை கொள்கிறார். பசிக்கு அரிசியோ, நெல்லோ கிடைக்காவிட்டாலும், உமியாவது பெற்றுக் கொடுக்கிறார் சுட்டுப் பல்விளக்க. :3_grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாடிக்கேற்ற மூடி மாதிரி சிங்கள் இனவாத அரசுக்கேற்ப....... எம்மக்கள் வாக்களித்த அரசியல் தலைவர்களும் இருக்கின்றார்கள்.tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.