Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு

Featured Replies

பிரபாகரன் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு
 
 

article_1471175043-100.jpgவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் உறவினர்கள் கேட்டுக்கொண்டால், காணாமல் போனோர் தொடர்பில் தேடியறியும் அலுவலகத்தில் பிரபாகரன் தொடர்பில் முறைப்பாடு முன்வைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வானொலி ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு பிரஜைக்கும் இந்த அலுவலகத்தில் முறைப்பாடு செய்யமுடியும். அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் காணாமல் போனோர் குறித்து தெரியப்படுத்துவதற்காக முறைப்பாடுகளை செய்யுமா
று கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/180646/ப-ரப-கரன-த-டர-ப-ல-க-ண-மல-ப-ன-ர-அல-வலகத-த-ல-ம-ற-ப-ப-ட-#sthash.DeWwRV8p.dpuf

உறவினர் என்ற முறையில் சிவாஜிலிங்கத்துக்கு உள்ள உரிமைகளை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் தமிழ் சமுதாயம் கண்ட ஒப்பற்ற, ஈடு இணையற்ற மாபெரும் வீரத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை வைத்து கூட்டமைப்பு கூத்துக்கள் ஆடாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது.

  • தொடங்கியவர்

புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைக் காணவில்லை என அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்ய சாத்தியமில்லை:

 

புலிகளின் தலைவர்  வே. பிரபாகரனைக் காணவில்லை என அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்ய சாத்தியமில்லை:



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காணவில்லை என அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்ய சாத்தியமில்லை என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.


2009ம்ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.


பிரபாகரனின் சடலம் தொடர்பில் மரபணு சோதனையோ அல்லது இறப்புச் சான்றிதழோ வழங்கப்படாத காரணத்தினால் பிரபாகரனைக் காணவில்லை என காணாமல் போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அதற்கு அவரது உறவினர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எனினும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பிரபாகரனின் சகோதர சகோதரிகள், காணாமல் போனோர் அலுவலகத்தில் பிரபாகரனைக் காணவில்லை என முறைப்பாடு செய்யக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மரணப் படுக்கையில் அவதியுற்ற காலப்பகுதியில் அவரது வெளிநாட்டு வாழ் பிள்ளைகள் எவரும் அவரை பார்வையிட இலங்கை செல்லவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் தமது சகோதரரை கண்டு பிடித்து தருமாறு பிரபாகரனின் சகோதர சகோதரிகள் கோரிக்கை விடுக்கக்கூடிய சாத்தியங்கள் அரிது எனத் தெரிவிக்கப்படுகிறது. சிவாஜிலிங்கத்திற்கும் இந்த விடயம் தெரியும் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இறுதி தருணங்களில் பார்வதி அம்மாள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்வையிட ஆவலுடன் இருந்த போதிலும் அந்த ஆசை நிறைவேறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135385/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.