Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசின் மோசடி நாடகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசின் மோசடி நாடகம்!

சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பலவிதமான பரப்புரைகளை மேற்கோண்டுவருகிறது. இந்தப் பரப்புரைகள் பொய்யும், மோசடியும் நிறைந்தவைகளாக காணப்படுகின்றன. ஆயினும் சில சர்வதேச ஊடகங்கள் சிறிலங்கா அரசின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு வருகின்றன.

தற்பொழுது சிறிலங்கா அரசு மீண்டும் ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது.

நேற்று (21.01.07) சிறிலங்கா படைகளினால் கைப்பற்றப்பட்ட 4 விடுதலைப்புலிகளின் உடல்களோடு, ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டதாகவும், அக் கடிதத்தில் விடுதலைப்புலிகள் தன்னை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்ததாக எழுதப்பட்டிருப்பதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது. அத்துடன் கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறது. இக் கடிதம் சிறிலங்கா இராணுவத்தின் இணையத்தளத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.

22 வயதுடைய சந்திரசேகரன் வினோகாந்தன் என்னும் போராளி 12.01.07 அன்று எழுதப்பட்ட கடிதத்தை தன்னுடைய சட்டைப்பைக்குள் வைத்திருந்தார் என்றும், மோதலில் கொல்லப்பட்டு அவருடைய உடல் கைப்பற்றப்பட்ட போது, அக் கடிதம் சட்டைப்பைக்குள் இருந்ததாகவும் சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.

இச் செய்தியை பிபிசியின் சிங்கள சேவையும் அப்படியே வெளியிட்டுள்ளது.

ஆனால் இச் செய்தி சிங்கள அரசின் ஒரு மோசடித்தனமான நாடகம் என்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. குறிப்பிட்ட கடிதம் நேற்று (21.01.07) நடந்த சண்டையின் போது 4 போராளிகளின் உடல்களை கைப்பற்றிய போது எடுக்கப்பட்டதாக சிறிலங்காவின் பாதுகாப்புத்தரப்பு சொல்கிறது. அக் கடிதத்தை அப்படியே இணையத்தளத்தில் இணைத்தும் உள்ளனர்.

ஆனால் சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பு ஒரு விடயத்தில் கவனக்குறைவாக இருந்துவிட்டது. அக் கடிதம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைநகல் செய்யப்பட்டுள்ளது. அதில் தொலைநகல் செய்த திகதி இருக்கிறது. அந்தத் திகதி 14.01.07 என்று இருக்கிறது.

21.01.07 அன்று கைப்பற்றிய உடலுடன் இருந்த கடிதத்தை எப்படி 14.01.7 அன்றே கைப்பற்றினார்கள்? ஏற்கனவே சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பால் பொய்யான முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு கடிதத்தை தற்பொழுது வெளியிட்டு சிறிலங்கா அரசு மோசடி நாடகம் ஆடுகிறது என்பதுதான் உண்மை.

தற்பொழுது சிறிலங்கா பாதுகாப்பு தரப்பின் இணையத்தளத்தில் இருந்த கடிதத்தில் தொலைநகல் வந்த திகதியை நீக்கிவிட்டு வெளியிட்டுள்ளார்கள்.

முதலில் இணைக்கப்பட்ட அந்த மோசடியான கடிதம் - இங்கே "கிளிக்" செய்யவும்

http://tamilvoice.dk/images/stories/20070122_childtamil.pdf

http://webeelam.com/valaichenapolice.JPG

http://webeelam.com/seithikal.html

  • கருத்துக்கள உறவுகள்

அம்பலமாகிறது சிறிலங்கா அரசின் கடித நாடகம்

- பண்டார வன்னியன் Tuesday, 23 January 2007 12:31 {பதிவு}

மட்டக்களப்பு மியாங்குளத்தில் மோதல் ஒன்றில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர் ஒருவரின் காற்சட்டைப் பையில் இருந்து தாம் கண்டெடுத்ததாகக்கூறி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள சிறிலங்காவின் படைத்தரப்பு அதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மலினமான பிரசாரத்தை மேற்கொள்வதாக ஊடக வட்டாரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சந்திரசேகரன் வினோகாந்தன் (22) என்று படையினர் குறிப்பிடும் மேற்படி விடுதலைப்புலி உறுப்பினர் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் தான் பலவந்தமாக ஆட்சேர்க்கப்பட்டதாகவும் தனது வாழ்வு ஆபத்தில் இருப்பதாகவும் தன்னைக்கடவுள் காப்பாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆனால் இந்த விவகாரத்தில் படைத்தரப்பு மிகப்பல தில்லுமுல்லுகளை புரிந்துள்ளதாக கொழும்பு பத்திரிகையாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகிறார். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருந்து ஜனவரி 14ம் திகதி குறித்த கடிதம் ஊடகங்களுக்கு தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதேவேளை கடிதம் எழுதப்பட்ட திகதி 12.12.2007 ஆகும். ஆனால் குறித்த மோதல் நடைபெற்று சடலங்கள் படையினரால் கண்டெடுக்கப்பட்டது ஜனவரி 21ம் திகதி அதிகாலையாகும்.

இவற்றில் இருந்து மேற்படி கடித விவகாரம் முற்று முழுதாகவே ஒரு பொய்ப் பிரசாரம் என்பது தெளிவாகிறது எனவும் ஆனால் இவ்வளவு ஓட்டைகள் உள்ள ஒரு செய்தியை அதனது உண்மைத் தன்மையை ஆராயாது ஊடகங்கள் வெளியிட்டமை மிகவும் துரதிஸ்ரவசமானது எனவும் அப்பத்திரிகையாளர் சங்கதிக்குத் தெரிவித்தார்.

சிறிலங்கா படைத்தரப்பு தமது இணையத்தளத்தில் தாம் பிரசுரித்த மேற்படி கடிதத்தில் இருந்த திகதிகளை தற்போது நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாகரை ஆக்கிரமிப்பின் பின் சிறிலங்கா அரசும் அதனது படைத்தரப்பும் ஊடகக்கட்டமைப்பும் விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக ஒரு உளவியற் போரை மிகத்தீவிரமாக முன்னெடுக்கின்றன. இச்செய்தியும் அதன் ஒரு வடிவமே என வன்னியில் உள்ள அரசியல் அவதானி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கோய் இதெல்லாம் வழமை. இப்ப கருணா அம்மான் வேற ஐடியாக் கொடுக்க இருக்கிறார். அவரே ஒரு லெட்டரை எழுதி...

இப்படி எல்லாம் நடக்க முதலே சுட்டிக்காட்டி இருந்தோமே.. யாழ்ப்பாண முன்னாள் தளபதி லென்சில் கொப்பேகடுவ சொன்னது இதுதான். யாழ் குடாநாட்டையும் மக்களையும் போரில் வெல்லலாம் ஆனால் உளவியல் போரில் வெல்வது கடினம் என்று. ஆக எந்த ஒரு இராணுவ முனைப்பின் போதும் இராணுவம் இரண்டு வகையான யுத்தம் நடத்தும்..அது எந்த இராணுவமாக இருந்தாலும் சரி..

ஒன்று ஆயுத யுத்தம்

இரண்டு உளவியல் யுத்தம். இதை இங்க சொல்லி களைச்சிப் போயிட்டம். என்ன மாயையில மிதக்கவிட்டால் மக்கள் இப்படித்தான் சின்னக் கடிதத்துக்கும் குழம்பத்தான் செய்வினம். புகலிடத்துக்கு வந்த புலிகளும் சும்மா வாயை வைச்சுக் கொண்டிருக்காம எனி யுத்தம் வெடித்தால் சிறீலங்கா இராணுவத்தின் உடல் கூட மிஞ்சாது தமிழீழத்தில் என்று உசுப்பேத்தினார்கள். அங்கால தமிழ்செல்வன் தமிழீழக் கட்டுமானங்களை எதிரி தொடவும் முடியாது என்றார் திருமலைப் பொறுப்பாளர் எழிலன் ஜே ஆர் ஜெயவர்த்தன பாணியில் ஒரு அங்கில நிலத்தையும் எதிரி கைப்பற்ற அனுமதியோம் என்றார். இராணுவச் சமனிலை குழம்பினால் பேச்சுக்குழம்பும் என்றனர். ஏ9 திறக்காவிட்டால் நாம் திறப்போம் என்றனர். வாகரையைப் பிடித்தால் இறுதி யுத்தம் வெடிக்கும் என்றனர்..!

இது எதிரிக்கு மேல வைச்ச உளவியல் பாதிப்பை விட தமிழ் மக்களை அதிகம் பாதிச்சிருக்குது. அதற்கு தமிழர்களின் ஊடகங்களுக்கும் பொறுப்பு உண்டு. இப்ப எதிரியின் பிரச்சாரமும் சேர்ந்து தாக்குது.

இதைத்தான் நாம் உட்பட சிலர் இங்கு சொல்லச் சொல்ல துரோகி மண்ணாங்கட்டி என்று கொண்டு சில கத்துக்குட்டிகளின் பின்னால் அலைந்தனர். இப்பவாவது உண்மைகள் உணரப்படட்டும். மக்கள் சரியான வகையில் போருக்கும் எதிரியின் போர் முனைப்புகளுக்கும் ஏற்ற வகையில் இன்னும் தயார்ப்படுத்தப்படவில்லை என்பதே இன்றைய யதார்த்தம். அதனால் தான் சின்னக் கடிதம் கூட பெரிசா வெளில சொல்லப்படுகிறது. இதற்கு புலிகளும் தமிழர் ஊடகங்களும் புகலிடத்தில் இருந்து கண்ணை மூடிக்கொண்டு ஆய்வெழுதுவோருமே பொறுப்பு. எவராவது வாகரை பிடிக்கப்படும் வரை அது பிடிக்கப்படும் என்று ஆய்வெழுத முடிஞ்சதா..??! முடியல்ல. முடியாது. அந்தளவுக்கு மாயையில மக்கள் மிதந்தவர்கள். இதை எதிரி நங்கு அறிவான். கருணா டக்கிளசும் அறிவார்கள்..!

மக்கள் மனங்களைப் பலவீனப்படுத்தியதில் புலிகளின் சில பேச்சாளர்களுக்கும் பொறுப்பு உண்டு..! எனவே விளைவுகளை அவர்களும் சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. இப்போ கிழக்கின் இராணுவச் சமநிலை மாறு நிலை சார்ந்தது என்று இளந்திரையின் சொல்லி உள்ளார். இதை முன்னரே சொல்ல ஏன் தயக்கம். அப்பவே அங்குலம் நிலமும் விடம் என்று சொல்லேக்க கள நிலவரத்துக்கு ஏற்ப கள பரிமானம் மாறலாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தால் மக்கள் ஏன் குழம்பப் போகின்றனர்..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Today BBC and other medias published a news that the Sri Lankan government had killed 4 LTTE guerrillas and the bodies was given to the Red Cross for then to be transported to LTTE areas. In the pocket of one of the bodies, the military found a letter which seems to be written to the fighters family. In the letter he told that he was forced to join the LTTE. Tamilvoice has taken a look at the letter which could be find on the website of the defence ministry and has explored a lot of mistakes. For example it shows that the letter is written on the 12. 12. 2007, but the biggest mistake is that the letter has been faxed from the police station on the 14.01.2007, which means many days before the killing of the 4 Tigers. A lot of things are wrong with this situation and letter. The paramilitaries also took the responsibility for the murders on their website, does that mean that they got killed twice? The defence ministry has now, deleted the dates on the letter on the website.

http://www.tamilvoice.dk/index.php?option=...9&Itemid=47

கறுப்பி அக்கோய் இதெல்லாம் வழமை. இப்ப கருணா அம்மான் வேற ஐடியாக் கொடுக்க இருக்கிறார். அவரே ஒரு லெட்டரை எழுதி...

இப்படி எல்லாம் நடக்க முதலே சுட்டிக்காட்டி இருந்தோமே.. யாழ்ப்பாண முன்னாள் தளபதி லென்சில் கொப்பேகடுவ சொன்னது இதுதான். யாழ் குடாநாட்டையும் மக்களையும் போரில் வெல்லலாம் ஆனால் உளவியல் போரில் வெல்வது கடினம் என்று. ஆக எந்த ஒரு இராணுவ முனைப்பின் போதும் இராணுவம் இரண்டு வகையான யுத்தம் நடத்தும்..அது எந்த இராணுவமாக இருந்தாலும் சரி..

ஒன்று ஆயுத யுத்தம்

இரண்டு உளவியல் யுத்தம். இதை இங்க சொல்லி களைச்சிப் போயிட்டம். என்ன மாயையில மிதக்கவிட்டால் மக்கள் இப்படித்தான் சின்னக் கடிதத்துக்கும் குழம்பத்தான் செய்வினம். புகலிடத்துக்கு வந்த புலிகளும் சும்மா வாயை வைச்சுக் கொண்டிருக்காம எனி யுத்தம் வெடித்தால் சிறீலங்கா இராணுவத்தின் உடல் கூட மிஞ்சாது தமிழீழத்தில் என்று உசுப்பேத்தினார்கள். அங்கால தமிழ்செல்வன் தமிழீழக் கட்டுமானங்களை எதிரி தொடவும் முடியாது என்றார் திருமலைப் பொறுப்பாளர் எழிலன் ஜே ஆர் ஜெயவர்த்தன பாணியில் ஒரு அங்கில நிலத்தையும் எதிரி கைப்பற்ற அனுமதியோம் என்றார். இராணுவச் சமனிலை குழம்பினால் பேச்சுக்குழம்பும் என்றனர். ஏ9 திறக்காவிட்டால் நாம் திறப்போம் என்றனர். வாகரையைப் பிடித்தால் இறுதி யுத்தம் வெடிக்கும் என்றனர்..!

இது எதிரிக்கு மேல வைச்ச உளவியல் பாதிப்பை விட தமிழ் மக்களை அதிகம் பாதிச்சிருக்குது. அதற்கு தமிழர்களின் ஊடகங்களுக்கும் பொறுப்பு உண்டு. இப்ப எதிரியின் பிரச்சாரமும் சேர்ந்து தாக்குது.

இதைத்தான் நாம் உட்பட சிலர் இங்கு சொல்லச் சொல்ல துரோகி மண்ணாங்கட்டி என்று கொண்டு சில கத்துக்குட்டிகளின் பின்னால் அலைந்தனர். இப்பவாவது உண்மைகள் உணரப்படட்டும். மக்கள் சரியான வகையில் போருக்கும் எதிரியின் போர் முனைப்புகளுக்கும் ஏற்ற வகையில் இன்னும் தயார்ப்படுத்தப்படவில்லை என்பதே இன்றைய யதார்த்தம். அதனால் தான் சின்னக் கடிதம் கூட பெரிசா வெளில சொல்லப்படுகிறது. இதற்கு புலிகளும் தமிழர் ஊடகங்களும் புகலிடத்தில் இருந்து கண்ணை மூடிக்கொண்டு ஆய்வெழுதுவோருமே பொறுப்பு. எவராவது வாகரை பிடிக்கப்படும் வரை அது பிடிக்கப்படும் என்று ஆய்வெழுத முடிஞ்சதா..??! முடியல்ல. முடியாது. அந்தளவுக்கு மாயையில மக்கள் மிதந்தவர்கள். இதை எதிரி நங்கு அறிவான். கருணா டக்கிளசும் அறிவார்கள்..!

மக்கள் மனங்களைப் பலவீனப்படுத்தியதில் புலிகளின் சில பேச்சாளர்களுக்கும் பொறுப்பு உண்டு..! எனவே விளைவுகளை அவர்களும் சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. இப்போ கிழக்கின் இராணுவச் சமநிலை மாறு நிலை சார்ந்தது என்று இளந்திரையின் சொல்லி உள்ளார். இதை முன்னரே சொல்ல ஏன் தயக்கம். அப்பவே அங்குலம் நிலமும் விடம் என்று சொல்லேக்க கள நிலவரத்துக்கு ஏற்ப கள பரிமானம் மாறலாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தால் மக்கள் ஏன் குழம்பப் போகின்றனர்..! :rolleyes:

பாலாண்ணாவின் இடம் இன்னும் காலியாத்தான் இருக்கு என்று நினைகிறென், ஒருக்கா Try பன்னி பாருங்கோவென் நெடுக்கு, இல்லையென்றால் விடுதலைப்புலிகளின் பேச்சாளர்கள் அனைவரும், முக்கிய்மாக இளந்திரையன் வாயை திறக்க முதல் உங்களுடன் கலந்தாலோசித்துவிட்டு வாயை திறக்க வேன்டும் என்று கட்டாயமாக ஒரு Rule போடுங்கள்( உங்களுக்கு தானே எல்லா உரிமையும் இருக்கு, காசு குடுக்கிறது என்ற ரீதியில்).. :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.