Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார் போற்றும் பாவேந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட கலைஞர்
பாரதிதாசனார் பற்றி பார்ப்போம்.


பார் போற்றும் பாவேந்தர்


"மகாகவி பாரதி நமக்களித்த ஒப்பற்ற உயர்ந்த
முதல் பாடலே பாரதிதாசன்"

என்கிறார் நீதியரசர் மகாராசன்.

தமது ஆசான் பாரதியாரை அடியொற்றியே
பாவேந்தரும்,"எளிய சொற்கள், எளிய சொற்றொடரழகு,
எளிய சந்தம்,மக்கள் மனதில் பதியும்படியான இசை" என்றவாறாக பாடல்களை உருவாக்கினார்.

அவர் காலத்தின் திரைப்படங்களின் பிற்போக்கினை கண்டித்து ,கவிதையிலேயே ஒரு விமர்சனம்
எழுதியுள்ளார் புரட்சிக்கவிஞர்.

சினிமா பாடல்கள் எழுதுவதில் இவருக்கு
ஆர்வமிருந்ததில்லை. சினிமா பாடல்கள் எழுதும்படி வேண்டுபபவரிடம்
"சினிமாப் பாட்டுத்தானே,அது கிடக்கட்டும்,எழுதினாப்போச்சு "
என்று கூறிவிட்டு, இலக்கியம் சம்பந்தமாக பேசுவதில்தான் அதிக நாட்டம் கொண்டவராக இருப்பாராம்.

பாவேந்தர் தமது சுயமரியாதை நண்பர்களான;
ஜெகதீசன், கண்ணன், G.K.வேலுமணி, வா.ரா.--
ஆகியோரின் ஊக்குவிப்பின் பேரிலேயே சினிமா
உலகில் புகுந்தார். அப்படி திரையுலகிற்கு வந்தாலும், எழுத்தாக்கங்களில் தமது முற்போக்கு கருத்தினை புகுத்தி, மக்கள் மனதில் பதிய வைப்பதிலேயே குறியாயிருந்தார்.

மஹாராஜா,பிராணநாதா,ஸகி - ஆகியசொற்களை
மன்னர் மன்னன், அத்தான், தோழி -
என்று எளிதில் விளங்கும் அழகிய
தமிழ்ச் சொற்களாக்கினார்.

எது கைக்கு வருகிறதோ அதுவே எதுகை
என்றில்லாமல்,இலக்கிய-இலக்கண மணம்
கமழும் பாடல்களை உருவாக்கினார்.
எடுத்துக்காட்டாக "தமிழுக்கும் அமுதென்று பேர் "
என்ற பாடலில் அடி தோறும் எதுகை, மோனை
எடுப்பாக அமைய எழுதினார்.அடியின் ஈற்றுச்
சீர்களை; பேர், நேர், நீர், ஊர், வேர், பால், வேல்,
வான், தேன், தோள், வாள் - என்று அடி இயைபுத்
தொடையில் அமைத்தார். இலக்கண விதிகளுக்கு
உட்பட்டு கருத்தும் சொற்களும் சிந்தாமல்
சிந்தடியில் எழுதிய பாடலிது.

தமது ஆசானாகிய பாரதியைப் பற்றிய திரைப்
படம் ஒன்று உருவாக்க வேண்டுமென்ற இவரது
எண்ணம் நிறைவேறவே இல்லை.

மற்ற கவிஞர்களின் மீது அன்பும் அக்கறையும்
கொண்டிருந்தார். உடுமலை நாராயணகவி
பாவேந்தரை அண்ணா என்று உரிமையுடன்
அழைப்பார். பட்டுக்கோட்டையாரின் மீதும்
பாவேந்தர் மிக்க பாசம் கொண்டிருந்தார்.


(தொடரும்)


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து

சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு

சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு

திங்களோடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு
சங்கே சங்கே முழங்கு


வெங்க்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள்
எங்கள்வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து
வீரம் செய்கின்ற தமிழ் எங்கள்
மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

 

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


பார் போற்றும் பாவேந்தர் - 2


T.K.S.சகோதரர்கள் நால்வரும் நடித்த
பாலாமணி (அல்லது) பக்காத்திருடன்
என்ற படத்தின் 17 பாடல்களையும்
பாவேந்தர் எழுதினார்.

சங்கு சுப்பிரமணியம் என்பவர் ராமானுஜராக நடித்த ஸ்ரீராமானுஜர் என்ற படத்தின் 10 பாடல்களையும் பாவேந்தர் எழுதினார்.

நாதஸ்வர வித்வான் T.N.ராஜரத்தினம் பிள்ளை
காளமேகமாக நடித்த காளமேகம் என்ற படத்தின்
கதை-வசனத்துடன், படத்தின் 21 பாடல்களில்
19 பாடல்களை பாவேந்தர் எழுதினார்.

1946 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட சுபத்ரா
என்ற படத்திற்கு வசனம்;
1949 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட பொன்முடி
என்ற படத்திற்கு கதை-வசனம்;
1952 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட வளையாபதி
என்ற படத்திற்கு வசனம் - எழுதியுள்ளார்.

வளையாபதி படத்திற்காக பாவேந்தர் எழுதிய
"கமழ்ந்திடும் பூவிலெல்லாம்" என்ற பாடல்
பதிவானபோது, "கமழ்ந்திடும்" என்ற சொல்
பதிவின்போது தெளிவாக இல்லை என்பதால்,
அச்சொல்லுக்குப் பதிலாக "குலுங்கிடும்" என்ற
சொல்லை பயன்படுத்த பாவேந்தரிடம்
அனுமதி கேட்டனர். பவேந்தர் கோபமாக
"படுபவரை மாற்று, இல்லை என்றால் பதியும்
எந்திரத்தை மாற்று, பாட்டை மாற்ற முடியாது"
என்று சொன்னாராம். பின்பு சேலம்-ஸ்ரீரங்க
பாளையம் ஐயர் என்பவரின் வேண்டுகோளின்படி
சொல்லை மாற்றிக்கொடுத்தார் பாவேந்தர்.

"வாழ்க வாழ்க வாழ்கவே" என்ற பாவேந்தரின் பாடல்
பராசக்தி படத்தின் முகப்பு(TITLE) பாடலாக இடம்பெற்றது.
இப்பாடலுக்கு கவிஞர் சன்மானம் எதுவும் பெறவில்லை.

பாவேந்தரின் இசையமுது தொகுப்பில்
"பெற்றோர் ஆவல்" என்ற தலைப்பில் உள்ள
"துன்பம் நேர்கையில்" என்ற பாடல் ஓர் இரவுபடத்தில் காதலர் பாடும் பாடலாக மாற்றி
பயன் படுத்தப்பட்டது.

பாவேந்தரின் இசையமுது தொகுப்பில்
சிறுவர் தொகுப்பில் இன்பம் என்ற தலைப்பில்
உள்ள "பசியென்று வந்தால்" என்ற பாடல்
பணம் படத்திற்காக பயன் படுத்தப்பட்டது.


(தொடரும்)


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார் போற்றும் பாவேந்தர் - 3


பாவேந்தரின் இசையமுது தொகுப்பில்
உள்ள "ஆலைத் தொழிலாளி" (ஆலையின்
சங்கே நீ ஊதாயோ) என்ற பாடல்
ரத்தக் கண்ணீர் படத்திற்காக பயன் படுத்தப்
பட்டது

ரங்கோன் ராதா படத்தில் கையாளப்பட்ட,
பாவேந்தரின் "தலைவாரி பூச்சூடி" என்ற
பாடல் படத்தில் இடம்பெறவில்லை.
ஆனால் இசைத்தட்டில் மட்டுமே வெளியிடப்
பட்டது.

M.N.நம்பியார் நாயகனாகவும், B.S.சரோஜா
நாயகியாகவும் நடித்த "கல்யாணி" என்ற
படத்தில் வரும் "அதோ பாரடி" என்ற இவரின்
பாடல், மனநிலை பாதிக்கப்பட்ட கணவணை
உயர்வாக எண்ணி மனைவி பாடுவதாக
அமைந்த பாடலாகும்.

"கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" படத்தில்
இடம்பெற்ற "வெண்ணிலாவும் வானும்போலே"
என்ற பாவேந்தரின் பாடல், தண்டபாணி
தேசிகரால் இசையமைக்கப்பட்டு, தமிழிசை
மேடைகளில் பாடப்பட்ட பாடலாகும்.
தண்டபாணி தேசிகரின் இசைமெட்டை
(அவர் அனுமதியுடன்) எளிமைப்படுத்தி,
பாவேந்தரிடம் பாடிக்காட்டி அவரது
இசைவைப் பெற்று, T.G.லிங்கப்பா
இசையமைத்த பாடலிது.

1954 ஆம் ஆண்டில் ரஞ்சனும் S.வரலட்சுமியும்
நடித்த "என் மகள்" என்ற படத்தில்,
"எங்கள்...வாழ்வும்.......எங்கள்.....வளமும்
மங்காத..தமிழ்என்று..சங்கே......முழங்கு"

என்ற பாவேந்தரின் பாடல் இடம்பெற்றது.
இதே பாடல் 11 ஆண்டுகட்கு பின்பு 1965
ஆம் ஆண்டில் "கலங்கரை விளக்கம்"
படத்திலும் பயன்படுத்தப்பட்டது.

இவரின் "புதியதோர் உலகம் செய்வோம்"
என்ற பாடல் 1966 ஆம் ஆண்டில்
"சந்திரோதயம்" படத்திற்காக கையாளப்பட்டது.
இதே பாடல் 9 ஆண்டுகட்கு பின்பு 1975 ஆம்
ஆண்டில் "பல்லாண்டு வாழ்க" படத்திலும்
கையாளப்பட்டது.

பாவேந்தரின் "எங்கெங்கும் காணினும் சக்தியடா"
என்ற பாடல் "நம்ம வீட்டுத் தெய்வம்" படத்திற்காக
கையாளப்பட்டது. பாவேந்தரின் ஆசான் பாரதியார்
கட்டளையின் பேரில், சில அறிஞர்களின்
முன்னிலையில் அப்பொழுதே பாவேந்தரால்
எழுதப்பட்ட பாடலிது.1934 ஆம் ஆண்டில்
மணிக்கொடி என்ற சஞ்சிகையில் இந்தப்பாடல்
பிரசுரமானது.

உழைப்பின் உயர்வை உணர்த்தும் "சித்திரச்
சோலைகளே" என்ற இவரின் பாடல், 10
பாராக்களைக் கொண்டதாகும். இதில் 4
பாராக்களே "நான் ஏன் பிறந்தேன்" படத்தில்
பயன்படுத்தப்பட்டது.

தாயைப்பார்த்து மகன் பாடுவதாக அமைந்திருந்த
"அம்மா உந்தன் கைவளை" என்ற இவரின் பாடல்,
"நிஜங்கள்" படத்தில் தாயைப்பார்த்து மகள் பாடுவதாக
அமைக்கப்பட்டது.


(தொடரும்)


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பார் போற்றும் பாவேந்தர் - 4


படங்களில் பாவேந்தர் பாடல்கள்

படம்
பாடல்.............குரல்


பாலாமணி (அல்லது) பக்காத்திருடன்-1937
1.கார்குகா சண்முகா
2.திருவருள்நீ
3.சந்தோஷ வாழ்வினைப்
4.மண் பெண் பொன்
5.நில்லாத இந்த வாழ்வு
6.திருமண விஷயமாய்
7.சகலமும் முடிந்ததினி
8.காத்தருள் புரிதெவி
9.வாசத்தென்றல் வீசுதே
10.வதியெலாம் மாமலைபோல்
11.சிந்தை நோக
12காதலெலாம் அவன்
13.சதா சோகம் தாளேனே
14.தேவி நான் பாவியைப்
15.பணமே உனதொரு
16.கண்டு உன்னில்
17.பாவையே உன்மீதில்

காளமேகம்-1940
18.வானஜோதி
19.தகதக தேஜோந்மய
20.பூலோகம் எல்லாம்
21.எனதாசைக் குகந்தவன் நீ
22.வருவதாய் உரைத்துச்
23.பாடுறேன் நானே
24.மதமா? காதலா?
25.ஆடிடும் மயில்மிசை
26.தாயே அருள்வாய்
27.பத்தினித்தனம் புரிஞ்சி
28.இருகாதலர் சீர்சொல்லி
29.எளியேனையாள் உலகநாயகி
30.என்ன உதாரம் தேவி
31.கொஞ்சும் கிளிகள்
32.உனைப்பற்றிய கவி
33.சுகித்திட வாராயோ
34.சீருள்ள வெண்குடை
35.நாதா ப்ரியமான
36.வாழ்க்கை உடம்பினில்

ஸ்ரீராமானுஜர்1938
37.வாழிய எழில்
38.கேட்பதெல்லாம்
39.யோகி தேகநிலை
40.ஓர் அணுவினை மேரு
41.கோவிந்த ராஜா ஹரி
42.வாராயோ கண்ணா
43.மாதவனே கருணாகரனே
44.மனிதர்கள் சமமே
45.வந்தால் வரட்டும்
46.எப்பக்கஞ் சாமி விலகச்


(தொடரும்)


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து
  •  

பார் போற்றும் பாவேந்தர் - 5


படங்களில் பாவேந்தர் பாடல்கள்


படம்
பாடல்.............குரல்

ஓர் இரவு - 1951
47.துன்பம் நேர்கையில்
..........................M.S.ராஜேஸ்வரி, வர்மா

வளையாபதி - 1952
48.குலுங்கிடும் பூவிலெல்லாம்
........................................T.M.S., K.ஜமுனாராணி
49.குளிர் தாமரை மலர்ப்பொய்கை
...........................................T.M.S., K.ஜமுனாரணி

பராசக்தி - 1952
50.வாழ்க வாழ்க வாழ்கவே
...................................M.L.வசந்தகுமாரி

என்தங்கை - 1952
51.காதல் வாழ்விலே

பணம் - 1952
52.பசியென்று வந்தால் ஒருபிடிசோறு

கல்யாணி - 1952
53.அதோ பாரடி அவரே என்கணவர்

அந்தமான் கைதி - 1952
54.அந்த வாழ்வுதான் எந்தநாள்

பூங்கோதை - 1953
55.தாயகமே வாழ்க தாயகமே

திரும்பிப்பார் - 1953
56.பாண்டியன் என்சொல்லை

ரத்தக்கண்ணீர் - 1954
57.ஆலையின் சங்கே நீ ஊதாயோ

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - 1954
58.வெண்ணிலாவும் வானும் போலே
..................................ராதா(R).ஜெயலஷ்மி

என் மகள் - 1954
59.சங்கே முழங்கு

கோமதியின் காதலன் - 1955
60.நீலவான் ஆடைக்குள் உடல்

நானே ராஜா - 1956
61.பொன்மேனி காட்டி உனை - ஜிக்கி
62.ஆடற் கலைக்கழகு தேடப்பிறந்த
........................P.லீலா, M.L.வசந்தகுமாரி

ரங்கோன் ராதா - 1956
63.தலைவாரி பூச்சுடி உனை - P.பானுமதி

குலதெய்வம் - 1956
64.(இன்ப வருக்கமெல்லாம்)வெட்கமில்லை
........................................C.S.ஜெயராமன்

பெற்ற மனம் - 1960
65.ஒரேஒரு பைசா தருவது பெரிசா
..........................சூலமங்கலம் ராஜலட்சுமி
66.புதியதோர் உலகம் செய்வோம்
..........................சீர்காழி கோவிந்தராஜன்
67.பாடிப்பாடி வாடி வானம்பாடி
..................................J.P.சந்திரபாபு
68.மனதிற்குகந்த மயிலே
..................................J.P.சந்திரபாபு

கலங்கரை விளக்கம் - 1965
69.சங்கே முழங்கு சங்கே முழங்கு
சீர்காழி கோவிந்தராஜன், P.சுசீலா, குழுவினர்

பஞ்சவர்ணக்கிளி - 1965
70.தமிழுக்கும் அமுதென்று பேர் - P.சுசீலா

சந்திரோதயம் - 1966
71.புதியதோர் உலகம் செய்வோம்
................சீர்காழி கோவிந்தராஜன்

மணிமகுடம் - 1966
72.(சிரம் அறுத்தல்)வலியோர் சிலர் - T.M.S.

நம்மவீட்டுத் தெய்வம் - 1970
73.எங்கெங்கு காணினும் சக்தியடா
..........................T.M.சௌந்தரராஜன், குழுவினர்

நான் ஏன் பிறந்தேன் - 1972
74.சித்திரச் சோலைகளே - T.M.S.

பல்லாண்டு வாழ்க - 1975
75.புதியோர் உலகம் செய்வோம்
T.M.சௌந்தரராஜன், வாணிஜெயராம், குழுவினர்

கண்ணன் ஒரு கைக்குழந்தை - 1978
76.காலை இளம்பரிதியில்(குறும் பாடல்)
.........................S.P.பாலசுப்பிரமணியம்

நிஜங்கள் - 1982
77.அம்மா உந்தன் கைவளையாய்
.........................வாணிஜெயராம்

புரட்சிக்காரன் - 2000
78.தூங்கும் புலியை பறைகொண்டு - நித்யஸ்ரீ

எத்தனை கோணம் எத்தனை பார்வை
79.புகழ் சேர்க்கும் (குறும் பாடல்)
...............................மலேசியா வாசுதேவன்


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.