Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வௌ்ளை வானில் மூவர் கடத்தல்: யாழ் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்

Featured Replies

வௌ்ளை வானில் மூவர் கடத்தல்: யாழ் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்
 
 

article_1473751154-van.jpg

யாழ். நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகி, பின்னர் வெளியில் வரும்போது வெள்ளை வானில் வந்தவர்கள், மூவரை பலவந்தமாக பிடித்து இழுத்து வானுக்குள் பலவந்தமாக தள்ளி , ஏற்றிக்கொண்டு சென்றமையால் அந்த வளாகத்தில் ஒருவகை பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு,  யாழ். நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.

குறித்த வழக்கு விசாரணையில் 74 பேர், நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். அவ்வாறு ஆஜராகிவிட்டு, நீதிமன்றத்தை விட்டுவெளியேறும் போதே, வெள்ளை வானில் வந்தவர்கள், மூவரை மட்டும் பிடித்து இழுத்து வெள்ளை வானுக்குள் தள்ளி ஏத்தி, தலைமறைவாகியுள்ளனர்.

- See more at: http://www.tamilmirror.lk/181772/வ-ள-வ-ன-ல-ம-வர-கடத-தல-ய-ழ-ந-த-மன-ற-வள-கத-த-ல-பதற-றம-#sthash.o8B3Z07h.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழ்: நீதிமன்றில் இருந்து வௌியே வந்த மூவரை பிடித்துச் சென்ற குற்றப் பிரிவினர்?

 

யாழில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக ஆஜராகி, பின்னர் வெளியில் வரும் போது மூவரை, வெள்ளை வேனில் ஏற்றிச் சென்றுள்ளதால், நீதிமன்ற வளாகத்தில் இளைஞர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளை வேனில் வந்த கொழும்பு குற்றப் பிரிவினர் இன்று செவ்வாய்க்கிழமை இவர்களை பிடித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று யாழ். நீதிமன்றில் இடம்பெற்றது.

குறித்த வழக்கு விசாரணைக்காக 74 பேர் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை, வழக்கிற்கு சமூகமளிக்காத நபர் ஒருவருக்கு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் வழக்கு விசாரணையினை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ம் திகதிக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் ஒத்திவைத்துள்ளார்.

வழக்கு நிறைவடைந்த பின்னர், 74 பேரும் நீதிமன்றத்திற்கு வெளியில் வரும் போது, கொழும்பு குற்றப் பிரிவினர், நீதிமன்றத்தின் முன்பாக வைத்து, கேதீஸ்வரன், அஜந்தன், அகிலன் ஆகிய மூவரை வெள்ளை வேனில் பிடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த மூவரையும் பிடிக்கும் போது, ஏன் பிடிக்கின்றீர்கள் என மற்றவர்கள் வினவியபோது, விசாரணைக்காக பிடிப்பதாக வெள்ளை அந்த வேனில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த ஏனையவர்கள் அந்த இடத்தில் இருந்து பாய்ந்து ஓடியதனால், அங்கு பதற்றம் நிலவியதாக வழக்கிற்கு வந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=83579

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி இளஞ்செழியனுக்கே சவால்......நீதி அமைச்சா? பாதுகாப்பு அமைச்சா? 

நீதிமன்ற வளவில் தலைவிரித்தாடும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.