Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லாட்சியிலும் கோத்தபாயவின் சண்டியர்கள்! மைத்திரி என்ன செய்யப் போகிறார்?

Featured Replies

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அநுராபுரத்தில் வைத்து மதுஷங்க டி சில்வா என்பவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டார்.

இதனையடுத்து மதுஷங்க டி சில்வாவின் மனைவி மயூரி ஜயசேன, கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார்.

கடத்தப்பட்ட மதுஷ்கவை கண்டுபிடித்து தருமாறும், விசாரணையை விரைவு படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அது மாத்திரமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் கடந்த ஜுலை மாதம் 9ஆம் திகதி வழங்கிய வாக்குறுதியை மீண்டும் நினைவுப்படுத்தும் வகையிலேயே அவர் இவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.

ஒரு வாரத்தில் தனக்கு பதில் வழங்குவதாக அவருக்கு ஜனாதிபதி செயலாளர் தெரிவித்திருந்த போதிலும் 7 வாரங்கள் கடந்தும் பதில் வழங்கப்படவில்லை.

அன்றைய தினம் மயூரியின் ஆதரவிற்கு 6 பேர் மாத்திரமே இருந்தனர். போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அங்கு மயூரி உட்பட 6 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சற்று நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி செயலாளர் என கூறப்படும் நபர் ஒருவர், வழமை போன்று ஏமாற்றும் வகையில் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைத்த போதிலும் தன்னிடம் ஒவ்வொரு முறையும் பொய் கூறுவது போதும் எனவும் தனக்கு ஜனாதிபதியை சந்திப்பது மாத்திரமே அவசியம் எனவும் மயூரி குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து பொலிஸார் கோத்தபாயவின் பொலிஸாராக மாறியுள்ளனர். சீருடையில் இருந்த பொலிஸ் அதிகாரி குறித்த 6 பேரையும் புகைப்படம் எடுத்தும் மிரட்டு வகையில் பேசியுள்ளதுடன் ராஜபக்ச ஆட்சியை மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

அப்படி என்றால் தற்போதைய நல்லாட்சியில் கோத்தபாயவின் பொலிஸ் அதிகாரிகள் செயற்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளனர்.

தற்போது கோத்தபாயவின் பொலிஸ் அதிகாரிகள் புதிய வேலை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அன்றை தினம் உண்ணா விரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற கருத்து வெளியிடும் நடவடிக்கையிலேயே அவர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

எனினும் நல்லாட்சியினுள் பொலிஸார் மக்களுக்காக செயற்பட வேண்டும் என்ற போதிலும், அமைதி போராட்டம் நடத்தியவர்களை அடக்கும் நடவடிக்கையிலேயே பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில் சிங்கலே அமைப்பாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தும் போதும், இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கு அருகிலேனும் செல்லவில்லை.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்வாங்கிய பொலிஸார் அமைதி ஆர்ப்பாட்டங்களின் ஈடுபடுவோரை தடுப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றனர்.

கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் தற்போது வரையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறை கோத்தபாயவின் பொலிஸ் அதிகாரிகள் செயற்படுகின்றமையினை தெளிவாக காணமுடிகின்றதென தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilwin.com/security/01/117394?ref=editorpick

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தவாயனுக்கு  உங்கை  கனபேர் பயப்பிடீனமெண்டு நான் நினைக்கிறன்.....:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.